கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தொழுகைக்காக வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் பிரதேசம் மற்றும் முதல் முஸ்லிம் பாடசாலை

அஸ்லம் அலி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிகமாகவும் வாழும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசதில் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்தி தொழுகையில் ஈடுபட தீர்மானித்தனர். அதற்கு அமைவாக தற்போது அந்த தீர்மானம் ஏழு மாதங்களை அடைந்துள்ள நிலையில் தற்போதும் அந்த தீர்மானம் மிகவும் உச்சாகத்துடன் தினமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என்பதுடன் அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும்  கல்வி அமைச்சின் அனுமதியுடன் இமாம் ஜமாத்துடன் லுகர் தொழுகை இடம்பெற்று வருகிறது .
அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும், அங்கு 99 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு -தொழுகைக்கான அழைப்பு- செய்யப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
தினமும் வர்த்தகம் சூடுபிடிக்கும் நேரங்கலான லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் தொழுகைக்காக முழு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முதலாளி , தொழிலாளி உட்பட அனைவரும் மஸ்ஜிதுகளுக்கு சென்று வருகின்றனர். தினமும் அக்குரணை பிரதேச மஸ்ஜிதுக்களில் லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் ஜும்மாஹ் தொழுகைக்கு கூடும் தொகைக்கு நிகரான மக்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும் .
இந்த நடைமுறையின் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சிரம்பங்கள் ஏற்படாதவாறு சில விசேட வழிமுறைகளும் கையாளப்படுகிறது . தற்போது அக்குரணை பிரதேச அரச தேசிய முஸ்லிம் பாடசாலையான அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும் மாணவர்கள் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்ஆக பாடசாலையின் மைதானத்தில் பல மாதங்களாக நிறைவேற்றி வருகிறார்கள் .
இதன் பிரகாரம் தொழுகைக்காக தமது வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் முஸ்லிம் பிரதேசம் என்ற பெருமையை அக்குரணை பிரதேசம் பெற்றுகொண்டுள்ளதுடன் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்துடன் நிறைவேற்றும் முதல் முஸ்லிம் அரச பாடசாலை என்ற பெருமையை அக்குரணை (அல் அஸ்ஹர்) மத்திய கல்லூரி பெற்று கொண்டுள்ளது . தொழுகைக்காக செலவு செய்யப்படும் குறித்த நிமிடங்கள் மேலதிகமாக கல்லூரியால் பெறப்படுவாதல் குறித்த பாடசாலை 10 நிமிடங்கள் தாமதித்தே நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
lankamuslim

0 comments:

Post a Comment