கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி: நிறவெறி கொடுமையை மாய்க்கும் சக்தி இஸ்லாம் என உணர்ந்து சத்தியத்தின் பக்கம் வீழ்ந்தவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெரும்புரட்சி செய்த ஓர் மாவீரனாக - நிறவெறி அக்கிரமத்துக்கு எதிரான அமெரிக்க இஸ்லாமிய போராளியாக அவரை யாருக்குத்தான் பிடிக்காது..?
1967-ல் அமேரிக்கா நடத்திய வியட்நாம் போரில் கலந்து கொள்ள தம் இளம் குடிமக்களை அமெரிக்க அரசு கட்டாயப்படுத்திய பொழுது, போருக்கு சென்றாக வேண்டிய தமது முறை வந்த நேரத்தில்... அப்போது முஹம்மது அலி சொன்ன புரட்சிக்கருத்துகள் எந்நாட்டுக்கும் பொருந்தி, எந்நாளும் போற்றத்தக்கன.
"வியட்நாமில் என் சகோதரன், என் சில இருண்ட மக்கள், சேற்றில் வாழும் சில பசித்த ஏழை மக்கள் ஆகியோரை பெரிய சக்தி வாய்ந்த அமெரிக்காவிற்காக சுட்டுக்கொல்ல, என் மனசாட்சி என்னை அனுமதிக்காது.
எதற்காக அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்..?
என்னை அவர்கள் ஒருபோதும் நீக்ரோ என்றழைத்தது கிடையாதே.
அவர்கள் என்னை விசாரணையின்றி ஒருபோதும் அடித்து மிதித்துக்கொலை செய்ய முயன்றது கிடையாதே.
அவர்கள் என் மீது எந்த நாய்களையும் ஏவி கடிக்கவிடவில்லையே.
அவர்கள் என்னிடமிருந்து எனது குடியுரிமையை திருடவில்லையே.
அவர்கள் என் தந்தையை கொல்லவில்லை; என் தாயை பாலியல் வல்லுறவு செய்யவில்லை.
அப்புறம் நான் எப்படித்தான் அந்த ஏழை மக்களை சுட முடியும்..?
என்னால் போருக்கு போகவியலாது.
இதற்காக நான் சிறை செல்லவும் தயார்..." என தனது அமெரிக்க அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்.
விளைவு..?
5 வருஷ சிறை தண்டனையும் $10,000 அபராதமும் (1967ம் வருஷம்... 7 லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை) விதிக்கப்பட்டன.
அதுமட்டுமா..?
அதற்குமுன்னர் அவர் வென்ற பதக்கம், வெற்றிப்பட்டயம் அனைத்தும் பறிக்கப்பட்டன. மேலும்,
எல்லா அமெரிக்க மாகாணத்திலும் அவருக்கான குத்துச்சண்டை உரிமம் மறுக்கப்பட்டு அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி,
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் அவரால் கலந்து கொள்ள முடியாதவாறு அவரது பார்போர்ட் பறிக்கப்பட்டது.
1964 லேயே ‪#‎முஹம்மத்_அலி‬ என்று அவர் தன் பெயரை மாற்றி இருந்தாலும், அப்படி அழைக்காமல் வேண்டுமென்றே க்ளே என்ற அவரது பழைய பெயரிலேயே தொடர்ந்து அவர் பற்றிய செய்தி போட்டு நிறவெறி ஊடகங்கள் தம் வஞ்சம் தீர்த்தன.
தடை விளைவாக அவரால், 1967 முதல் 1970 வரை உலகில் நடந்த எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது. 1971ம் ஆண்டு பல்வேறு முறையீடுகளுக்கு பிறகு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் அவர் மீதான தண்டனை ரத்தானது. அதன்பின்னர் மீண்டும் பல பல வெற்றிகள்.
இப்படியாக, "கலந்து கொண்ட எந்த ஒரு போட்டியிலும் தோல்வியே தழுவாத ஒரே வீரர்..." என்று தடைக்கு முன், குத்துச்சண்டை உலகின் சிகரத்தில் புகழோடு இருந்த போதுதான்... தமது 25 லிருந்து 29 வயது வரை தடை காரணமாக பல்வேறு வெற்றிப்பட்டங்களை பதக்கங்களை அவரால் வெல்ல முடியாமல் போனது.
இருந்தும்... குத்துச்சண்டை உலகில் இன்றும் கூட இவர்தான்... 56 வெற்றிகள், 37 நாக்கவுட், 5 தோல்விகள் மட்டுமே என... வேர்ல்ட் ரெக்கார்ட் வைத்துள்ள நம்பர் ஒன் சாதனையாளர்..!

Jazakkallah - Mohamed Ashik

0 comments:

Post a Comment