கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நல்லாட்சியில் கஹடோவிடாவின் முன்மாதிரி...

கஹடோவிடாவின் பிரதான பாதைக்கான புனர்நிர்மானம் தற்போது மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.  நல்லாட்சிக்கான மக்கள் பங்கேற்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள இந்த அரசாங்கத்துக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

கம்பஹா மாவட்ட அத்தனகல்லை தேர்தல் தொகுதிக்குற்பட்ட கஹடோவிட எனும் கிராமம் சுமார் 2500 குடும்பங்களை கொண்டதாகும். இக்கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுவந்த பிரதான பாதையை புணர்னிர்மானம் செய்வதற்காக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரனாயகவின் சிபாரிசின்படி அமைச்சர் கபீர் ஹாசிமின் அங்கீகாரத்துடன் கஹடோவிட பிரதான பாதைக்கு காபட் இட அனுமதி வழங்கப்பட்டமைக்கு கஹடோவிட மக்கள் என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

கஹடோவிட கிராம மக்கள் இச்சந்தர்பத்தை நல்ல முறையில் அனுகி உச்சபயனை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பிரதான பாதை விஸ்தரிப்புக்கு இக்கிராம மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். பாதை விஸ்தரிப்புக்கு தேவையான குறைந்தபட்ச வீடு/கடை/காணிகளை வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துறையாடி உடைக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு மீண்டும் கட்டிக்கொடுக்க இக்கிராம மக்கள் முன்வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்பணியை அரசாங்கம் மேற்கொள்ளுமாக இருந்தால் எமது கிராம மக்களுக்கு நஷ்ட ஈடாக சுமார் 80 இலட்சத்துக்கும் மேலான அளவில் வழங்கவேண்டியிருக்கும்.

கடந்த அரசாங்கத்தில் பொதுவாக அனைத்து மூலை முடுக்குகளிலும் செய்யப்பட்ட புனர் நிர்மானப் பாதைகளில் சில அமைச்சர்கள் ஊளல்/இலன்சம்/தரவு பெற்றுக்கொண்டடே பாதைகள் புணர்னிர்மானம் செய்யப்பட்டதாக  குற்றம் சுமத்தப்படுவதை நாம் பத்திரிகைகள் மூலம் அறிகின்றோம். அவ்வாரான சூழ் நிலையில் இன்று நல்லாட்சிக்கான அரசாங்கத்திற்கு கஹடோவிட கிராம மக்கள் முன்னுதாரனமாக செயல் படுத்திக்காட்டியிருக்கிறமை வராலாற்று முக்கியத்துவமாகும்.

கடந்த ஆட்சியில் கம்பஹா மாவட்டத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் காபட் இடப்பட்ட போதும் கஹடோவிட பிரதான பாதை அரசியல் ரீதியான பளிவாங்களுக்கு உற்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

Abu shakek

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் புற்றுநோக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றமையால் முற்றாக தடைசெய்யப்படவுள்ளது.

எஸ்பெஸ்டஸ் பொருட்களின் இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு  2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.

புற்றுநோய்க்கு முதற்காரணமாக எஸ்பெஸ்டஸ் இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அறிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பொலித்தின் பாவனை தொடபில் கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். 

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் புற்றுநோக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.

இதன்படி, 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கிறோம்.

அது போல் எஸ்பெஸ்டஸ் உள்நாட்டு உற்பத்திக்கும் தடை விதிக்கின்றோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே இது தொடர்பில் நாங்கள் அறிவிக்க காரணம் வர்த்தக நிறுவனங்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊர் மக்களிடம் பாதை விஸ்தரிப்புக் குழு முன்வைக்கும் வேண்டுகோள்.

அல்லாஹ்வின் உதவியினால் பிரதான பாதை விஸ்தரிப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றதை காணக்கூடியதாக இருகிறது. இப்பணிகள் கஹடோவிட சந்தியில் இருந்து ருக்மல வீதி வரை இடம்பெறவிருப்பதால் ஊர்மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கி ஒத்துழைக்குமாறு ஊர்மக்களிடம் வேண்டுகோள் விடப்படுகிறது.
ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முடிக்கப்படவேண்டியுள்ளதால் ஊர்மக்களின் பங்களிப்பு முன்னதைவிட அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உடைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் இனி உடைக்கப்படவுள்ள கட்டடங்களை கட்டிக்கொள்ள வசதியற்றவர்களுக்கு நிதியுதவிகளை வழங்குவதற்காக இதுவரை சேகரிக்கப்பட்ட நிதி போதாத நிலையிலுள்ளதாகவும். ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் வாக்களித்த தொகையை மிக அவசரமாக தந்துதவுமாறு வேண்டுகோள்விடப்படுவதோடு, ஏனையவர்களும் தாராளமாக நிதியுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


அதேபோன்று தினமும் இரவு 10.00 மணிமுதல் சிரமதானப் பணிகள் நடைபெற்று வருவதால் இப்பணிகளில் அனைவரும் இணைந்துகொள்வதோடு தேவையான சாதணங்கள், உபகரணங்களையும் தந்துதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதயத்தை உருக்கும் புகைப்படம் - 22 மணித்தியாலங்களில் குவிந்த பணத் தொகை $ 58K

சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் தனது தோள்களில் மகளைத் தூங்க வைத்தவாறு பேனாக்களை விற்பனை செய்வதைப் படம்பிடித்து ட்விட்டரில் Gissur Simonarson என்பவர் பதிவிட்டிருந்தார்.
லெபனான் – பேய்ரூட்டில் அந்நபர் பேனா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதயத்தை உருக்கும் இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த பலரும் அந்தத் தந்தைக்கு உதவ முன்வந்தனர்.

இதன் பயனாக, ட்விட்டரில் புகைப்படம் பதிவிடப்பட்ட மூன்றே மணித்தியாலங்களில் அவருக்கு £11,000 உதவித்தொகை குவிந்துள்ளது.

அதனை அவரிடம் ஒப்படைக்குமாறு ட்விட்டரில் பலரும் Gissur Simonarson இடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், சிரியாவைச் சேர்ந்த அகதித் தந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டார் Gissur Simonarson.

அதிர்ஷ்டவசமாக, ட்விட்டரில் இந்த புகைப்படத்தையும், அதில் உள்ளவரை Gissur Simonarson தேடுவதையும் அவதானித்த நபர் ஒருவர், Gissur Simonarson ஐத் தொடர்பு கொண்டு சிரிய அகதி குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

அந்நபர் தனது வீட்டை அண்டிய பகுதியில் இருப்பதாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

24 மணிநேரத் தேடுதலில் அந்த தந்தை கண்டுபிடிக்கப்பட்டார். அப்துல்லா எனப்படும் இந்நபர் தனது மனைவி இல்லாமல் தனியாக இரண்டு பிள்ளைகளை வளர்த்து வருபவர் என்பது தெரிய வந்தது.

டமஸ்கஸிலுள்ள ஒரு அகதி முகாமில் இவர் வசித்து வருகிறார்.

#BuyPens எனும் ஹேஸ்டேக்கில் இவருக்கு தற்போதும் உதவித் தொகை வழங்க ட்விட்டரில் பலரும் முன்வந்தவண்ணமுள்ளனர்.

jaffnamuslim

latest news:

#BuyPens: Fund for Syria Refugee Abdul Reaches $58K in 22 Hours

குஜராத் கலவரத்தில் 9 பேர் பலி!…

ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினார்கள். சுமார் 10 லட்சம் பேர் திரண்டதால் ஆமதாபாத் நகரமே குலுங்கியது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான 22 வயது ஹார்திக் படேலை போலீசார் கைது செய்தனர். இதை அறிந்ததும் படேல் சமுதாயத்தினர் ஆமதாபாத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். அது பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள்.


கலவரக்காரர்கள் பா.ஜ.க. தலைவர்களின் அலுவலகங்கள், வீடுகளை குறி வைத்து தாக்கினார்கள். அரசு அலுவலகங்கள் உடைக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து விடிய, விடிய கலவரம் நடந்தது. கலவரத்தை போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை. இதையடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேலை விடுதலை செய்தனர். என்றாலும் கலவரம் ஓயவில்லை. மாறாக நேற்று சூரத், ராஜ்கோட், ஜாம் நகர், போர்பந்தர், பாவ்நகர் உள்பட பல நகரங்களுக்கு கலவரம் பரவியது.

இதில் குஜராத் மாநில அரசு பேருந்துகள் அதிக பாதிப்பை சந்தித்தன. கலவரக்காரர்களால் 292 பஸ்கள் தீ வைத்தும், கல்வீசியும் தாக்கப்பட்டன. இதில் சுமார் 200 பஸ்கள் எரிந்து நாசமானது. கலவரம் பரவியதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு நேற்று 5 ஆயிரம் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆமதாபாத்தின் முக்கிய பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் ஆமதாபாத் நகரில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

ஆனால் சூரத் உள்பட மேலும் சில நகரங்களில் நேற்று கலவரம் தலை விரித்தாடியது. சூரத் மாநகராட்சிக்கு சொந்தமான 2 தானியக்கிடங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் ஆலைகள், துணி உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டன. ராஜ்கோட் நகரில் மத்திய மந்திரி மோகன் குண்டாரி பாலின் அலுவலகம் நொறுக்கப்பட்டது. பா.ஜ.க.வினரை படேல் சமுதாயத்தினர் இப்படி குறி வைத்து தாக்கியதால் வேதனை அடைந்த பிரதமர் நரேந்திரமோடி, பொதுமக்கள் கலவரத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றார். என்றாலும் குஜராத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை. இட ஒதுக்கீடு பெறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல் அறிவித்துள்ளார். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் மீண்டும் வன்முறையில் ஈடுபடுவோம் என்று படேல் போராட்டக்குழுவினர் எச்சரித்துள்ளனர். இதனால் ஆமதாபாத், சூரத் உள்பட பல நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது. இந்த நகரங்களில் மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க குஜராத்துக்கு இன்று மேலும் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த ஆமதாபாத், சூரத், ராஜ்கோட், மெஹசானா, படான், பலென்பூர், ஊஞ்சா, விஸ்நகர், ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு இன்று 2–வது நாளாக நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கலவரம் பாதித்த பகுதிகளிலும், பதற்றமான பகுதிகளிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் தற்போது குஜராத்தில் அமைதி திரும்பத் தொடங்கியுள்ளது என்றாலும் மக்களிடம் பதற்றம் காணப்படுகிறது. சகஜ வாழ்க்கைக்கு மக்கள் இன்னும் திரும்பவில்லை. நேற்றிரவு சிறு, சிறு கல்வீச்சு தவிர பெரிய அளவில் வன்முறை ஏற்படவில்லை. இன்று பகலிலும் அமைதி நிலவியது. கடந்த 2 நாட்களாக குஜராத் மாநிலத்தை கொந்தளிக்க வைத்த இந்த கலவரத்தால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பஸ், ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இது மக்களை திணற வைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதை புணரமைப்புக்கு கிடைத்த கஹடோவிட மக்களின் மெச்சத்தகுந்த பங்களிப்பு

தற்போது நடைபெற்றுவரும் கஹடோவிட பிரதான பாதைக்கு ”காபட்” இடும் பணிகளுக்கு எமதூர் மக்களிடமிருந்து மெச்சத்தகுந்த பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பதையை விரிவாக்குவதற்கு பலர் தங்களது மதிகளையும், சொந்த வீட்டின் சில பகுதிகளை உடைத்து பெருந்தண்மையுடன் ஒத்துழைத்தமை பாராட்டத்தக்கது.
அதே போன்று பாதை சிறப்பாக அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு எமது ஊர் மக்களுக்காக பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் பலரது வாய்ச்சாடல்களுக்கு, ஏச்சுப் பேச்சுக்களுக்கு மத்தியில் இந்த வேலை சிறப்பாக முடியவேண்டும் என்பதற்காக களத்தில் நிற்கும் ஊா் நலன் விரும்பிகள் அனைவருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்  இவர்களின் இம்மகத்தான ஒத்துழைப்புக்கு நட்கூலியை வழங்குவானாக!

மேலும் இந்த பாதைப் புணரமைப்ப வேலைக்காக உடைக்கப்பட்டுகின்ற மதில்கள், வீடுகளை திருத்திக் கொடுப்பதற்காக ஊர் மக்கள் ஒன்றினைந்து நிதிசேகரிப்பில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.  இந்நிதிக்காக எமது ஊரைச் சேர்ந்த பல தனவந்தர்களின் பங்களிப்பை கிடைத்ததாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கிறது.  குறிப்பிட்டுக் கூறுவதென்றால் எமது ஊரைச் சோ்ந்த தனவந்தர்களுல் ஒருவர் இந் நிதிக்காக சுமார் ஒரு இலச்சம் ரூபாவை கொடுத்தள்ளாா்.

இந்த பணிசிறப்பாக நடைபெற்று முடிய எல்லாம் வல்ல இறைவனிடம் நாமும் பிராத்திக்கின்றோம்.





காத்தான்குடியில் பதற்றம் !!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டிலில் மூலம் மக்களினால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர் முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் வெளியிடப் பட்டுள்ளதை தொடர்ந்து காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்களினால் ஊர்வலம் நடாத்தப் பட்டுவரும் நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்கள் அங்கத்தவர்கள் மீதும் அவர்களின் வீடுகள் கடைகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனால் சிலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கிறது
அதேவேளை அங்குள்ள மஸ்ஜித் ஒன்றின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டிலில் சேர்க்கப் பட்டுள்ள நபர்கள் தொடர்பில் ஜனாதிபதி இறுதி தீர்மானம் எடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது , ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைய சிலரின் தற்போது இணைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் கூட நீக்கப்படலாம் என அறிய முடிகிறது

காழ்ப்புணர்வின் மீது கட்டப்பட்டுள்ள ஷீஆயிஸம்

காழ்ப்புணர்வுகள் மீது தனது கட்டுமானத்தை நிறுவிய ஓர் அமைப்பினால் தனது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து அந்தக் காழ்ப்புணர்வுகளை நீக்குவது எளிதானதல்ல. அது கட்டுமானத்தை வைத்துக் கொண்டு அத்திவாரத்தை உடைப்பது போன்றதாகும். காழ்ப்புணர்வுகள் மீது கட்டுமானத்தை எழுப்பியவர்களின் விடயத்தில் அதனை நாம் கண்கூடாகவே காண்கின்றோம். அவர்கள் விரும்பினாலும் அந்தக் காழ்ப்புணர்வுகளை அவர்களது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து நீக்க முடியாது.

இதற்கு இன்றைய உலகில் இருக்கும் சிறந்த உதாரணம்தான் ஷீஆக்கள். ஷீஆயிஸம் என்ற கட்டுமானத்தை தீராத பகை மற்றும் குரோதம், வெறுப்பு, துவேஷம் என்பவற்றின் மீதே அவர்கள் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். யாரின் மீது பகை?

அபூபக்ர், உமர், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹும் போன்ற உத்தம ஸஹாபாக்கள் மீது கொண்ட தீராப் பகையை 1400 வருடங்களாக வளர்த்துப் போஷித்துப் பாதுகாத்து அந்தப் பகையைச் சுற்றி கொள்கை, கோட்பாடுகள் தத்துவங்கள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் என்பற்றையும் வளர்த்து ஷீஆயிஸம் என்ற கோட்டையை அவர்கள் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இன்று அவர்களுடைய எதிரிகள் யாரென்றால், அந்த உத்தம ஸஹாபாக்களை அவர்களைப் போல் வாய் நிறையத் திட்டி சாபமிடாத ஸுன்னிகள்தான், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேரோடு கிள்ளியெறிய விரும்பும் ஸியோனிஸ மாபியாக்கள் அல்ல.

ஷீஆக்கள் இன்று உலகத்தில் யாரோடு போரிடுகிறார்கள் என்பதை ஒரு கணம் நோட்டமிடுங்கள். அவர்கள் அமெரிக்க ஸியோனிஸ சக்திகளுடன் போராடவில்லை. மாறாக, அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் சொற்போர்தான் நடத்தியிருக்கிறார்கள். எனினும், முஸ்லிம்களான சுன்னிகளோடு ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போருக்கு துணை போனதால் இன்று அமெரிக்கா ஷீஆக்களோடு கைகோர்த்திருக்கிறது. காரணம், முஸ்லிம் உம்மத்துக்கு மத்தியில் இத்தகைய பகையும் குரோதமும் வளர வேண்டும் என்பதைத்தான் இஸ்லாத்தின் எதிரிகள் விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான பகையும் குரோதமும் இந்த உம்மத்தில் தாராளமாகவே இருக்கிறது என்பதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாங்களா சொல்லிக் கொடுக்க வேண்டும்?

குமைனி ஈரானியப் புரட்சியில் வெற்றி பெற்றார். எனினும், பகை நீக்கும் புரட்சியில் வெற்றி பெறவில்லை. இல்லை அந்தப் புரட்சியை அவர் செய்யவே இல்லை. 1400 வருடங்களாக வளர்ந்த ஸஹாபாக்கள் மீதான பகையை அவர் நீக்க முயற்சித்திருந்தால் ஷீஆக்களின் பகைப் புயல் அவரைத்தான் அள்ளிக் கொண்டு போயிருக்கும்.

இந்த வரலாறு கற்றுத் தருகின்ற பாடம் என்ன? முஸ்லிம் உம்மத்திற்குள் பகை வளர்ப்பவர்கள் வெளியே இருக்கும் தங்களது பிரதான எதிரியை மறந்து விடுவார்கள். உள் வீட்டில் இருக்கும் நண்பர்களை எதிரிகளாக மாற்றிக் கொள்வார்கள். இறுதியில் இஸ்லாத்தின் பெயராலேயே தங்களது சமூகத்தை அவர்கள் நாசமாக்குவார்கள்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் 


நன்றி - எங்கள் தேசம்

கம்பஹா மாவட்டத்தில் தோல்வியடையந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரங்கள்.

ගම්පහ දිස්ත්‍රික්කය සඳහා තරඟ කර ආසන දිනා ගත් පක්ෂවල පරාජයට පත් වූ අපේක්ෂකයන්ගේ මනාප පහතින් දැක් වේ.

එක්සත් ජාතික පක්ෂය

ජෝෂප් මයිකල් පෙරේරා     63929
රොයිස් ප්‍රනාන්දු                 57013
රෝස් ප්‍රනාන්දු                   53779
උදේන විජේරත්න              52815
ප්‍රියන්ත පෙරේරා                48945
චන්ද්‍රසෝම සරණලාල්        41641
මොහොමඩ් රහීම්               33746
පුෂ්පමාල් ජයකොඩි            30917
නිරෝෂා අතුකෝරලගේ      18462
බෙවන් පෙරේරා                 16762
සුසිල් කුමාර්                       16292
අසංග අබයගුණසේකර          9954

එක්සත් ජනතා නිදහස් සන්ධානය

කෝකිලා ගුණවර්ධන        55530
උපුල් මහේන්ද්‍ර රාජපක්ෂ    54763
ගුණසරි ජයනාත්               51589
රුවන් රණතුංග                49656
ෆීලික්ස් පෙරේරා              43476
පණ්ඩු බණ්ඩාරනායක      42692
චිනාරි ගුණවර්ධන           38328
සරත් කුමාර ගුණරත්න     36477
උපාලි ගුණරත්න             30291
උපුල් රාජිත                    24993
උපේක්ෂා ස්වර්ණමාලි      22689
මොහොමඩ් නවුසාන්       13108
තිලක් වරාගොඩ               4160

ජනතා විමුක්ති පෙරමුණ

බිමල් නිරෝෂන් රත්නායක වීරකෝන්   40741
මහින්දවංශ ජයසිංහ                             14752
අශෝක රංවල                                    11862
යූ. ඒ නන්දසීලි                                    7930
රනිල් ජයසේන                                    5306
චම්පික හෙට්ටිආරච්චි                           5214
ලාල් කුමාරපේලි                                 4574
ලක්ෂ්මන් එදිරිවික්‍රම                            4379 
ලලිත් නෙත්තසිංහ                              4274
විමලසිරි රොද්‍රිගෝ                              3428
ගාමිණී ප්‍රනාන්දු                                  2831
ඉස්මිල් ආබ්දීන්                                  2762
කුලසිරි ද සිල්වා                                 2686
අතුල බණ්ඩාර                                   2496
හේමාල් මෙන්ඩිස්                              2462
අජිත් වික්‍රමසිංහ                                 1956
අරුණ පෙරේරා                                 1460
කීර්ති ප්‍රනාන්දු                                   1445
ගවුස් මොහිදීන්                                    979
සුමතිපාල විතානගේ                             958

Don’t play mad, go home & get the ID, Ranil tells Muzammil!

Don’t play mad, go home & get the ID, Ranil tells Muzammil!
Colombo mayor A.J.M. Muzammil forgot to take his national identity card or passport when he accompanied prime minister Ranil Wickremesinghe to the polling booth at the Colombo University to cast their votes on August 17. When he was asked to furnish identification, without saying that he forgot to bring them, he asked them, “Why, child, don’t you know me? I am the Colombo mayor.” But, officials insisted that he should furnish his identification.

The prime minister told his bodyguards to find out as to why the person who had accompanied to the polling booth was taking so long to vote. Coming to the PM with the bodyguards, the mayor asked that since he forgot to bring the identity card, speak to the officials and allow him to vote.
“Don’t play mad. Law is equal to all. I am the prime minister, but they checked my identity card. There is time. Go home and bring the identity card,” the PM told him and sent him home. This is the difference between Ranil and Mahinda. Had Muzammil made the same request from Mahinda, he would have said, “Ado, don’t you know the Colombo people? Who asked for your identity card? Send him home right now,” and sent home the officer who wanted to check his identity card.
Ranil’s exemplary act is an illustration for good governance. We should start small and proceed to bigger things.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் விருப்பு வாக்கு விபரம்


ஐக்கிய தேசியக் கட்சி 

ரணில் விக்ரமசிங்க - 500566 

சுஜீவ சேனசிங்க - 117049 

ஹர்ச டி சில்வா - 114148 

ரவி கருணாநாயக்க - 111394 

சம்பிக்க ரணவக்க - 100444 

எஸ்.எம்.மரிக்கார் - 92526 

முஜிபூர் ரகுமான் - 83884 

இரான் விக்ரமரத்ன - 82738 

விஜயதாஸ ராஜபக்‌ஷ - 81758 

ஹிருணிகா பிரேமச்சந்திர - 70584 

மனோ கணேசன் - 69064 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 

விமல் வீரவங்ச - 313801 

உதயபிரபாத் கம்மன்பில - 198818 

சுசில் பிரேமஜயந்த - 174075 

தினேஷ் குணவர்த்தன - 124451 

பந்துல குணவர்த்தன - 96057 

மொஹான் லால் ஹிரேரு - 65703 

காமினி லொகுகே - 58527 

மக்கள் விடுதலை முன்னணி 

அனுர குமார திஸாநாயக்க - 65966 

கம்பஹா மாவட்டத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளின் முழுவிபரம்.

එක්සත් ජාතික පක්ෂය  - ආසන 09 යි
1. අ.අ. රංජන් රාමනායක සද්ද විද්ද                                  216463
2. අර්ජුණ රණතුංග                                                        165890
3. දිනේන්ද්‍ර රුවන් විජයවර්ධන                                        157932
4. හර්ෂණ සුපුන් රාජකරුණා                                           122455
5. අ.  අජිත් කුමාර මාන්නප්පෙරුම                                   113889
6. අමරතුංග ජෝන් ඇන්තනී එම්මානුවෙල්                          83070
7. සේනාධීරගේ දොන් කවින්ද හේෂාන් ජයවර්ධන                81383
8. චතුර සංදීප සේනාරත්න නම්බුකාර හැලඹගේ                   71243
9. ඇඩිවඩ් ගුණසේකර දෙහිවල ලියනගේ                            65874
එක්සත් ජනතා නිදහස් සංධානය - ආසන 08
1. ප්‍රසන්න රණතුංග                                                       384448
2. බුලත්වැලගේ ප්‍රසන්න රණවීර                                      112395
3. ඇන්ටනී නිමල් ලාන්සා වර්ණකුලසුරිය                            94375
4. ආරච්ච්ලාගේ සිසිර ජයකොඩි                                         90749
5. හේරත් හිටිහාමි අප්පුහාමිලාගේ දොන් ඉන්දික අනුරුද්ධ     78109
6. පර්පචුවා සුදර්ශණී ප්‍රනාන්දු පුල්ලේ                                 73553
7. ආරච්චිගේ ගනේ්පොල දුලිප් පණ්ඩුල පෙරේරා වීරසේකර    58936
8. අ. අලගියවන්න ලසන්ත                                                57950
ජනතා විමුක්ති  පෙරමුණ -  ආසන 01
1. එච්.එම්  විජිත හේරත්                                                    55299    
_______________________________________________________

ஐக்கிய தேசியக் கட்சி 

ரஞ்சன் ராமநாயக்க - 216463 

அர்ஜூன ரணதுங்க - 165890 

ருவண் - 157932 

ஹர்சன - 122455 

அஜீத் மானப்பெரும - 113889 

ஜேன் செனவிரத்ன - 83070 

கவிந்த - 81383 

சதுர எஸ்.- 71243 

எட்வட் - 65874 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 

பிரசன்ன ரணதுங்க - 384448 

பி. ரணவீர - 112395 

என். லன்ச - 94375 

சிசிர ஜயக்கொடி - 90749 

இந்திக்க அனுருத்த - 78109 

சுதர்ஷனி - 73553 

துலிப் விஜேசேகர - 58936 

லசந்த அழகியவன்ன - 57950 

மக்கள் விடுதலை முண்ணனி 

விஜித ஹேரத் - 55299 
    

ஓரங் கட்டப்பட்ட குறு நில மன்னர்கள் இருவர் இம்முறை கடும் தோல்வியைத் தழுவி உள்ளார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கடந்த முறைகளில் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டும், மகிந்தவின் ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டும் தமது பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்து முடித்த குறு நில மன்னர்கள் இம்முறை கடும் தோல்வியைத் தழுவி உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்ர் செழிப்பு மிக்க நகராக காத்தான்குடியைக் கட்டி எழுப்பிய ஹிஸ்புல்லாஹ்வும், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் இனி செய்ய எதுவும் இல்லை எனக் கூறும் அளவுக்கு தெருவுக்குத் தெருவு அபிவிருத்திகளை அள்ளி அள்ளி செய்த அதாவுல்லாவும், ஆளும் கட்சியின் அதிகாரத்தைக் கொண்டு ஆளும் கட்சியின் அமைப்பாளாராக புத்தளத்தின் கல்வி, பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்த பாயிசும் தோல்வியைத்தழுவியதன் மூலம் படிப்பினை பெறுவார்களா?

நடை முறையில் உள்ள தேர்தல் முறையான விகிதாசாரத்தேர்தலில் அவர்களின் பார்வை மாவட்டமாக தேர்தல் காலங்களில் இருந்தாலும், வெற்றி பெற்ற பின்னர் தமது தொகுதிகளையும் மறந்து தமது ஊரிலுள்ள எதிரணியினருடன் அன்றாட அரசியல் கிளித்தட்டு விளையாட்டிலும், தமது ஊரை மட்டுமே அபிவிருத்தி செய்வதிலுமே அவர்களின் கவனம் கடந்த காலங்களில் கழிந்ததை அவர்கள் இந்தத் தேர்தல் முடிவின் மூலம் அறிந்து கொண்டிருப்பார்கள்.

இதற்கும் அப்பால் அவர்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பல போது மக்களுக்கு எதிராக தமது அரசியல் அதிகாரப் பலத்தைப் பிரயோகிப்பதிலும், மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு இடம் கொடுக்காமல் மக்களை அடக்கி எதிர்ப்பரசியல் சக்தி ஒன்றினை தாமாகவே உருவாக்கியும் கொண்டனர்.
வெற்றியும், தோல்வியும் சோதனைகளே, இவற்றின் மூலம் ஒன்றில் அதீத பெருமை, அகங்காரம் அல்லது பழிவாங்கும் படலம் மனிதப் பலகீனங்களால் ஏற்படுகிறது. மக்கள் தலைவன் மக்கள் தொண்டன் / சேவகன் என்பதை நடை முறையில் காணப்படுகின்ற ஜனநாயகம் என்ற பெயரில் 5/6 வருடங்களுக்கு ஒரு முறை மக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை என்ற மிகப் பெரிய பலமும் மக்களின் அறியாமையினால் விலை பேசப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய கவலைக்கிடமான அரசியல் செயன் முறையொன்றில் இருந்து மாற்று அரசியல் வழிமுறையின் பால் மக்களையும், எமது அரசியல் பிரதிநிதிகளையும் தயார் செய்கின்ற பாரிய பொறுப்பு எமது சமூகத் தலைமைகளுக்கே இருக்கின்றது.

ஒரு துறையில் புலமைப் பெறுவதற்கு நீண்ட காலம் ஒழுங்கு முறையிலான கற்றல் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. ஆசிரியறாவட்கும், வைதியறாவதட்கும், பொறியியலாளர் ஆவதற்கும் தகைமையும், பயிற்ச்சியும் தேவைப்படும் பொழுது, அரசியல்வாதியாக ஆவதற்கு தலைவரை தன் தோல் மீது சுமந்து செல்லும் தொண்டனாக, தலைவனுக்காய் போஸ்டர் ஓட்டும் போராளியாக மட்டும் இருப்பதே தகைமையாகக் கொள்ளப்படும் வரை எமது சமூகம் விடிவு காணாது.

நாட்டில் நல்லாட்சி நிலவ சானக்கியமுள்ள கல்வி அறிவும், பண்பாடும் உள்ள புதிய அரசியல் வாதிகளை இனம் கண்டு பயிற்றுவிப்போம். தேர்தல் கால அரசியல் செயல்பாடுகளுக்கு அப்பால் நீண்ட அரசியல் செயன்முறைக்கான நீண்ட திட்டமிடலுக்கு வாக்காளராகிய நாம் இன்றே தயாராகுவோம்.
– அபூ மர்யம்
lankamuslim web

வாக்களிப்பு நிறைவு, கஹடோவிட அல்பத்ரியா ம.வி. வாக்குச்சாவடியில் 77 வீத வாக்களிப்பு

8 ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தன. 


அதனையடுத்து, வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள், வாக்கென்னும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இம்முறை எமது வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2199. இவற்றுள் 1684 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இது 77 வீத வாக்களிப்பாகும்.  

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 1780 க்கும் மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. எனவே ஒப்பீட்டளவில் வாக்களிப்பு வீதத்தில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

மக்கள் தீர்ப்பு இன்று, அல்பத்ரியா ம.வி. வாக்குச் சாவடியில் வாக்களிப்பு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்கு பிர­தி­நி­தி­களை தெரிவுசெய்­வ­தற்­கான தேர்தல் வாக்­க­ளிப்பு இன்று திங்­கட்­கி­ழமை காலை 7 மணி­முதல் மாலை 4 மணி­வரை நாடு முழு­வதும் நடை­பெ­ற­வுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த தேர்தல் வாக்­க­ளிப்பில் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.

தேர்­தலில் 6,151 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்ற நிலையில் 225 உறுப்­பி­னர்கள் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்யப்­ப­ட­வுள்­ளனர். நாடு முழு­வதும் 12,314 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­து.
அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 3,653 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 2498 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றனர். தேர்­த­லுக்­கான பிர­சாரப் பணிகள் யாவும் கடந்த வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் முடி­வுக்கு வந்­தன.
கம்­பஹா மாவட்டம்
கம்­பஹா மாவட்­டத்தில் 1637537 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 18 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 252 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 336 வேட்­பா­ளர்­க­ளு­மாக 588 பேர் தேர்தல் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.
எமது ஊர் வாக்காளர்களின் கருத்துப்படி கஹடோவிடாவில் ஐ.தே.மு க்கும் ம.வி.மு க்கும் வாக்குச் சேகரிப்பதில் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. பெறுத்திருந்து பார்ப்போம். 


ஷாபி ஹஸன் நானா அவர்கள் காலமானாா்.

கஹடோவிட, வானையைச் சோ்ந்த ஷாபி ஹஸன் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சகோதரி சித்திநிஸா அவர்களின் கணவரும் ஆவாா். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (15.08.2015) மாலை 5.00 மணியளவில் முகியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار 

 இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக! Copy and WIN : http://ow.ly/KNICZ

கஹடோவிட மக்களின் பலத்த வரவேற்ப்புக்கு மத்தியில் அனுரகுமார திஸானாயக்க நெற்றிரவு உரையாற்றினாா்.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான பிரச்சாரக் கூட்டமொன்று நேற்றிரவு கஹட்டோவிட்டாவில் நடைபெற்றது.

அக்கட்சியின் பிரச்சார செயலாளா் விஜித ஹெரத் மற்றும், சமகாலத் அரசியல் தலைவர்களுல் இளைஞர்களால் அதிகமாக பேசப்படும் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டமை கஹடோவிட மக்களின் மத்தியில் மிகப்பெறிய வரவேற்ப்பைப் பெற்றிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 
இக்கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும் போது எமது மக்களின் பெரும்பான்மையான வாக்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு சென்றுவிடுவதற்கான வாய்பு காணப்படுவதாக வாக்காளாகள் கதைக்கைக் கூடியதை  காணக்கூடியதாக இருந்தது. 


வசீம் தாஜுத்தின் படுகொலை, தொடர்பில் மேலும் பல புதிய தகவல்கள்

இலங்கையின் பிரபல வாசிம் தாஜூடீனின் உடல் தடயவியல் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ள நிலையில் அவரது படுகொலை குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரக்பி வீரர் சித்திரவதை செய்யப்படுவதை அவரது காதலியை தொலைபேசியில் கேட்க செய்த பின்னரே அவரை கொலைகாரர்கள் படுகொலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட படுகொலை தொடர்பான விசாரணையின்போது வாசிம் தாஜூடீனின் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார் என்பது குறித்த பயங்கரமான விபரங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கபடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரக்பி வீரரின் முன்னாள் காதலியிடம் குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த படுகொலை குறித்த விபரங்களை மூடி மறைப்பதற்காக அவரிற்கு வெளிநாட்டு தூதரகமொன்றில் சிறிது காலம் இராஜதந்திர பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனினும் இவ்வருட ஆரம்பத்தில் மகிந்தராஜபக்சவின் தேர்தல் தோல்வியை தொடர்ந்து வெளிநாட்டு தூதரகங்களில அரசியல் நிமயனம் பெற்றவர்கள் திருப்பி அழைக்கப்பட்டவேளை அவரும் அழைக்கப்பட்டுள்ளார்.

மிகவும் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த நபர் ஓருவரின் பொறமையே ரக்பி வீரர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதற்கான காரணம் எனபொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் படுகொலையை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மூவரே மேற்கொண்டதாக அமைச்சர் ராஜிதசேனரத்தின தெரிவித்துள்ளார்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான வாகனமென்றிலேயே ரக்பி வீரர் கடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை செஞ்சிலுவை தலைவர் ஜகத் அபயசிங்க இது குறித்துமௌனமாக உள்ள அதேவேளை இது குறித்து பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்ட வாகனத்தை முன்னாள் முதற்பெண்மணியின் அரசசார்பற்ற அமைப்பிற்கு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
jaffnamsulim 

எமது பிரதான பாதையும் காபட் இட்டு செப்பணிடம் படவேண்டும் என்ற கனவு நிறைவேறப்போகின்றது. புணரமைப்பு மீள் ஆரம்பம்.

கடந்த அரசாங்கத்தில் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு சில காரணங்களினால்  தடைப்பட்டிருந்த கஹடோவிட பிரதான பாதைக்கான “காபட்“  போடும் வேலைகள் சந்திரிக்கா அம்மையார் மற்றும் அரஜுன ரணதுங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தோ்தல் வெற்றியின் பின்னர் எமது ஊருக்கு விஜயம் செய்திருந்த சந்திரிக்கா அம்மையாரிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் முகமாக சந்திரிக்கா அம்மையார் அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தாா்“ நான் உங்களுக்கு இந்தப் பாதையை காபட் இட்டுத்தருவதாக உறுதியளிக்க மாட்டேன் எனக் கூறி அதற்கான சில காரணங்களையும் கூறிவிட்டு ஆனால் பாதை புணரமைப்பு வேலைகள் ஆரம்பிக்குமிடத்து நிச்சயாமாக கஹடோவிட பிரதான பாதை வேலைகளை முன்படுத்தித் தருவதாக வாக்களித்திருந்தாா்“
அந்த வாக்குறிதியை நிறைவேற்றியமைக்கு எமது ஊா்மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் போது, அது எந்தக் கட்சியால் நடந்தாலும் ஊரின் நலனைக் கருத்திற்கொண்டே அனைவரும் செயற்படல் வேண்டும். இதுபோன்ற அபிவிருத்திப் பணிகள் நடக்கும் போது கடந்த காலங்களில் பல இடையுா்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இவ்வபிவிருத்திப் பணிக்கு அனைவரும் ஒத்துழைத்து ஊரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். 

வீதியோர ஏழையாக மாறுவேடத்தில் ரொனால்டோ (வீடியோ)



வீதியோர ஏழையாக மாறுவேடத்தில் ரொனால்டோ - யாருமே அடையாளம் காணவில்லை. திறமையையும் ஆளை வைத்தே அடையாளம் காணும் உலகம்

எதிா்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கஹடோவிட வாக்காளாகளின் வாக்குகள் எவ்வாறு அமையவேண்டும்.

கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்று முடிந்த தேர்தலின் சூடு தனிய முன்னமே மீண்டும் ஒரு பாராளுமன்ற தோ்தலை எமது நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில்  தேர்தல் தெரிவுகள் எவ்வாறு அமைய வேண்டும என எமது தளத்தின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிகிறோம்.

கடந்த அரசாங்கத்தின பல்வேறு துயர நிகழ்வுகளையும், சிறுபான்மை சமூகத்தின் மீதான அராஜகங்களையும் அனுபவித்து வந்த எமக்கு, ஆறுலதலாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அமைந்தது. அல்லாஹ்வின் உதவியால் நாம் எதிர்பார்த்த மாற்றம் நிகழ்ந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுபட்டு வெற்றியடைந்தது போல், இப்பாராளுமன்றத் தோ்தலிலும் ஒற்றுமைப்பட்டு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எமது அவா.. எனினும், எமக்குள்ளே பல கட்சிகள் பிரிந்து கானப்படுவதால், எமது வாக்குகள் சிதரடிக்கப்படும் சாத்தியமே அதிகம்.

களநிலவரங்களுக்கு ஏற்ப, அந்தந்தக் கட்சிகளில் போட்டியிடும் வேற்பாளர்களுல் முற்படுத்தப்பட வேண்டியவா்களை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தம் எனக் கருதிகிறோம்.

ஐக்கிய தேசிய முன்னனிக்கு வாக்களிக்கும் மக்கள் முதலாவது தெரிவாக சகோதரா ஷாபி ரஹீம் அவர்களுக்கு ஒரு விருப்பு வாக்கை அளிக்பது எமது கடமை. ஏனெனல், எமது மாவட்டத்தில் எந்த இடங்களில் எல்லாம் முஸ்லிங்கள் வாழ்கிறார்களோ அந்த இடங்களிக்கெள்ளாம் சென்று அவரது மாகாணசபை நிதி ஒதிக்கீட்டின் மூலமாக பல சேவைகளை செய்திருக்கிறார். அதேபேன்று எமதூரும் பல சேவைகளை அவர் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் ஞாபகப்படுத்திகிறோம்.  கடந்த காலங்களில் ஒரு சில கஷப்பான அனுபவங்கள் இருந்தாலும், கிழக்கிலங்கை போல அபிவிருத்தி பிரதேச வாதங்களை மாத்திரம் கருத்தில்கொண்டு எமது வாக்குகளை வீணடிக்கக் கூடது. கஹடோவிட வாழ் மக்கள் முஸ்லிம் சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
அடுத்த தெரிவுகளாக அரஜுன ரணதுங்க, ஸரனலால், அஜத் மானப் பெரும, ஹரிசன ராஜகருன ஆகியோரும் எமது ஊருடன் தொடர்புடையவர்களே. அதேபோன்று எமது சமூகம் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருந்த வேளை எங்களுக்காக குரல் கொடுத்த ராஜித சேனாரத்ன அவர்களின் மகன் சதுர சேனாரத்ன அவர்களையும் கருத்தில்கொள்ளலாம்.

இவ்வாறே மக்கள் விடுதலை முன்னனியும் மக்கள் மத்தியில் பாரிய ஆதரவை பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. இம்முறை பாராளுமன்றத் தோ்தலில் கனிசமான முஸ்லிம் வாக்குகள் மக்கள் விடுதலை முன்னனியை அடைய வாய்ப்புக்கள் இருப்பதாக கனிப்பீடுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கடந்தகால அரசில் முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதிப் படுத்திய எமது பாராளுமன்ற, மாகான சபை உறுப்பினா்களின் வங்குரோத்து அரசியலே எனவும் வாக்காளர்கள் கருத்துத் தெரிவிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.