கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எகிப்து கலவரத்தால் லண்டன் ஓடிய அதிபர் மனைவி!

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் (82) பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறை சம்பவம் காரணமாக போராட்டம் கலவரமாக மாறியது. இன்று 8-வது நாளாக கலவரம் நீடிக்கிறது.

தீ வைப்பு சம்பவங்கள், அரசு சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. கலவரத்தை அடக்க ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கெய்ரோ மட்டுமின்றி அலெக்சாண்ட்ரியா உள்பட நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது.

கலவரத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. மக்களை அமைதிப்படுத்த ஏற்கனவே இருந்த மந்திரி சபையை அதிபர் முபாரக் கலைத்துவிட்டார். புதிய இடைக்கால மந்திரி சபையை அமைத்துள்ளார். இருந்தும் மக்கள் அமைதியாகவில்லை.

முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார். இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்து பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவில் நடந்த பேரணிகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

ஒட்டு மொத்தமாக அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்ததை தொடர்ந்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி சுஷானே (69) லண்டன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் இவர்களுக்கு சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இது ரூ.60 கோடி மதிப்புடையது.

மனைவி சுஷானேயை தொடர்ந்து அதிபர் முபாரக்கும் திடீரென லண்டன் தப்பி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment