ஊர் மக்களிடம் பாதை விஸ்தரிப்புக் குழு முன்வைக்கும் வேண்டுகோள்.
அல்லாஹ்வின் உதவியினால்
பிரதான பாதை விஸ்தரிப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றதை காணக்கூடியதாக இருகிறது.
இப்பணிகள் கஹடோவிட சந்தியில் இருந்து ருக்மல வீதி வரை இடம்பெறவிருப்பதால் ஊர்மக்கள்
அனைவரும் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கி ஒத்துழைக்குமாறு ஊர்மக்களிடம் வேண்டுகோள்
விடப்படுகிறது.

ஆரம்பிக்கப்பட்ட
வேலைகள் முடிக்கப்படவேண்டியுள்ளதால் ஊர்மக்களின் பங்களிப்பு முன்னதைவிட அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உடைக்கப்பட்ட
கட்டடங்கள் மற்றும் இனி உடைக்கப்படவுள்ள கட்டடங்களை கட்டிக்கொள்ள வசதியற்றவர்களுக்கு
நிதியுதவிகளை வழங்குவதற்காக இதுவரை சேகரிக்கப்பட்ட நிதி போதாத நிலையிலுள்ளதாகவும்.
ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் வாக்களித்த தொகையை மிக அவசரமாக தந்துதவுமாறு வேண்டுகோள்விடப்படுவதோடு,
ஏனையவர்களும் தாராளமாக நிதியுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதேபோன்று தினமும்
இரவு 10.00 மணிமுதல் சிரமதானப் பணிகள் நடைபெற்று வருவதால் இப்பணிகளில் அனைவரும் இணைந்துகொள்வதோடு
தேவையான சாதணங்கள், உபகரணங்களையும் தந்துதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment