கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சினிமாவில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இஸ்லாத்தை ஏற்றவரின் மகனும் இஸ்லாத்தில்..!

அர்னார்ட் வேன் தூர்ன் என்ற இந்த பெயரை முஸ்லிம்கள் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது. டச்சு அரசியல்வாதியும், இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினருமான அர்னார்ட் 'பித்னா' என்ற திரைப்படத்தினை உலகமெங்கும் விநியோகம் செய்தவர். இது நடந்தது 2008ல். இந்த படத்தில் பல கற்பனை கதைகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டு இஸ்லாத்தை கொச்சை படுத்தியதால் உலக முஸ்லிம்களால் கடும் கண்டனத்தை சம்பாதித்தது.
அடுத்த ஐந்து வருடத்தில் உலகம் அதே அர்னார்டை ஆச்சரியத்தோடு பார்த்தது. ஆம். செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். குர்ஆனை விளங்கினார். இன்று மிக அழகிய வாழ்வு முறையை பெற்றுக் கொண்டார். 
 
அதே போல் இன்று மறுபடியும் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அர்னார்ட். ஆம். அவரது மகன் இஸ்கந்தர் அமீன் டே விரி தனது தந்தையை பின் பற்றி இஸ்லாத்தை ஏற்றுள்ளார். ஏப்ரல் 18 ந்தேதி துபாயில் நடந்த சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கில் 37 நபர்கள் தங்கள் வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டனர். அந்த 37 பேரில் ஒருவர்தான் அர்னார்டின் மகன் இஸ்கந்தர் அமீன்.
 
'ஏக இறைவன் ஒருவனே! அவனே அல்லாஹ்! அவனது கடைசி இறைத் தூதர் முகமது நபியாகும் என்று உளப் பூர்வமாக உறுதி கூறுகிறேன்' என்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் உரத்து கூறினார் இஸ்கந்தர் அமீன். மக்கா பள்ளி இமாம் சுதைஸிடமிருந்து, அர்னார்டும், இஸ்கந்தரும் சந்தோஷத்தோடு குர்ஆனை பெற்றுக் கொள்வதைத்தான் மேலே பார்க்கிறோம்.
 
'கலீஜ் டைம்ஸ்' என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்த இஸ்கந்தர் கூறுகிறார் : 'எனது தந்தை முன்னெப்போதும் இல்லாததை விட மிக அமைதியாக தென் பட்டார். இந்த மாற்றம் அவர் இஸ்லாத்தை ஏற்றவுடன்தான் நிகழ்ந்தது. எனது தந்தையின் அந்த மாற்றமானது இந்த இஸ்லாத்தில் ஏதோ இருக்கிறது என்ற தேடலை என்னுள் ஏற்படுத்தியது. அந்த தேடல்தான் என்னை இன்று உங்கள் முன் இஸ்லாமியனாக நிற்க வைத்துள்ளது. குர்ஆனின் விளக்கவுரைகளை பல அறிஞர்களின் குறிப்புகளோடு இன்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறேன். 22 வயதான எனக்குள் எனது கல்லூரி இஸ்லாமிய சக தோழனும் இஸ்லாத்தை எனக்குள் எத்தி வைத்தான். அந்த நண்பனின் ஊக்கமும் எனது தந்தையின் வாழ்வு முறையும் என்னையும் இந்த இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள தூண்டியது.'
 
கலீஜ் டைம்ஸிடம் அர்னார்ட் பின் வருமாறு கூறுகிறார்: "நான் முன்பு செய்த தவறுகளை நானே திருத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனது திறமைகளை பயன்படுத்தி மிகச்சிறந்த உண்மையை பறைசாற்றும் ஒரு இஸ்லாமிய திரைப்படத்தை எடுக்க நினைத்துள்ளேன். பல இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் உண்மையை விளக்க முயற்சிப்பேன்".
 
அர்னார்ட் ஒரு இஸ்லாமிய பவுண்டேஷனை தனது நாட்டில் உருவாக்கியுள்ளார். அதற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அமைப்பானது ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களை ஆதாரங்களோடு எதிர் கொள்ளும். இதன் உறுப்பினர்கள் இஸ்லாமியர்களையும் இஸ்லாம் அல்லாதவர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுவர். தந்தையின் பயணத்தில் தற்போது மகனும் உதவி புரிய வந்துள்ளார். அவரது தாய் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இவர்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்று விட்டதால் இவர்களின் அமைதியான வாழ்வை பார்த்து கவரப்பட்டு அர்னாடின் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்காக நாமும் பிரார்த்திப்போம்.
 
சுவனப்பிரியன்

0 comments:

Post a Comment