கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நாட்டின் முதல் பெண்மணி என்றழைக்காதீர்கள் என, எகிப்து அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பெண்மணி என்றழைக்காதீர்கள் என, எகிப்து அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார். எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டதில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமதுமூர்சி அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் முபாரக்கின் மனைவி சுசானே, நவீன பாணியில் தான் உடை அணிவார். ஆனால், தற்போதைய அதிபர் மூர்சியின் மனைவி நக்லா, வெளியிடங்களுக்கு பர்தா அணிந்து தான் செல்கிறார்.
சமீபத்தில், இவர் அளித்த பேட்டியின் போது குறிப்பிடுகையில், "அதிபரின் மனைவியை "நாட்டின் முதல் பெண்மணி' என அழைப்பதில், எந்த நியாயமும் இல்லை. அதிபர் மனைவி என அழைக்கலாம் அல்லது நாட்டின் முதல் பணிப்பெண் என அழைக்கலாம். மரியாதையாக தான் அழைக்க வேண்டும் என்றால் "அம்மா' என்றழைக்கலாம். எனவே, என்னை நாட்டின் முதல் பெண் என்றழைக்க வேண்டாம்' என்றார்.

அரச அலுவலகங்களில் தனது படத்தை தொங்கவிட முஹம்மது முர்ஸி தடை விதித்தார்.


எகிப்தின் புதிய ஜனாதிபதி மொஹமட் முர்சி தனது புகைப்படத்தை அரச அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்களில் தொங்கவிடுவதற்கு தடைவிதித்துள்ளார்.


“எகிப்தையே முன்னிலைப்படுத்த வேண்டுமே ஒழிய ஜனாதிபதியை அல்ல என்று புதிய ஜனாதிபதி விரும்புகிறார். ஏனெனில் மனிதர் இறக்கக் கூடியவர்கள். எகிப்து நிரந்தரமாக இருக்கும்” என்று புதிய ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஊடக பேச்சாளர் யாசிர் அலி அல் அப்தல் ஊடக மாநாடொன்றை கூட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதேபோன்று ஜனாதிபதி பதவியேற்ற பின் வாழ்த்துத் தெரிவித்து விளம்பரங் களை வழங்க வேண்டாம் என பொது மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முர்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறான செயல் பணத்தை வீண் விரயம் செய்வது என்றும் நாட்டுக்கு நல்லது செய்ய அந்த பணத்தை பயன்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

பெளத்த மத குழுக்களுக்கும் மோதல் ,அரசுக்கு இரண்டு வார கால அவகாசம்

காலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சமஸ்த லங்கா சிறி சுமேத சங்கமய என்ற புதிய பௌத்த வழிபாட்டு நிலையத்தை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகளின் அமைப்பு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அரசுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு கருத்து வெளியிட்ட பௌத்த கலாசார நிலையத்தின் பணிப்பாளர் வண.கிரம விமலஜோதி தேரர்,இலங்கையின் பௌத்த விவகார அமைச்சு தனது கடமையைச் சரிவரச் செய்யத் தவறி விட்டது. பௌத்தத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை அரசாங்கத்தினுடையது.
காலி பிரதேசத்தில் வந்துரம்பவில் தன்னை, மைத்ரி புத்தர் என்று கூறிக்கொள்ளும் சிறிவர்த்தன என்ற நபருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல அரசசார்பற்ற நிறுவனங்களும், சில பௌத்த நாமத்தில் இயங்கும் சக்திகளும் பௌத்த மததிற்கு எதிராக வேலை செய்கின்றன.தன்னை மைத்ரி புத்தர் என்று கூறிக்கொள்ளும் இந்த நபர் காலி பிரதேசத்தில் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளார்.
இவர் வர்த்தகர்களின் உதவியுடன் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அரசியல் பின்புலமும் உள்ளது.பௌத்தத்தை அவமதிக்கும் இவரது செயலுக்கு முடிவுகட்டவே கடந்த 24ம் நாள் வந்துரம்பவில் பாரிய மாநாடு ஒன்று இடம்பெற்றது.
500 பிக்குகள் உள்ளிட்ட 2000 பேர் இதில் கலந்து கொண்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.பௌத்தர்கள் மீது விசேட அதிரடிப்படையின் உதவியுடன் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தைக் கலைத்தனர்.அந்த சூழ்நிலையில் சில போலீசார் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார் .
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட புத்த பலசேனா இயக்கத்தின் தலைவர், வண. கலபொதத்த ஞானசேர தேரர்,
வந்துரம்பவில் உள்ள சுமேத சங்கமய மீது நடவடிக்கை எடுப்பதற்கு பௌத்த விவகார அமைச்சுக்கு நாம் இரண்டு வார கால அவகாசத்தைக் கொடுக்கிறோம்.அவர்கள் அதைச் செய்யத் தவறினால், பௌத்த விவகார அமைச்சை முற்றுகையிடுவதுடன், பௌத்த பலசேனா இயக்கம் பௌத்தத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.பௌத்த பிக்குகள் என்ற வகையில், இது எமது கடமை. முக்கியமான காலங்களில் நாம் நாட்டைப் பாதுகாப்பவர்களாக இருந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் .

கஹடோவிடாவில் போதைபொருள் விற்பனையா?

எமது அயல் ஊர்களான ஓகடபொல உடுகொட திஹாரிய போன்ற ஊர்களில் அவ்வப்போது இதுபோன்ற செய்திகளை நாம் செவியுற்றுள்ளோம். எனினும் இச்சீரழிவுகளிலிருந்து தப்பிய நிலையில் காணப்பட்ட எமது ஊரில் அண்மையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கஹடோவிடா பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் எமது ஊர் நபர் ஒருவர் முஸ்லிமல்லாதோருக்கு  நள்ளிரவு நேரங்களில் ஞ்ஜா விற்பனை செய்கின்றார் என்ற தகவல் ஊர்மக்களிடைய பரவலாக கதைக்கப்டுகின்றன. குறித்த நபர் ஒரு சில அரசியல்வாதிகளின் உதவிகளோடு தான் இச் செயலை மேற்கொள்கிறார் எனவும் இவர்கள் கூறிகின்றார்கள்.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட எமது ஊரிலுள்ள துடிப்புள்ள சில இளைர்கள் அவர் இரவுவேளை பாலிகா வித்தியாலயத்திற்கு அறிகே உலாவிக்கொண்டிருக்கும் போது, நிறுத்தி விசாரிக்கவும் அவர் இவர்களுடன் வாக்குவாதப்பட்டுள்ளனர். எனவே குறித்த நபர் பதிவாகியுள்ள பள்ளிவாசல் நிறுவாகத்திற்கு இத்தகவலை இவ்விளைஞர்கள் கொண்டுசென்றுள்ளனர். அவர்களும் இவரை விசாரிக்கவும் குறித்த குற்றச்செயலை புரிந்ந நபர் தான் அவ்வாறு நடந்துகொள்ளவேயில்லை எனவும் தான் அக்குற்றச்செயலை செய்திருந்தால் தன்னைக் கையுமையுமாக பிடிக்குமாறும் வாதிடுகிறார்.
எது எவ்வாறாயினும் அல்லாஹ் ஹராமாக்கிய  விடயங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. தவறு செய்வதைக்கண்டு தடுக்காவிட்டால் நாமும் பாவியாவோம். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றவேண்டும்.
போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் முற்றாக தடுக்கிறது
போதைப் பொருள் பாவனை ஒரு மனிதனிடத்தில் பல வகையான தீங்குகளை எதிர்நோக்கச் செய்கிறது.
1. மார்க்கத்துக்கு முரணாகச் செயற்படல்
2. பொருளாதாரச் சிக்கல்களுக்கு உள்ளாக்கல்
3. உடலில் பாரிய நோய்களை உண்டாக்கல்.
4. தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தல்.
இக்கொடிய போதைப் பொருட்கள் பாவனை பற்றியும் அதனால் ஏற்படும் பாரிய பாதிப்புக்கள் பற்றியும் அல்குர்ஆன், ஹதீஸ்களில் வருகின்ற சில அறிவிப்புக்கள் வருமாறு.
  • போதை தரக்கூடியவைகளையும் இன்னும் சோர்வை ஏற்படுத்தக் கூடியவைகளையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
  • விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் வணக்கத்துக்காக நடப்பட்ட சிலைகளும், அம்பு எறிந்து குறிப்பார்த்தலும் (இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவைகளாகும். ஆகவே இவைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி வெறுவீர்கள்.
    - அல்குர்ஆன் 5:90
  • அல்லாஹுத்தஆலா மதுபானத்தையும் அதனைக் குடிப்பவனையும், குடிக்கச் செய்பவனையும் விற்பனை செய்பவனையும், வாங்குபவனையும் அதனைச் சுமப்பவனையும், சுமக்க வைப்பவனையும் சபித்துள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூதாவூத்
  • நபி (ஸல்) கூறியுள்ளார்கள் மனிதனின் சுய புத்தியை மாற்றக்கூடிய அனைத்து மதுபானங்கள் போதைப் பொருட்கள் அருந்துவதை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. - புகாரி முஸ்லிம்
  • நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? - அல்-குர்ஆன்
நீங்கள் உங்கள் கைகளால் உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:15)


முஸ்லிம் பகுதியில் 32 அடி புத்தர் சிலை - முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் ஏமாற்றம்

திருகோணமலை மூதூர் பகுதியில் பௌத்த தொல்பொருள் நிலையம் நிலையமொன்றை அமைக்கவும், புத்தர் சிலையொன்றை அமைக்கவு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் அப்பகுதி மக்கள் தமது கவலையையும், கண்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மூதூர் ஜபல் நகரை அண்மித்ததாக அமைந்திருக்கும் மூன்றாம் கட்டை மலையடிவாரத்திலேயே இந்த புத்தர் சிலை நிறுவப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மலையச்சூழ 4 முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ள நிலையில் அப்பகுதியில் சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிக்கவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் முஸ்லிம்கள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
 
முஸ்லிம் கிராமங்கள் சூழவுள்ள இம்மலைப் பகுதியில் 32 அடி உயரமான புத்தர் சிலை றிறுவப்படவுள்ளதாகவும், இதற்கென 12 அடி உயரமான தூண் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 இல் அப்பகுதியில் தொல்பொருள் ஆய்வுக்கான பிரதேசமாக இப்பகுதி பிரகடனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும் பலத்த எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் அம்முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.
 
அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பில் மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களிடையே முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
 
இங்கு கவனிக்கத்தக்க அம்சம் யாதெனில் குறித்த பகுதியில் புத்தர் சிலை அமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தமக்கு இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக எழுத்து வடிவ ஆதாரங்களை தம்மிடம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை இவ்வாறான ஒரு விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆர்வமற்று செயற்படுகின்றமை குறித்து பிரதேச முஸ்லிம்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட:டுள்ளது.

முஸ்லிம்களைஅச்சுறுத்தும் விதத்தில் பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் சுவரொட்டிகள்

நேற்றைய 12.6.2012 தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க செய்தியை இங்கே தருகின்றோம் -தொகுப்பு எப்.எம்.பார்ஹான்-

காலி மாவட்டத்தில் பெந்தர, எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கையேடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான கோரியுள்ளதுடன், இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
கடந்த சில தினங்களாக பெந்தர’எல்பிட்டிய பகுதிகளில் தேசப்பற்றாளர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன அங்கு முஸ்லிம்களின் 15கடைகள் உள்ள நிலையில் இந்தத் துண்டுப்பிரசுரத்தினால் முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தப்புள்ள பள்ளிவாசலை மூடுவதற்கு எடுக்கப்பட்ட செயற்பாடுகள் விரிவடைந்து குருநாகல், அநுராபுரம், தெஹிவளையெனப் பரந்து தற்போது காலி வரை வந்துள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாத நிலையில் சுதந்திரமாக நடமாடும் நிலையில் பள்ளிவாசல்கள் குறித்த விபரம் சி.ஐ.டி.யினரால் திரட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலே காலியில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இது ஏனைய இடங்களுக்கு பரவும் என்பதால் இதனை தடுப்பதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.இதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் .

தற்போதைய சூழ் நிலையில் பார்க்கும் போது 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பபு ஜூலைக்கு முந்திய காலப்பகுதியை போன்றுள்ளது. எனவே தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்துவதற்க்கு குறைந்த பட்சம் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் கண்டனத்தையாவது தெரிவிக்க முன்வர வேண்டுமெனவும் கோரியுள்ளார்.



கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ரவூப் ஹக்கீம்...?


எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சு வேட்பாளராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உறுப்பினர்களிடையே இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

எவ்வாறாயினும் இவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் பொத்துவிலில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேறு எந்த கட்சியுடனும் இணையாது, தனித்து தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


அல்லாஹ்வின் இல்லத்தில் புத்தர் சிலை...?


திருகோணமலை வெள்ளை மணல் - கருமலை ஊற்று மீள்குயேற்ற கிராமத்தில் பள்ளிவாசல் ஒன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கடற்படையின் ஆதிக்கம் நிலவும் இப்பிரதேசத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 60 வருடங்களுக்கும் மேலாக பள்ளிவாசல் இருந்து வந்துள்ளது. முஸ்லிம் கலாசார திணைக்களத்திலும் குறித்த பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசலிலேயே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் மூதூர் பிரதேச சபை தலைவர் டாக்டர் ஹில்மி, யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில், குறித்த பிரதேச பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச முஸ்லிம்கள் சிலர் எங்களிடம் முறைப்பாடு செய்திருந்தனர். நாங்கள் அந்தப் பிரதேச பள்ளிவாசலுக்கு சென்று பார்த்தபோது அவ்வாறான புத்தர் சிலையை காணவில்லை.

குறித்த பள்ளிவாசலை முஸ்லிம் பிரமுகர்கள் பர்வையிட வருகிறார்கள் என்றால் அந்த பள்ளிவாசலிருந்து புத்தர் சிலையை எடுத்து ஒளித்துவைத்து விடுகிறார்கள் என பிரதேச முஸ்லிம்களிடம் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

இதேவேளை இதுதொடர்பில் மூதூர் பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் ஜெஸ்ரி தகவல் தருகையில், குறித்த பள்ளிவாசலுக்கு பதிலாக மற்றுமொரு இடத்தில் பள்ளிவாசலை கட்டித்தர சிலர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இருந்தபோதும் தற்போது அங்கு தொழுகை நடைபெறுவதில்லை. குறித்த பகுதி முஸ்லிம்கள் அயல் பகுதிகளுக்கு சென்றே தொழுகையில் ஈடுபடுகிறார்கள். புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பள்ளிவாசலுக்கு அருகாமையில் 120 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் என்றார்.

அதேவேளை கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதி கொலம்பகே பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை மறுத்ததாகவும் அஷ்ஷெஹ் ஜெஸ்ரி மேலும் குறிப்பிட்டார். இந்த விவகாரம் முஸ்லிம் அரசில் தலைமகளுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு

அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வை இணையத்தில் இப்போது நேரடியாக பார்வையிடலாம்.வானியல் வரலாற்றில் மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு 105 ஆண்டுகள் முதல் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு.தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே (1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம் ஆண்டுகளில்)
நடந்திருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருப்பது எட்டாவது நிகழ்வாகும்.இணையத்தில் சில மணி நேரங்களே பார்க்க முடிகின்ற இந்த நிகழ்வுக்கான இணைப்புக்கள் இங்கே

http://sunearthday.gsfc.nasa.gov/webcasts/nasaedge/

லண்டனில் மஹிந்த உரையாற்றவிருந்த கூட்டம் ரத்தாகியது

commonwealth_economic_mahind
பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில் இலங்கை ஜனாதிபதி பங்குபெறவிருந்த ஒரு அமர்வு ரத்தாகியுள்ளது.

புதன்கிழமை(6.6.12) அன்று காலை காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில், உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய வகையில் முதலாளித்துவத்தை வடிவமைப்பது என்பது தொடர்பிலான ஒரு கருத்தரங்கு நடைபெறவிருந்தது.

அந்தக் கருத்தரங்கில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் உட்பட மூவர் உரையாற்றவிருந்தனர். அதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரையாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன.

எனினும் மிக கவனமாக பல விஷயங்களை ஆராய்ந்த பிறகு அந்த அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் காலை அமர்வு இடம்பெறாது என்றும் காமன்வெல்த் பொருளாதார அமைப்பு செவ்வாய்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மதிய அமர்வுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குவைத்தில் இலங்கையர்களை சந்தித்தார் ரவூப் ஹக்கீம் (படங்கள்)

குவைத் சென்றுள்ள அமைச்சர் ஹக்கீம், அந்நாட்டு நீதி அமைச்சர் ஜமால் அல் அஹமட் சிஹாபை சந்தித்து இரு தரப்பு பேச்சு நடத்தினார். அமைச்சர் ஹக்கீமுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் ஹபீஸ் நசீர் அஹமட் ஆகியோரும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை குவைத்தில் பணியாற்றும் இலங்கையர்களையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்தித்து உரையாடியுள்ளார்


மூதூரில் சட்டவிரோத விஹாரை அமைக்கும் முயற்சி முறியடிப்பு

எஸ்.எச் .அமீர் :

மூதூர் பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஜபல் நகர் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சட்ட விரோதமாக விஹாரையொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்தைச்சேர்ந்த 20 பேர்கள் அடங்கிய ஒரு குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை ஜபல் நகர் மலைப் பகுதியில் அத்துமீறி பிரவேசித்து விஹாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேலை மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் அதிகாரிகள் பலர் ஒன்று கூடி அக்குழுவினரை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

தாம் உரிய அனுமதிபெற்றுத்தான் விஹாரை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறி, உரிய இடத்தை விட்டு நகர மறுத்த அக்குழுவினரிடம் பெற்ற அனுமதியை காண்பிக்குமாறு கோரியபோது அனுமதி எதுவும் பெற்றிராதது தெரிய வந்ததைத்தொடர்ந்து அக்குழுவினர் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இம்மலைப்பகுதியில் 10 வருடங்களுக்கு முன்பு சிலர் சில சமய சின்னங்களை வைத்தநிலையில் வேறு சிலர் அதனை அகற்றிய போது மூதூர் பிரதேசத்தில் இனக்கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு வைத்தியரின் பார்வையில் கஹடோவிட்டா பெண்கள்!



சமீபத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக சென்றிருந்த வேலையில் மருந்துகளைக் கொடுத்துவிட்டதன் பின்னர் அவரது உரையாடல் இவ்வாறு தொடர்கிறது.

எமது ஊரைச்சேர்ந்த பெண்களில் 90 வீதமானோருக்கு மன அழுத்தம் உள்ளதாக குறுப்பிடுகிறார். ஏனென்றால  வைத்தியரிடம் சிகிச்சை பெற அநேகமான பெண்கள் வருகை தருகின்றதாம். ஆனால் அவர்களுக்கு உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருக்கும். ஆனால் உடல் நோயைக் குறிப்பிடுகின்ற அவர்களில் உடலில் எவ்வித நோயகளுக்கும் அறிகுறி இல்லை. அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண் கூடு.
அழுத்தம் என்பது கவலை, ஏக்கம், கோபம், பதைபதைப்பு அல்லது பயம் கலந்த உணர்வுகளாகவும் இருக்கும். ஒரு வேலையை செய்து முடிக்க அல்லது வெற்றிபெற அழுத்தி நெருக்கி வைத்துள்ள நிலை இது. சில வேளைகளில் மன அழுத்த நிலை ஒருவனுடைய வாழ்வையே சீர்குலைக்கும் அளவுக்குப் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணலாம். சில வேளைகளில் மன அழுத்த நிலை ஒருவனை சிந்திக்க, ஆக்கபூர்வமாக செயற்பட, கடினமாக உழைக்க, ஒரு சாதனையை செய்து முடிக்க தூண்டலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான மன அழுத்த நிலைகள் ஏற்படுகின்றன.

அநேகமான பெண்கள் குடும்ப்ப் பிரச்சினைகள், கணவன்- மனைவி, பிள்ளைகளால் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கலாம். வேறு சிலர் வருமை, மற்றும் பல பிரச்சினைகளுக்குல் பாதிக்கப்பட்டுக்கொண்டுறிக்கலாம்.
இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு சில ஆலோசனைகளையும் முன்வைத்தார். பெண்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக தலைதூக்கி செயற்படவேண்டும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொண்டு முன்னேறிச் செல்ல துணிவு வேண்டும். இவ்வாறு அவரது அறிவுரைகள் தொடர்ந்தன….
எது எவ்வாறு இருந்தாலும் எமது ஊரில் வாழும் பெண்கள் மன அழுத்த்த்தால் பாதிக்கப்பட்டால் எதிர்கலத்தில் மிளர இருக்கும் சமுதாயமும் பாதிக்கப்படும் என்பதில் எள்ள்ளவும் சந்தேக மில்லை. ஏனென்றால் ஒரு பெண்ணால் ஆக்கவும் முடியும், ழிக்கவும் முடியும் என்பார்களெ அல்லவா! (அல்லாஹ் நாடினால்)

என்ன தீர்வு?
  • எப்போதும் மன மகிழ்சியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மன உளைச்சலைத் தரக் கூடிய சூழ் நிலையை தவிர்க்க முயற்சிப்பதோடு நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
  • நெருக்கமான நட்பையும் மற்றவர்களுடன் சிறப்பான நல்லுறவையும் வளர்த்துக் கொள்ள நேரத்தை செலவிடுங்கள். மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களது தவறுகளைப் பெரிதுபடுத்தாது அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர்களும் உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் அல்லவா? மற்றவர்களையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள பழகினால் மன அழுத்தம் வெகுவாக குறைவடையும்.
  • மன அமைதி நாடுவார் இறைவழிபாடு, தியானம் போன்றவைகளில் ஈடுபடுவதோடு உடல் இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் போக்கும் தியானப் பயிற்சிகள், யோகாசன முறைகளையும் முறையாக கற்றுக் கடைப்பிடிப்பதும் மன அமைதியைத் தரும்.

விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதோடு நீங்கள் உங்கள் நண்பர்களிடம் காட்டும் இணக்கத்தையும் கனிவையும் வீட்டிலுள்ளவர்களிடம் காட்டுங்கள். மன அழுத்தம் எப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை தடுக்கும் வழி உங்கள் கையில்தான் உள்ளது.

எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்” (65:3)

அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனிடம் நம்பிக்கைவைத்து, அவனுக்கே பொறுப்பையும் சாட்டி நாம் அதன் பிரகாரமே வாழ்வோமானால் எவ்விதமான கஷ்டங்கள் நம்மை நோக்கி வந்தாலும் அல்லாஹ் அவற்றை இலகுவாக்கிவைப்பான்.
இதனால் நமது எதிர்கால சமுதாயம் உடல், உள வழிமையோடு எதிர்காலத்தில் சாதிக்கப் பிறந்தவர்களாக மாறிவிடுவார்கள் என்பது நிச்சயம்.

பகிர்ந்தமைக்கு நன்றி (ஜதாகல்லாஹ்)

பள்ளிவாசல்களின் விபரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சேகரிப்பு

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் கோரியுள்ளது.
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்ற குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை கோரியுள்ளனர்.
இந்த தரவுகள் திரட்டல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காகவே இடம்பெறுகின்றது என முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனினும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிலுள்ள அனைவரினதும் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியதாக வெளியான தகவல்களை உயர் அதிகாரி நிராகரித்தார்.
இது தொடர்பில் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் கசியொன் ஹேரத்தை தொடர்புகொண்டு வினவிய போது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஜயம் குறித்து தாம் அறியவில்லை என்றார்.
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை காலை தன்னை சந்தித்தபோது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பள்ளிவாசல்களின் தகவல்களை கோருவது உரிமை மீறலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத உரிமை இதன் மூலம் மீறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோருவதனால் எந்த பிரச்சினையுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பிலுள்ள பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் தெரிவித்தார்.
அனைத்து சமயங்;களினதும் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோர வேண்டும். மாறாக, பள்ளிவாசல்கள் தொடர்பான தகவல்களை மாத்தரம் கோருவது முஸ்லிம் சமூகத்திற்கு வருத்த்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
TamilMirror-