கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் விருப்பு வாக்குகளில் குழறுபடியாம்...!
நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்ட விருப்பு வாக்குகளில் குழறுபடிகள் இருப்பதாக திஹாரிய இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.
அச்செய்தி பின்வருமாறு.
கம்பஹா மாவட்ட தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்ட விருப்பு வாக்குகள் பட்டியலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் குழறுபடிகள் நிகழ்துள்ளது.
பெயர் பட்டியலில் வாக்காளர்களுக்குரிய இலக்கங்கள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வேட்பாளர்கள் கட்சியின் உயர் பீடத்துடன் கலந்தாலோசனை நடாத்தி வருவதாகவும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் திஹாரிய நியூஸ் இணையத்திற்கு தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 2004 ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் முன்னால் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் மற்றும் வேட்பாளர் S.H.M முனாஸ் ஆகியோருக்கிடையிலான விருப்பு வாக்குகள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த 2014 ஆண்டுக்கான மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை காப்பாற்றியது.
0 comments:
Post a Comment