கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம்

மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் புதிய முதலமைச்சர்களும் அமைச்சரவையும் (4-04-2014 காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப் பிரமாணம் செய்துகொள்கிறது. இது தவிர ஐ. ம. சு. மு. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 56 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் வெற்றியீட்டிய இரு உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் வெற்றியீட்டிய ஒரு உறுப்பினரும் இதன்போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப் படுகிறது.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐ. ம. சு. மு. அமோக வெற்றியீட்டியது. மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலே போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2,49,678 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றதோடு தெற்கில் 95,860 வாக்குகள் பெற்ற முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா முதலிடம் பெற்றார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி மத்திய குழுக்கூட்டத்தில் மீண்டும் மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவையும் தென் மாகாண முதலமைச்சராக சான் விஜேலால் த சில்வாவையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. இது தவிர இரு மாகாணங்களுக்கும் தலா 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதோடு இந்த பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலர் மீள நியமிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

இதேவேளை, ஐ. ம. சு. மு. சார்பில் வெற்றியீட்டிய 56 உறுப்பினர்களுடன் மேல் மாகாணத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவான 2 உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவான ஒரு உறுப்பினரும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்குபற்ற உள்ளனர்.

இதேவேளை மாவட்டங்களில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களுக்கு மாகாண சபைகளில் பதவிகள் வழங்கப்பட இருப்பதாகவும் அறியவருகிறது.
 
எம். எஸ். பாஹிம்
Jaffnamuslim

0 comments:

Post a Comment