கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வெற்றிகரமாக நடைபெற்ற கஹட்டோவிடாவின் கூட்டு முயற்சி

இன்று கஹட்டோவிடா மற்றும் ஓகடபொளை பள்ளிவாசல்கள் இணைந்து நடாத்திய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி திரட்டல் மற்றும் கலவர நிகழ்வுகள் பற்றிய தெளிவு பெறல் சம்பந்தமான கூட்டம் அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளா் அஷ்ஷைக் அக்ரம் (நளீமி) அவா்கள் கலவரங்கள் பற்றிய நிகழ்வுகளை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அழகாக விளக்கிக் கூறினார். கலவரங்கள் ஏன் ஏற்படுத்தப்படுகின்றன, அவ்வாறான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் என்ன செய்யவேண்டும் போன்றவற்றை இஸ்லாமிய வரலாற்று  


நிகழ்வுகளுடனும் அல்குா்ஆனிய வசனங்களோடும் தொடா்புபடுத்தி அழகான ஒரு விளக்கத்தை வழங்கினார். 
மேலும் நிகழ்வின் இறுதியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நிதி திரட்டப்பட்டது. பதிக்கப்பட்ட பிரதேசத்தில் இரண்டு வீடுகளை திருத்திக் கொடுப்பதை இலக்காக் கொண்டே நிதி திரட்டப்பட்டது. அதற்காக ஏற்படும் மொத்த செலவு சுமார் 25 இலட்சங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் இந்நிதியை திரட்ட பலர் ஆர்வமுடன் தமது செல்வத்தால் ஸதகாக்களை வழங்கினா். ஐந்து இலட்சம் ரூபாய், இரண்டு இலட்சம் ரூபாய். ஐம்பது நாயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய் என்றுபெரிய தொகைகளை ஏராளமானோர் தந்துதவியுள்ளனா். அத்துடன் நிகழ்வில் பங்கேற்ற பெண்களும் தராளமான உதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் வல்ல அல்லாஹ் உதவிகள் வழங்கிய சகலருக்கும் அதற்கான கூலியை முழுமையாக வழங்குவானாக!

கஹட்டோவிடாவில் இன்று விஷேட கூட்டம் - பள்ளி வாசல்களின் கூட்டு முயற்சி

பேருவளை மற்றும் தா்கா நகர் பகுதிகளில் பௌத்த பயங்கரவாதிகளினால் தாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான உதவி வழங்கல் சம்பந்தமான விசேட கூட்டமொன்றை கஹட்டோவிட முஹியத்தீன் மஸ்ஜித், கஹட்டோவிட நூர் மஸ்ஜித், கஹட்டோவிட ஜாமிஉத் தௌஹீத் மஸ்ஜித் மற்றும் ஓகடபொளை பலாஹ் மஸ்ஜித் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இன்று 22.06.2014 மாலை 3.00 யமணிக்கு கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சகலரும் பங்கேற்று இம்மக்களுக்காக உதவி வழங்குவதும் எதிா்கால நடவடிக்கைகளும் பற்றி தங்களது மிகச்சிறந்த கருத்துக்களை வழங்குமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டிக் கொள்கிறது.


கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ இன் 8வது இரத்த தான முகாம்

கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ கிளையினால் .ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தான முகாம் எதிா்வரும் 2014.06.14ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை கஹட்டோவிடஅல்பத்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கடந்த வருடங்களைப் போல் இவ்வருடமும் பலர் இரத்ததானம் வழங்கவுள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.

80 வயதில் உங்களது முகத்தோற்றம் எவ்வாறு இருக்கும் : கூகுளின் அடுத்த புரட்சி

ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன.
 
 
 
வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். 
 
யாருடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தோம். ஆனால், இந்த ஆராய்ச்சி அந்த மாயையை உடைத்துவிட்டது. குழந்தையின் கண், மூக்கு, காது, உதடு போன்றவை எந்த வடிவத்தில் இருந்தால் அது காலப் போக்கில் மாறும். எந்த வடிவத்தில் இருந்தால் காலத்தால் மாறாதிருக்கும் என்ற பொது விதியை நாங்கள் கண்டறிந்து விட்டோம் என ஆய்வுக்குத் தலைமை ஏற்றிருக்கும் வோஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியை கெமல்மெசர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சிறு வயதுப் புகைப்படங்களை சேகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வயதிலும் ஒரே மாதிரியாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து வைத்திருப்பவர்களைத் தேடிப் பிடித்திருக்கிறார்கள்.
 
அந்தப் படங்களைத் துல்லியமாக ஆராய்ந்ததன் மூலம், ஒரு மனிதனின் முகத்தில் வயது ஏற்படுத்தும் மாற்றங்களை வரையறுக்க முடிந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கு வௌ;வேறு மாதிரி இருக்கும் என்பதும் தெளிவாகி இருந்திருக்கிறது.
அந்த இலக்கணங்களை கணினி கட்டளைகளாக்கித்தான் இந்த மென்பொருளை உருவாக்கியிருக்கிறோம். தற்போது இந்த மென்பொருளில் 6 வயதுப் பையனின் புகைப்படத்தை உள்ளீடு செய்தால், அவன் முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என்றெல்லாம் 30 விநாடிகளில் காட்டி விடுகிறது.
இதுவரை வயோதிப மாற்றங்களை இவ்வளவு துல்லியமாக எந்த மென்பொருளும் காட்டியதில்லை. எனப் பெருமிதம் கொள்கிறார் கெமல்மெசர்.
இந்த நம்பிக்கை இவர்களுக்கு தானாக வரவில்லை. இன்றைய வயோதிபர் ஒருவரின் சிறு வயது போட்டோவை இந்த மென்பொருளில் இட்டு சோதித்திருக்கிறார்கள். மென்பொருள் தந்த வயோதிக முடிவு சரியாக அந்தத் வயோதிபரின் சமீபத்திய போட்டோ போலவே இருந்திருக்கிறது.
மக்களின் இந்த ஆர்வம் தெரிந்துதான் இணையத்தின் இமயமான கூகுள் நிறுவனமும் இன்டெல் நிறுவனமும் இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்திருக்கின்றன. கூடிய சீக்கிரமே இது கூகுள் தேடுபொறியோடு இணைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரலாம்! இப்படியே வளர்ந்துகிட்டுப் போனா, இன்னும் 80 வருடத்தில் நம்ம உலகம் எப்படி இருக்கும்?

கடும் மழைகாரணமாக கஹட்டோவிட பிரதேசத்தில் வெள்ளம்



நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை 02.06.2014 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் தொடங்கிய பெரு மழை இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணிவரை தொடர்ந்து பெய்தது. இதனால் கஹட்டோவிட பஸ் தரிப்புப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இவ்வாறே ஓகடபொளை, உடுகொடை, திஹாரிய பிரதேசங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.

 

கை,கால்கள் கட்டப்பட்டு காட்டில் போடப்பட்ட பெண் நள்ளிரவில் மீட்பு!- ஹற்றனில் சம்பவம்

ஹற்றன் பிரதேசத்தில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் எழுதுவிளைஞராக பணியாற்றும் 37 வயதான பெண், கை, கால்கள் கட்டப்பட்டு நோர்வூட் பொலிஸ் பிரிவின் கோர்த்தி தோட்டத்தில் பாழடைந்த இடமொன்றில் போடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸார் நேற்றிரவு 11 மணியளவில் இந்த பெண்ணை மீட்டுள்ளதுடன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பத்திரிகையில் வெளியிடப்பட்ட மணமகன் தேவை என்ற விளம்பரத்தை அடுத்து 10 நாட்களாக இளைஞர் ஒருவர் இந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர், மதியம் ஹற்றன் நகருக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார்.

இதன்படி அந்த பெண் ஹற்றன் நகருக்கு சென்றிருந்தார். பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்த இளைஞர், பெண்ணை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்று, கை, கால்களை கட்டிவிட்டு பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து மீட்கப்பட்ட பெண் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், கால் கட்டை அவிழ்த்து கொண்ட பெண், அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்று சம்பவம் பற்றி தெரியப்படுத்தியதை அடுத்து, அவர்கள் சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை தான் இதற்கு முன்னர் கண்டதில்லை எனவும் ஹற்றன் பிரதேசத்தில் உள்ள முச்சக்கர வண்டியில் தன்னை அழைத்துச் சென்றதாகவும் அப்போது தனக்கு குடிப்பதற்கு மென்பானம் வழங்கப்பட்டதாகவும் அதனை அருந்திய பின்னர் தனக்கு என்ன நடந்தது என்பதை தான் அறியவில்லை எனவும் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

நோர்வூட் பொலிஸார் பெண்ணை மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பியுள்ளனர்.
இதற்கு முன்னர் கொழும்பில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் பெண்ணொருவர் ஹற்றன் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச அதிருப்தி எம்.பி.க்கள் ஜே.வி.பி.யுடன் பேச்சு

அரசின் போக்கு குறித்து விரக்தியுற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் எம்பி.க்கள் சிலர் புதிய கூட்டணியொன்றை அமைக்க ஜே.வி.பி.யுடன் பேச்சு நடத்தி வருவதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்பி   தெரிவித்தார்.
 
எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து இக்கூட்டணி அமைக்கப்படவுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மீது நம்பிக்கை வைக்க முடியாது எனக் கருதும் அரசின் அமைச்சர்கள் சிலரும் எம்பிக்கள் சிலரும் புதிய கூட்டணிக்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இப்பேச்சுக்கள் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாளை மறுதினம் நாடு திரும்பியதுடன் தொடர்ந்து இடம்பெறுமெனவும் விஜித ஹேரத் எம்பி தெரிவித்தார்.