கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் புற்றுநோக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றமையால் முற்றாக தடைசெய்யப்படவுள்ளது.

எஸ்பெஸ்டஸ் பொருட்களின் இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு  2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.

புற்றுநோய்க்கு முதற்காரணமாக எஸ்பெஸ்டஸ் இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அறிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பொலித்தின் பாவனை தொடபில் கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். 

எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகள் புற்றுநோக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.

இதன்படி, 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கிறோம்.

அது போல் எஸ்பெஸ்டஸ் உள்நாட்டு உற்பத்திக்கும் தடை விதிக்கின்றோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே இது தொடர்பில் நாங்கள் அறிவிக்க காரணம் வர்த்தக நிறுவனங்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment