கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எதிா்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கஹடோவிட வாக்காளாகளின் வாக்குகள் எவ்வாறு அமையவேண்டும்.

கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்று முடிந்த தேர்தலின் சூடு தனிய முன்னமே மீண்டும் ஒரு பாராளுமன்ற தோ்தலை எமது நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில்  தேர்தல் தெரிவுகள் எவ்வாறு அமைய வேண்டும என எமது தளத்தின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பிகிறோம்.

கடந்த அரசாங்கத்தின பல்வேறு துயர நிகழ்வுகளையும், சிறுபான்மை சமூகத்தின் மீதான அராஜகங்களையும் அனுபவித்து வந்த எமக்கு, ஆறுலதலாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அமைந்தது. அல்லாஹ்வின் உதவியால் நாம் எதிர்பார்த்த மாற்றம் நிகழ்ந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுபட்டு வெற்றியடைந்தது போல், இப்பாராளுமன்றத் தோ்தலிலும் ஒற்றுமைப்பட்டு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எமது அவா.. எனினும், எமக்குள்ளே பல கட்சிகள் பிரிந்து கானப்படுவதால், எமது வாக்குகள் சிதரடிக்கப்படும் சாத்தியமே அதிகம்.

களநிலவரங்களுக்கு ஏற்ப, அந்தந்தக் கட்சிகளில் போட்டியிடும் வேற்பாளர்களுல் முற்படுத்தப்பட வேண்டியவா்களை இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தம் எனக் கருதிகிறோம்.

ஐக்கிய தேசிய முன்னனிக்கு வாக்களிக்கும் மக்கள் முதலாவது தெரிவாக சகோதரா ஷாபி ரஹீம் அவர்களுக்கு ஒரு விருப்பு வாக்கை அளிக்பது எமது கடமை. ஏனெனல், எமது மாவட்டத்தில் எந்த இடங்களில் எல்லாம் முஸ்லிங்கள் வாழ்கிறார்களோ அந்த இடங்களிக்கெள்ளாம் சென்று அவரது மாகாணசபை நிதி ஒதிக்கீட்டின் மூலமாக பல சேவைகளை செய்திருக்கிறார். அதேபேன்று எமதூரும் பல சேவைகளை அவர் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் ஞாபகப்படுத்திகிறோம்.  கடந்த காலங்களில் ஒரு சில கஷப்பான அனுபவங்கள் இருந்தாலும், கிழக்கிலங்கை போல அபிவிருத்தி பிரதேச வாதங்களை மாத்திரம் கருத்தில்கொண்டு எமது வாக்குகளை வீணடிக்கக் கூடது. கஹடோவிட வாழ் மக்கள் முஸ்லிம் சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
அடுத்த தெரிவுகளாக அரஜுன ரணதுங்க, ஸரனலால், அஜத் மானப் பெரும, ஹரிசன ராஜகருன ஆகியோரும் எமது ஊருடன் தொடர்புடையவர்களே. அதேபோன்று எமது சமூகம் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருந்த வேளை எங்களுக்காக குரல் கொடுத்த ராஜித சேனாரத்ன அவர்களின் மகன் சதுர சேனாரத்ன அவர்களையும் கருத்தில்கொள்ளலாம்.

இவ்வாறே மக்கள் விடுதலை முன்னனியும் மக்கள் மத்தியில் பாரிய ஆதரவை பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. இம்முறை பாராளுமன்றத் தோ்தலில் கனிசமான முஸ்லிம் வாக்குகள் மக்கள் விடுதலை முன்னனியை அடைய வாய்ப்புக்கள் இருப்பதாக கனிப்பீடுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கடந்தகால அரசில் முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதிப் படுத்திய எமது பாராளுமன்ற, மாகான சபை உறுப்பினா்களின் வங்குரோத்து அரசியலே எனவும் வாக்காளர்கள் கருத்துத் தெரிவிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

0 comments:

Post a Comment