கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நல்லாட்சியில் கஹடோவிடாவின் முன்மாதிரி...

கஹடோவிடாவின் பிரதான பாதைக்கான புனர்நிர்மானம் தற்போது மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.  நல்லாட்சிக்கான மக்கள் பங்கேற்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள இந்த அரசாங்கத்துக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

கம்பஹா மாவட்ட அத்தனகல்லை தேர்தல் தொகுதிக்குற்பட்ட கஹடோவிட எனும் கிராமம் சுமார் 2500 குடும்பங்களை கொண்டதாகும். இக்கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுவந்த பிரதான பாதையை புணர்னிர்மானம் செய்வதற்காக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரனாயகவின் சிபாரிசின்படி அமைச்சர் கபீர் ஹாசிமின் அங்கீகாரத்துடன் கஹடோவிட பிரதான பாதைக்கு காபட் இட அனுமதி வழங்கப்பட்டமைக்கு கஹடோவிட மக்கள் என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

கஹடோவிட கிராம மக்கள் இச்சந்தர்பத்தை நல்ல முறையில் அனுகி உச்சபயனை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பிரதான பாதை விஸ்தரிப்புக்கு இக்கிராம மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். பாதை விஸ்தரிப்புக்கு தேவையான குறைந்தபட்ச வீடு/கடை/காணிகளை வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துறையாடி உடைக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு மீண்டும் கட்டிக்கொடுக்க இக்கிராம மக்கள் முன்வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இப்பணியை அரசாங்கம் மேற்கொள்ளுமாக இருந்தால் எமது கிராம மக்களுக்கு நஷ்ட ஈடாக சுமார் 80 இலட்சத்துக்கும் மேலான அளவில் வழங்கவேண்டியிருக்கும்.

கடந்த அரசாங்கத்தில் பொதுவாக அனைத்து மூலை முடுக்குகளிலும் செய்யப்பட்ட புனர் நிர்மானப் பாதைகளில் சில அமைச்சர்கள் ஊளல்/இலன்சம்/தரவு பெற்றுக்கொண்டடே பாதைகள் புணர்னிர்மானம் செய்யப்பட்டதாக  குற்றம் சுமத்தப்படுவதை நாம் பத்திரிகைகள் மூலம் அறிகின்றோம். அவ்வாரான சூழ் நிலையில் இன்று நல்லாட்சிக்கான அரசாங்கத்திற்கு கஹடோவிட கிராம மக்கள் முன்னுதாரனமாக செயல் படுத்திக்காட்டியிருக்கிறமை வராலாற்று முக்கியத்துவமாகும்.

கடந்த ஆட்சியில் கம்பஹா மாவட்டத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் காபட் இடப்பட்ட போதும் கஹடோவிட பிரதான பாதை அரசியல் ரீதியான பளிவாங்களுக்கு உற்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

Abu shakek

0 comments:

Post a Comment