கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவனாக, இஸ்லாமிய சட்டம் நடைமுறைக்கு வரும் - புரூணை சுல்தான்

புரூணையில் ஒரு கடுமையான இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அறி முகப்படுத்துவதை அந்நாட்டு தலை வர் அறிவித்துள்ளார். திருட்டுக் குற றத்திற்கு உடல் உறுப்புகளை துண் டிப்பது மற்றும் விபசாரத்திற்கு கல் லெறிந்து கொல்வது போன்ற ஷரீஆ தண்டனைகள் அடுத்த மூன்று ஆண் டுகளில் கொண்டுவரப்படவுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டிருந்தது.

புரூணை அயல் நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியாவைப் போலல்லாமல் ஏற்கனவே இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக கடை பிடித்து வருகிறது. அங்கு மதுபானம் விற்கவோ, வாங்கவோ தடையுள்ளது. 
சுல்தான் பொல்கியாவினால் ஆட்சி செய்யப்படும் சிறிய நாடான புரூ ணையில்; எண்ணெய் மற்றும் எரி வாயு ஏற்றுமதியால் செல்வம் கொழிக்கிறது. இங்கு முக்கால் பங்கினர் மலே முஸ்லிம்கள் என்பதோடு குறிப்பிடத்தக்க அளவில் பௌத்த, கிறிஸ்தவ சமூகங்களும் வாழ்கின்றனர்.
 
"எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவனாக நாளை (இன்று) மே முதலாம் திகதி முதல் ஷரிஆ சட்டத்தின் முதலாவது கட்டம் நடை முறைக்கு வரும் என்பதை நான் அறிவித்துக்கொள்கிறேன். அடுத்த கட்டங்கள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும்" என்று புரூணை சுல்தான் நேற்று அறிவித்தார்.
 
எதிர்வரும் 3 ஆண்டுகளில் படிப்படியாக அமுலுக்கு வரும் இந்த குற்றவியல் சட்டத்தில் முதல் கட்டத் தில் அபராதம் மற்றும் சிறைத்தண்ட தண்டனைகளே அமுலுக்கு வருகிறது. தொடர்ந்து இரண்டாவது கட்டத்தில் உறுப்புகளை துண்டிக்கும் தண்டனைகள் அமுலுக்கு வரவுள்ளன. தொடர் ந்து மூன்றாவது கட்டமாக விபசாரம், ஒருபால் உறவு போன்ற குற்றச் செயல்களுக்கான கல்லெறி யும் தண்டனை அமுலுக்கு வரும். 
 
புரூணையின் சிவில் நீதிமன்றங்கள் பிரிட்டன் சட்டங்களுக்கு அமைய இதுவரை காலமும் இயங்கிவந்தது. திருமணம், வாரிசுரிமை போன்ற குடும்ப விவகாரங்களுக்கே ஷரிஆ நீதிமன்றம் இயங்கி வந்தது.
 
jaffnamuslim

உண்மையான ஹீரோக்கள்.

நில்வள ஆற்றில் கடந்த 24 ஆம் திகதி வீசப்பட்ட இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றிய இராணுவ வீரர்கள் நால்வருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
 
குறித்த நான்கு வீரர்களையும் கௌரவிக்கும் நோக்கில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பணிப்புரையின் கீழ் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
நாளையத் தினம்இராணுவத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வொன்றில் இவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
virakesari

எந்த மென்பொருளும் பயன்படுத்தாமல் இணைய வேகத்தை அதிகரிக்க...




சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும் தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.

1. XP -->கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் 

gpedit.msc என டைப் செய்து எண்டர் தட்டுங்கள்


3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.

>> Computer Configuration >> Administrative Templates  >> Network >> QoS Packet Scheduler >> Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.




இப்போ OK or APPLY செய்யவும்.


கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ்பியில் நன்றாக வேலை செய்கிறது மற்ற இயக்க முறைமையும் 
சோதித்துப் பாருங்கள். 


amarkkalam.net

'890,000 சிங்கள பெண்கள் மலடிகளாக்கப்பட்டுள்ளனர்'

இலங்கைக்குள் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கடந்த 10 வருட காலப்பகுதிக்குள் சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த 8 இலட்சத்து 90ஆயிரம் பெண்கள் குழந்தைப்பேறற்ற நிலைக்கு (மலடிகள்) தள்ளப்பட்டுள்ளனர் என பொது பல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியது.

உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கிய 1973ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 'தங்கமான சிறிய குடும்பம்' என்ற வேலைத்திட்டத்தை மையமாகக் கொண்டே மேற்படி அரச சார்பற்ற நிறுவனத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொது பல சேனா குறிப்பிட்டது.

இந்த காலப்பகுதிக்குள், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களில் 1.5 சதவீதமானோர் வேறு மதங்களுக்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பு கூறியது.

இது தவிர்ந்த, கொழும்பு மாவட்டத்திலுள்ள சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒன்றரை இலட்சம் பேரும் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றவர்களில் 80 ஆயிரம் பேரும் ஒட்டுமொத்த இலங்கையர்களில் இலட்சக்கணக்கானோரும் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

KES இன் ஏற்பாட்டில் சாதாரன தரம் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்!

KES (Kahatowita Education Society)) இன்று ஏற்பாடு செய்திருந்த, சாதாரண தரத்தில் அதி விஷேட, விஷேட, திறமைச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்!
இவ்வாறான பரிசளிப்பு விழாக்களும் பாராட்டு விழாக்களும் மாணாக்கரை மேலும் மேலும் ஊக்குவிக்கச் செய்யும் ஊக்கி மருந்துகாளாகும். இத்தகைய முயற்சிகள் இத்தோடு மட்டும் நில்லாது உயர் தர வகுப்பில் சித்தியடைந்தவர்களுக்கும், பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டோருக்கும் நடாத்தப்படுவதற்கான வழிவகை செய்யப்படவேண்டும். அந்த வகையில் கெஸ் நிறுவனம் மேலும் மேலும் வளர்ச்சி காண அல்லாஹ் அருள் புரிய வேண்டும். ஆண் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களிலும் A எடுத்த மாணவர்களுக்கு தலா 1000 ரூபா வழங்கப்பட்டமை, அடுத்தடுத்த வருடங்களில் மாணவர்களை மேலும் ஊக்குவிக்கலாம். வாழ்க கெஸ்ஸின் பணி!!!

- Boosary Sallih (முகநூல்)



Malaysia Airlines MH-370 ன் மர்ம மறைவின் பின்னணி என்ன?

 
லேசிய விமானம் MH370-ன் மர்ம மறைவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்களும் ஊகங்களும் வெளியாகியுள்ள நிலையில் எமக்கு கிடைத்த தகவல்களின் உறுதித்தன்மைகளின் அடிப்படையில் சில விடயங்களை பகிர்ந்து கொள்வது முறையாகும் என எண்ணுகின்றோம். சில மாதங்களிற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத்துறை இராணுவ கொம்பிளேக்ஸ் தலிபான் போராளிகளின் தாக்குதலிற்கு உள்ளானது. இதன் போது அந்த கட்டிடம் சில மணிநேரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த தாக்குதல் பற்றி விபரங்கள் அடங்கிய ஒரு பதிவை நாம் முன்பு வெளியிட்டிருந்தோம். உள்நுழைந்த தலிபான் போராளிகள் அங்குள்ள “ட்ரோன் கட்டுபாட்டு” மையத்தில் உள்ள உபகரணங்களையும், கனணிகளையும் கைப்பற்றி கூடவே தம்முடன் எடுத்துச் சென்றிருந்தனர். 
(Getty)

தலிபான்கள் என்றால் அழுக்கு ஆடையுடன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு கையில் கலஸ்னிகோவ்-47 இனை சுமந்து கொண்டு மலைப்பொந்துகளில் வாழும் குகைவாசிகளாகவே மேற்கின் ஊடக சித்தரிப்புக்கள் இதுவரை இருந்து வந்தன. ஆனால் மேற்கைரோப்பிய நாடுகளில் டெனிம் ட்றவ்சர்களும், டீ-சேர்ட்களும் அணிந்து  தோளில் லெப்-டொப்களை சுமந்தவாறு கசுவலாக வலம் தலபான்களை பற்றி இவர்களும் அறியவில்லை. நாமும் அறியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் முழு மேற்கைரோப்பா முதல் கனடா வரை  இயங்கும் தலிபான்களில் லொபிகள் பற்றிய விவரம் எவரிற்கும் தெரியாது. தலிபான்கள் தங்கள் பிறதேச முகாம்களை எம்பஸிகள் என்று அழைப்பார்கள். 

சர்வதேச உளவு வலையமைப்புகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும உறவுநிலைகளையும் தலிபான்கள் பேண தவறவில்லை. அந்த வகையில் ட்ரோன் விமான கட்டுப்பாட்டு மென்பொருளும் அதன் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சீன உளவமைப்புடன் நடந்த பேரத்தின் பின்னர் பெரும் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதில் மலேசிய உளவமைப்பின் முகவர்களும் இடைத்தரகர்களாக செயற்பட்டிருந்தனர். 

சீனாவிடம் இந்த ட்ரோன் கட்டுப்பாட்டு செயன்முறை செல்லுமாக இருந்தால் முழு ஆசியா கண்டத்திலும் அமெரிக்காவினால் ட்ரோன் யுத்தம் செய்ய முடியாத நிலை உருவாகும். எந்த ட்ரோன்களும் பறக்க முடியாது. நிலைமையின் விபரீதம் அமெரிக்காவிற்கு நன்றாயவே புரிந்து இருந்தது. அமெரிக்க உளவமைப்பினர் இது எங்கு கடத்தப்பட்டது என்பதனை மோப்பம் பிடிப்பதற்கு உதவியது இஸ்ரெலின் மலேசிய மொஸாட் ஏஜேன்ட்டுகளேயாகும். இந்த கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் நேரம் இல்லை. பொருள் சீன உளவமைப்பின் கரங்களிற்கு சென்று விட்டது. அவர்களுடன் சண்டையிட்டு கைப்பற்ற முடியாது. சீனாவும் அவசர அவசரமாக அதனை மலேசியாவில் இருந்து பீஜிங்கிற்கு கொண்டு வரும் செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. இது மலேசிய அரசிற்கும் தெரிந்த விடயம். 

இந்த விமானம் காணாமல் போன மர்ம நாடகம் தொடரர்பில் இணையங்களில் வெளியான புகைப்படங்களில் இருந்தவர்கள் இருவர் இஸ்ரேலியர்கள். மற்றையவர் அமெரிக்கர். விமானியுடனான சீ.ஐ.ஏ.யின் பேரத்தின் பின்னர் தான் விமானம் புறப்பட்டது. அது நேராக டியகோ கார்சியா செல்லாமல் சுற்றுப்பாதையில் கடல் மட்டத்திற்கு பணிவாக சென்று ராடர்களின் பார்வைக்கு புலப்படாத நிலையில் மீண்டும் டியாகோ கார்சியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் மெக்கானிசமும் அதன் கொன்ரோலிங் யூனிட்டும் அதன் மென்பொருளும் மீண்டும் அமெரிக்கா வசமாகிவிட்டது. 

டியாகோ-கார்சியா பற்றி நாம் ஏற்கனவே ஒரு சிறப்பு பதிவினை வெளியிட்டிருந்தோம். பல வாசகர்களும் அதனை வாசித்திருந்தனர். இப்போது இந்த விமான கடத்தல் தொடர்பாக அமெரிக்காவிற்கோ, மலேசியாவிற்கோ, சீனாவிற்கோ எதுவும் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னைய இரு நாடுகளிற்கும் உண்மைகள் புரிந்தும் சர்வதேச அரசியல் களத்தில் தங்கள் நாட்டிற்கு பங்கம் வராமல் இருக்க மௌனம் காக்கின்றன. 

அதில் பயணித்த பயணிகள் என்ன ஆனார்கள்?, கொல்லப்பட்டு விட்டனரா போன்ற கேள்விகளிற்கான விடைகள் கிடைக்க பல வருடங்கள் ஆகலாம். ஆனால் விமானம் பத்திரமாக  டியாகோ-கார்சியாவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. கடத்திய அமெரிக்காவிற்கு அதன் கறுப்பு பெட்டியை கடலில் போடுவது ஒன்றும் பெரிய விடயமல்ல. கூடவே சில விமான பாகங்களையும் மனித உடல்களையும்.

- khibarthalam.

கசினோவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அநுரகுமார திசாநாயக்கவின் செருப்படி (வீடியோ)

கசினோ சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு ஆதரவாக பிரதியமைச்சர்கள் பைசர் முஸ்தபா, அப்துல் காதர் மற:றும் அஸ்வர் எம்.பி. ஆகியோர் ஆதரவாக வாக்களித்திதருந்தனர்.

இவ்வாறு கசினோவுக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் அரசியல்வாதிகளை ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்கா மிகக்கடுமையாக விமர்சித்து உரையாற்றுவதை இந்த வீடியோவில் காணலாம்..!
 


Jaffnamuslim
 

எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்: BBSக்கு மல்வத்த பீடம் ஆணை! (Video)

நாட்டின் அதிகார வர்க்கத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள எந்த விடயத்திற்கும் இது வரை தீர்வு கிடைத்தபாடில்லை. உங்களால் அரசை கவிழ்க்கவும் முடியும் என்று கூறுகிறீர்கள் எனவே எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் எங்கள் ஆசீர்வாதம் உண்டு என பொது பல சேனாவை உற்சாகப்படுத்தியுள்ளார் மல்வத்த பீட மஹானாயக்க திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர்.

இதன் போது பொது பல சேனா அமைப்பினரால் இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரால் வெளியிடப்பட்ட காணொளிகளும் காட்டப்பட்டதோடு நாட்டில் பெளத்த மதத்திற்கு பாதகம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட மஹானாயக்கர் இன்றைய ஆட்சியாளர்கள் தவறிழைப்பதன் காரணத்தாலேயே பெளத்த துறவிகள் இவ்வாறு செயற்படும் நிலையேற்பட்டிருப்பதாகவும் தொடரும் வேளையில் துறவிகள் வீதிகளில் இறங்கி பாரிய போராட்டங்களை மேற்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்து பொது பல சேனா அமைப்பை ஆசீர்வதித்து அனுப்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்றைய தினம் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கொழும்பில் தமது தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சோனகர் வலைதளம்.


சினிமாவில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இஸ்லாத்தை ஏற்றவரின் மகனும் இஸ்லாத்தில்..!

அர்னார்ட் வேன் தூர்ன் என்ற இந்த பெயரை முஸ்லிம்கள் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது. டச்சு அரசியல்வாதியும், இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினருமான அர்னார்ட் 'பித்னா' என்ற திரைப்படத்தினை உலகமெங்கும் விநியோகம் செய்தவர். இது நடந்தது 2008ல். இந்த படத்தில் பல கற்பனை கதைகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டு இஸ்லாத்தை கொச்சை படுத்தியதால் உலக முஸ்லிம்களால் கடும் கண்டனத்தை சம்பாதித்தது.
அடுத்த ஐந்து வருடத்தில் உலகம் அதே அர்னார்டை ஆச்சரியத்தோடு பார்த்தது. ஆம். செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். குர்ஆனை விளங்கினார். இன்று மிக அழகிய வாழ்வு முறையை பெற்றுக் கொண்டார். 
 
அதே போல் இன்று மறுபடியும் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அர்னார்ட். ஆம். அவரது மகன் இஸ்கந்தர் அமீன் டே விரி தனது தந்தையை பின் பற்றி இஸ்லாத்தை ஏற்றுள்ளார். ஏப்ரல் 18 ந்தேதி துபாயில் நடந்த சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கில் 37 நபர்கள் தங்கள் வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டனர். அந்த 37 பேரில் ஒருவர்தான் அர்னார்டின் மகன் இஸ்கந்தர் அமீன்.
 
'ஏக இறைவன் ஒருவனே! அவனே அல்லாஹ்! அவனது கடைசி இறைத் தூதர் முகமது நபியாகும் என்று உளப் பூர்வமாக உறுதி கூறுகிறேன்' என்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் உரத்து கூறினார் இஸ்கந்தர் அமீன். மக்கா பள்ளி இமாம் சுதைஸிடமிருந்து, அர்னார்டும், இஸ்கந்தரும் சந்தோஷத்தோடு குர்ஆனை பெற்றுக் கொள்வதைத்தான் மேலே பார்க்கிறோம்.
 
'கலீஜ் டைம்ஸ்' என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்த இஸ்கந்தர் கூறுகிறார் : 'எனது தந்தை முன்னெப்போதும் இல்லாததை விட மிக அமைதியாக தென் பட்டார். இந்த மாற்றம் அவர் இஸ்லாத்தை ஏற்றவுடன்தான் நிகழ்ந்தது. எனது தந்தையின் அந்த மாற்றமானது இந்த இஸ்லாத்தில் ஏதோ இருக்கிறது என்ற தேடலை என்னுள் ஏற்படுத்தியது. அந்த தேடல்தான் என்னை இன்று உங்கள் முன் இஸ்லாமியனாக நிற்க வைத்துள்ளது. குர்ஆனின் விளக்கவுரைகளை பல அறிஞர்களின் குறிப்புகளோடு இன்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறேன். 22 வயதான எனக்குள் எனது கல்லூரி இஸ்லாமிய சக தோழனும் இஸ்லாத்தை எனக்குள் எத்தி வைத்தான். அந்த நண்பனின் ஊக்கமும் எனது தந்தையின் வாழ்வு முறையும் என்னையும் இந்த இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள தூண்டியது.'
 
கலீஜ் டைம்ஸிடம் அர்னார்ட் பின் வருமாறு கூறுகிறார்: "நான் முன்பு செய்த தவறுகளை நானே திருத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனது திறமைகளை பயன்படுத்தி மிகச்சிறந்த உண்மையை பறைசாற்றும் ஒரு இஸ்லாமிய திரைப்படத்தை எடுக்க நினைத்துள்ளேன். பல இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் உண்மையை விளக்க முயற்சிப்பேன்".
 
அர்னார்ட் ஒரு இஸ்லாமிய பவுண்டேஷனை தனது நாட்டில் உருவாக்கியுள்ளார். அதற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அமைப்பானது ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களை ஆதாரங்களோடு எதிர் கொள்ளும். இதன் உறுப்பினர்கள் இஸ்லாமியர்களையும் இஸ்லாம் அல்லாதவர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுவர். தந்தையின் பயணத்தில் தற்போது மகனும் உதவி புரிய வந்துள்ளார். அவரது தாய் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இவர்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்று விட்டதால் இவர்களின் அமைதியான வாழ்வை பார்த்து கவரப்பட்டு அர்னாடின் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்காக நாமும் பிரார்த்திப்போம்.
 
சுவனப்பிரியன்

புனித திருக்குர்ஆனை நான் போற்றுகிறேன். அதன் சிங்கள மொழிபெயர்ப்பொன்றை (அமைச்சரிடம் காட்டி) அடிக்கடி வாசித்து வருகிறேன்.

நாட்டில் சமூகங்களுக்கு இடையில் நிலவி வரும் நல்லுறவை சீர்கெடுக்கும் விதத்தில் எந்தவொரு இனவாத அமைப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், சமய, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் தாம் முயற்சிப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அமரபுர பீடத்தின் சங்கைக்குரிய மஹாநாயக்கர் அக்கமஹா பண்டித தவுல்தென ஞானிஸ்ஸர தேரரிடம் தெரிவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமரபுர பீடத்தின் சங்கைக்குரிய மஹாநாயக்கர் அக்கமஹா பண்டித தவுல்தென ஞானிஸ்ஸர தேரரை நுகேகொடை, பாகொடை வீதி, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் அன்னாரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (25) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் கூறினார்.

நாட்டில் பொதுவாக சிறுபான்மைச் சமூகங்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக சில இனவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஹக்கீம் மஹாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். இந்த இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவது இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற அரசியல் கட்சி என்ற வகையில் தமது கட்சியின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லையென குறிப்பிட்ட அமைச்சர், இந்த நாட்டில் சகல இனத்தவரும் நல்லுறுவை பேணி வாழக் கூடிய பின்புலத்தை உருவாக்குவதன் அவசியம் பற்றிய தமது கருத்துக்களை  பகிர்ந்து கொண்டு, பௌத்த பீடங்களில் மஹாநாயக்கத் தேரர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் விதத்தில்,  தாம் பௌத்த சமயத் தலைவர்களை கடந்த சில நாட்களாக சந்தித்து கலந்துரையாடி வருவதாக, அமரபுர நிக்காய மஹாநாயக்க தேரரிடம் தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்ததாகவும் கூறினார்.

பௌத்த சாசனத்தோடு தொடர்புடைய விவகாரங்களில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கவுள்ள மசோதாக்கள் குறித்தும் அமைச்சர் மஹாநாயக்க தேரரிடம் விபரித்ததோடு, சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிக்கும் விடயம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளைப் பொறுத்தவரை தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவ்விதமான உண்மையும் இல்லையென்றும் விளக்கமளித்தார்.

சங்கைக்குரிய மஹாநாயக்கர் அக்கமஹா பண்டித தவுல்தென ஞானிஸ்ஸர தேரர், அமைச்சரிடம் கருத்து தெரிவிக்கையில், புனித திருக்குர்ஆனை தாம் போற்றுவதாகவும், அதன் சிங்கள மொழிபெயர்ப்பொன்றை அமைச்சரிடம் காட்டி அதனைத் தாம் அடிக்கடி வாசித்து வருவதாகவும் கூறினார்.
நாட்டின் சகல இன மக்களும் நல்லுறவை பேணி வாழ வேண்டிய அதே வேளையில், குழப்பத்தை ஏற்படுத்த எவர் முன்வந்த போதிலும் நிலைகுலையாமல் பொறுமையோடு விடயங்களை கையாள வேண்டியதன் அவசியத்தையும் தேரர் வலியுறுத்தினார்.

நீண்டகாலமாக இந் நாட்டு முஸ்லிம்கள் சிங்கள பௌத்த மக்களுடன் நல்லுறவைப் பேணி சுமூகமாக வாழ்ந்து வருவதையும், நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே அமைச்சர் சீ.எ.எஸ். மரிக்கார், கலாநிதி பதுயுதீன் மஹ்மூத் ஆகியோர் உட்பட ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை பற்றியும் மஹாநாயக்க தேரர் குறிப்பிட்டார்.

எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதையும் முஸ்லிம் சமூகத்தின் மீது வீண் பழிகள் சுமத்தப்படுவதையும் ஏனைய அமைச்சர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
இது நாட்டை அதளபாதாளத்திற்கும், ஆபத்திற்கும்  இட்டுச் செல்லும் குறுகிய இனவாதச் செயல்பாடாகும். இலங்கையில் வசிக்கும் அனைத்துச் சமூகங்களைச் சார்ந்த மக்களையும் இத்தகைய இனவாத கும்பல்களின் அச்சுறுத்தல்களில் இருந்து விடுவிக்க வேண்டும். இதற்காக நாட்டின் ஆட்சித் தலைவரும், அமைச்சர்களும், சமயத் தலைவர்களும் பாடுபட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் ஆகும்.

விஜித தேரரை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமது அமைச்சில் மறைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டி பொதுபலசேனா அமைப்பினர் அங்கு அத்துமீறி பிரவேசித்தது பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, பதிலளித்த அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் ரிஷாத் அவ்வாறு செய்திருப்பாரென தாம் அறவே நம்பவில்லையென்றும், ஆனால் தேரர் ஒருவரோ அல்லது வேறெந்த சாதாரண நபர் ஒருவரோ அச்சத்தின் காரணமாக அபயம் தேடி வந்தால் ஆபத்திலிருந்து தப்புவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அவ்வாறு தஞ்சம் வழங்கி பாதுகாப்பளிப்பதிலும் தவறில்லை என்றார்.

வில்பத்து சரணாலய பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் ஒருவரி;ன் மீது குற்றம் சாட்டப்படுவது பற்றி ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது அதற்கு  பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், இதுபற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டில் உரிய விளக்கத்தை அளித்திருந்ததாகவும், அவ்வாறு குறிப்பிடப்படும் எல்லைக்குள் குடியேற்றம் நடந்திருந்தால் அதுபற்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சட்டத்தை மீறி ஏதும் நடந்திருந்தால் நீதிமன்றத்தை நாடி யாரும் செல்லலாம். நீதிமன்றத்தின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். நீதி, நியாயத்தை கோரும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு.  நீதி எல்லோருக்கும் சமமானது. அவ்வாறன்றி, அரச அதிகாரிகளோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தால் அந்த அதிகாரிகள் ஊடாக உரிய தீர்வுகளை காணலாம்.

சமயங்கள் தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதற்கு என்று தனியான பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதுவே தனது அபிப்பிராயம் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட மூலோபாய அபிவிருத்தி சட்ட மூலம் பற்றி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், தாம் அந்த சட்ட மூலத்தை எதிர்ப்பதாகவும், ஆயினும் தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள வர்த்தமானியில் கசினோ சூதாட்டம் பற்றி உள்ளடக்கப்படவில்லை என்றும், ஆயினும், சந்தேகத்திற்கிடமாக இருப்பதால் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதிலிருந்து தமது கட்சி தவிர்ந்து கொண்டதாகவும் கூறினார். பின்னர் கசினோ சூதாட்டம் பற்றிய விடயத்தை பின்னர்  சட்டமாக்க முற்பட்டால் தமது கட்சி அவ்வாறான தீர்மானத்தை வன்மையாக எதிர்க்கும் என்றும் கூறினார்.
இந்தச் சந்திப்பில் மேல் மாகாண சபை, கொழும்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், நீதியமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் த சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் ஹக்கீம் கடந்த 16 ஆம் திகதி கண்டியில் மல்வத்தை சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மஹாநாயக்க தேரரையும், அஸ்கிரிய பீடத்தின் சங்கைக்குரிய மஹாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரையும், ராமண்ய நிக்காயவின் மஹாநாயக்கர் சங்கைக்குரிய நாபானே பிரேமசிறி தேரரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்  

ஒபாமாவை கால்பந்து விளையாட அழைத்த “ரோபோ”

ஜப்பானில் உள்ள அறிவியல் கண்காட்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரோபோவுடன் விளையாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ஜப்பானுக்கு வந்த அவர், டோக்கியோவில் நடந்த 'மிரைகான்' அறிவியல் கண்காட்சியை பார்வையி்ட்டார்.

அங்கு 'ஹோண்டா' நிறுவனம் தயாரித்துள்ள மனிதனைப் போன்றே ஓடி, ஆடி, குதித்து விளையாடும் 'அசிமோ' என்ற ரோபாட்டும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

அது பார்ப்பதற்கு 10 வயது குழந்தை ஒன்று விண்வெளி வீரரின் உடையை அணிந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அதிபர் ஒபாமாவை கண்டதும் அந்த ரோபாட் ஜப்பான் நாட்டு முறையில் தலையை குனிந்து வணக்கம் தெரிவித்தது.

இதைக் கண்டு ஆர்ச்சரியமடைந்த அதிபர் ஒபாமா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று அந்த ரோபாட்டை பார்த்து கூறினார். இதைக் கேட்டவுடன் அந்த ரோபட் எனக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று கூறி அவரை வரவேற்றது.

மேலும் ஆர்ச்சரியமடைந்த ஒபாமா, என்னால் கால்பந்தை எட்டி உதைக்க முடியும் என்று ரோபாட்டிடம் கூறியுள்ளார். உடனே என்னாலும் கால்பந்தை உதைக்க முடியும் என்று ரோபாட் பதிலளித்தது.

அப்படியென்றால் 'விளையாடு பார்க்கலாம்' என்று ஒபாமா சொல்ல, உடனே அந்த ரோபட் ஒரு பந்தை எடுத்து ஒபாமாவை நோக்கி செல்லுமாறு தனது காலால் எட்டி உதைத்தது. அவரும் ரோபாட்டுடன் விளையாடினார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடிய ஒபாமா, உயிருள்ள மனிதர்களை போலவே ரோபாட்டுகள் இவ்வாறு விளையாடுவது ஆச்சர்யமாக இருந்தாலும் சிறிது பயமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாத குழுக்கள் எதுவும் செயற்படவில்லை! – பொலிஸ் மா அதிபர்!

நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாத குழுக்கள் எதுவும் செயற்படவில்லை! - பொலிஸ் மா அதிபர்
நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாத குழுக்கள் எதுவும் செயற்படவில்லை. ஆனால் சில சம்பவங்கள் மட்டும் நடந்துள்ளது, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.

தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரிமாளிகையில் சந்தித்து பேசினர். இச் சந்திப்பில் பொலிஸ் மா அதிபரும் பங்கேற்றிருந்த்தார்.
இதன்போது நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாதாக் குழுக்கள் உருவாகியுள்ளதாக பொதுபல சேனா அமைபினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் உண்மைத்தன்மை என்ன என்று பொலிஸ்மா அதிபரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் இஸ்லாமிய மதத்  தீவிரவாத குழுக்கள் இருப்பதாக ஊடகங்களும், பேரினவாத அமைப்புக்களும் போலியாக இன்று வரை பரப்பிவந்த  செய்திகளுக்கு பொலிஸ் மா அதிபரின் இந்தப் பதில் முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.
 

பீ.பீ.எஸ். இன் 9 ஆம் திகதி சம்பவம் குறித்து வெளியான செய்திகள்!


பொதுபல சேனா கடும்போக்கு பௌத்த அமைப்பு, கடந்த 9 ஆம் திகதி நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற ஜாதிக பலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் பலாத்காரமாக நுழைந்து மேற்கொண்ட நாஷகார நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழ் இணைத்தளங்கள் சிலவற்றில் அவ்வேளையிலேயே, வெளியான முக்கிய சில செய்திகளை அவ்வாறே வாசகர்களின் தேவை கருதி ஒரே கண்ணோட்டத்தில் இங்கே தருகின்றோம். 
பி.பி.சி. தமிழ் சேவை: 
'ஜாதிக பல சேனா மீது பொது பல சேனா தாக்குதல்'!
இலங்கையில் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தி தொடங்கப்பட்டுள்ள அமைப்பொன்றின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் அதிரடியாக நுழைந்த பொது பல சேனா அமைப்பின் பிக்குகள், ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவிடாமல் தடுத்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜாதிக பல சேனா என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அமைப்பே கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் இன்று புதன்கிழமை காலை இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
ஜாதிக பல சேனா அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரர், முஸ்லிம் மதபோதகரான மௌலவி ஆர்.எம். நியாஸ் ஆகியோர் மீது பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவின் பிக்குகள் தாக்குதல் நடத்தியதாக கொழும்பு கொம்பெனித் தெரு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் பஷீர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர், ஜாதிக பல சேனா அமைப்பின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளையும் பறித்துச் சென்றுவிட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரமீஸ் பஷீர் தெரிவித்தார்.
ஜாதிக பல சேனா அமைப்பை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றபோதே தாம் தடுக்கப்பட்டதாக வட்டரெக்க விஜித்த தேரர் பிபிசியிடம் கூறினார்.
'இலங்கையின் அனைத்து மக்களினதும் சமூக, கலாசார அடையாளங்களையும் மத சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக குரல்கொடுப்பது தான் ஜாதிக பல சேனாவின் பிரதான நோக்கம்' என்றார் வட்டரெக்க விஜித்த தேரர்.
ஞானசார தேரர் தலைமையிலான பொது பல சேனா சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக கடும் விமர்சனங்கள் உள்ளன
'சமூகங்களுக்கு இடையில் அச்சமும் சந்தேகமும் வளர்ந்து வருகின்ற இன்றைய சூழ்நிலையை மாற்றி, சமாதானமான சூழலை உருவாக்குவது தான் எங்களின் நோக்கம்' என்றும் அவர் கூறினார்.
ஞானசார தேரர் பதில்
ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் புகுந்து கலகம் விளைவித்தமை பற்றி பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசாரத் தேரரிடமும் பிபிசி விளக்கம் கேட்டது.
'உண்மையை திரிபுபடுத்தி, முஸ்லிம் பள்ளிவாசல்களுக்குச் சென்று நாட்டின் புத்த சாசனத்துக்கு பிக்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில் போலியான பிரச்சாரங்களை (வட்டரெக்க தேரர்) மேற்கொண்டுவருகிறார்' என்றார் கலபொடஅத்தே ஞானசார தேரர்.
'பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பொறுத்திருந்து பார்த்தோம். இன்றும் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களுடன் சேர்ந்துகொண்டு தவறான கருத்துக்களை அவர் பரப்பிவருகிறார். இது தொடர்பாக கேட்டுப்பார்க்கவே நாங்கள் அங்கு சென்றோம்' என்றும் ஞானசார தேரர் கூறினார்.
தாம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதக்குழுக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் தொடர்பிலும் வெறுப்புணர்வுப் பிரச்சாரங்கள் தொடர்பிலும் பொது பல சேனா அமைப்பு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.
அப்படியான விமர்சனங்கள் எழுகின்ற போதெல்லாம் அந்தக் குற்றச்சாட்டுக்களை பொது பல சேனா மறுத்தே வருகின்றது.
பொது பல சேனாவின் கடும்போக்கு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களை முஸ்லிம் அமைச்சர்களே கடந்த காலங்களில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெய்லி ஸிலோன் இணையத்தளம்!
 ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபல சேனா குழப்பம்! வீடியோ
ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வடரக விஜித்த தேரர் தலைமையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று காலை 10:30 மணியளவில்  கொழும்பு நிபோன் ஹோடேலில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த  ஹோடேலிற்கு வருகை தந்த பொதுபல சேனா அமைப்பின் செயலளார் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவிடாமல் தடுத்ததை அடுத்து அங்கு பதற்றமான நிலை உருவானது.
பின்னர் ஊடகவியலார் சந்திப்பை ஏற்பாடு செய்த ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வடரக விஜித்த தேரர் பொதுபல சேனா அமைப்பின் செயலளார் கலகொட அத்தே ஞானசார தேரர்  உட்பட அனைத்து பௌத்த மக்களிடத்திலும் மன்னிப்புக்கேட்டார். (ஸ)

அத தெரண இணையம்!
முஸ்லிம்கள் - பௌத்த தேரர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் பிபிஎஸ் குழப்பம்! 
மத நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பு கொழும்பில் இன்று (09) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பதற்றம் நிலவியது. 
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடத்திற்கு பொதுபல சேனா அமைப்பினர் சென்றதால் இந்த பதற்றம் ஏற்பட்டது. 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாமிய பிரதிநிதிகளும் வட்டரெக்க விஜித தேரர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
குறித்த இடத்திற்குச் சென்ற பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டமைக்கான காரணத்தை வினவினர். 
இதன்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பதற்ற நிலை தோன்றியது. 
முஸ்லிம்கள் பிரச்சினையை முஸ்லிம்களே பேச வேண்டும் எனவும் அதற்கு பௌத்த பிக்குவை பயன்படுத்தக் கூடாது எனவும் ஞானசார தேரர் இங்கு தெரிவித்தார். 
நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்தும் அவர் விமர்சித்தார். 
வட்டரெக்க தேரரை திட்டியதுடன், இறுதியில் வட்டரெக்க தேரர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த பௌத்தர்களிடமும் மன்னிப்புக் கோரினார். 
அதன் பின்னர் சிறிய பிக்குகள் அவரிடம் ஆசி பெற்றனர். 
இதனையடுத்து ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படாமலே அனைவரும் வெளியில் சென்றனர்.

உதயன் இணையம் !
ஊடக சந்திப்பை குழப்பிய பொதுபல சேனா!
 மத நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பு கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வட்டரெக்க விஜித தேரர் உட்பட ஏனைய மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தமக்கு ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஜாதிக பலசேனா நிராகரித்ததை தொடர்ந்தும் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இருத் தரப்பினரை சமாதானப்படுத்தியுள்ளனர்.
வட்டரெக்க தேரர், இப்படியான ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பில் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்ததுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் மதப் பிரதிநிதிகளுடன் பொதுபல சேனா அமைப்பினர் வாக்குவாதப்பட்டதுடன்  அங்கிருந்து வெளியேற்றியும் உள்ளனர். 

ஓநாய், ஆட்டுக் குட்டிக் கதை..!

ஜாதிக  பலசேனா அமைப்பு கொழும்பில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டிற்குள் புகுந்து அட்டகாசம் பண்ணி அவர்களிடத்தில் இருந்து பறித்துச் சென்ற ஆவணங்களை இன்று கொம்பனித் தெரு (21.04.2014) பொலிஸாரிடத்தில் பொது பல சேனாவின் ஞானசாரர் தரப்பு கையளித்திருக்கின்றது. என்று நீதி மன்றத்தில் பொலிஸர் தெரிவத்திருக்கின்றார்கள். அதுவும்  தங்களுடன் வந்தவர்கள் இவற்றைத் தவறுதலாக எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படித் தவறுதலாக எடுத்துச் சென்றிருந்தால் அதிலுள்ள கடிதங்களை ஊடகங்கள் முன் காட்டி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி ஞானத்தார் தரப்பில் பேசப்பட்டதே அது எப்படி..? ஆட்டுக் குட்டி ஓ நாய் கதைதான் இங்கு அரங்கேரிக் கொண்டிருக்கின்றது என்பதனை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.   

ஆவணங்களைப் பறித்தெடுப்பதை ஊடகங்கள் தெளிவாக படம் பிடித்துக் காட்டியபோது அவற்றைத் தவறுதலாக எடுத்துச் சென்று விட்டதாக சொல்லுமளவுக்கு ஞானசாரர் புத்திசாலியாக இருக்கின்றார். எனவே அவரது பார்வையில் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் குருடர்கள்.

ஜதிக பலசேன என்ற அமைப்பின் செயலாளர் வட்டரெக்க விஜித தேரர் அன்று தனக்குக் கொடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் காரணமாகத்தான் அவர்களிடத்தில் தப்பித்துக் கொள்ள மன்னிப்புக்கேட்கக் கூடிய நிலை அந்த இடத்தில் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
 
இப்படிப்பட்ட மிகப்பெரிய ஒரு முறபாட்டாளருடன் விவாதம் பண்ண ஆசைப்படுபவர்கள் நிச்சயமாக மந்தபுத்திக்காரர்களாக , மனநோயாளிகளாகத்தான்  இருப்பார்கள். எனவே துள்ளிக் குதித்து கொண்டிருப்பவர்கள் தப்பித்தவறியாது விவாதத்தில் தோன்றினால் அந்த விவாதத்திற்கு வரும் மனநோயாளிகளை அன்னிய சமூகம் முஸ்லிம் தரப்பு என்று நோக்குகின்ற துரதிஷ;ட நிலையும் இதில் காணப்படுகின்றது என்பதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஞனசாரர் விடயத்தில் அவர் பாணியில் வார்த்தைகளை முஸ்லிம்கள் தரப்பில் வெளியிவோர் விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. அவ்வாறான வார்த்தைகள் முஸ்லிம் சமூகத்தையும் ஞானசாரர் தரத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 
 
(நஜீப் பின் கபூர்)

சவுதி உளவுத்துறை தலைவர் பந்தர் பின் சுல்தான் பதவி விலகினார்.. (விரைவில் மேலதிக தகவல்கள்)

வுதி உளவுத்துறையின் தலைவராக இருந்த இளவரசர் பாந்தர் பின் சுல்தான், ‘அவரது சொந்த விருப்பத்துக்கமைய’ மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இடத்துக்கு புதிதாக வந்திருப்பவர், யூசுப் அல்-இத்ரிசி.

இவரது பெயரை முன்பே கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆம். சில ஆண்டுகளுக்கு முன்பு சவுதியின் தூதராக வாஷிங்டனில் இருந்தவர்தான்.
கடந்த இரு ஆண்டுகளாக, சவுதி உளவுத்துறையின் தலைவராக இருந்த இளவரசர் பாந்தர் பின் சுல்தானுக்கு அடுத்த பதவியில், உளவுத்துறை துணைத் தலைவராக இருந்தவர், யூசுப் அல்-இத்ரிசி. இப்போது பதவியுயர்வு கிடைத்திருக்கிறது.
 
மற்றொரு விஷயம், தற்போது சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்துக்கு, சவுதி ரகசிய ஆயுத சப்ளை செய்த விஷயம் பற்றி  எழுதியிருந்தோம் அல்லவா? அந்த ஆயுத சப்ளை விவகாரத்தில், ரஷ்யாவுடன் டீல் பண்ணி, காதும் காதும் வைத்ததுபோல காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்தவரும் இவர்தான்!
 
(இவர் மருத்துவ சிகிச்சைக்காக உளவுத்துறை துணைத் தலைவர் பதவியில் இருந்து லீவு பெற்று சவுதிக்கு வெளியே தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போதுதான் அவர் சிரியா ஆயுத டீலை கவனித்துக் கொண்டிருந்தார்)

இருந்து பாருங்கள், இனி சிரியா விவகாரத்தில் சவுதியின் ‘மறைமுக பங்களிப்பு’ முன்பைவிட அதிகமாக இருக்கும்!
 
-கைபர்தளம்.

கஹட்டோவிட யுவதிக்கு உதவுங்கள்

மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், இல : 30/4 கஹட்டோவிட, வெயாங்கொட என்ற முகவரியில் வசிக்கும் எம்.எப் பவாஸா (வயது 25) என்ற இளம் யுவதி இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு அவர சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
கஹட்டோவிடாவைச் சேர்ந்த எம்.டி.எம் பாருக் அவர்களின் மகாளாகிய இவருக்கு கொழும்பு தேசிய வைத்திய சாலையின் நரம்பியல் நிபுணர் வைத்தியர் நஸார் அவர்களின்; உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். சத்திர சிகிச்சைக்கு 16 இலட்சம் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண கூலி வேலை செய்யும் இவரின் தந்தைக்கும் குடும்பத்தினரிற்கும் சத்திரசிகிச்சைக்கான பணத்தை திரட்டுவது கடினமாகக் காணப்படுகிறது. எனவே நலன் விரும்பிகளின் துஆக்கiயும் உதவிகளையும் இவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். எனவே உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம். 

வங்கி விபரம் :

Commercial Bank, Nittambuwa Branch
Name : M.T.M Farook and M.F. Fawasa
A/C No : 8650050015

தொடர்புகளுக்கு - 077 9157606






வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர் என்ற பொது பல சேனாவின் கருத்து தொடர்பில்.. அமைச்சர் றிஷாட் வும் ஹுனைஸ் எம்.பி யும்.…

வில்பத்துவில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர் என்ற பொது பல சேனாவின் கருத்து பெய்யானது என்கின்றனர்
அமைச்சர் றிஷாட் வும் ஹ{னைஸ் எம்.பி யும்.…

றிப்கான் கே சமான்

வில்பத்துவில் 20ஹெக்டயர் காணிகளை சுத்தப்படுத்தி பள்ளிவாசல்களும், வீடுகளும் கட்டப் பட்டுள்ளதாக அண்மையில் பொது பல சேனா அமைப்பினர் வெளியிட்ட கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது  என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன்;, சட்டத்தரணி ஹ{னைஸ் பாரூக் ஆகியோர் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்: வில்பத்துவில் ஒரு அங்குலமும் எடுக்கவுமில்லை, அங்கு முஸ்லிம்கள் குடியேற்றப் படவுமில்லை.
மாறாக வில்பத்துவின் எல்லைப்பகுதியில் உள்ள நான்கு முஸ்லிம் கிராமங்களிலேயே இம் மக்கள் குடியேறியுள்ளனர் என்ற தெளிவான விளக்கமளிக்கப் பட்டது.

வில்பத்து காட்டில் பள்ளிகள் கட்டப் படுவதாக பொது பல சேனா தெரிவித்த கருத்திற்கு வில்பத்துவில் பள்ளிகள் கட்டப் படவில்லை மாறாக சேதமடைந்த பள்ளிகளிற்கு அருகில் தான் புதிய பள்ளிகள் கட்டப் படுவதாகவும் அங்கு விளக்கம் கொடுக்கப் பட்டது.

அத்துடன் 1990ம் ஆண்டு உடுத்திய உடையோடு ஒருலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் இரண்டு மணி நேரத்திற்குள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர்
அங்கு சுமார் 79பள்ளிவாசல்கள், 60பாடசாலைகள் மற்றும் ஒருலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமாக்கப் பட்டிருக்கின்ற விடயமும் சுட்டிக் காட்டப் பட்டது.

அமைச்சின் கேற்போர் கூடத்தில் இடம் பெற்ற இவ்வூடகவியலாளர் சந்திப்பில் முசலிப் பிரதேச அரசியல் உயர்பீடத்தினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

Displaying 333333333333.jpg
Displaying photo (14).JPG
Displaying aar.jpg

பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமிக்கு பெண் குழந்தை.

பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி தனது 13 வயது ஆண் நண்பணுக்கு பெண் குழந்தையை பெற்று தந்திருக்கிறார். இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் இவர்கள் குழந்தை பெற்றுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.

கடந்த வார இறுதியில் 7 பவுண்ட் எடையுள்ள தனது பெண் குழந்தையை பெற்றெடுத்தாக அச்சிறுமி கூறியுள்ளார். தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்று வந்த போது 11 வயதிலேயே இச்சிறுமி கர்ப்பமடைந்தது தற்போது அக்குழந்தையை பெற்றெடுத்து மிக இளம் வயதில் தாயானவர் என்று பெயர் பெற்றுள்ளார்.

வடக்கு லண்டனில் உள்ள அச்சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள பையன் ஒருவனுடன் கடந்த ஓராண்டுக்கு மேலாக அச்சிறுமி பழகி வந்திருக்கிறாள். தற்போது இருவரது பெற்றொர்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பெற்றோர்கள் கூறுகையில், இருவரும் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தங்கள் குழந்தையை கொண்டு வரப்போகின்றார்கள். எனவே நாங்கள் அவர்களை ஆதரிப்பது எங்களது கடமையாகும் என தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமியின் தாயாருக்கு 27 வயதே ஆகும் நிலையில் அவர் பாட்டியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
jaffnamuslim

அல்குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிரான சிஐடி விசாரணை.

பொதுபல சேனா அமைப்பு எதிரான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஜாதிக பலசேனா அமைப்பின் ஊடக சந்திப்பிற்கு இடையூறு விளைவித்து, வட்டரெக்க விஜித தேரருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் புனித குர் ஆனை அவமதித்தமை ஆகியன தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸார் விசாரணைகளை நடத்தினர்.

இந்த நிலையில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
 
Jaffnamuslim

பொது பல சேனா சர்ச்சை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று வெளியிட்ட "விஷேட ஊடக அறிக்கை"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு,
கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும், நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும், சமாதானத்துக்கும், சகவாழ்விற்கும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
எத்தகைய பிரச்சினையாயினும் முஸ்லிம்களாகிய நாம் அல்-குர்ஆன், அஸ்-ஸூன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களினதும், ஸலபுஸ்ஸாலிஹீன்களினதும் முன்மாதிரிகளின் அடிப்படையிலுமே அதற்கான தீர்வைக் காண முயற்சிக்க  வேண்டும் என்பதை ஜம்இய்யதுல் உலமா அனைத்து முஸ்லிம்களுக்கும் நினைவூட்ட விரும்புகின்றது.
பல சமூகங்களுடனும், சமயத்தவர்களுடனும் சேர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூக ஒற்றுமையைக் கடைபிடிக்கும் அதே நேரத்தில் சகோதர இனங்களோடும், பிற சமயத்தவர்களோடும் நல்லுறவு பேணி நடந்து கொள்கின்றனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதனை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஜம்இய்யா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
எச்சந்தர்பத்திலும் ஒரு முஸ்லிம் மாற்றுமத சகோதரர்களின் தெய்வங்களை இம்சிக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாற்று மதங்கள் விடயத்தில் அல்-குர்ஆன் பின்வரும் அழகிய வழிகாட்டலை எமக்குத் தந்திருக்கிறது,
‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படி நீங்கள் திட்டினால்) அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்’ (அன்ஆம்: 108)
எந்தவொரு மதத்தையும் ஏசுவதையோ, தரக்குறைவாகப் பேசுவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆயினும், இத்தகைய மதச்சகிப்புத்தன்மையையும், மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் போதிக்கின்ற இஸ்லாத்தையும், முஸ்லிம்களின் தூய வேதமான அல்-குர்ஆனையும் அண்மைக் காலமாக ‘பொது பல சேனா’ என்ற அமைப்பும், அதனைச் சார்ந்தவர்களும் கீழ்த்தரமாக சாடியும், அடிப்படையில்லாத போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விமர்சித்தும் வருகின்றமை முஸ்லிம் சமூகத்தை விசனம் கொள்ளச் செய்துள்ளது.
அல்-குர்ஆன் ‘தகீய்யா’ எனும் ஒரு கொள்கையைப் போதிப்பதாகவும் அக்கொள்கை பிற சமயத்தவர்களை ஏமாற்றுவதற்கும், அவர்களின் உடமைகளைக் கைப்பற்றுவதற்கும், அவர்களது சொத்துகளை அபகரிப்பதற்கும் அனுமதிப்பதாகவும் அமைந்திருக்கின்றது என சமீபத்தில் ‘பொது பல சேனா’வின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார். இவ்வாறான கூற்று உலக முஸ்லிம்களை பொதுவாகவும், இலங்கை வாழ் முஸ்லிம்களைக் குறிப்பாகவும் மிகவும் மனவேதனையடையச் செய்துள்ளது.
இந்த மத நிந்தனை தொடர்பான விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினதும் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் அவர்களினதும் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உரிய தரப்பினர் காத்திரமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வர் என ஜம்இய்யா எதிர்பார்க்கிறது. பல முஸ்லிம்கள் பொலிஸ் நிலையங்களில் முறையீடுகளை பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்றும் போல நிதானமாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கௌ;கிறது. மேலும் எதிர்வரும் ஜூம்ஆத் தொழுகையில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு ஏற்படுவதற்காகவும்; நாட்டின் அமைதிக்காகவும் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.
 அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

இரு பலசேனாக்களின் குழப்பம். (திவயின -13/04/2014)


வடறக்க விஜித்த தேரரின் தலைமையில் "ஜாதிக பலசேனாவ" எனும் அமைப்பொன்றினூடக கடந்த புதன் கிழமை கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நடாத்தப்பட இருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றுக்குள் நுழைந்த பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட கும்பலொன்று அங்கு குழப்பமொன்றை ஏற்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஆரம்பிக்க முன்னரே அதனை கலைத்தது பற்றி பல அரசியல் கட்சிகள் உட்பட ஜன நாயகத்தை ஆதரிக்கும் பலரதும் கடும் விமர்சனத்து க்கு உள்ளாகியுள்ளது.

தேசீய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் இனவாத அமைப்புக்களைப் பற்றி கருத்து தெரிவிக்கவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்ததாக வடறக்க விஜித்த தேரர் தெரிவிக்கிறார் .முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலரும் இதில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

ஆனாலும் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட முன்னரே அவ்விடத்துக்குள் புகுந்த இந்த கும்பல் நடந்து கொண்ட விதத்தின் கானொளிகள் தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்களினூடக  இலங்கைக்கு மாத்திரமல்லாது முழு உலகத்துக்கும் கண்டு கொள்ளக் கிடைத்தது

"வாயை மூடு .முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடு. ஷட் அப் .மறக்கலயர்களுக்கு வக்காலத்து வாங்க முன் பெளத்தருக்கு வக்காலத்து வாங்கி விட்டிரு .இவனுக்கு உடை கொண்டு வாருங்கள் .மறக்கலயர்களுக்கு என்ன பிரச்சினை இந்த நாட்டில்". இவை ஞானசார தேரரால்  அச்சந்தர்ப்பத்தில்  விஜித்த தேரருக்கும் முஸ்லிம் மத குருமாருக்கும் ஏசப்பட்ட வைகளில் இங்கு குறிப்பிடப்பட முடியுமான சில மாத்திரமே

இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த விஜித்த தேரருக்கோ அல்லது முஸ்லிம் மத குருமாருக்கோ ஒரு சொல் கூட பேச  விடாது அச்சுறுத்தும் விதத்தில் தூற்றிய ஞானசார தேரரின் செயற்பாடு மரியக்கடை காடையனொருவனின் அடாவடித்தனத்தை ஒத்ததாக இருந்ததென்று அக்காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்த பலரும் கூறினர்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்ட யாப்பின் 14(1) பகுதியில் "அனைத்து குடி மகனுக்கும் (அ ) மொழிச் சுதந்திரம் உட்பட கருத்து தெரிவிக்க சுதந்திரம், (ஆ ) அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம், (இ ) சேர்ந்து வாழ சுதந்திரம் என்பனவற்றுக்கு  உரிமை உள்ளது " என குறிப்பிடப்பட்டுள்ளது .

இதன் பிரகாரம் வடறக்க விஜித்த தேரருக்கு மாத்திரமல்லாது அனைத்து குடி மகனுக்கும் தத்தமது கருத்து தெரிவிக்க உரிமை கொடுக்கப்பட்டுள்ளது ."ஜாதிக பலசேனாவ" கூட இந்த உரிமை  அடிப்படையிலேயே இந்த  ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது .பொது பல சேனாவுக்கும் தமதுஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதில் அளிப்பதை விட்டு விட்டு இவ்வாறான ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு அதை குழப்புவதல்ல .

சிங்கள இனத்துக்காகவும் பௌத்த உரிமை களுக்காகவும் சண்டை இடுவதாக கூறிக்கொண்டு சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொண்டிருக்கும் காடையர்கள் போல் நடந்து கொள்ள பொது பல சேனாவுக்கு மாத்திரமல்ல எந்த ஒரு சேனாவுக்கும் உரிமை  இல்லை.அப்படிச் செய்து  சிங்களவர்களுக்கு மத்தியிலும் பௌத்தளுக்கு மத்தியிலும் வீரனாக முடியுமென்று யார் சரி நினைப்பதாயின் அது ஒரு ஏமாற்றம் தவிர வேறில்லை .

சிங்கள இனத்தினதும் பௌத்தர்களின் உரிமைகளுக்காவும் குரல் கொடுத்த மிக்கெட்டுவத்தே குணானந்த தேரர் ,வாரியபொல சுமங்கல தேரர் ,திபெத் நாட்டை சேர்ந்த எஸ் .மஹிந்த தேரர் மற்றும் திரு அநகாரிக்க தர்மபால போன்ற பௌத்த தலைவர்களைப் பற்றி நாம் ஆராய்ந்துள்ளோம் .ஆனாலும் அவர்களில் எவரும் சட்டத்தை கையில் எடுத்துகொண்டு அடாவடித்தனம் புரிந்ததாக தெரியவில்லை .

'ஜாதிக பலசேனா ' விற்குள் புகுந்த 'பொது பலசேனா ' ஊடக சந்திப்பை கலைத்தது மாத்திரமல்லாது வடறக்க விஜித்த தேரரின் காவி உடையை கலட்டுவதாகவும் அச்சுறுத்தி சிங்களவர்களிடமும் பௌத்தர்களிடமும்  மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தி நின்றனர்.

மரணத்துக்கு பயந்த விஜித்த தேரர் "நான் புத்த சாசனத்தையும் சிங்கள இனத்தையும் காட்டி கொடுத்துவிட்டேன் .அதற்காக வேண்டி நான் இந்த நாட்டின் சிங்கள மக்களிடமும் பௌத்தர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் "என்று பயந்த முகத்துடன் தெரிவித்தார் .

இவை அனைத்தும் நடந்தது கொம்பனித்தெரு பொலிசினதும் அதன் உயர் அதிகாரியின் முன்னிலையிலுமே .'ஜாதிக பலசேனா' அமைப்பு இந்த ஊடக சந்திப்பை நிகழ்த்த இந்த ஹோட்டலுக்கு பணம் செலுத்தி ஒதுக்கியிருப்பதால் அதற்கு இடமளிக்குமாறு ஒரு பொலி ஸ் அதிகாரி வேண்டிக்கொண்ட போதிலும் கூட  ஞானசார தேரர் அதனை சிறிதும் பொருட்  படுத்தாது தன்னை கைது செய்யுமாறு பொலிசுக்கு சவால் விடுத்தார் .

 இறுதியாக பொலிஸ் பாதுகாப்புடன் வடரக்க விஜித்த தேரர் உற்பட்ட குழு வெளியாகியது .பின்னர் அவர் கொம்பனித்தெரு பொலிசுக்கு சென்று , தான் மரணத்துக்கு பயந்ததனால் அச்சந்தர்ப்பத்தில் மன்னிப்பு வேண்டி நின்றதாகவும் பொது பல சேனா தன்னிடமிருந்த பத்திரங்களை களவாடியதாகவும் புகார் செய்திருந்தார் .

 இந்நிகழ்வு புதன் இரவிலும் வியாழக் கிழமையிலும் ஊடகங்களில் வெளியான பின் ஏப்ரல் 12 ஆம் திகதி விஜித்த தேரரின் புகார் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பொலிசுக்கு வருமாறு கொம்பனித்தெரு பொலிஸ் ஞானசார தேரருக்கு அறிவித்து இருந்தது.

'ஜாதிக பலசேனா ' வின் ஊடக சந்திப்பில் புகுந்து நாட்டின் தேசிய ஒற்றுமைக்கும் ஜனநாயகத்துக்கும் பலத்த பிரச்சினைக்குறிய நிலைமையை உருவாக்கிய   'பொது பலசேனா' மோசமானதொரு காரியத்தை செய்துள்ளது  என்று JVP தனது ஊடக அறிக்கையில் அறிவித்துள்ளது.

 "இங்கு பொது பலசேனா அமைப்பின் பிரதிநிதிகள் அவ்விடத்துக்கு சமூகம் கொடுத்திருந்த தேரர்கள் உட்பட்ட குழுவினரை தூற்றியதும் விரட்டியதும் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைப்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்து அத்துமீறல்களும் நடந்தது பொலிஸ் அதிகாரிகளின் பிரசன்னத்திலேயே.

 எல்லா அமைப்புக்களும் இவ்வாறாக செயற்பட ஆரம்பித்தால் நாட்டில் ஏற்படும் நிலை என்னவாகும் . மூன்று தசாப்த்தங்களுக்கு  மேலான யுத்த சூழ்நிலை ஒன்றின் பின் தேசிய ஒற்றுமை பற்றிப் பேசப்பட வேண்டிய நிலைமையில் இலங்கை குடிமக்களை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒருவரை ஒருவர் தூரமாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை கடுமையாக கண்டிக்கிறோம் " என்று  JVP தனது அறிக்கையில் மேலும் அறிவிக்கிறது.

 பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னிலையில் இவ்வாறான அத்து மீறல்களை நடத்தி குழப்பங்களை உண்டு பண்ணிக்காட்ட தனி மனிதர்களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ முடியுமாயிருப்பது அரசாங்கத்தால் அதற்கு கிடைக்கும் அனுசரனையே அன்றி வேறில்லை என்று குறிப்பிடும் JVP யினர் ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்கும் ,தேசிய ஒற்றுமையை சீர்குலைய வைக்கும் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டி நிற்பதாகவும் குறிப்பிடுகிறது.

பொது பலசேனா வினால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு அரசாங்கம் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தேசிய ஐக்கிய கட்சி தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கபீர் ஹாஷிம் குற்றம் சாட்டினார் .இதன் முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.

 பயங்கர வாதத்திலிருந்து சுதந்திரமாக்கிக்கொண்ட நாட்டினுள் தேசிய ஒற்றுமை ,அமைதி வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் திரும்பவும் இனவாதத்துக்கு வழி செய்யும் இவ்வகையான நிகழ்வுகளை அனுமதிக்க முடியாதென்றும் பொது பலசேனா இதற்கு முன்னறும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதாகவும் கூறும் கபீர் ஹாஷிம் அவர்கள் இந்த சூழ்நிலையில் அரசாங்கத்துடன் இருக்கும் முஸ்லிம்களை பிரதிநிதிப் படுத்தும் அமைச்சர்கள் செயற்படும் விதத்தை கண்டிப்பதாகவும் கூறி நின்றார்கள் .

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் திரு வாசுதேவ நானாயக்கார பொது பலசேனா பற்றி கருத்து தெரிவிக்கையில் 'அரசாங்கம் அரசாங்கமாக ' இருக்குமேயானால் இவ்வாறான அமைப்பொன்று இவ்வாறு செயற்படுவதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா என வினவுகிறார் .சட்டத்துக்கு மேலாக செயற்டுவதற்கு பொது பலசேனா வுக்கு சக்தி இல்லை எனவும் அமைச்சர் தெரிவிக்கிறார் .

இவ்வாறான செயற்பாடுகள் இதற்குப் பிறகும் நடப்பதற்கு விடப்பட்டால்  எதிர்காலத்தில் இலங்கை சட்டம் எதுவும் இல்லாத நாடொன்றாக மாறுவது தடுக்கப்பட முடியாது என்பதில் சந்தேகமில்லை.

http://www.divaina.com/2014/04/13/feature12.html

திவயின -13/04/2014
தமிழில் -ஹரீஸ் ஸாலிஹ்