நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாத குழுக்கள் எதுவும் செயற்படவில்லை! – பொலிஸ் மா அதிபர்!
நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாத குழுக்கள் எதுவும் செயற்படவில்லை. ஆனால் சில சம்பவங்கள் மட்டும் நடந்துள்ளது, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.
தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அலரிமாளிகையில் சந்தித்து பேசினர். இச் சந்திப்பில் பொலிஸ் மா அதிபரும் பங்கேற்றிருந்த்தார்.
இதன்போது நாட்டில் இஸ்லாமிய மதத் தீவிரவாதாக் குழுக்கள் உருவாகியுள்ளதாக பொதுபல சேனா அமைபினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் உண்மைத்தன்மை என்ன என்று பொலிஸ்மா அதிபரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் இஸ்லாமிய மதத் தீவிரவாத குழுக்கள் இருப்பதாக ஊடகங்களும், பேரினவாத அமைப்புக்களும் போலியாக இன்று வரை பரப்பிவந்த செய்திகளுக்கு பொலிஸ் மா அதிபரின் இந்தப் பதில் முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment