கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொதுபல சேனாவின் மரிச்சக்காட்டு விஜயம்.

பொதுபல சேனா அமைப்பின் செயலளார் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழு நேற்று மரிச்சக்கட்டுப் பிரதேசத்துக்கு விஜயம் செய்தது.மாலை 4 மணியளவில் சுமார் 15 இற்கும் மேற்பட்ட சொகுது வாகனங்களில் பொலிஸ் பாதுக்காப்புக்கு மத்தில் ஊடகவியாளார்கள் சகிதம் வருகைதந்த பொதுபல சேனா அமைப்பு, மரிச்சக்கட்டுப் பிரதேசத்தில்  தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றுள்ளனர்.இதன்போது குறித்த பகுதியில் பொதுபல சேனா அமைப்புக்கு பலத்த எதிர்ப்புகளும், கூச்சல்களும் பிரதேச வாசிகளினால் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் கடும் கோபம் கொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலளார் கலகொட அத்தே ஞானசார தேரர் தகாத வார்த்தைகளினால் தூற்றியதாகவும், இதன்போது அங்கு பொதுபல சேனா அமைப்பினருக்கும், பிரதேச வாசிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், டெய்லி சிலோன் செய்தியாளர் தெரிவித்தார் இதேவேளை குறித்த பிரதேசத்தில் பொதுபல சேனா அமைப்பின் தேர்களுக்கு அந்த அமைப்பின் டீசேட் அணித்து மற்றும் சன்'கிலாஸ் அணிந்த இளைஞர் , யுவதிகள் பாதுகாப்பு வழங்கியதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் சுற்றிக்காட்டினார்.  சுமார் ஒரு மணித்தியாலம் குறித்த பிரதேசத்தில் இருந்த பொதுபல சேனா அமைப்பு "இங்குள்ளவர்களிடம் பேசி எந்த பயனுமில்லை " எனத் தெரிவித்து அங்கிருத்து சென்றதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்புபின் இந்த விஜயம் தொடர்பான வீடியோ தொகுப்பை எமது டெய்லி சிலோன் இணையத்தில் எதிர்பாருங்கள் (ஸ)

0 comments:

Post a Comment