கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முக்கிய பதவியில் எமது ஊர் மைந்தர் எம்.எம். முஹம்மத்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல்கள் செயலகத்தின் ஊடகப்பேச்சாளராக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

Breaking News: இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது …….!

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 
 
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளிவரவிருக்கும் அந்த விசேட வர்த்தமானியில் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவிருப்பதனால் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல நூடில்ஸ்களிலும் 0.3 மி.கிராம் ஈயம், விளம்பரங்களுக்கும் உடனடி தடை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல உடனடி நூடில்ஸ் வகைகளிலும் 0.3 மி.கிராமிற்கும் அதிகளவாக ஈயம் உள்ளமை இரசாயன ஆய்வின் மூலம் கண்டறியப்படுமாயின் அவற்றினை உடனடியாக சந்தையில் இருந்து நீக்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அத்துடன் உடனடி நூடில்ஸ் தொடர்பில் தற்போதுள்ள நிலைமை மாறும்வரை சகல நூடில்ஸ் வகைகள் தொடர்பான விளம்பரங்கள் பிரசாரங்களை மறு அறிவித்தல் வரை தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உடனடி நூடில்ஸ் வகைகளில் ஈயமெனும் இரசாயனப் பதார்த்தம் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை  தொடர்பில்  ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையிலும் சகல நூடில்ஸ்களையும் பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதற்கமைய நேற்று  புதன்கிழமை அமைச்சில் அவசரமாகக்கூடியுள்ள விசேட உணவு ஆலோசனைக் குழுவினர் உடனடித் தீர்மானங்களையும் எடுத்துள்ளனர்.

இலங்கையில் உள்ள வெவ்வேறு உடனடி நூடில்ஸ் எங்கிருந்து கொண்டுவரப்படுகின்றது? எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது?எவ்வாறான இரசாயனப் பதார்த்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இருந்து உடனடி நூடில்ஸ்களையும் இறக்குமதி செய்வதை தடை விதித்துள்ளதுடன், மொனோ சோடியம் குளுட மேட் என்ற இரசாயனப் பதார்த்தத்தை தவிர ஏனையவை இலங்கையிலே உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்துள்ளனர். 

பிற நாடுகளில் உடனடி நூடில்ஸ்களில் எவ்வளவு ஈயம் அடங்கியிருக்க வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ள போதும் இலங்கையில் அதன் பெறுமானம் குறிப்பிடப்படவில்லை. இதன்படி இந்தியாவில் 2.5 மி.கி., மலேசியாவில் 2.0 மி.கி., சிங்கப்பூர் 2.0 மி.கி., அவுஸ்திரேலியாவில் டி.3 மி.கி. என்ற வகையில் நூடில்ஸ்களில் ஈயம் அடங்கியுள்ளது. 

எனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல நூடில்ஸ்களும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்பு ஈயம், இரசம், ஆசனிக் மற்றும் கட்மியம் பரிசோதனை செய்த பிறகே மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது. சந்தைகளில் உள்ள சகல நூடில்ஸ் வகைகளின் மாதிரிகளைப் பெற்று இரசாயனப் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

உற்பத்தியாளர்களையும் உணவுச் சட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் ஊடாகவே செயற்படுத்தப்படவுள்ளது. ஆய்வுகளின்படி 0.3 மி.கி. ஈயத்தை விட அதிகமாக இருந்தால் உடனடியாக தடைசெய்யப்படும். அத்துடன் மறு அறிவித்தல் வரை நூடில்ஸ் தொடர்பிலான விளம்பரங்கள், பிரசாரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

jaffnamuslim

பெளத்த ஆசிரமத்தில் வளர்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவனின் உடல் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம்.(படங்கள்)

மீரிகம அம்பன மகா போதி சிறுவர் இல்லத்தில் இருந்து பாடசாலை சென்ற போது ரயிலில் மோதி இறந்த 11 வயது மாணவனின் உடல் இன்று சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு கல்லெலிய முஸ்லிம் மையா வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சிறுவர் இல்லத்தில் பௌத்த சூழலில் வளர்ந்த 11 வயது முஹம்மத் அயாஷ் நேற்று முன்தினம் காலை பாடசாலை செல்லும் பொது மீரிகமையில் ரயிலில் மோதி அவ்விடத்திலேயே உயிரிளந்துள்ளான். பெற்றோரை கண்டு பிடிக்க முடியாமல் வத்துபிடிவல வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை நடை பெற்று முடிந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாவை முஸ்லிம் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப் பட வேண்டுமென சிலர் கூறியதனால் பொலிஸ் மற்றும் சிறுவர் நலத் திணைக்களத்தின் அனுமதியோடு கல்லெலியா முஸ்லிம் மைய வாடியில் நலடக்கம் செய்யப்பட்டது,

ஜனாஸாவை பள்ளி வாசலுக்கு கொண்டு வந்த போது மீரிகம சாசன பீடாதிபதி மற்றும் பல பௌத்த மதத் தலைவர்கள் சிங்கள மற்றும் ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு நல்லடக்கம் செய்யப்பட்டது,
முஹம்மத் அயாஷின் மறு உலக வாழ்வுக்காக நாமும் இந்த ரமலான் மாதத்தில் பிரார்த்திப்போம்.

சவுதியில் இருந்து எம். றிஸ்வான் காலித்

3 கொலைகளுடன் தொடர்புடையவர், 300 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

வத்தளை பிரதேசத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதி சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றிலிருந்து மற்றுமொரு வாகனத்திற்கு போதைப் பொருளை மாற்றும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது 24 இலட்சத்திற்கும் அதிகமான பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள் 300 இலட்சம் பெறுமதி வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹெரோய்ன் போதைப்பொருள் மாற்றப்பட்ட இரு வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த சந்தேகநபர் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வௌ்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் உள்ள வீடொன்றினுள் தாய்,தந்தை மற்றும் சகோதரி ஆகியோரை கொலை செய்த குற்றத்தில் கைதான குமாரசாமி பிரஷான் ஆவார்.

இவர் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உதவியிலேயே பிணையில் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த கொலைகளின் பின்னர் அவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
jaffnamuslim

புத்தளத்தில் ஒளிவீசிய எமது ஊர் மைந்தர் மௌலவி யஹ்யா ஹஸரத் அவா்கள் காலமானார்.

எமது கிராமத்தில் பிறந்து புத்தளத்தில் ஒளிவீசிய எமது அன்புக்குறிய எஹியா ஹஸரத் அவர்கள் இன்று ( 12.06.2015) காலமாகியுள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்..! அன்னார் மர்ஹும் ஹாமித் லெப்பை முஹம்மது இப்றாஹீம் ஆலிம் (ஜமாலி)  அவர்களின் புதல்வர் ஆவார்.

புத்தளம் பெரியப்பள்ளியின் முன்னாள் பேஷ் இமாமும், புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், சாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமாக மௌலவி யஹ்யா ஹஸ்ரத் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.

புத்தளத்திற்காக பல்வேறு சேவைகளை ஆற்றிய மௌலவி யஹ்யா ஹஸ்ரத் உயர்ந்த நற்குணங்களுடன் வாழ்ந்தவர். அவருடைய பாடசாலை மாணவர்களும், மத்ரஸா மாணவர்களும் ஏராளம். அதுபோல அவரது சமய, சமூகப் பணிகளினால் பயன் பெற்ற பொதுமக்களும் எண்ணிலடங்கா. எனவே அன்னாருக்காக பிரார்த்திப்போம்! அவருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்வோம்!

எமது இணையத்தில் மௌலவி எஹியர்களைப் பற்றி சென்றவருடம் பதிந்த ஒரு ஆக்கம்.  இங்கே கிளிக் செய்க.
புத்தளத்திலும் எமது கிராமத்தின் பெயரை பதியவைத்த மௌலவி யஹ்யா ஹஸ்ரத்!

நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கி முறைமைக்கு எதிராக பொது பல சேனா

இஸ்லாமிய மதரீதியான வங்கியியல் நடவடிக்கைகளை மத்திய வங்கி மற்றும் நாட்டில் உள்ள வர்த்தக  வங்கிகள் ஊக்குவிப்பதாக கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது
இன்று இடம்பெற்ற அந்த அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது , இலங்கையின் மத்திய வங்கியும் ஏனைய சில வணிக வங்கிகளும் மத ரீதியான வங்கியியல் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி வருவதாக பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியும் சில வணிக வங்கிகளும் மத ரீதியான வங்கியியல் நடவடிக்கைகளை அறிமுகம் செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கியியல் நடவடிக்கைகளில் மதக் கொள்கைகளை உட்படுத்துவது ஆரோக்கியமான விடயமாக அமையாது
வங்கி, காப்புறுதி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் போன்ற விடயங்களில் இஸ்லாமிய மத ரீதியான கொள்கைகள் உட்படுத்தப்பட்டால் அது நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் பாதிக்கும் ஷரியா  வங்கி, ஹலால் வங்கி போன்ற கொள்கைகள் இலங்கைக்கு பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய வங்கி முறை நாட்டுக்கு ஆபத்தானது , என அந்த கடும்போக்கு பொது பல சேனா தெரிவித்துள்ளது.

மியன்மார் - அல்லாஹ்வின் பெயரில் பரப்பப்படும் புதிய பொய், தவிர்ந்து கொள்வோம்

மியன்மார் முஸ்லிம்கள் குறித்தும், அங்கு நடைபெற்ற, நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் எவ்வித தெளிவுமற்ற நிலையில்,
வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவதில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதுடன், சமூக ஊடகங்கள் என்னும் வரப்பிரசாதத்தினை பொறுப்பற்ற விதத்தில் துஸ்பிரயோகம் செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில், தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் ஒரு பதிவில், விபத்திற்குள்ளான பஸ்வண்டி ஒன்றுடன் காயமடைந்த பெளத்த துறவிள் காணப்படுவதுடன், "மியான்மாரில் முஸ்லிம்களை விரட்டியனுப்பி விட்டு தமது ஊருக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் ஏற்பட்ட விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது எங்களுடைய முஸ்லிம்களை நீ அழித்தால் உங்களுக்கு இதை விட கேவலமான நிலைமைதான் ஏற்படும்" போன்ற வாசகங்களும் பகிரப்படுவதை காணமுடியுமாக உள்ளது.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வந்த பெளத்த துறவிகளுக்கு அல்லாஹ் தண்டனை கொடுத்துவிட்டான் என்கின்ற அர்த்தத்தில் பகிரப்படும் இந்தப் பொய்ப் பதிவு பல்லாயிரக்கணக்கான தடவைகள், இதனை ஆராய்ந்து பார்க்காமல், வெறுமனே உண்மை என்று நம்பும் முஸ்லிம்களால் பகிரப்பட்டு உள்ளது, இது வைரஸ் போன்று இன்னுமும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.

குறித்த புகைப்படங்கள் பற்றிய உண்மையான நிலை என்னவென்றால், லாவோஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பெளத்த துறவிகள் அடங்கிய பஸ்வண்டி, 2012 ஆம் மார்ச் மாதம் - அதாவது மியன்மார் வன்முறைகள் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் - தாய்லாந்தின் ச்சியாங் கொங் மாவட்டத்தின் பஹைபன்னாம் மலைப் பாதையில் விபத்தில் சிக்கிய பொழுது எடுக்கப்பட்டவை என்பது ஆகும். ( புகைப்படங்களுடன் தாய்லாந்து செய்தியை பார்க்க : http://www.madchima.org/forum/index.php?PHPSESSID=f1ch8eu81h484oqhqkcs2quue5&topic=7015.msg25971#msg25971 )

இஸ்லாம் ஒருபொழுதும் பொய்யான தகவல்களை பரப்புவது அனுமதிக்காத மார்க்கம் என்கின்ற வகையில், மியான்மாரில் நடந்த வன்முறைகள் குறித்த பழைய படங்களை பகிர்ந்து, இனங்களுக்கு இடையிலான வெறுப்பை வளர்த்தது போன்று, இந்தப் புகைப்படங்கள் மூலமும் இன நல்லுறவு மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாகாமல் தவிர்த்துக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரினதும் பொறுப்பாகும்.


சுவைர் மீரான்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக வருகிறது சட்டம்., எதிர்வரும் 10ஆம் திகதி முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பாவனையில் உள்ளன. இவற்றில் 53 சதவீதமானவை தினமும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும் விபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2014.01.01 திகதி முதல் 2014.04.30ஆம் திகதி வரை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்;ந்து பயணித்தவர்கள் 254பேர் உயிரிழந்துள்ளனர்.
2015.01.01 திகதியில் இருந்து 2015.04.30 திகதி வரை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுவதற்கான 4 காரணங்கள்
• பாதுகாப்பு தலைக்கவசங்களின் தாடைப் பட்டியினை பொறுத்தாதிருத்தல்
• பாதுகாப்பு தலைக்கவசங்களை அணியாமை.
• முன்னால் இலகுவாக பயணிக்கக்கூடியதாக இருந்த போதிலும் ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு பயணிக்க முயற்சிக்கின்றமை.
• கட்டுப்படுத்த முடியாதளவு வேகத்தில் பயணிக்கின்றமை
இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 2015.06.10ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கீழே கூறப்பட்ட சட்டங்களை பின்பற்றாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
• பாதுகாப்பு தலைக்கவசங்களின் தாடைப் பட்டியினைப் பொறுத்தாமல் ஓட்டுதல்.
• பலவர்ணம் கொண்ட தலைக்கவச வைசரை உபயோகித்தல்.
• ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு பயணிக்க முயற்சித்தல்
ஆகிய குற்றங்களை மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மூத்த பத்திரிகை நவமனியும் ”இமாம் கெமைனி” பற்றிய அறிமுகமும். எமது தலைமைகள் தூங்கிங்கொண்டிருந்தால் பள்ளிவாசல்களுக்குல் குண்டுவெடிப்பு நிகழும்வரை ஷியா வண்டவாளங்கள் தொடரலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை முஸ்லிம்களின் மூத்த பத்திரிகையான நவமனி பத்திரிகையில் ஏழாம் பக்கத்தில் கட்டுரை பேட்டி பற்றிய அறிவித்தலை காணக்கிடைத்தது. ஈரானிய குடியரசின் ஸ்தாபகர் குமைனி என்பவரின் 26வது சிராத்த தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான ஈரானிய தூதுவராலயத்தால் தேசிய ரீதியில் பெரும் பரிசுத்தொகையுடன் கூடிய கட்டுரை போட்டி பற்றிய அறிவித்தல் பற்றிய ஒரு தெளிவினை எம் சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்பதிவு முன்வைக்கப்படுகின்றது. 
குமைனி என்ற பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் எம்மவர்களின் வாய்களில் ”இமாம் கெமைனி” என்று ஆராவரத்துடன் உச்சரிப்பதை அவதானிக்க முடிகிறது. முஸ்லிம் பிரதேசங்களில் குமைனி வீதி என்ற வீதி இல்லாத பிரதேசம் இல்லை என்று உறுதியாக குறிப்பிட முடியும். இப்படி எமது சமூகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒங்கி ஒலிக்கும் இந்த குமைனி யார்..? என்பது பற்றிய தேடல் காலத்தின் அவசியமாகிவிட்டது. 
குமைனி ஓர் சண்டாளன் என்பதற்கு அவனது வரலாறு சாட்சி .குமைனியின் புரட்சி என்பது வரலாற்றில் ஓர் கறுப்புப்பக்கம். தலைப்பாகை, கிரீடம் போட்ட வெறியர்களின் கையில் ஈரான் சிக்கிய கதைதான் குமைனியின் புரட்சி. இப்புரட்சியை இஸ்லாமிய மயப்படுத்தியவர்களாளேயே குமைனி என்ற சண்டாளன் எமது சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று அவனின் சிராத்த தினத்தில் திறந்த தேசிய ரீதியிலான கட்டுரைப் பேட்டி எனும் அளவுக்கு நிலமை மாரியிருக்கின்றது. 
உண்மையில் குமைனி பற்றிய உண்மையான தெளிவு எமது சமூகத்திற்கு வழக்கப்பட வேண்டும். அவனின் அசுத்தம் படிந்த வரலாறு மக்கள்மயப்படுத்தப்பட வேண்டும், குமைனி பற்றிய உண்மை தகவள்களை தேடும் உள்ளங்களுக்கு எமது தளத்தில் முன்னர் வெளியிடப்பட்ட குமைனி பற்றிய ஆய்வை வாசிக்குமாறு மிக பணிவுடயன் வேண்டுகிறேம். எதிர்காலங்களில் இது பற்றிய ஆய்வுகளை அசுரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இன்ஸா அல்லாஹ் http://www.tamilsunnah.net/2015/05/kodurankumaini.html குறித்த லின்கினை தெடுத்து குமைனியின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளுங்கள். 
மேற்படி போட்டி சம்மந்தமாக மற்றுமெரு விடயத்தினை சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது போட்டியின் வெற்றியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையான பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு ஈமானை விற்றுவிட வேண்டாம் என்பதுவே. குமைனி சம்மந்தமாக வழங்கப்பட்டிருக்கு தலைப்புக்களைக் கவணித்தால் குமைனியின் குப்பையை, அழுகிய வரலாற்றை சந்தனம் புசி மன மனன்ன வைக்கும் முயற்சியாகவே பார்க்க முடிகின்றது. உலகில் இவரை விட புனிதர் இல்லை என்பதை செல்லாமல் செல்லும் மக்கு பேட்டிதான் இப்பேட்டி. 
இஸ்லாம் மிக தெளிவானது. அதன் கொள்கை, கோட்பாடுகள், கடைமைகள் மிக தெளிவானது. நபியை தவிர யாரையும் முன்மாதிரியாக கொள்ளக் கூடாது என கண்டிப்பான தடையிட்ட மார்க்கம். இஸ்லாம் என்ற பெயரில் தலைப்பாகையும், தாடியையும் வைத்து மக்களை ஏமாத்திய காலம் மலையேரிவிட்டது என்பதை ஷீஆ மதத்தினர் இன்னும் புரிந்து கொள்ளமல் இருப்பது நகைப்புக்குறியது. 
அடுத்து நவமனி எனும் முஸ்லிம் பத்திரிகை. முஸ்லிம் என்ற இலச்சனையை தனித்துவத்தை, கொள்கையை விற்று பத்திரிகை தர்மம் காத்ததுவா…?? அல்லது ஷீஆக்கள் குறித்த நவமனியின் பார்வை குருட்டுப்பார்வையா…? என்பது புரியாத புதிராகவே உள்ளது. கொள்கையை விற்று பிழைப்தும் கூட்டிக்கொடுப்பதும் சமம்தான் என்பதை மறந்து உலக மாயையில் மடிந்த நவமனி இவ்விடயத்தில் தனது தக்க பதிலை கூற வேண்டும். இல்லாவிடின் நவமனியை பகிஷ்கரிப்பதுடன் இத்தறங்கொட்ட இழிப்பணியை மக்கள் மயப்படுத்தி தக்க தீர்வை வென்று எடுப்போம் இன்ஸா அல்லஹ். 
இப்போட்டியில் கழந்துகொண்டு இதில் கிடைக்கும் ஒவ்வெரு ரூபாவும் தெளிவான கராமான சம்பாத்தியம் என்பதில் எல்முனையளவும் சந்தேகமில்லை. 
அல்லாஹ் எம் ஈமானை இச்சதிகாரர்களிடமிருந்து பாது காப்பானாக.

நன்றி
ஆசிரியர்
தமிழ் சுன்னா இணையம்

துர்க்கி ஜனாதிபதி அற்துகானின் கடைசி விருப்பம்: பருமா வரலாற்றைப் பார்க்கும் போது கண்கள் கசிகின்றன.

பர்மாவின் அரகான் மாநிலத்தில் உதுமானிய போர் வீரர்களின் மண்ணறையிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை தான் மரணித்த பின் தனது மண்ணறையில் வைக்குமாறு தனது குடும்பத்தாரை கேட்டுக்கொண்டார்.
இதன் போது குறித்த நிகழ்வில் பிரசன்னமாயிருந்தோரின் கண்கள் கசிந்தன.
Turkish President Recep Tayyip Erdoğan has asked for soil to be taken from the grave of an Ottoman soldier in Arakan and placed on his eventual grave in a revision of his will, daily Yeni Şafak reported.

In a conference which brought former “Milli Görüş” (National View) figures and friends of Erdoğan together in Istanbul, journalist Sibel Erarslan began her words with the soil she took from the Ottoman Cemetery in Arakan in Myanmar.

“We visited Arakan with First Lady Emine Erdoğan in 2013. We visited the Ottoman Cemetery. There lies Ottoman soldiers who died martyrs 92 years ago. They never received replies to their letters. So I brought soil from one of our martyrs so we see them belonging to the same cause as ours. His name is Osmanoğlu Muhammed from Manisa,” said Erarslan.

Upon Erarslan’s gesture, Erdoğan said he wanted the soil to be put to his grave.

“It is my will to my wife and children. When I die, they should put the soil taken from the grave of Osmanoğlu Muhammed from Manisa who died a martyr in Arakan on my [grave],” said Erdoğan, abruptly leading the audience to burst into tears.
June/01/2015