கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மக்கள் தீர்ப்பு இன்று, அல்பத்ரியா ம.வி. வாக்குச் சாவடியில் வாக்களிப்பு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்கு பிர­தி­நி­தி­களை தெரிவுசெய்­வ­தற்­கான தேர்தல் வாக்­க­ளிப்பு இன்று திங்­கட்­கி­ழமை காலை 7 மணி­முதல் மாலை 4 மணி­வரை நாடு முழு­வதும் நடை­பெ­ற­வுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த தேர்தல் வாக்­க­ளிப்பில் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.

தேர்­தலில் 6,151 வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­கின்ற நிலையில் 225 உறுப்­பி­னர்கள் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்யப்­ப­ட­வுள்­ளனர். நாடு முழு­வதும் 12,314 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­து.
அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 3,653 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 2498 வேட்­பா­ளர்­களும் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றனர். தேர்­த­லுக்­கான பிர­சாரப் பணிகள் யாவும் கடந்த வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யுடன் முடி­வுக்கு வந்­தன.
கம்­பஹா மாவட்டம்
கம்­பஹா மாவட்­டத்தில் 1637537 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர். இந்த மாவட்­டத்தில் 18 பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். மாவட்­டத்தில் அர­சியல் கட்­சி­களின் சார்­பாக 252 வேட்­பா­ளர்­களும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக 336 வேட்­பா­ளர்­க­ளு­மாக 588 பேர் தேர்தல் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.
எமது ஊர் வாக்காளர்களின் கருத்துப்படி கஹடோவிடாவில் ஐ.தே.மு க்கும் ம.வி.மு க்கும் வாக்குச் சேகரிப்பதில் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. பெறுத்திருந்து பார்ப்போம். 


0 comments:

Post a Comment