கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒத்திகையில் ஈடுபட்ட இரு கிபீர் விமானங்கள் கஹடோவிடாவிக்கு அன்மையில் வீழ்ந்து நொறுங்கின

இன்று காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு ஒத்திகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு கபீர் விமானங்களில் இரண்டு ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகி எமது ஊருக்கு அருகாமையிளுள்ள நெல்லிகஹமுள்ள மற்றும் உடுதுத்திரிபிடிய ஆகிய இடக்களில் பாரிய தீப்பிழம்புடன் விழுந்துள்ளது.

விமானங்களை செலுத்திய இரண்டு விமானிகள் விமானத்திலிருந்து வெளித்தள்ளும் கருவியை பயன்படுத்தி தப்பித்துக்கொண்டுள்ளளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு விமானியின் உடல் விபத்து நடந்த இடத்துக்கருகாமையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ள்ளதாக அறியக்கிடைக்கிறது.

தகவல் அறிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்கஷ, மற்றும் பாராளுமன்ற உருப்பினர் சரண குனவர்த்தன ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனடியாக விஜயம் செய்து அதனை நேரில் பார்வையிட்டதை எம்மால் நேரடியாக்க் காணமுடிந்த்து.
சம்பவத்தில் விமானப் படையின் லெப்டினன் பதவிநிலை வகிக்கும் மொனாஷ் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ள நிலையிலும் வஜிர ஜயகொடி என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்து ஒரு சில நிமிடங்களில் எம்மால் எடுக்கப்பட்ட நேரடியான புகைப்படங்களை இங்கே பார்வையிடலாம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்கஷ





பாராளுமன்ற உருப்பினர் சரண குனவர்த்தன







நஜுமுதீன் அர்பகான் வபாத்தானார்


துருக்கியின் இஸ்லாமிய அரசியல் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் நஜுமுதீன் அர்பகான் வபாத்தாகியுள்ளார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று 27.02.2011 ( தனது 85 யதில் வபாத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவர் ரபாஹ் என்ற ஸ்லாமிய அரசியல் இயக்கம் தோன்ற முக்கிய பங்காற்றியதுடன் துருக்கியின் முதல் இஸ்லமிய சிந்தனை கொண்ட பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் துருக்கியில் ஒருவருடகாலம் பிரதமராக பதவி வகித்தார் 1996ஆம் ஆண்டு துருக்கிய இராணுவம் இவரை யாப்பை மீறி இஸ்லாமிய மாதிரிகளை துருக்கியில் புகுத்துகின்றார் என்று கூறி பலவந்தாக பதவி நீக்கியது இவர் ஒரு பொறியல் பேராசிரியரும் Phd பட்டம் பெற்ற இஸ்லாமிய புத்திஜீவியுமாவார் விரிவாக தற்போது துருக்கியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development பார்ட்டி துருக்கியில் பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானினால் ஆரம்பிக்கப்பட்ட ரபாஹ் இயக்கத்தின் சிந்தனை முகாமில் வளர்ந்த கட்சியாகும், நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development Party- 2007 ஆண்டு நடந்த தேர்தலில் 341 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது இவரின் இழப்பு முழு முஸ்லிம் உம்மாவுக்கும் பெரும் இழப்பாகும்.

காங்கிரஸின் வருகை இருந்த ஆசனத்தையாவது காப்பாற்றுமா?

எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடலாமா எனும் நீதி மன்றத் தீர்ப்பு நாளை வெளியாகலாம் என்ற நிலையில் கஹட்டோவிடாவின் அரசியல் அரங்கில் அதிரடியான சில மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்புக்களும் ஆறூடங்களும் பரவலாக வெளிப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போது நாக்கைத் தட்டிக்கொண்டிருந்த மற்றைய அணியினருக்கு முஸ்லிம் காங்கிரஸின் வருகையானது ஒரு பேரிடியாக அமைந்துவிட்டதாகவே தெரிகின்றது. எவ்வாறாயினும் இம்முறை தேர்தலில் கஹட்டோவிட்ட சார்பாக ஒரேயொருவர் கூட தெரிவாவது சிச்சயமற்றதாகவே தெரிகின்றது.

கணிதமேதை அல் குவாரிஸ்மி

கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.


எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை

யூதர்களும்,கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.

நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக

எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன.இந்த எண்கள் முறை இந்தியாவிலிருந்து அரபுலகதிற்கு வந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்ற அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில்நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன்காரணமாக வலப்புறத் திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறைவழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன. இன்றும் அரபுலகில் இந்த எண்கள் இந்திய எண்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

இந்தியர்களிடமிருந்து கணித எங்களைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறுதான் மேற்குலகத்திற்கு அதனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.இன்னும்

பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண்முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர்.zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.

ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த

காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் அல்ஜீப்ரா என்ற சொல் பிறந்தது.வடிவக்கணிதம் (Geometry),முக்கோணக்கணிதம்

(Trigonometry) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.

அரபியர்களின்நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும். இவரது முழுப்பெயர்

அபுயூசுப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 - 873 ஆகும்.

அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்.

Thanks: Ulagin Ariviyal : Munnodigal Muslimgal

Rajaghiri Gazzali

ஜனாஸா அறிவித்தல்கள்.

கஹடோவிடவைச் சேர்ந்த அல்ஹாஜ் சிஹாப்தீன் காலமானார். அன்னார் காலம் சென்ற நபீஸா உம்மாவின் கணவரும் காலம் சென்ற தாலிப், ருக்கியா உம்மா, உம்மு குலூஸ், உம்மு ஸைதா ஆகியோரின் சகோதரரும் நவாஸ் (குவைத்), ஹ_ஸைன், இக்பால், கவுஸ், சித்தி பாத்திமா, பரீதா, சித்தி நிஸா,முப்லிஹா, ஹம்ஸியா ஆகியோரின் தகப்பனாரும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 11.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம்பெறும்.

மற்றுமொரு ஜனாஸா
வட்டதெனியவைப் பிறப்பிடமாகவும் கஹடோவிட குரவலான மாளிகாவத்தையைச் சேர்ந்தவருமான இஸ்மதுல்லா ஸாலி காலமானார். அன்னார் மிஸ்ரியாவின் கணவரும் இமாமுல்லாஹ், இல்மா ஆகியோரின் தகப்பனாரும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் இன்று பி.ப. 2.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம்பெறும்.

அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

கஜூகமையில் முச்சக்கரவண்டி-பஸ் மோதல் இருவர் இஸ்தளத்திலே மரணம்.



நேற்று இரவு முச்சக்கர வண்டியில் ஒரு சிலர் கண்டியிலிருந்து கொழும்புக்கு மரணவீடொன்றுக்கு வந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது கஜூகமையில் முச்சக்கரவண்டி  பஸ்ஸென்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 3 பெண்களில் ஒருவரும், 3 சிறுவர்களில் ஒரு சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிலந்துள்ளார்கள். ஏனையோர் பாரிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். இங்கு முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதியின் மனைவியும், 1.5 வயதுக் குழந்தையுமே உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது. பஸ் சாரதி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தியதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து உடனே எமது ஊரைச்சோ்ந்த சில சகோதரர்கள் முன்னால் மு.கா. பிரதேச சபை உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சகோதரர் நாஸர் தலைமையில் உடனடியாக அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், வந்தவர்களுக்குத் தேவையான உணவு தங்குமிட வசதிகளையும் செய்துகொடுத்ததாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

ஜனாஸா அறிவித்தல்

ஓகொடபொளையைச்சேர்ந்த அப்துல் கரீம் நாநா அவர்கள் காலமானார். அன்னார் சகோதரர் ஹஸன், ஹுசைன் ஆகியோரின் தந்தையுமாவார். அன்னார் கடந்த பல வருடங்களிற்கு முன்னர் குடும்பத்துடன் புனித இஸ்லாத்தைத் தழுவி ஏகத்துவத்தின்பால் மீண்டவர் என்பதும் குறிப்பிடத்தகக்கது.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை நல்குவானாக!

எச்சரிக்கை: பேஸ்புக் கணக்குவைத்திருப்பவர்கள்.




நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்.பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங் தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது. லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.


இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விடயமாகும். "உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும்" என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே.

பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும் அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்.

Thanks To facebook

ஹஜ் யாத்திரை மோசடி: விசாரணை குழு கலைப்பு



கடந்த வருட ஹஜ் யாத்திரைக்கான இலங்கை குழுவில் மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு தற்காலிகமாக கலைக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் சேஸியன் ஹேரத,; தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


தற்போதைய நிலையில் இக்குழு அவசியமில்லை என்ற காரணத்தினாலேயே கலைத்தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் குழுவின் உறுப்பினர் ஒருவரிடம் தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது, இக்கலைப்பு தொடர்பில் தங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றார்.

மின் சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.எம்.றபீக், வெளிநாட்டு அமைச்சின் மத்திய கிழக்கு பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் கமநல மற்றும் விவசாயத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எச்.முயினுதீன் ஆகியோரை கொண்ட இக்குழுவை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் சேஸியன் ஹேரத் கடந்த வாரம் நியமித்திருந்தார்.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் இக்குழு கூடியுள்ளது.

இதன்போது, தங்களை நியமனம் செய்த புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் சேஸியன் ஹேரதை விரைவில் சந்திப்பது மற்றும் எவ்வாறு தொடர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

இக்குழு, ஹஜ் யாத்திரிகர்களால் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள், ஹஜ் முகவர்களது முறைப்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் ஹஜ் கிரியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவே நியமிக்கப்பட்டிருந்தது.

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானவை தலைவராக கொண்ட 2010ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் குழுவில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப் பாவனைக்க எதிராக கஹடோவிட இளைஞர் ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்.










நீ


மன நோயாளியா?

சின்ன மூளைக் காரனா?

“இவர்கள் அனைவரும்

புகைப்பிடிப்பவர்கள் அல்ல. ஆனால்

புகைப்பிடிப்பவர்கள் அனைவரும் இவர்களே!”

யார் இவர்கள்!!!

விற்பனை செய்பவர்களா?

புகை பிடிப்பவர்களா?



போதைப் பொருள் பாவனையின் சில புள்ளிவிபரங்கள்:

· இலங்கையின் மொத்த சிறைச்சாலைகளில் 40 வீதமானவர்கள் போதைவஸ்துப் பாவணையாளர்கள்

· இலங்கையின் மொத்தமாக 40 ஆயிரம் ஹெரோயின் பாவணையாளர்கள் உள்ளனர்.

· (எங்கள் ஊரில் உள்ளவர்களும் அடங்கலாம்)

· 2000 ஆம் ஆண்டில் மட்டும் 10278 போதைவஸ்து விநியோகஸ்தர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

· இலங்கையில் 2 லட்சம் கஞ்சாப் பாவணையாளர்கள் உள்ளனர்.

· பீடா விற்பனை நிலையங்கள் ஒரு ஊருக்கு இரண்டு எனும் விகிதத்தில் அதிகரித்து வருகின்றது. இதில் முஸ்லிம் ஊர்களே அதிகம் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

கஹடோவிடஇ ஓகடபொல ஆகிய கிராமங்களில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி தரும் தகவல்கள் இதோ!!!!!

சிகரட்இ தூல் மடையர்கள் 64மூ. அதாவது, 100 பேர்களில் 64 பேர் மடையர்கள்

சிகர் கம்பனிக்கு சலூட் அடிக்கும் கடைகள் 43மூ அதாவது 100 கடைகளில் 43 கடைகள் வால் பிடிக்கின்றன.

கஹட்டோவிட, ஓகொடபொல ஊர்களில் இரந்து மாதத்திற்கு சிகரட் கம்பனிக்கு சம்பாதித்துக் கொடுக்கும் தொகை ஏறத்தாழ 185000 ரூபாவாகும். இந்த மடையர்களைப் பற்றி என்ன சொல்வது.

இவர்களை அடையாளம் காண்பது எவ்வாறு

இவர்களின் முகத்தோற்றம் அவருடைய வயதை விட முதிய தோற்றமாக இருக்கும்

இவர்களின் அனைத்து விடயங்களையும் தீர்மானித்து சிகரட், தூல் ஆகும்

அருகில் செல்லும் போது துர் நாற்றம் அடிக்கும்

இதனால் விளைவதுஇ

· சமூக நலன் சிந்திக்காத வியாதிகள்

· சிறு வயதிலேயே விகாரமான தோற்றம் உடையவர்கள்

· படிப்பில் அக்கறை செலுத்த முடியாமை

· வேலையில் தொடர்ந்து நிற்காமை

· சோம்பேறிகள்

இவை தொடர்ந்தால் அல்லாஹ்வின் சாபம் நிச்சயம் இவர்களுக்கு உண்டு.

இவர்கள் பாவம்இ இவர்கள் சிகரட் கம்பனியின் சூழ்ச்சிக்கும்இ தழடடல என்ற மாயைக்கும் மாட்டிக் கொண்டு போதை என்னும் மூட நம்பிக்கையில் தவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் இவர்கள் தான் இப்பாவி சிறுவர்களை கொலை செய்வதற்கு தான் சிறமப்பட்டு சம்பாதித்த பணத்தில் இருந்து பணம் கொடுப்பவர்கள். இவர்கள் குடிக்கும் சிகரட்டில் இருந்து அந்த கொடிய யூதர்கள் இலாபம் ஈட்டுவது தெரிந்திருந்தும் தெரியாதது போல் இருக்கிறனர். யூதர்களின் சனத்தொகைக் குறைப்புத் திட்டத்தில் இதுவும் ஒர் அங்கமாகும்.

“சிகரட், தூல் விற்பவர்கள், பாவிப்பவர்கள் ஊரைச் சீரழிக்கும் மட்டுமல்ல எமது சமூகத்தின் துரோகிகளும் தான்”

இஸ்லாமிய நோக்கு

“உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நுpச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்” (அத்தியாயம் 6:25)

“அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமே!! (அஹ்மத, அபூதாவூத், திர்மிதி)

இன்று பாவனையில் இருக்கும் சிகரட், சுரட்டு, பீடி, தூல் ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கு பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அறியப் படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல், தூள் பற்றிய தீர்ப்பினை ஆரம்ப கால இமாம்கள் வழங்கவில்லை. அறிவு பூர்வமான விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்பதனால் தற்காலத்தில் பெறும்பாலான அறிஞர்கள் புகைத்தல், தூல் பாவனை ஹராம் என்றே ஏகோபித்துச் சொல்கிறார்கள்.

எமது ஊரையும் எமது இளைஞர்களையும் பாதுகாக்க நாம் என்ன செய்யவேண்டும்.

முதலாவது, போதைக்கு இட்டுச் செல்லும் சிறிய போதைப் பொருற்களான சிகரட், புகையிலைத் தூல், என்பவற்றை விற்பனைசெய்யும் வியாபாரிகளை நிறுத்தச் செய்யவேண்டும்.

இவர்கள் தான் போதை பரவுவதற்கான ஆணிவேர். ஓன்றின் இருப்பை இல்லாமல் செய்ய அதன் ஆணிவேரை புடிங்கி எடுத்திட வேண்டும்.

சேற்ப, அற்ப இலாபத்திக்கு எமது இளைய சமூகத்தை தாரைவார்க்க இடமளிக்க முடியாது.

ஒரு சிலருடைய சுய நலத்துக்கு எமது இளைய சமூகமா விலை.

எத்தனை குடும்பங்கள் கண்ணீருடன் வாழ இந்த வியாபாரிகள் காரணமாகின்றன.

இஸ்லாத்திற்காக இந்த ஹராத்தை விட்டுவிடுவதனால் இலாபமே கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் இந்த வியாபாரிகளுக்கு எடுத்துக் கூறுவோம்.

இந்தத் தீமையை கையினால் தடுக்க முன்வருவோம். ஏந்த நாளும் ஈமானில் கீழ் தட்டில் இருந்துகொண்டு உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கி தப்பித்துக்கொள்ள முடியாது.

இந்த வியாபாரிகளினால் பாதிக்கப்பட போவது எவருடையவோ பிள்ளை அல்ல, நாளை அது உங்கள் வீட்டுக் கதவையும் வந்தடையும். வெள்ளம் மூக்கைத் தாண்டிய பிறகு கண்ணீர் வடிப்பதால் பயனில்லை.

அல்லாஹ் தடுத்த தீமையை தீமை என்று செல்லித் தடுக்க என்ன பயம்! அதுவும் எமது முஸ்லிம் சகோதரர்களுக்க!

யா அல்லாஹ் இந்தத் தீமையை எமதூரிலிருந்து துடைத் தெரிவதற்கு எமது மக்களின் உள்ளத்தில் தைரியத்தை ஏற்படுத்துவாயாக.



பெண்களே!

பெண்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் கிடைத்த பொக்கிஷமாகும். இதனால் தான் “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள்!”

பெண்கள் செய்ய வேண்டியவை

எ ஒரு சில சில்லறை வியாபாரத்துக்காக சுருட்டு சுற்றும் நீங்கள் சமூகச் சீர்கேடுகளுக்கு ஓர் அடித்தளமாக இருக்க விரும்புகின்றீர்களா?

எ தூல் விற்பனை கடைகளில் பரவலாக இல்லை. ஆனால் உங்களுக்கு தெரியாமல்; உங்கள் கைத்தொழில் தான் தூல் பாவனையின் ஆரம்ப இடம் என்பதனால் உங்கள் கைத் தொழிலை மாற்றுங்கள்.

எ சுpகரட், பீடி, தூல் விற்கும் கடைகளை புறக்கனியுங்கள். ஆங்கு சாமான்கள் வாங்குவதை நிறுத்துங்கள்.
- கஹடோவிட இளைஞர் ஒன்றியம்.

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடாவைச் சேர்ந்த எம்.எச்.எம் பாரூக்கின் மனைவி ரஸீனா உம்மா காலமானார்.  அன்னாரின் ஜனாஸா இன்று (2011.02.02)  மாலை 5.00 மணியளவில் நாம்புலுவ  ஜூம்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் இச் சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு; முபாரக் ஆட்சி கவிழும் ஆபத்து




Egypt protests

எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். இவரது நீண்ட கால ஆட்சியில் எகிப்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது.


மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது. எனவே முபாரக் பதவி விலக வேண்டும் என மக்கள் வன்முறை போராட்டத்தில் குதித்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது. இன்று 8-வது நாளாக கலவரம் நீடித்து வருகிறது. தலைநகர் கெய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை.

மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார். புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின் றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார்.

இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்து பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.

மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை முபாரக் ஏவிவிட்டார். ராணுவ டாங்கிகள், பீரங்கி வண்டிகள், தெருக்களில் நிறுத்தப்பட்டன எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே தயாராக நின்றனர். போராட்டகாரர்களை ஒடுக்கும்படி முபாரக் ராணுவத்துக்கு உத்தரவிட்டபடி இருந்தார்.

ஆனால் முபாரக் உத்தரவுக்கு கட்டுப்பட ராணுவம் திடீரென மறுத்து உள்ளது. பொதுமக்களை சுட முடியாது என்றும் ராணுவம் கூறிவிட்டது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எகிப்து மக்கள் இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் அவர்கள் சட்டப்பூர்வமாக போராடுகின்றனர். அவர்களுக்கு போராட உரிமை உள்ளது.

எங்கள் சொந்த நாட்டு மக்களை நாங்கள் தாக்கமாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. ராணுவமும் மக்கள் பக்கம் சாய்ந்துவிட்டதால் முபாரக்கின் நிலைமை மோசமாகி உள்ளது. அவர் எந்த நேரத்திலும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முபாரக் முயற்சித்து வருகிறார்.

இது தொடர்பாக துணை அதிபர் உமர் சுலைமான் டெலிவிஷனில் தோன்றி வேண்டுகோள் விடுத்தார். “அதிபர் முபாரக் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறார். எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்த்து கொள்ளலாம். அரசியல் சட்டம், சட்டவிதிகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம்.

பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்” என்று அவர் கூறினார். ஆனால் போராட்டகாரர்கள் சமாதானத்துக்கு தயாராக இல்லை. முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகியே ஆக வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அதிபர் உத்தரவுக்கு ராணுவம் கட்டுப்பட மறுத்துவிட்ட நிலையில் எதிர்கட்சியினரும் சமாதான பேச்சு நடத்த தயாராக இல்லாததால் முபாரக் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Egypt protests
இதற்கிடையே முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது.

இது ரூ.60 கோடி மதிப்புடையது. மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிப்து கலவரத்தால் லண்டன் ஓடிய அதிபர் மனைவி!

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் (82) பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறை சம்பவம் காரணமாக போராட்டம் கலவரமாக மாறியது. இன்று 8-வது நாளாக கலவரம் நீடிக்கிறது.

தீ வைப்பு சம்பவங்கள், அரசு சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. கலவரத்தை அடக்க ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கெய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது.

கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார். புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை.

முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார். இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்து பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்ததை தொடர்ந்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இது ரூ.60 கோடி மதிப்புடையது.

மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.