கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வெற்றிகரமாக நடைபெற்ற கஹட்டோவிடாவின் கூட்டு முயற்சி

இன்று கஹட்டோவிடா மற்றும் ஓகடபொளை பள்ளிவாசல்கள் இணைந்து நடாத்திய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி திரட்டல் மற்றும் கலவர நிகழ்வுகள் பற்றிய தெளிவு பெறல் சம்பந்தமான கூட்டம் அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளா் அஷ்ஷைக் அக்ரம் (நளீமி) அவா்கள் கலவரங்கள் பற்றிய நிகழ்வுகளை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அழகாக விளக்கிக் கூறினார். கலவரங்கள் ஏன் ஏற்படுத்தப்படுகின்றன, அவ்வாறான சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் என்ன செய்யவேண்டும் போன்றவற்றை இஸ்லாமிய வரலாற்று  


நிகழ்வுகளுடனும் அல்குா்ஆனிய வசனங்களோடும் தொடா்புபடுத்தி அழகான ஒரு விளக்கத்தை வழங்கினார். 
மேலும் நிகழ்வின் இறுதியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நிதி திரட்டப்பட்டது. பதிக்கப்பட்ட பிரதேசத்தில் இரண்டு வீடுகளை திருத்திக் கொடுப்பதை இலக்காக் கொண்டே நிதி திரட்டப்பட்டது. அதற்காக ஏற்படும் மொத்த செலவு சுமார் 25 இலட்சங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் இந்நிதியை திரட்ட பலர் ஆர்வமுடன் தமது செல்வத்தால் ஸதகாக்களை வழங்கினா். ஐந்து இலட்சம் ரூபாய், இரண்டு இலட்சம் ரூபாய். ஐம்பது நாயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய் என்றுபெரிய தொகைகளை ஏராளமானோர் தந்துதவியுள்ளனா். அத்துடன் நிகழ்வில் பங்கேற்ற பெண்களும் தராளமான உதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் வல்ல அல்லாஹ் உதவிகள் வழங்கிய சகலருக்கும் அதற்கான கூலியை முழுமையாக வழங்குவானாக!

0 comments:

Post a Comment