கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பொதுபல சேனா கொம்பனி வீதி பொசிலிக்கு சென்று வந்த பின்னர். (வீடியோ)

இம்மாதம் 9ஆம் திகதி நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற சம்பவம் சம்பந்தமாக கொம்பனி தெரு போலிசிக்கு வருமாறு அழைப்பாணை கிடைக்கப்பெற்றது. அதன் பிரகாரம் போலிசிக்கு வந்து வாக்கு மூலத்தை பதிவு செய்தாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் முஸ்லிம்களுக்கு எதிரான தனது இனவாத கருத்துக்களை கக்கினார். முஸ்லிம் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் போன்றோருக்கு மிக பிரபலாமான ஒரு இடத்தில் வைத்து பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு விடுத்தார்.

மிகவும் கீழ்த்தரமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த அவர் எந்தவொரு விடயத்துக்கும் முஸ்லிம் தலைவர்கள் சரியான பதிலை இது வரை வழங்க வில்லை எனவும் அல்-குர்ஆனில் குறிப்பிடப்படும் விடயங்களை மிகவும் தவறான முறையில் வியாக்கியானம் செய்தார்.

வில்பத்து விவகாரம் சம்பந்தமாக அதிகாரிகளை கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து திட்டியதுடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ரவூப்  ஹகீம் மற்றும் டிலான் பெரேரா போன்றோரையும் தாக்கி பேசினார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களே நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க முடியும் என ரவூப் ஹகீம் கூற முடியுமானால் சிங்கள பௌத்த வாக்குகளினால் மாத்திரம் 2016 ஜனாதிபதி தீர்மானிக்க முடியும் என நாங்கள் அறிவிப்பதாக குறிப்பிட்டனர்.



Vidiyal web

0 comments:

Post a Comment