கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது பிரதான பாதையும் காபட் இட்டு செப்பணிடம் படவேண்டும் என்ற கனவு நிறைவேறப்போகின்றது. புணரமைப்பு மீள் ஆரம்பம்.

கடந்த அரசாங்கத்தில் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு சில காரணங்களினால்  தடைப்பட்டிருந்த கஹடோவிட பிரதான பாதைக்கான “காபட்“  போடும் வேலைகள் சந்திரிக்கா அம்மையார் மற்றும் அரஜுன ரணதுங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தோ்தல் வெற்றியின் பின்னர் எமது ஊருக்கு விஜயம் செய்திருந்த சந்திரிக்கா அம்மையாரிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதிலளிக்கும் முகமாக சந்திரிக்கா அம்மையார் அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தாா்“ நான் உங்களுக்கு இந்தப் பாதையை காபட் இட்டுத்தருவதாக உறுதியளிக்க மாட்டேன் எனக் கூறி அதற்கான சில காரணங்களையும் கூறிவிட்டு ஆனால் பாதை புணரமைப்பு வேலைகள் ஆரம்பிக்குமிடத்து நிச்சயாமாக கஹடோவிட பிரதான பாதை வேலைகளை முன்படுத்தித் தருவதாக வாக்களித்திருந்தாா்“
அந்த வாக்குறிதியை நிறைவேற்றியமைக்கு எமது ஊா்மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் போது, அது எந்தக் கட்சியால் நடந்தாலும் ஊரின் நலனைக் கருத்திற்கொண்டே அனைவரும் செயற்படல் வேண்டும். இதுபோன்ற அபிவிருத்திப் பணிகள் நடக்கும் போது கடந்த காலங்களில் பல இடையுா்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இவ்வபிவிருத்திப் பணிக்கு அனைவரும் ஒத்துழைத்து ஊரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். 

0 comments:

Post a Comment