சிரியாவின் கிலாபத்தை இல்லாதொழிக்க புதிய சதி..!
“அல்-காயிதா எமக்கு ஒரு பிரச்சனையே இல்லை. எமது முதன்மை வைரிகள் சிரிய இராணுவமுமல்ல. மாறாக I.S.I.S.ஆகும்.” இதனை சொன்னது யார் தெரியுமா?. Jamal Maarouf. மேற்குலகினாலும், அமெரிக்காவினாலும், மத்திய கிழக்கின் மன்னர்களினாலும் சிரியாவில் உருவாக்கப்பட்ட ஆயுத போராட்டம் அதன் திசை மாறி இஸ்லாமிய கிலாபா என்றும், இஸ்லாமிக் எமிரேட்ஸ் என்றும் பயணிக்க முற்பட்ட போது அதனை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாத நிலையில் இந்த தேசங்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே Syria Revolutionaries Front இதனை இன்னொரு பெயரிலும் அழைப்பர். Syrian Rebel Front என்பதே அது. சுமார் 15,000 போராளிகளை கொண்ட இவ்வமைப்பு 100 விகிதம் மேற்குலகின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மேஷனரி என்பதே தெளிவான உண்மை. 2013-ன் இறுதியில் இந்த அமைப்பே மேற்குலகம் உருவாக்கியது சிரியாவின் இஸ்லாமிய சக்திகளை இல்லாதொழிக்க.
சிரியன் ரெவுலுசனரி புரன்ட் எனும் இவ்வமைப்பானது இற்கும் ஜபாஃ அல்-நுஸ்ராவிற்கும் சவாலாக விளங்கும் Islamic Front ( الجبهة الإسلامية, al-Jabhat al-Islāmiyyah) அமைப்பின் கீழ் உள்ள ஓர் அணியாகும். 14 அமைப்புக்கள் ஒருங்கிணைக்கப்பட்டே Al-Jabhat al-Islamiyyah உருவாக்கப்பட்டது. Idlib Military Council, Syrian Martyrs' Brigade, Ahrar al-Zawia Brigades, Ansar Brigades, Coming Victory Brigades, Seventh Division, Ninth Division of Aleppo, Farouq al-Shamal Battalions, Ghab Wolves Brigade, Idlib Martyrs' Brigade, Ahrar al-Shamal Brigade, Riyad al-Salehin Battalions of Damascus, Farouq Battalions of Hama, Special Assignments Regiment of Damascus. என்பனவே இவை.
அஹ்ரார் அல்-ஷாம் ஆரம்பத்தில் இவர்களுடன் இணைந்து செயற்பட்டாலும் பின்னர் ஜபாஃ அல்-நுஸ்ராவுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் காரணாமாக பிரிந்து விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. தி இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே ஜமால் மரூஃப் இந்த வார்த்தைகளை தெரிவித்துள்ளார். I.S.I.S.உடன் தாம் யுத்தப் பிரகடனம் செய்துள்ளதாகவும் அவர்களின் உடலங்களை ஈராக்கின் எல்லை வரை கொண்டு சென்று தங்கள் போராளிகள் வீசி எறிவார்கள் என்றும் அவர் சொல்லியுள்ளார். எப்.எஸ்.ஏ.யில் இருந்து பொருக்கி எடுக்கப்பட்ட சிறந்த பல போராளி கொமாண்டர்கள் தங்கள் அணியில் இருப்பதாகவும், மேலும் பலர் தம்முடன் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா அமைதி பேச்சுவார்த்தையை தாங்கள் தெளிவாக ஆதரித்ததாக தெரிவித்துள்ள அவர் மேற்கு நாடுகளும் சவுதி அரேபியாவும் சிரியாவிற்கு நன்மை செய்யவே அயராது உழைக்கின்றன எனவும் புகழ்ந்துள்ளார். வளமான மத்திய கிழக்க நாடுகள் போல சிரியாவை உருவாக்க மேற்கினதும் அமெரிக்காவினதும் வழிகாட்டலும், சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன் போன்ற நாடுகளின் பொருளாதார உதவிகளும் மிக அவசியம் என குறிப்பிட்ட அவர் அதற்கு முன்னு I.S.I.S. அழிக்கப்படல் வேண்டும். அதே போலவே ஜபாஃ அல் நுஸ்ராவும் அழிக்கப்படல் வேண்டும். பின்னர் சிரியா இராணவம் தோற்கடிக்கப்படல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
I.S.I.S.உடன் மோதும் அதே வேளை எம்முடன் எப்.எஸ்.ஏ. நெருங்கிய தொடர்புகளை பேணி வருகிறது. நாம் ஜாஃவுடன் ஒரு இடைக்கால் உறவை ஏற்படுத்த முயன்று வருகின்றோம்.
Yabroud சமர்களில் ஐபாஃ அல் நுஸ்ராவிற்கு நாம் வெடி பொருட்களை கொடுத்து உதவினோம். காரணம் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் சண்டைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் அல்-காயிதா என தெளிவாக தெரிந்தும் கூட நாம் உதவினோம். ஐ.எஸ்.ஐ.எஸ். இணை அழிப்பதில் எதிரியுடனும் நாம் கூட்டமைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிரியாவின் இஸ்லாமிய சக்திகளை இல்லாதொழிக்க அமெரிக்காவும் அரபு தேசங்களும் கையாளும் புதிய ஆயுதம் இந்த Syria Revolutionaries Front.
நன்றி கைபா் இணையத் தளம்
0 comments:
Post a Comment