கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மீண்டும் கம்பஹா மாவட்டத்தில் மேல் மாகாண சபைக்கான முஸ்லிம் பிரதிநிதித்துவம்.



நடைபெற்று முடிவ்த மேல்மாகாண சபைத் தேர்தல் மூலம் மீண்டும் மேல்மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் மூலம் போட்டியிட்ட வேட்பாளர் சகோதரர் சபி ரஹீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவா் பெற்ற  மொத்த விருப்பு வாக்குகள் 12012 ஆகும். 

முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட சகோதரர் முஸ்தாக் அவா்கள் 4409 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார். எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கு தேசியப்பட்டியல் அமைச்சுப் பதவி கிடைக்கும் பட்சத்தில் அது கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படும் என கட்சியின் தலைவா் ரவுப் ஹகீம் கூறியதற்கிணங்க அப்பதவி சகோதரர் சாபி ரஹீமுக்கு வழங்கப்பட்டால் அடுத்த மேல்மாகாண சபைப் பிரதிநிதித்துவம் கஹட்டோவிடாவிற்கு வழங்கப்படும் என தலைவா் உறுதியளித்துள்ளார். 

மேல் மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட மினுவங்கொடையைச் சோ்ந்த வேட்பாளர் 2000 வாக்குகளையும் திஹாரிய சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் 1500 வாக்குகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

பெரும்பாண்மைக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட திஹாரிய முஸ்லிம் வேட்பாளர் 6400 வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டிருந்த சகோதரர் சகாவுல்லா 21000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பினும் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. 

பெரும்பாண்மைக் கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளா்கள் போட்டியிடுவதன் மூலம் கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் சாத்தியப்படுவதில்லை என்பதை இத்தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது.

1 comments:

Unknown said...

ரவூப் ஹகீம் தேர்தல் காலங்களில் வழங்கும் வாக்குறுதிகளை நம்பும் ஒரே ஓர் ஆள் நீங்கள் மட்டும்தான் இருக்க முடியும். ரவூப் ஹகீம் மீண்டும் தேர்தல் ஒன்று வந்தால் மாத்திரம் தான் எமது ஊருக்கு வருவார்.

Post a Comment