கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

போதைப் பாவனைக்க எதிராக கஹடோவிட இளைஞர் ஒன்றியத்தினால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்.










நீ


மன நோயாளியா?

சின்ன மூளைக் காரனா?

“இவர்கள் அனைவரும்

புகைப்பிடிப்பவர்கள் அல்ல. ஆனால்

புகைப்பிடிப்பவர்கள் அனைவரும் இவர்களே!”

யார் இவர்கள்!!!

விற்பனை செய்பவர்களா?

புகை பிடிப்பவர்களா?



போதைப் பொருள் பாவனையின் சில புள்ளிவிபரங்கள்:

· இலங்கையின் மொத்த சிறைச்சாலைகளில் 40 வீதமானவர்கள் போதைவஸ்துப் பாவணையாளர்கள்

· இலங்கையின் மொத்தமாக 40 ஆயிரம் ஹெரோயின் பாவணையாளர்கள் உள்ளனர்.

· (எங்கள் ஊரில் உள்ளவர்களும் அடங்கலாம்)

· 2000 ஆம் ஆண்டில் மட்டும் 10278 போதைவஸ்து விநியோகஸ்தர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

· இலங்கையில் 2 லட்சம் கஞ்சாப் பாவணையாளர்கள் உள்ளனர்.

· பீடா விற்பனை நிலையங்கள் ஒரு ஊருக்கு இரண்டு எனும் விகிதத்தில் அதிகரித்து வருகின்றது. இதில் முஸ்லிம் ஊர்களே அதிகம் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

கஹடோவிடஇ ஓகடபொல ஆகிய கிராமங்களில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி தரும் தகவல்கள் இதோ!!!!!

சிகரட்இ தூல் மடையர்கள் 64மூ. அதாவது, 100 பேர்களில் 64 பேர் மடையர்கள்

சிகர் கம்பனிக்கு சலூட் அடிக்கும் கடைகள் 43மூ அதாவது 100 கடைகளில் 43 கடைகள் வால் பிடிக்கின்றன.

கஹட்டோவிட, ஓகொடபொல ஊர்களில் இரந்து மாதத்திற்கு சிகரட் கம்பனிக்கு சம்பாதித்துக் கொடுக்கும் தொகை ஏறத்தாழ 185000 ரூபாவாகும். இந்த மடையர்களைப் பற்றி என்ன சொல்வது.

இவர்களை அடையாளம் காண்பது எவ்வாறு

இவர்களின் முகத்தோற்றம் அவருடைய வயதை விட முதிய தோற்றமாக இருக்கும்

இவர்களின் அனைத்து விடயங்களையும் தீர்மானித்து சிகரட், தூல் ஆகும்

அருகில் செல்லும் போது துர் நாற்றம் அடிக்கும்

இதனால் விளைவதுஇ

· சமூக நலன் சிந்திக்காத வியாதிகள்

· சிறு வயதிலேயே விகாரமான தோற்றம் உடையவர்கள்

· படிப்பில் அக்கறை செலுத்த முடியாமை

· வேலையில் தொடர்ந்து நிற்காமை

· சோம்பேறிகள்

இவை தொடர்ந்தால் அல்லாஹ்வின் சாபம் நிச்சயம் இவர்களுக்கு உண்டு.

இவர்கள் பாவம்இ இவர்கள் சிகரட் கம்பனியின் சூழ்ச்சிக்கும்இ தழடடல என்ற மாயைக்கும் மாட்டிக் கொண்டு போதை என்னும் மூட நம்பிக்கையில் தவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் இவர்கள் தான் இப்பாவி சிறுவர்களை கொலை செய்வதற்கு தான் சிறமப்பட்டு சம்பாதித்த பணத்தில் இருந்து பணம் கொடுப்பவர்கள். இவர்கள் குடிக்கும் சிகரட்டில் இருந்து அந்த கொடிய யூதர்கள் இலாபம் ஈட்டுவது தெரிந்திருந்தும் தெரியாதது போல் இருக்கிறனர். யூதர்களின் சனத்தொகைக் குறைப்புத் திட்டத்தில் இதுவும் ஒர் அங்கமாகும்.

“சிகரட், தூல் விற்பவர்கள், பாவிப்பவர்கள் ஊரைச் சீரழிக்கும் மட்டுமல்ல எமது சமூகத்தின் துரோகிகளும் தான்”

இஸ்லாமிய நோக்கு

“உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நுpச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்” (அத்தியாயம் 6:25)

“அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமே!! (அஹ்மத, அபூதாவூத், திர்மிதி)

இன்று பாவனையில் இருக்கும் சிகரட், சுரட்டு, பீடி, தூல் ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கு பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அறியப் படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல், தூள் பற்றிய தீர்ப்பினை ஆரம்ப கால இமாம்கள் வழங்கவில்லை. அறிவு பூர்வமான விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்பதனால் தற்காலத்தில் பெறும்பாலான அறிஞர்கள் புகைத்தல், தூல் பாவனை ஹராம் என்றே ஏகோபித்துச் சொல்கிறார்கள்.

எமது ஊரையும் எமது இளைஞர்களையும் பாதுகாக்க நாம் என்ன செய்யவேண்டும்.

முதலாவது, போதைக்கு இட்டுச் செல்லும் சிறிய போதைப் பொருற்களான சிகரட், புகையிலைத் தூல், என்பவற்றை விற்பனைசெய்யும் வியாபாரிகளை நிறுத்தச் செய்யவேண்டும்.

இவர்கள் தான் போதை பரவுவதற்கான ஆணிவேர். ஓன்றின் இருப்பை இல்லாமல் செய்ய அதன் ஆணிவேரை புடிங்கி எடுத்திட வேண்டும்.

சேற்ப, அற்ப இலாபத்திக்கு எமது இளைய சமூகத்தை தாரைவார்க்க இடமளிக்க முடியாது.

ஒரு சிலருடைய சுய நலத்துக்கு எமது இளைய சமூகமா விலை.

எத்தனை குடும்பங்கள் கண்ணீருடன் வாழ இந்த வியாபாரிகள் காரணமாகின்றன.

இஸ்லாத்திற்காக இந்த ஹராத்தை விட்டுவிடுவதனால் இலாபமே கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் இந்த வியாபாரிகளுக்கு எடுத்துக் கூறுவோம்.

இந்தத் தீமையை கையினால் தடுக்க முன்வருவோம். ஏந்த நாளும் ஈமானில் கீழ் தட்டில் இருந்துகொண்டு உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கி தப்பித்துக்கொள்ள முடியாது.

இந்த வியாபாரிகளினால் பாதிக்கப்பட போவது எவருடையவோ பிள்ளை அல்ல, நாளை அது உங்கள் வீட்டுக் கதவையும் வந்தடையும். வெள்ளம் மூக்கைத் தாண்டிய பிறகு கண்ணீர் வடிப்பதால் பயனில்லை.

அல்லாஹ் தடுத்த தீமையை தீமை என்று செல்லித் தடுக்க என்ன பயம்! அதுவும் எமது முஸ்லிம் சகோதரர்களுக்க!

யா அல்லாஹ் இந்தத் தீமையை எமதூரிலிருந்து துடைத் தெரிவதற்கு எமது மக்களின் உள்ளத்தில் தைரியத்தை ஏற்படுத்துவாயாக.



பெண்களே!

பெண்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் கிடைத்த பொக்கிஷமாகும். இதனால் தான் “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள்!”

பெண்கள் செய்ய வேண்டியவை

எ ஒரு சில சில்லறை வியாபாரத்துக்காக சுருட்டு சுற்றும் நீங்கள் சமூகச் சீர்கேடுகளுக்கு ஓர் அடித்தளமாக இருக்க விரும்புகின்றீர்களா?

எ தூல் விற்பனை கடைகளில் பரவலாக இல்லை. ஆனால் உங்களுக்கு தெரியாமல்; உங்கள் கைத்தொழில் தான் தூல் பாவனையின் ஆரம்ப இடம் என்பதனால் உங்கள் கைத் தொழிலை மாற்றுங்கள்.

எ சுpகரட், பீடி, தூல் விற்கும் கடைகளை புறக்கனியுங்கள். ஆங்கு சாமான்கள் வாங்குவதை நிறுத்துங்கள்.
- கஹடோவிட இளைஞர் ஒன்றியம்.

8 comments:

அப்துல் said...

இவர்களது முயற்சிக்க அல்லாஹ் துணைநிப்பான் ஏனெனில் இது இஸ்லாத்தில் மிக கண்டிப்பாக தடுக்கப்பட்டுள்ள விடயங்கள். நேற்றைய தினம் அனைத்துப் பள்ளி வாயில்களும் இது சம்பந்தமாக குதுபா உரையை அமைத்துக்கொண்டதாக கேள்விப்பட்டேன். உண்மையில் மஸ்ஜித் நூர் பள்ளிவாயிலில் நடைபெற்ற ஜூம்ஆ உரையை கேட்டிருந்தால் ஊரில் சிகிரட் விக்கின்ற அந்த ஒரு சிலரும் கூட நிச்சயம் அல்லாஹ்விக்க பயந்து அதனை விட்டுவிடுவார்கள் என்பது எனது கருத்து.

Anonymous said...

நல்ல முயற்சி...
நம்மூரில் இவ்வளவு போ/பொருள் பாவனையா?
புள்ளிவிபரத்தைப் பார்க்கும் போது
அசல் விஜயகாந்த் படம் பார்த்தது போலிருக்கிறதே..

Anonymous said...

I like this. Vijeykanth toooooooooooo much.

Anonymous said...

நல்ல முயற்சி.. அல்லாஹ் இந்த முயற்சிக்கு நிச்சயம் இவர்களுக்கு கூலி வழங்கப் போதுமானவன். மற்றைய பள்ளிகளோடு ஒப்பிடுகையில் எமது பள்ளி இந்தவிடயத்தை கரிசனைகொள்ளவில்லை என்பது எனது நிலைப்பாடு. ஏனெனில் மற்ற இரண்டு பள்ளிகளிலும் போதைப் பாவனை சம்பந்தமாக குதுபா உரைகள் அமைந்த தாக மக்கள் கதைப்பதைக் கானமுடிந்தது.

brother said...

அஸ்ஸலாமு அழைக்கும்

உண்மையிலேயே ஒரு நல்ல முயற்சி இது தொடர்வதற்கான ஒத்துழைப்புக்களை ஊரில் உள்ள இளைய்ந்ஜர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய கட்டாயத்தேவை உள்ளது.

இவ்வாறான ஒரு முயற்சியை பாடசாலை மட்டத்திலும் ( கண்காட்சி, கருத்தரங்குகள் ) நடத்துவதாக அமைந்தால் நல்லதாக இருக்கும்

Anonymous said...

நல்ல முயற்சி. முஹியத்தீன் பள்ளியில் குத்பாவில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்ததை விட கந்தூரிச் சாப்பாட்டுக்க முக்கியத்துவம் கொடுத்தது கவலையாக உள்ளது. ஊருடன் ஒத்துப் போகாத பள்ளி...

Anonymous said...

நல்ல முயற்சி. முஹியத்தீன் பள்ளியில் குத்பாவில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்ததை விட கந்தூரிச் சாப்பாட்டுக்க முக்கியத்துவம் கொடுத்தது கவலையாக உள்ளது. ஊருடன் ஒத்துப் போகாத பள்ளி...

MOHAMED N NABEEL said...

whatever will be it will be good insha allah

Post a Comment