கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஹஜ் யாத்திரை மோசடி: விசாரணை குழு கலைப்பு



கடந்த வருட ஹஜ் யாத்திரைக்கான இலங்கை குழுவில் மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு தற்காலிகமாக கலைக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் சேஸியன் ஹேரத,; தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


தற்போதைய நிலையில் இக்குழு அவசியமில்லை என்ற காரணத்தினாலேயே கலைத்தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் குழுவின் உறுப்பினர் ஒருவரிடம் தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது, இக்கலைப்பு தொடர்பில் தங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றார்.

மின் சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.எம்.றபீக், வெளிநாட்டு அமைச்சின் மத்திய கிழக்கு பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் கமநல மற்றும் விவசாயத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எச்.முயினுதீன் ஆகியோரை கொண்ட இக்குழுவை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் சேஸியன் ஹேரத் கடந்த வாரம் நியமித்திருந்தார்.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் இக்குழு கூடியுள்ளது.

இதன்போது, தங்களை நியமனம் செய்த புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் சேஸியன் ஹேரதை விரைவில் சந்திப்பது மற்றும் எவ்வாறு தொடர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

இக்குழு, ஹஜ் யாத்திரிகர்களால் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள், ஹஜ் முகவர்களது முறைப்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் ஹஜ் கிரியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவே நியமிக்கப்பட்டிருந்தது.

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானவை தலைவராக கொண்ட 2010ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் குழுவில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comments:

Anonymous said...

I do know this isn’t exactly on subject, but i've a web site using the same program as well and i get troubles with my comments displaying. is there a setting i'm missing? it’s attainable you might help me out? thanx.

Post a Comment