கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சம்பந்தனை ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க உதவிய பிரேமதாசவின் பாரியார்!

கொழும்பு காலிமுகத்திடலில் இன்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச உதவியுள்ளார்.
68வது தேசிய சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வந்த போது, அதில் கலந்து கொண்டவர்கள், ஜனாதிபதியை வரவேற்பதற்காக எழுந்து நின்றனர்.
இதன் போது, எதிர்க்கட்சித் தலைவர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க சற்று சிரமப்பட்டுள்ளார்.
அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த முன்னாள் ஜனாதிபதியின் பாரியார், எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க உதவியுள்ளார்.

0 comments:

Post a Comment