கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பெளத்த மத குழுக்களுக்கும் மோதல் ,அரசுக்கு இரண்டு வார கால அவகாசம்

காலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சமஸ்த லங்கா சிறி சுமேத சங்கமய என்ற புதிய பௌத்த வழிபாட்டு நிலையத்தை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகளின் அமைப்பு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அரசுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு கருத்து வெளியிட்ட பௌத்த கலாசார நிலையத்தின் பணிப்பாளர் வண.கிரம விமலஜோதி தேரர்,இலங்கையின் பௌத்த விவகார அமைச்சு தனது கடமையைச் சரிவரச் செய்யத் தவறி விட்டது. பௌத்தத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை அரசாங்கத்தினுடையது.
காலி பிரதேசத்தில் வந்துரம்பவில் தன்னை, மைத்ரி புத்தர் என்று கூறிக்கொள்ளும் சிறிவர்த்தன என்ற நபருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பல அரசசார்பற்ற நிறுவனங்களும், சில பௌத்த நாமத்தில் இயங்கும் சக்திகளும் பௌத்த மததிற்கு எதிராக வேலை செய்கின்றன.தன்னை மைத்ரி புத்தர் என்று கூறிக்கொள்ளும் இந்த நபர் காலி பிரதேசத்தில் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளார்.
இவர் வர்த்தகர்களின் உதவியுடன் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அரசியல் பின்புலமும் உள்ளது.பௌத்தத்தை அவமதிக்கும் இவரது செயலுக்கு முடிவுகட்டவே கடந்த 24ம் நாள் வந்துரம்பவில் பாரிய மாநாடு ஒன்று இடம்பெற்றது.
500 பிக்குகள் உள்ளிட்ட 2000 பேர் இதில் கலந்து கொண்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.பௌத்தர்கள் மீது விசேட அதிரடிப்படையின் உதவியுடன் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தைக் கலைத்தனர்.அந்த சூழ்நிலையில் சில போலீசார் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார் .
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட புத்த பலசேனா இயக்கத்தின் தலைவர், வண. கலபொதத்த ஞானசேர தேரர்,
வந்துரம்பவில் உள்ள சுமேத சங்கமய மீது நடவடிக்கை எடுப்பதற்கு பௌத்த விவகார அமைச்சுக்கு நாம் இரண்டு வார கால அவகாசத்தைக் கொடுக்கிறோம்.அவர்கள் அதைச் செய்யத் தவறினால், பௌத்த விவகார அமைச்சை முற்றுகையிடுவதுடன், பௌத்த பலசேனா இயக்கம் பௌத்தத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.பௌத்த பிக்குகள் என்ற வகையில், இது எமது கடமை. முக்கியமான காலங்களில் நாம் நாட்டைப் பாதுகாப்பவர்களாக இருந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் .

0 comments:

Post a Comment