கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்லுாரி மாடிக்கட்டட திறப்பு விழா


மேல் மாகாணம் கம்பஹா மாவட்டம்  அத்தனகல்ல  தேர்தல்  தொகுதியில்  ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக  திகழ்கின்ற  கஹடோவிட  முஸ்லிம் பாலிகா வித்தியாலயமாகும் . இக்கலயகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு 71 வருடங்களாகின்றன. 

படிப்படியாக பல்வேறு தடைகளைத் தாண்டி முன்னேரிச் செல்கின்ற இப்பாடசாலையின் வரலாற்றில் புதுப் பரிணாமமாகத் திகழ்கின்ற இரண்டுமாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த கட்டிடம் குவைட் நாட்டின் அனுசரனையிலும் டாக்டர் சைகா யுசப் அல் கதாமி மற்றும் ஸாத் அல் அன்சாரி ஆகியோரின் நன்கொடையிலும், கஹடோவிட அல் ஹிமா  இஸ்லாமிய நிருவனத்தின் செயலாளர் எம்.ஏ.ஏ நூருல்லா (நளீமி)யின் மேற்பார்வையில் சிறந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

கஹடோவிடாவைச் சேர்ந்த பாரூக் அப்பா காலமானார்.

ஒகடபொலவை பிறப்பிடமாகவும், கஹடோவிடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாரூக் அப்பா அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் காமிலா உம்மா அவர்களின் அன்புக் கனவரும், பர்ஹான் நானா, மற்றும் பஸ்மில் நானா  ஆகியோரின் சாச்சாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம்  இன்று இரவு (2016.11.27) 8.30 மணியளவில்  கஹடோவிட முஹியத்தீன்  ஜும்ஆ பள்ளி மையவாடியில் நடைபெறும்.


  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    

 இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

திஹாரியில் முஸ்லிம் பாடசாலைக்கு உதவி செய்ததன விளைவு? ஆனாலும் நான் பின்வாங்க மாட்டேன்.

உலகிற்கு அனுப்பப்பட்ட மதப் போதகர்களுள் புத்த பெருமானே சகவாழ்வை வலியுறுத்திப் பேசியுள்ளார். மனிதனாக பிறந்த புத்தர் பௌத்தத்துவத்தின் உன்னத நிலைக்கு தனது மனதை கொண்டு சென்றார். அவ்வுன்னதமான உள்ளத்தில் சகலரும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தினார். 



இப்பிறவியில் நல்ல மனிதராக இருந்தால் மறுபிறவியில் மனிதனாகவும் கடவுளாகவும் பிறப்பார். தீய செயல்களுக்கமைய அவன் மிருகமாகவோ அல்லது இழிவான ஒருவனாகவோ பிறவியெடுப்பான்.

நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை போல் அடுத்தவர்களது உரிமையையும் கௌரவத்தையும் மதித்து, புத்த பெருமானின் சகவாழ்வுக் கொள்கையை பின்பற்றி, ஓரினம் என்ற அடிப்படையில் வாழ வேண்டும். புத்த பெருமான் எப்பொழுதும் ‘சப்ப சத்தேது மித்த விகாரா’ என்பார்கள். அதாவது எல்லோருடனும் அன்போடு நடந்து கொள்ளுமாறு கூறுகிறார். 

சூரியன் உலகில் உயர்வு-தாழ்வு, கறுப்பினம்-வெள்ளையினம், ஏழை- பணக்காரர் என்பதாக பாகுபாடு பார்த்து வெளிச்சம் கொடுப்பதில்லை. அது போன்றுதான் புத்த பெருமானும். சகல உயிரினங்களுக்கும் கருணை காட்டுமாறு போதித்துள்ளார். புத்தர் போதித்த கரு ணையில் இனப்பாகுபாடுகள் கிடை யாது. சகல உயிர்களுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என நாம் காலை மாலையில் ‘சுவபத்வேவா’ என்று பிரார்த்திக்கிறோம். 

இவ்வாறான நடைமுறைப் பழக்கங்களுக்கு முற்றிலும் விரோதமான முறையில் ஏனைய இனத்தவர்களை எமக்கு பாகுபடுத்திப் பார்க்க முடியாது. நான் ஒரு பௌத்தன் என்ற வகையில் பௌத்த மதத்தை பின்பற்றுகிறேன். அது போன்று ஏனைய மதங்களையும் புரிந்து வைத்துள்ளேன். அதை அவர்களுக்குப் பின்பற்றும் உரிமையும் உள்ளது. அது போன்று அதை போதிக்கும் உரிமையும் உள்ளது. எல்லோரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. 

நான் சில காலம் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் பௌத்த மதத்தை போதித்து வந்தேன். என்னிடம் பல மதத்தவர்கள் வந்து பௌத்தத்தை கற்கிறார்கள். அவர்களுக்கு நான் போதிக் கிறேன். ஆனால் அவர்கள் இதில் இணைய வேண்டும் என்ற வற்புறுத்தவில்லை. 

நாம் அமெரிக்காவில் விகாரையொன்றை ஆரம்பித்தோம். வெசாக் பண்டிகைக்கு, வெசாக் கூடொன்றை உருவாக்க வேண்டியிருந்தது. அப்போது ஒருவரும் இருக்கவில்லை. பைஸல் என்ற முஸ் லிம் சகோதரர் எமக்கு அதை செய்து தந்தார். அக்காலத்தில் கணினி வசதிகள் எதுவும் காணப்படவில்லை. எனக்கு ஒரு தட்டச்சு உபகரணம் தேவைப்பட்டது. ஒரு முஸ்லிம் வாலிபர் அதை எனக்குத் தந்துதவினார்.

இன்றும் கூட அங்கு முஸ்லிம்கள் எம்மோடு  அன்னியோன்ய உறவுகளை பேணி வருகிறார்கள். அமெரிக்காவில் மாத்திரமல்ல, நான் தாய்வானில் இருக்கும் பொழுதும் ஜப்பானில் இருக்கும் பொழுதும் முஸ்லிம்கள் எமக்குக் கூடுதலாக உதவி புரிந்தார்கள். ஏனைய மதத்தவர்களும் அப்படித்தான். 

எமது பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் எல்லோருக்கும் நியாயமானதாக இருந்தால், எனக்கொரு தீங்கும் அடுத்தவர்களுக்கு ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை என்றால், அதைப் பின்பற்றுவதில் தவறுவதில்லை. 

எல்லா மதத்திலும் தீவிரவாதப் போக்குடையவர்கள் உள்ளார்கள். அவர்களே சமூகத்தில் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறார்கள். பள்ளிகளை அழிக்கிறார்கள். விகாரைகளை உடைக்கிறார்கள். இனவாதத்தை தூண்டுகிறார்கள். மனது உள்ளவர்களுக்கே மனிதர் என்கிறோம். எனவே மனதால் சிந்தித்து கெட்டதை பிரித்தறிந்து நல்லவற்றை எப்போதும் மனதில் புகுத்த வேண்டும். 

இது கறுப்பு அது வெள்ளை என்பதை விளங்க வேண்டும். கறுப்பு இருப்பதனால் தான் வெள்ளையை எமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லா மதத்திலும் பொய் தவறு எனப்படுகிறது.   ஒரு பொய்யால் குடும்பமொன்று அழியலாம். சமூகமும் அழியலாம். 

எமது சிறிய நாட்டில் சகல மதத்தவர்களும் உள்ளார்கள். எல்லோரையும் மதிக்க வேண்டும் ‘காலாம’ சூத்திரத்தில் புத்த பொருமான் எல்லா மதப் போதனைகளையும் மதிக்குமாறும் நல்லவற்றை எடுக்குமாறும் கூறியுள்ளார். இளம் தலைமுறைக்கு நாம் நல்லதொரு முன்மாதிரியை வழங்க வேண்டும். புத்தர் பௌத்தத்தை அடைய முன்னர் ஏனையவர்களுக்கே உபதேசம் செய்தார்கள். நாம் வலுக்கட்டாயமான முறையில் மதத்தை போதிக்கக் கூடாது. 

பிள்ளைகளின் படிப்புக்கு நான் உதவுகிறேன். நான் சகல இன மாணவர்களுக்கும் புலமை பரிசில் கொடுக்கிறேன். என்னிடம் புலமைப்பரிசில் பெற்று களனி பல்கலையில் மருத்துவர்களான நிறைய முஸ்லிம்கள் உள்ளார்கள். அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது போதும் எனக்கு.  சமூகத்திற்கு நல்லவற்றை செய்ய மருத்துவர் தேவை. அதை உருவாக்குவதில் இனப் பாகுபாடு பார்க்கத் தேவையில்லை. 

திஹாரி அல்-அஸ்ஹர் பாடசாலைக்கு தேவையான கட்டிடமொன்றை எனது சொந்த செலவில் கட்டிக் கொடுக்க தீர்மானித்தேன். அன்றிலிருந்து எனது பேஸ்புக் பக்கத்திற்கு நிறைய எதிர்ப்புக்கள் வந்தன. நான் தொலைபேசியை செயலிழக்கச் செய்தேன். எமது இலக்கு நல்லதொரு மாணவர் சந்ததியை உருவாக்குவது. அதன் படி ஒரு சமூகம் உருவானால் அவர்களும் எதிர்காலத்தில்  இது போன்ற விடயங்களை செய்வார்கள். முஸ்லிம்கள் அழைக்கும் பொது நிகழ்வுகளில் நான் கலந்து கொள்கிறேன். இந்துக் குழந்தைகளுக்காகவும் ஒரு கல்விக் கூடத்தை யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு எங்காவதோ கட்டிக் கொடுக்கும் எதிர்பார்ப்பில் உள்ளேன். 

அன்று முஸ்லிம்கள் எமக்கு அதிகளவில் உதவினார்கள். அன்று அடிக்கல் நாட்டு விழாவில் மௌலவி அவர்கள், நீங்கள் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டவில்லை, நல்லிணக்கத்திற்கு அடிக்கல் நாட்டினீர்கள் என்றார். எவ்வளவு இனிமையான கருத்து இது. இவற்றையல்லவா ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். திஹாரி, கஹடோவிட போன்ற கிராமங்களில் உள்ள மக்கள் மனதில் எம்மை பற்றி நல்லதொரு மனப்பதிவு உள்ளது. 

எம்மிடம் ஐந்து விரல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இந்த சமூகத்தில் தீவிரவாதப் போக்குடையவர்கள் உள்ளார்கள். பண்டாரநாயக்கவினை கொலை செய்த புத்த ரக்கித தேரரை அன்று எல்லோரும் கடுமையாகச் சாடினார்கள். எனவே கடும்போக்கு சிந்தனை படைத்தவர்கள் சகல மதங்களி லும் உள்ளார்கள். எம்மிடம் எல்லா பிரிவுகளிலும் குறைபாடுகள் உள்ளன. 

உண்மையை சொல்லி மக்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. அதன் மூலம் நல்லிணக்கம் ஏற்படும். நாம் எல்லோரும் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என்ற கொள்கையை முதலில் மக்கள் மயப்படுத்த வேண்டும். 

 மார்க்க தலைவர்களாக இருந்தாலும் சமூக செயற்பாடுகளில் முன் நிற்கிறார்களில்லை. நான் குறித்த பாடசாலை கட்டிடத்தை நிர்மாணிக்கவுள்ளேன் என கேள்விப்பட்டு பிரதேசத்தை சேர்ந்த ஒரு தேரர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவினார். அவரது குரல் சற்று வித்தியாசமாக இருந்தது. தேவையற்ற முறையில் கதைத்தார். அது போன்ற பணிகளை எதற்குச் செய்கிறீர் கள் என்ற வகையிலான கருத்துக்களை கூறினார். 

நான் அவருக்கு நல்ல விடயங்களைக் கூறினேன். தெளிவுபடுத்தினேன். குரோதம் கொள்வதில் அர்த்தமில்லை. சகலரையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தை கூறினேன். மறுநாள் அவர் என்னை அழைத்து அவர் நண்பர்களிடம் கதைத்ததாகவும் இது போன்ற நல்ல விடயங்கள் தேவை என்றும் கூறினார். எனவே இதுபோன்ற நல்ல விடயங்களை செய்வதன் மூலம் தீய கொள்கை படைத்த ஒருவருக்கு நல்ல பார்வையை ஏற்படுத்துவதே எமக்கு தேவை. இதன் மூலமே நல்லிணக்கம் வலுப்பெறும். 

எல்லா மதத்திலும் உள்ள ஒரு சில தீவிரப்போக்குடையவர்களை நல்வழிக்கு கொண்டு வரும் கடப்பாடு மதகுரு மார்களுக்குள்ளது. நான் இந்து, நான் முஸ்லிம், பௌத்தன் என்று லேபல் குத்துவதை விட நல்ல மனிதப் பண்புகளை பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். 

எல்லோரும் ஒன்றிணையும்போது நல்லவற்றை இலகுவாகச் செய்யலாம். சமவுடைமையோடு அடுத்த மதத்தவர் களோடு நல்ல முறையில் உரையாடல்களை அதிகரிக்க வேண்டும். முஸ்லிம் மதப்போதகர்கள், பெரியோர், வளர்ந்த வர்கள், பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும் போது நல்லதை சொல்லி கொடுக்க வேண்டும் அடுத்த மதத்தவர்களை பற்றி நல்ல அபிப்பிராயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அப் போது நல்லிணக்கம் மிக்க சூழலை இலகுவாக வடிவமைத்துக் கொள்ளலாம். 

புத்த பெருமானின் ஒரு போதனை இங்கு நினைவுகூறத்தக்கது. ‘பரத்தன் படிபஜ்ஜத்’ அடுத்தவர்களின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் நலவுகளுக்கும் எம்மால் முடியுமான வகையில் உதவி புரிய வேண்டும். இவ்வகையிலேயே நான் என்னாலான நற்பணிகளை செய்து வருகிறேன். 

ஏழை மக்களுக்கு நான் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளேன். 336 சுனாமி வீடுகளை ஒரு வருடத்திற்குள் கட்டிக் கொடுத்தேன். அதில் ஒருபோதும் இன வேறுபாடு பார்க்கவில்லை. கல்முனை யில் சிறுவர் பாடசாலையொன்றை கட் டிக் கொடுத்தேன். வைத்தியசாலைகளுக்கு கட்டில்களை வழங்கினேன். அடுத்தவர்களின் நலனுக்காக வேண்டி என்னாலான சகல பணிகளையும் புத்த பெருமானின் போதனைகளுக்கமைய செய்து வருகிறேன். 

சமுதாயத்தை நாம் வேறுபட்ட கண்ணாடிகளால் பார்க்கக் கூடாது. அதை நீக்கி விட்டு நிஜத்தை பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மனது தான் காரணம். மனதை திடப்படுத்த வேண்டும். அப்போது எல்லாப் பகுதிகளும் சீராக அமையும்.

- அனஸ் அப்பாஸ் - 

கஹடோவிடாவைச் சேர்ந்த ரிள்வான் அப்பா காலமானார்.

ரில்வான் அப்பா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னால் சகோதரி அதீமா அவர்களின் கனவரும், அல்வான் நானா, மற்றும் அஹமத் அலி  ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.
அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் நாளை காலை (2016.11.10)  கஹடோவிட முஹியத்தீன்  ஜும்ஆ பள்ளி மையவாடியில் நடைபெறும்.



  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

தாய் சேய் (clinic ) நிலையத்தின் புனர்நிர்மானம் தொடர்பான முக்கிய அறிவித்தல்

எமது ஊரில் இயங்கிவருகின்ற தாய்- சேய் (clinic ) நிலையம் சம்பந்தமாக சில விடயங்களை அன்மையில்  உங்களிடம் பகிர்ந்துகொண்டோம்.
http://www.kahatowita.net/2016/10/clinic.html 

இந்த விடயம் சம்பந்தமாக இன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டதைக் அவதானிக்கமுடிந்தது.

அவ்வறிவித்தலில் இதன் புனர்நிா்மானம் தொடர்பாக விரைவாக செயற்படவேண்டும் என்ற நோக்கிலும், இதற்கான உதவிகள் வழங்க விரும்புவோரும் பின்வரும் நபர்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

1. அல்ஹாஜ் இஸ்மாய்ல்
2. அல்ஹாஜ் சில்மி
3. அல்ஹாஜ் ஜவுஸி
4. அல்ஹாஜ் ருஸ்தி
5. அல்ஹாஜ் அஸ்லம்
6. சகோதரர் ரிபாஸ்  

கோழிக்கூட்டில் முஸ்லிம் தாய் அடைக்கப்பட்டார் என்பது சுத்தப் பொய்.....


கல்கமுவை, குடாவெவ பிரதேச முஸ்லிம் தாயொருவர், தனது வயதுமுதிர்ந்த தாயை கோழிக்கூட்டில் வைத்து வளர்த்ததாக கூறி குறிப்பாக பெரும்பான்மை இன ஊடகங்களால் சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ் மொழிமூலமான ஊடகங்களும் மொழிமாற்றம் செய்து சமூகத்தில் பெரும் அசௌகரியத்தை விதித்திருந்தது. பொறுப்புவாய்ந்த எமது பணிகளால் சமூகத்துக்கு நலவே அன்றி கெடுதி இடம்பெற நாம் இடமளிக்க முடியாது. உண்மை நிலையை நேரில் சென்று அறிந்து வருவதற்காக சென்றிருந்தேன். அது ஒரு இட்டுக் கட்டப்பட்ட பொய் என்பதை அப்பிரதேச மக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீள்பார்வைக்காக தெளிவுபடுத்தினர். 
– அனஸ் அப்பாஸ் –

கஹட்டோவிட்ட தாய் சேய் நிலையம் (clinic) கை நழுவிச்செல்லுமா? மக்களுக்கோர் எச்சரிக்கை!

அண்மைக்காலமாக ஊரிலுள்ள பொதுத்தாபனங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுவதை நாமனைவரும் அறிவோம். தேவைகளுக்கேட்ப இது போன்ற மீள்கட்டுமானப் பணிகள் அவசியப்படுகின்றமையை மறுக்கமுடியாது.

நிருவனங்கள், அரச உதவிகள்,  பொது மக்களின் உதவிகளால் இவ்வாறான பொதுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுப்பணிகளில் அனைவரும் ஒத்துழைக்கும் போது சிறந்த அடைவுகளை எட்ட முடியும் என்பதற்கு நமது கிராமத்தின் பிரதான பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகள்  நல்ல எடுத்துக்காட்டாகும்.

கஹட்டோவிட்ட மக்களின் கூட்டு முயற்சியின் இன்னொரு வெற்றியாக மவ்லான மாவத்தையிலுள்ள தாய் சேய் நிலையத்தைக் குறிப்பிடலாம். நமது கலாசாரம்,  பண்பாட்டைக் கருத்தில் கொண்டு எமது தாய்மார்களின் கண்ணியம் பேணப்பட வேண்டும் எனும் நோக்கில்தான் இந்நிலையம் நமது பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டது. காலவோட்டத்திற்கேட்ப இந்நிலையத்தை மிக அசவரமாகப் புனர்நிருமானம் செய்ய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.  அத்தியாவசியக் கட்டமைப்புடன் அவசியமாகியுள்ள இன்ன பிற தேவைகள்,  துரித கதியில் நிறை வேற்றப்படாது போனால் காலப்போக்கில் இந்நிலையம் வேறிடங்களுக்கு மாற்றப்பட அதிக வாய்ப்புக்களுள்ளன.  முக்கிய சேவைகளின் பற்றாக்குறை காரணமாக நமது தாய்மார்கள் வெளியிடங்களுக்குச் சென்று பல அவலங்கள்,  அசௌகரியங்களுக்குள்ளாவதாக தற்போது அறியக்கிடைக்கின்றது.

ஆகவே நமது கிராமத்தின் தாய் சேய் நிலையத்தைப் புனர்நிர்மானம் செய்ய வேண்டிய பொறுப்பு நம்மனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது என்பதை உங்கள் மன்றில் முன்வைக்கின்றோம்.

Weliveriya Day & Night Limited Tournament இல் செம்பியனாக எமது ஊர் உதைபந்தாட்ட அணி தெரிவு!

நேற்று இரவு இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் வெலிவேறிய பொது மைதானத்தில் நடைபெற்றது.    இவ்வாட்டத்தில் 2-0 எனும் கோல்கள் வித்தியாசத்தில் கஹடோவிடா அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.  வாழ்த்துக்கள்......






குடி நீர் பிரச்சினையும் அதற்கான தீர்வும், கஹடோவிட முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கவனத்திற்கு..

ஊரில் மீண்டும் கடும் கோடை நிலவுகிறது. ஆறுகள் வற்றிப்போய் இருக்கின்றன. குடி நீருக்கு பஞ்சம் நிலவுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெள்ளம் வந்த போதும் தாழ்வான பிரதேசங்களில் உள்ளவர்கள் குடிநீருக்கு கஷ்டப்பட்டார்கள். அதற்க்கு முன்னரும் கடும் கோடை நிலவி மக்கள் அவதிப்பட்டார்கள்.
இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை நாட வேண்டியுள்ளது. கால நிலை மாற்றம் - climate change - உலகளாவிய பிரச்சினையாக மாறி வரும் சூழலில் இலங்கை இதன் பாதிப்புக்கு அதிகமாக ஆளாகும் நாடாக அடையாளபடுத்தப்பட்டுள்ளது. நிலக்கீழ்நீருக்கான நிரந்தரத் தீர்வையே இலங்கை நாடும் நாடி வருகிறது.
இந்நிலையில் ரன்பொகுணுகம, கிரிந்திவல பிரதேசங்களில் நீர்வழங்கல் மேம்பாட்டு ப்ராஜெக்ட் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை கடந்த வாரம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கஹடோவிட முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள ஊர் என்ற வகையில் இந்தத் திட்டத்தினால் எமது ஊரும் பயன்பெறச் செய்ய கஹடோவிட SLMC கிளையால் முடியும் என்று நினைக்கிறேன்.

முகநூல்- பியாஸ் முகமட்

ஒகடபொலயைச் சேர்ந்த சகோதரர் காமில் அவர்கள் காலமானார்.

ஒகடபொலயைச் சேர்ந்த சகோதரர் காமில் அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அனீஸ் (குவைட்), மொஹமட் ஆசிரியர் (அல்பத்ரியா), டொக்டர் ரிகாஸா  ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்று (2016.08.14)  மாலை ஓகடபொல  ஜும்ஆ மையவாடியில் நடைபெறும்.



  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار   

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

உங்க வீட்டுல எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க ?

நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க


 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.


2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்


 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.


 750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.


15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உப யோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.


 400 வாட்ஸ் வாஷிங் மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உப யே ாகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும்.


 500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும் செலவாகும்


 75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்வி சிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்


300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.''



 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.


 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.


 200 வாட்ஸ் ஏர் கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும்.


 200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கி னால் மாதம் 6 யூனிட் மின்சாரமும் செலவாகும்.


 740 வாட்ஸ் குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்


 7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.


http://www.rkslivenews.com/

சிறந்த பாடசாலை தரப்படுத்தலில் அல்பத்ரியாவும் தெரிவு, அரசாங்கத்தினால் 1 கோடி பெறுமதியான இன்னுமொரு கட்டிடம்.

கடந்த 09.08.2016 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  கஹடோவிட அல்பத்ரியா ம.வி இன் விசேட கூட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் மேல்மாகணக் கல்வி அமைச்சினால் சிறந்த பாடசாலைகள் என்ற தரப்படுத்தலில் எமது பாடசாலையும் இடப்பெற்றுள்ளமையை அதிபர் சுட்டிக்காட்டினார். அத்தோடு அரசாங்கத்தினால் எமது பாடசாலைக்கு சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளமை இன்னுமொரு மையிற்கல் என்றும் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக பாடசாலை திருத்த வேலைகளை மேற்கொள்ளவென சுமார் 20 இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதில், சில ஆசிரியர்கள் கற்பித்தலில் முறையாக ஈடுபடாத விடயங்கள் பற்றியும், பாட நேரங்களில் வகுப்பரைக்கு செல்லாமல் அவர்களுடைய கடமையை புறக்கணிப்பது பற்றியும் பேசப்பட்டது. முக்கியமாக இதில் உரையாற்றிய பாடசாலை நலன்விரும்பி ஒருவர், ஆசிரியர்கள் தமது தொழிலில் ஹராம், ஹலால் பேணி நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டதுடன், பாடசாலையின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

துருக்கிய இராணுவ சதி முயற்சி - சில புலனாய்வுக் குறிப்புக்கள்

துருக்கிய தலைநகர் இஸ்தான்பூலிலிருந்து எழுதுகிறேன் என தொடர்ந்தும் தன் முகநூலை அப்டேட் பண்ணிக் கொண்டே இருக்கிறார் அரபுலக பிரபல அல்முஜ்தமஃ சஞ்சிகை ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் அவர்கள்.
நேரடியாகக் களத்திலிருந்தே அவர் தரும் தகவல்கள் அல்ஜஸீரா உட்பட அனைத்து ஊடகங்களையும் விட விரைந்து செய்திகளையும் தகவல்களையும் புலனாய்வு நோக்கிலான பார்வைகளையும் தந்துகொண்டே இருக்கிறது.
நேற்று காலை ஒரு பிரபல எழுத்தாளர் கூறியது போன்று 10,000 சொற்களுக்கு கட்டுரை எழுதலாம் என்பது நேரம் செல்லச் செல்ல 40,000-50,000 என ஆய்வுக் கட்டுரைகளே எழுதலாம் எனும் அளவுக்கு திடுக்கிடும் பின்னணிகள் நிறைந்தும் முக்கிய பல தலைகளின் சதி முகங்கள் அம்பலப்பட்டும் வருகின்றன. கட்டுரை எழுதத் துவங்கி தட்டச்சு செய்துவிடுவதற்கிடையில் பலப்பல புது விடயங்கள் கட்டுரையைக் காலாவதியாக்கிடும் என்ற அளவு வீச்சுக் கொண்ட நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
துருக்கி புலனாய்வுத் துறைத் தலைவர் ஃபிதான் ஹாகான். சதி முறியடிப்பில் அர்துகானுக்கு முழு பக்கபலமாக நின்ற ஹீரோ இவர்தான்.
உண்மைத் தகவல் எதுவெனில் இன்னும் சதிப் புரட்சி முழுமையாக முறியடிக்கப்படவே இல்லை. Plan-B யாக மீள் சதியொன்று நிகழ்வதற்கான சாத்தியப்பாடுள்ள நிகழ்வுகள் பற்றியும் துருக்கிய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கையோடு கருமமாற்றுகின்றனர். மக்கள் இப்போது வரைக்கும் வீதிகளில் இருக்குமாறு வேண்டப்பட்டிருக்கின்றனர்.
மக்களில் சுமார் 161 பேர் இரத்தம் சிந்தி ஷஹீதுகளாகவும், 1440 க்கும் மேற்பட்டோர் காயம்பட்டும் தம் தேசத்திற்குத் தாங்கள் தெரிவு செய்த அரசைப் பாதுகாத்தனர்.
இதுவரைக்கும் சதித்திட்டத்தில் பங்கேற்ற, துணைபோன இராணுவத் தலைகள் 8,000 க்கும் மேல் நேற்றிரவு வரைக்கும் கைதாக்கப்பட்டுள்ளதாக துருக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் கைதுகள் பல மடங்காவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
பத்ஹ் குலான், சதி இயக்கத்தின் தலைமை ஆசாமி. அமெரிக்கா பென்சில்வேனியாவில் வசிப்பவர். சியோனிச ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்.
நீதிபதிகள் 2,745 பேர் துருக்கிய நீதித் துறை நீக்கியுள்ளது. இவர்களில் இருவர் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகள் மற்றவர்களில் பத்து பேர் துருக்கியின் உச்ச நீதித் துறை அமைப்பான HSYK (Supreme Board of Judges and Prosecutors) ஐச் சேர்ந்தவர்களாவர். பல்வேறு துறைகளையும் சார்ந்து மொத்தமான பதவி நீக்கங்கள் 20,000 வரை அதிகரிக்குமென தகவல்கள் கூறுகின்றன.
இது இன்னும் பாரிய 'கிளீனிங்' திட்டமொன்று இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது. துருக்கியை நாசகாரிகளிடமிருந்து இன்னும் சுத்தப்படுத்த பாரிய வாய்ப்பொன்று கிடைத்திருக்கிறது என அடித்துச் சொல்லலாம்.
தொடர்ந்து கொண்டிருக்கும் மக்கள் கொண்டாட்டங்கள் இந்த வெற்றி மக்களுக்கேயானது என்பதை உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
மறுபுறமாக ஏற்கனவே நான்கு (1960-1971-1980-1997) பிரதான இராணுவப் புரட்சிகளுக்கு முகம்கொடுத்து பலமுறை பலவீனப்பட்ட துருக்கிய மக்கள் இம்முறை இராணுவக் கேடிகளுக்கு இடம் வைத்துவிடவில்லை.
இன்னொரு பார்வைக் கோணத்தில் சொல்வதாயின் துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்துகான் தொடரும் தனது பதினான்கு வருட (2002-இன்றுவரை) சுபீட்ச ஆட்சிக் காலப் பகுதியில் மக்களை நன்றாகவே பலப்படுத்தியிருக்கிறார். தடியெடுத்தவன் தண்டல்காரன் போல் ரவுடித்தனம் மிக்க இராணுவம் அதன் நச்சுப் பற்கள் பலவும் பிடுங்கப்பட்டே இருக்கின்றது. மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் ஷஹீதுகளின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு முன்னர் மக்களிடத்தில் பேசிய துருக்கிய பிரதமர் பினாலி யில்திரிம் துருக்கிய மக்களின் வீரத்தை மெச்சியதோடு சதிகாரர்களின் சொதப்பல் திட்டத்தையும் சாடினார்.
அல்ஜஸீரா, அல்முஜ்தமஃ போன்ற இணையப் பக்கங்களின் கருத்துக்களின்படி பிரதான சூத்திரதாரியாக துருக்கியக் கார்ப்பரேட் மதகுரு பத்ஹ் குலான் மற்றும் அவரது ஹிஸ்மத் நோக்கி ஏகோபித்த பார்வை நீள்கிறது. கிளர்ச்சியில் ஈடுபட்டோர் அதன் இரகசிய இயக்க உறுப்பினர்களாகவே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்குப் பின்னணியில் திட்டம் வகுத்து சதியை சர்வதேச வல்லூறு அமெரிக்காவே முற்றாக இயக்கியது. அதன் பிரதான பாத்திரத்தை கனவான் ஜோன் கெர்ரி சதியின் தோல்விப் படலம் வரைக்கும் ஏற்று வழிநடாத்தியுள்ளான்.
தக்க நேரத்தில் ரஷ்யாவுடன் சதிக்கூட்டு ஆலோசனை செய்தமை, அமெரிக்க தூதரக (துருக்கியில் மக்கள் புரட்சி நடப்பதாக வெளியிட்டுப் பின் வாபஸ் பெற்ற) அறிக்கை, காலம் தாழ்த்தி அர்துகான் அரசுக்கு அங்கீகாரமளித்து வெளியாகும் அறிக்கைகள் என்பன அந்த அதிகார ஆணவங்களை கேட்டு வாங்கிக் குட்டுப்பட்டுத் தலை குனிந்து விடச் செய்துவிட்டன.
அமெரிக்கக் குறுமதியாளன் ஜோன் கெரி சதி தோல்வியடைந்த விரக்தியில் வெட்கமின்றிப் பிதற்றித் திரிகிறான். இராக்கிலும், சிரியாவிலும் நரித்தனங்கள் செய்துவிட்டு 'சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்' என்று அர்துகானுக்கே பாடமெடுக்கப் புறப்பட்டிருக்கிறான்.
அமெரிக்கப் பின்னணியோடு பத்ஹ் குலானின் இயக்கத்தவரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த மெகா சதி ப்ராஜக்டுக்கென சுமார் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் வரைக்கும் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதி தினத்தன்று மேலும் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டிருந்தது.
இதன் பெரும்பகுதியை டுபாய் அரசன் கலீபா ஆலு நாஹியான் தான் சுரண்டும் பணத்திலிருந்து வகைதொகையின்றிக் கொடுத்து மறுமைக்கான தனது ஏட்டில் பெருந்தொகையை வரவு வைத்துப் பல்லிளித்துக் கொண்டு இருக்கிறார். (இது அல்முஜ்தமஃ முன்னாள் பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் கலாநிதி முஹம்மத் ஜவாதியை மற்றும், agelpost இணையம் கலாநிதி அப்துல்லாஹ் நபீஸியையும் மேற்கோள் காட்டி நம்பகத்தன்மையோடு பதிவு செய்திருந்த தகவல்)
துருக்கியில் இருக்கும் சுபீட்ச ஆட்சி பிடுங்கப்படுவதனூடாக முஸ்லிம் உலகு மேலும் மீட்சி பெறாது தாமதப்படுத்தப்பட வேண்டும் என்பதே துருக்கியில் நிகழ்ந்த களேபரங்களின் மொத்த இலக்காகும். அதற்காகவே அந்த நான்கு ட்ரில்லியன் என்ற மெகா பட்ஜட் ஒதுக்கப்பட்டது.
எனவே பத்ஹ் குலான் என்ற கார்ப்பரேட் மதகுருவைப் பொறுத்தவரைக்கும் அர்துகானின் அதிருப்தியாளர் என்ற வகையிலான துருப்புச் சீட்டோ அல்லது பகடைக் காயோ மாத்திரம்தான்.
இதற்குப் பின்னால் அமெரிக்காவின் மெகா பங்கு இருப்பது போலவே தனது வீழ்ச்சிப்படிகளை எண்ணத் துவங்கியிருக்கும் இஸ்ரேலியப் பயங்கரவாதக் கும்பலும் இருக்கின்றது. இஸ்ரேலை இராணுவ-அரசியல்-ராஜதந்திர ரீதியில் பலவீனப்படுத்துவதில் அண்மைக் காலத்தில் துருக்கி பெற்ற வெற்றிகள் இங்கு குறிப்பிடத்தக்கவை.
அதுபோன்றே நீண்ட காலத்தில் தம் மன்னராட்சியைத் தமக்கும் தம் பரம்பரைகளுக்கும் பாதுகாக்கவும் தாம் வாக்களித்துள்ள படி சியோனிஸத்தைப் பாதுகாக்கவுமே டுபாய் அரசன் ட்ரில்லியன் கணக்கில் கொட்டிக் கொண்டிருக்கிறான்.
இந்த சதியின் பின்னணியில் இருக்கும் அமெரிக்கா-இஸ்ரேல்-யுஏஈ கூட்டுக் குறித்த இன்னும் பல புலனாய்வுத் தகவல்களை காலம் தன்னுள் வைத்திருக்காது நிச்சயம் வெளித்தள்ளிவிடும்.
துருக்கிய தேசத்தைப் பொறுத்தமட்டில் முஸ்தபா கமால் பாஷா என்ற இயற்பெயர் கொண்ட அத்தா துர்க் மூலமாக நயவஞ்சகத்தனமாக கிலாபத் வீழ்த்தப்பட்டதன் பிற்பாடு இராணுவத்தின் கரம் எப்போதும் மேலோங்கி இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டது.
மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு நலன்களுக்கு பாதகம் விளையப் பார்த்த போதெல்லாம் அங்கு இராணுவப் புரட்சிகள் நிகழ்ந்தன.
ரஜப் தையிப் அர்துகான் ஆட்சிக் காலம் ஆரம்பம் தொட்டு இந்த அபாயம் இருந்த போதும் அவர் கவனமாகத் திட்டமிட்டு இராணுவ ஆதிக்கம்-அதிகாரம்-பலத்தை விட்டும் தேசத்தையும் மக்களையும் விடுவித்தார்.
கடைசியாக 2013ம் ஆண்டளவில் இராணுவ சதியொன்றுக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்த போது பல அதிரடிக் கைதுகள் நிகழ்ந்து பாரிய களையெடுப்புகள் இடம் பெற்றன.
2014ம் ஆண்டு இறுதியாகும் போது பத்ஹ் குலான் இயக்கத்தின் அதிகார ருசிகள் அம்பலப்பட்டதிலிருந்து மீளவும் சதிகளுக்கான சாத்தியங்கள் தோன்றின.
இந்த ஆண்டு(2016) ஜனவரியில் குவைத் இஸ்லாமிய அறிஞர் கலாநிதி அப்துல்லாஹ் நபீஸி தனது ட்விட்டரில் ரஷ்யா-ஈரான் கூட்டுச் சதியுடனும் வளைகுடா நாடொன்றின் நிதியளிப்பில் எகிப்திய பாணியில் சதியொன்றுக்குத் திட்டமிடல்கள் இருப்பதாக முதன்முதலில் அறிவித்திருந்தார்.
எகிப்திய சதிக்கும் வாரி வழங்கிய யூஏஈதான் அந்த வளைகுடா நாடு என்பதும் டுபாய் டுபாக்கூர் ராஜா கலீபா ஆலு நாஹியான் தான் அந்த அற்புதப் பிறவி என்பதும் வெட்டவெளிச்சமான உண்மை.
இவ்விடத்தில் சிலர் அர்துகான் சதிப் புரட்சிக்கு எதிராகப் பெற்ற வெற்றியையும் எகிப்தில் கலாநிதி முர்ஸியின் பதவி கவிழ்ப்பையும் ஒப்பிட்டு நோக்குகின்றனர்.
14 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியான ஆளும் வாய்ப்புப் பெற்றுப் பல மாற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டிய அர்துகானின் சூழலும் அணுகுமுறைகளும் கலாநிதி முர்ஸி எகிப்தில் எதிர்கொண்ட சூழலும் வெவ்வேறானவை.
துருக்கியில் மதச்சார்பற்றோர், எதிர்க்கட்சிகளும் அர்துகானுடன் ஒன்றாக கைகோர்த்திருக்கும் சூழல் இருந்தது. அத்தோடு அங்கே எகிப்து ஹிஸ்புந்நூர் போன்று ஸலபி, வஹாபிகளும் இல்லை. கிலாபத் உடைப்பை பிரிட்டனுடன் இணைந்து செய்த துரோகம் துருக்கியில் வஹாபிஸ வெறுப்பை விதைத்து அங்கு அதன் பரவலைத் தடுத்திருக்கின்றது.
கலாநிதி முர்ஸியின் ஒரு வருட கடினப் பயணத்தில் அவரைச் சூழ இருந்த அரசு நிர்வாகத் துறையினர், இராணுவம் என முழுதும் முபாரக் யுகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்புப் போக்குக் கொண்டவர்கள். அடுத்து மதச்சார்பற்றோருடன் இணைந்து அரசியல் ஞானசூனியங்களான ஹிஸ்புந்நூர் ஸலபி, வஹாபிகளும் கலாநிதி முர்ஸிக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்திருந்தனர். எகிப்திலே முஹம்மத் முர்ஸிக்கும் இஃக்வான்களுக்கும் எதிராக நின்றது போல் துருக்கி தொடர்பில் உலகளாவிய ஸலபிக்கள் எதிர் நிலைப்பாட்டை எடுக்காமைக்கு பல்வேறு அரசியல் நலக் காரணிகள் உள்ளன என்பது முக்கியமானது.
துருக்கிய சதிப் புரட்சியின் தோல்விக்குப் பின்பாக இஸ்லாமிய உலகின் முக்கிய அறிஞர்கள் பலரும் துருக்கிய அதிபர் அர்துகானைப் பலப்படுத்தும் உறுதிமிக்க வாசகங்கள் கொண்ட கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் பேரவைத் தலைவர் ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி 'அல்லாஹ்வின் உதவியும் உலக முஸ்லிம்களின் பேராதரவும் எப்போதும் உண்டு' என்ற கருத்தை மிக வலியுறுத்தியிருந்தார். ஷெய்க் அலி கரதாகியின் கடிதம் பிரார்த்தனைகளால் நிரம்பியிருந்தது. கடிதத்தின் இறுதியில் அவர் "மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!" என்ற அல்குர்ஆனிய வசனத்தை இணைத்திருந்தமை மெய் கூச்செறியச் செய்தது. ஆம்... சதிப் புரட்சிக்கான திட்டமிடல்கள் பலரும் நினைப்பது போலன்றி மிகப் பாரியதாக, நுணுக்கமானதாக, ஆழமானதாக, முழுமையானதாக, நேர்த்தியானதாக இருந்தன.
பௌதிக ரீதியில் மிகத் திறம்பட திட்டமிடப்பட்ட இச்சதி தோல்வியடைவது சாத்தியம் குறைந்ததாக கருதப்பட்டது.
எனவே மக்கள் இதனை வெற்றி கொண்டமை ஒரு வகை அற்புதம் என்றே கொள்ளப் படவேண்டும்.
முழு இஸ்லாமிய உலகும் அர்துகானோடும் அர்துகானுக்காகவும் துருக்கியோடும் துருக்கிக்காகவும் எழுந்து நிற்கின்றது.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நன்மைகளில் ஒன்று சேர்த்து விடட்டும்!!!
M.S.M. Siaaf Naleemi

துருக்கி நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!

பிரதமர் புலென்ட் யில்திரிம் தலைமையிலான துருக்கி அரசு கவிழ்க்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
The Bosphorus bridge was blocked off by military units
துருக்கியில் பிரதமர் யில்திரிம் தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில், நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
முன்னதாக தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள இரண்டு பெரிய பாலங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வந்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் யில்திரிம், இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி என்றும், அவர்கள் நினைத்தால் மட்டுமே அகற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
துருக்கியில் ராணுவ சதிப்புரட்சி முயற்சி! ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் விமான நிலையம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கியில் சற்று முன்னர் ராணுவப் புரட்சியொன்று வெடித்துள்ளது.
தலைநகரின் முக்கிய வீதிகள் மற்றும் பாலங்கள் மட்டுமன்றி அதாதுர்க் சர்வதேச விமான நிலையமும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் பலவும் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
சதிப்புரட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் நோக்கில் தமது நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே துருக்கிய பிரதமர் இல்ட்ரிம் ராணுவ சதிப்புரட்சி குறித்த தகவல்களை மறுத்துள்ளார்.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானின் தலைமையிலான ஆட்சி தொடர்வதாகவும், பொதுமக்களால் மட்டுமே தமது அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை ராணுவ சதிப்புரட்சி என்று குறிப்பிட முடியாது என்றும், ராணுவத்தின் ஒருசிலர் மேற்கொண்டுள்ள சட்டவிரோத நடவடிக்கையே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே துருக்கிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் ராணுவத்தினரால் பணயக் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் எங்கும் ராணுவத்தினர் மற்றும் தாங்கிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுடன், ராணுவத் தலைமை மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ்கள் விரைந்த வண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா காலமானார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.

1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்ததோடு 2015 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு :

அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம்
கொஸ்கம மக்கள் யாருக்காவது அவசர தேவைகள் ஏற்படுமாயின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி பிரதமர் பணிப்பு
சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கொஸ்கம ஆயுதக் கிடங்கில் தீ விபத்து, ஊர் மக்கள் வெளியேற்றம். வெடி அதிர்வுகள், தீப்பிளம்புகளை கஹ்டோவிடவிலும் உயர் பிரதேசங்களில் பார்க்கமுடிந்துள்ளது.

கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீ இன்னும் அணைக்கப்படவில்லை எனவும், நிலைமைகள் கட்டுப்பாடில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின் சத்தமானது 50 கிலோமீற்றர தூரத்தில் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டதாகவும், வெளிவரும் புகை,வெளிச்சங்களைக் கொண்டு கொஸ்கம பிரதேசத்தை பார்க்க கூடியதாகவுள்ளதாகவும் இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் 10 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பிரதேசங்களுக்கும் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹங்வெல, அவிஸ்ஸாவளை பிரதேசங்களுக்கே குறித்த தீயினால் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவிஸ்ஸாவளை வைத்தியசாலைக்கும் பொருட்கள் வந்து விழுவதால் நோயாளிகளை இடமாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சற்று நிமுடங்களுக்கு முன்னர் கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ  விபத்தில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 25 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள  எமது கிராமம்  கஹடோவிடாவிற்கு இதன் தாக்கம் தெளிவாக கேட்க்ககூடியதாகவும், தீப்பிழம்புகளை பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. 

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி: நிறவெறி கொடுமையை மாய்க்கும் சக்தி இஸ்லாம் என உணர்ந்து சத்தியத்தின் பக்கம் வீழ்ந்தவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெரும்புரட்சி செய்த ஓர் மாவீரனாக - நிறவெறி அக்கிரமத்துக்கு எதிரான அமெரிக்க இஸ்லாமிய போராளியாக அவரை யாருக்குத்தான் பிடிக்காது..?
1967-ல் அமேரிக்கா நடத்திய வியட்நாம் போரில் கலந்து கொள்ள தம் இளம் குடிமக்களை அமெரிக்க அரசு கட்டாயப்படுத்திய பொழுது, போருக்கு சென்றாக வேண்டிய தமது முறை வந்த நேரத்தில்... அப்போது முஹம்மது அலி சொன்ன புரட்சிக்கருத்துகள் எந்நாட்டுக்கும் பொருந்தி, எந்நாளும் போற்றத்தக்கன.
"வியட்நாமில் என் சகோதரன், என் சில இருண்ட மக்கள், சேற்றில் வாழும் சில பசித்த ஏழை மக்கள் ஆகியோரை பெரிய சக்தி வாய்ந்த அமெரிக்காவிற்காக சுட்டுக்கொல்ல, என் மனசாட்சி என்னை அனுமதிக்காது.
எதற்காக அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்..?
என்னை அவர்கள் ஒருபோதும் நீக்ரோ என்றழைத்தது கிடையாதே.
அவர்கள் என்னை விசாரணையின்றி ஒருபோதும் அடித்து மிதித்துக்கொலை செய்ய முயன்றது கிடையாதே.
அவர்கள் என் மீது எந்த நாய்களையும் ஏவி கடிக்கவிடவில்லையே.
அவர்கள் என்னிடமிருந்து எனது குடியுரிமையை திருடவில்லையே.
அவர்கள் என் தந்தையை கொல்லவில்லை; என் தாயை பாலியல் வல்லுறவு செய்யவில்லை.
அப்புறம் நான் எப்படித்தான் அந்த ஏழை மக்களை சுட முடியும்..?
என்னால் போருக்கு போகவியலாது.
இதற்காக நான் சிறை செல்லவும் தயார்..." என தனது அமெரிக்க அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.
விளைவு..?
5 வருஷ சிறை தண்டனையும் $10,000 அபராதமும் (1967ம் வருஷம்... 7 லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை) விதிக்கப்பட்டன.
அதுமட்டுமா..?
அதற்குமுன்னர் அவர் வென்ற பதக்கம், வெற்றிப்பட்டயம் அனைத்தும் பறிக்கப்பட்டன. மேலும்,
எல்லா அமெரிக்க மாகாணத்திலும் அவருக்கான குத்துச்சண்டை உரிமம் மறுக்கப்பட்டு அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி,
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் அவரால் கலந்து கொள்ள முடியாதவாறு அவரது பார்போர்ட் பறிக்கப்பட்டது.
1964 லேயே ‪#‎முஹம்மத்_அலி‬ என்று அவர் தன் பெயரை மாற்றி இருந்தாலும், அப்படி அழைக்காமல் வேண்டுமென்றே க்ளே என்ற அவரது பழைய பெயரிலேயே தொடர்ந்து அவர் பற்றிய செய்தி போட்டு நிறவெறி ஊடகங்கள் தம் வஞ்சம் தீர்த்தன.
தடை விளைவாக அவரால், 1967 முதல் 1970 வரை உலகில் நடந்த எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது. 1971ம் ஆண்டு பல்வேறு முறையீடுகளுக்கு பிறகு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் அவர் மீதான தண்டனை ரத்தானது. அதன்பின்னர் மீண்டும் பல பல வெற்றிகள்.
இப்படியாக, "கலந்து கொண்ட எந்த ஒரு போட்டியிலும் தோல்வியே தழுவாத ஒரே வீரர்..." என்று தடைக்கு முன், குத்துச்சண்டை உலகின் சிகரத்தில் புகழோடு இருந்த போதுதான்... தமது 25 லிருந்து 29 வயது வரை தடை காரணமாக பல்வேறு வெற்றிப்பட்டங்களை பதக்கங்களை அவரால் வெல்ல முடியாமல் போனது.
இருந்தும்... குத்துச்சண்டை உலகில் இன்றும் கூட இவர்தான்... 56 வெற்றிகள், 37 நாக்கவுட், 5 தோல்விகள் மட்டுமே என... வேர்ல்ட் ரெக்கார்ட் வைத்துள்ள நம்பர் ஒன் சாதனையாளர்..!

Jazakkallah - Mohamed Ashik

தொழுகைக்காக வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் பிரதேசம் மற்றும் முதல் முஸ்லிம் பாடசாலை

அஸ்லம் அலி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிகமாகவும் வாழும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசதில் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்தி தொழுகையில் ஈடுபட தீர்மானித்தனர். அதற்கு அமைவாக தற்போது அந்த தீர்மானம் ஏழு மாதங்களை அடைந்துள்ள நிலையில் தற்போதும் அந்த தீர்மானம் மிகவும் உச்சாகத்துடன் தினமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என்பதுடன் அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும்  கல்வி அமைச்சின் அனுமதியுடன் இமாம் ஜமாத்துடன் லுகர் தொழுகை இடம்பெற்று வருகிறது .
அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும், அங்கு 99 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு -தொழுகைக்கான அழைப்பு- செய்யப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
தினமும் வர்த்தகம் சூடுபிடிக்கும் நேரங்கலான லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் தொழுகைக்காக முழு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முதலாளி , தொழிலாளி உட்பட அனைவரும் மஸ்ஜிதுகளுக்கு சென்று வருகின்றனர். தினமும் அக்குரணை பிரதேச மஸ்ஜிதுக்களில் லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் ஜும்மாஹ் தொழுகைக்கு கூடும் தொகைக்கு நிகரான மக்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும் .
இந்த நடைமுறையின் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சிரம்பங்கள் ஏற்படாதவாறு சில விசேட வழிமுறைகளும் கையாளப்படுகிறது . தற்போது அக்குரணை பிரதேச அரச தேசிய முஸ்லிம் பாடசாலையான அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும் மாணவர்கள் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்ஆக பாடசாலையின் மைதானத்தில் பல மாதங்களாக நிறைவேற்றி வருகிறார்கள் .
இதன் பிரகாரம் தொழுகைக்காக தமது வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் முஸ்லிம் பிரதேசம் என்ற பெருமையை அக்குரணை பிரதேசம் பெற்றுகொண்டுள்ளதுடன் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்துடன் நிறைவேற்றும் முதல் முஸ்லிம் அரச பாடசாலை என்ற பெருமையை அக்குரணை (அல் அஸ்ஹர்) மத்திய கல்லூரி பெற்று கொண்டுள்ளது . தொழுகைக்காக செலவு செய்யப்படும் குறித்த நிமிடங்கள் மேலதிகமாக கல்லூரியால் பெறப்படுவாதல் குறித்த பாடசாலை 10 நிமிடங்கள் தாமதித்தே நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
lankamuslim