கணனி உலாவியில் ஷார்ட் கட் கீகள்
இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சில வற்றை இங்கு பார்ப்போம்.
இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும். இதில் com என்பதற்குப் பதிலாக .net என்பது தேவை எனில், தளத்தின் பெயரை டைப் செய்திட்ட பின்னர், CTRL + Shift + Enter ஆகிய கீகளை அழுத்தவும்.
அனைத்து பிரவுசரிலும், அதில் உள்ள அட்ரஸ் பாருக்கு நம் கர்சரைக் கொண்டு செல்ல பல வழிகள் உள்ளன. CTRL + L, F6, மற்றும் ALT + D ஆகிய கீ தொகுப்புகளில் எதனை அழுத்தினாலும், அட்ரஸ் பாருக்கு கர்சர் செல்லும்.
அனைத்து பிரவுசரிலும், அதில் உள்ள அட்ரஸ் பாருக்கு நம் கர்சரைக் கொண்டு செல்ல பல வழிகள் உள்ளன. CTRL + L, F6, மற்றும் ALT + D ஆகிய கீ தொகுப்புகளில் எதனை அழுத்தினாலும், அட்ரஸ் பாருக்கு கர்சர் செல்லும்.
சில இணைய தளங்களை அதன் டேப்பினை நாம் அறியாமலேயே அழுத்தி நீக்கிவிடுவோம். சில வேளைகளில் நாமே மூடிவிட்டு, மீண்டும் அதனைப் பெற விரும்புவோம். சில வேளைகளில் இந்த வகையில் இறுதியாக மூடப்பட்ட இரு தளங்களை மீண்டும் கொண்டு வர விரும்புவோம். இதனை மீண்டும் கொண்டு வர, CTRL + Shift + T ஆகிய கீகளை அழுத்த வேண்டும். இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் காட்டப்படும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால், அதற்கு முன்னர் மூடப்பட்ட தளம் கிடைக்கும்.
சில வேளைகளில், நாம் பார்க்கும் தளங்களை மற்றவர் அறியக் கூடாதென விரும்புவோம். எடுத்துக் காட்டாக, ஒருவருக்கு எதிர்பாராத பரிசு கொடுக்க, இணைய தளம் வழியே ஆர்டர் செய்து வாங்கத் திட்டமிடுவோம். அதனை மற்றவர் அறியாமல் செய்திட விரும்புவோம். ஆனால், பிரவுசரின் ஹிஸ்டரி இதனைக் காட்டிக் கொடுத்துவிடும். மேலும், பலர் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில், நாம் இணையதளம் பார்த்த விபரங்களை, அந்தக் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாரும் கண்டறியலாம். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்கு, அனைத்து பிரவுசர்களும் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதியைத் தருகின்றன. இந்த வழியில் பிரவுசிங் மேற்கொண்டால், ஹிஸ்டரி பதிவு ஏற்படாது. குக்கீகளும் உருவாகாது. இந்த நிலையில் பிரவுசிங் மேற்கொள்ள, குரோம் பிரவுசரில் CTRL + Shift + N கீகளை அழுத்தவும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் CTRL + Shift + P ஆகிய கீகளை அழுத்தவும்.
பல இணைய தளங்களைத் திறந்து வைத்து இயங்குகையில், அவற்றிற்கான டேப்களில் வரிசையாகச் செல்ல CTRL + TAB கீகளை அழுத்தலாம். மவுஸ் எடுத்துச் சென்று, டேப்பினை அழுத்துவதைக் காட்டிலும் இது எளிதான ஒன்றாகும். இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் கீ அழுத்தி, அழுத்தியவாறே, எந்த டேப்பில் உள்ள இணைய தளம் வேண்டுமோ, அந்த இணைய தளத்தின் டேப், டேப்களின் வரிசையில் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கான எண்ணை அழுத்தலாம். எ.கா. CTRL + NUM (1, 2, 3, 4, n..)
0 comments:
Post a Comment