கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நஜுமுதீன் அர்பகான் வபாத்தானார்


துருக்கியின் இஸ்லாமிய அரசியல் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் நஜுமுதீன் அர்பகான் வபாத்தாகியுள்ளார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று 27.02.2011 ( தனது 85 யதில் வபாத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவர் ரபாஹ் என்ற ஸ்லாமிய அரசியல் இயக்கம் தோன்ற முக்கிய பங்காற்றியதுடன் துருக்கியின் முதல் இஸ்லமிய சிந்தனை கொண்ட பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் துருக்கியில் ஒருவருடகாலம் பிரதமராக பதவி வகித்தார் 1996ஆம் ஆண்டு துருக்கிய இராணுவம் இவரை யாப்பை மீறி இஸ்லாமிய மாதிரிகளை துருக்கியில் புகுத்துகின்றார் என்று கூறி பலவந்தாக பதவி நீக்கியது இவர் ஒரு பொறியல் பேராசிரியரும் Phd பட்டம் பெற்ற இஸ்லாமிய புத்திஜீவியுமாவார் விரிவாக தற்போது துருக்கியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development பார்ட்டி துருக்கியில் பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானினால் ஆரம்பிக்கப்பட்ட ரபாஹ் இயக்கத்தின் சிந்தனை முகாமில் வளர்ந்த கட்சியாகும், நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development Party- 2007 ஆண்டு நடந்த தேர்தலில் 341 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது இவரின் இழப்பு முழு முஸ்லிம் உம்மாவுக்கும் பெரும் இழப்பாகும்.

0 comments:

Post a Comment