கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

காழ்ப்புணர்வின் மீது கட்டப்பட்டுள்ள ஷீஆயிஸம்

காழ்ப்புணர்வுகள் மீது தனது கட்டுமானத்தை நிறுவிய ஓர் அமைப்பினால் தனது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து அந்தக் காழ்ப்புணர்வுகளை நீக்குவது எளிதானதல்ல. அது கட்டுமானத்தை வைத்துக் கொண்டு அத்திவாரத்தை உடைப்பது போன்றதாகும். காழ்ப்புணர்வுகள் மீது கட்டுமானத்தை எழுப்பியவர்களின் விடயத்தில் அதனை நாம் கண்கூடாகவே காண்கின்றோம். அவர்கள் விரும்பினாலும் அந்தக் காழ்ப்புணர்வுகளை அவர்களது உறுப்பினர்களின் உள்ளங்களிலிருந்து நீக்க முடியாது.

இதற்கு இன்றைய உலகில் இருக்கும் சிறந்த உதாரணம்தான் ஷீஆக்கள். ஷீஆயிஸம் என்ற கட்டுமானத்தை தீராத பகை மற்றும் குரோதம், வெறுப்பு, துவேஷம் என்பவற்றின் மீதே அவர்கள் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். யாரின் மீது பகை?

அபூபக்ர், உமர், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹும் போன்ற உத்தம ஸஹாபாக்கள் மீது கொண்ட தீராப் பகையை 1400 வருடங்களாக வளர்த்துப் போஷித்துப் பாதுகாத்து அந்தப் பகையைச் சுற்றி கொள்கை, கோட்பாடுகள் தத்துவங்கள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், சடங்குகள் என்பற்றையும் வளர்த்து ஷீஆயிஸம் என்ற கோட்டையை அவர்கள் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். இன்று அவர்களுடைய எதிரிகள் யாரென்றால், அந்த உத்தம ஸஹாபாக்களை அவர்களைப் போல் வாய் நிறையத் திட்டி சாபமிடாத ஸுன்னிகள்தான், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேரோடு கிள்ளியெறிய விரும்பும் ஸியோனிஸ மாபியாக்கள் அல்ல.

ஷீஆக்கள் இன்று உலகத்தில் யாரோடு போரிடுகிறார்கள் என்பதை ஒரு கணம் நோட்டமிடுங்கள். அவர்கள் அமெரிக்க ஸியோனிஸ சக்திகளுடன் போராடவில்லை. மாறாக, அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் சொற்போர்தான் நடத்தியிருக்கிறார்கள். எனினும், முஸ்லிம்களான சுன்னிகளோடு ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போருக்கு துணை போனதால் இன்று அமெரிக்கா ஷீஆக்களோடு கைகோர்த்திருக்கிறது. காரணம், முஸ்லிம் உம்மத்துக்கு மத்தியில் இத்தகைய பகையும் குரோதமும் வளர வேண்டும் என்பதைத்தான் இஸ்லாத்தின் எதிரிகள் விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான பகையும் குரோதமும் இந்த உம்மத்தில் தாராளமாகவே இருக்கிறது என்பதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாங்களா சொல்லிக் கொடுக்க வேண்டும்?

குமைனி ஈரானியப் புரட்சியில் வெற்றி பெற்றார். எனினும், பகை நீக்கும் புரட்சியில் வெற்றி பெறவில்லை. இல்லை அந்தப் புரட்சியை அவர் செய்யவே இல்லை. 1400 வருடங்களாக வளர்ந்த ஸஹாபாக்கள் மீதான பகையை அவர் நீக்க முயற்சித்திருந்தால் ஷீஆக்களின் பகைப் புயல் அவரைத்தான் அள்ளிக் கொண்டு போயிருக்கும்.

இந்த வரலாறு கற்றுத் தருகின்ற பாடம் என்ன? முஸ்லிம் உம்மத்திற்குள் பகை வளர்ப்பவர்கள் வெளியே இருக்கும் தங்களது பிரதான எதிரியை மறந்து விடுவார்கள். உள் வீட்டில் இருக்கும் நண்பர்களை எதிரிகளாக மாற்றிக் கொள்வார்கள். இறுதியில் இஸ்லாத்தின் பெயராலேயே தங்களது சமூகத்தை அவர்கள் நாசமாக்குவார்கள்.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் 


நன்றி - எங்கள் தேசம்

0 comments:

Post a Comment