கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அமைச்சர் பந்துலவுக்கு வாடகை, எரிபொருள் மரக்கறி இலவசமாக கிடைப்பதால் பிரச்சினை இல்லை

வங்கிகள் நிதி நிறுவனங்களில் நடைபெறும் நிதிப் பரிமாற்றங்களால் நாட்டின் பொருளாதாரம் உயர்வடையாது. மாறாக உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த இலக்கிற்கு செல்லவில்லை என்று சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குழியில் விழுந்தும் அரசாங்கத்தின் கண்கள் திறக்கவில்லையென்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரிகள் திருத்தச் சட்ட மூலப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வரிச் சட்ட திருத்தங்களுக்கு மேலதிகமாக திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்றைய விவாதத்தின் போதே முன் வைக்கப்படுகிறது.

இதனை எப்படி அவசர அவசரமாக ஆராய முடியும்? அரசாங்கம் தமக்கு தேவையானதை மூன்றிலிரண்டு பொரும்பான்மையை பயன்படுத்தி மேற்கொள்கிறது.நிதி ஆலோசனைக்குழுவில் திருத்தங்கள் மேலதிக திருத்தங்கள் தொடர்பாக பேசியிருக்கலாம். பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

அமைச்சர் பந்துல குணவர்தன வாழ ரூபா 7500 போது மென்கிறார். எமது தலைவிதி இவர் கல்வி அமைச்சராக இருக்கின்றார். சாகாமல் சாக முடியும் பொருளாதாரத்தை கற்பித்தவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சாகாமல் இருக்க வேண்டுமானால் நிர்வாணமாக இருக்கலாம். கல்வி கற்காமல் இருக்கலாம் முடி வெட்டாமல் இருக்கலாம் என்று அமைச்சர் பந்துல கூறலாம். அமைச்சர் பந்துலவுக்கு வாடகை, எரிபொருள் இலவசமாக பாராளுமன்றத்திலிருந்து கிடைக்கின்றது. பொருளாதார கேந்திர நிலையத்திற்கு சென்றால் அமைச்சருக்கு இலவசமாக மரக்கறி கிடைக்கும். எனவே அவருக்கு பிரச்சினையில்லை.

அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கேலிக்குரிய விடயத்திற்கு மேலதிகமாகச் சென்று கேலி விடயத்தை வெளியிட்டிருக்கின்றார் அமைச்சர் பந்துல. பத்திரிகைகளில் கார்ட்டூன்களில் இடம் பிடிப்பதற்காக அவ்வாறு கூறுகின்றார். உலக நாடுகளில் இன்று பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளது. வங்கிகளில் நிதி நிறுவனங்களில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுவதால் பொருளாதார அபிவிருத்தி உருவாகாது. கடந்த ஆண்டு எமது இறக்குமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது.

பணம் என்பது பொருட்களை பரிமாற்றம் செய்வதற்கு தவிர பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது. பணநோட்டுக்களை அச்சடித்து பொருளாதாரம் உயர்வடையாது. நிதிச் சந்தையில் பங்குச் சந்தையில் சூதாட்டம் நடத்துவதால் பயனில்லை. உற்பத்தித் துறையில் அபிவிருத்தி காண வேண்டும். கடந்த வருடம் மோட்டார் வாகனங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என அமைச்சருக்கு 1 மில்லியன் வழங்கப்படும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.

துறைமுகம் அமைக்கப்படுகின்றது, கப்பல்கள் இல்லை. மைதானங்கள் அமைக்கப்படுகிறது போட்டிகள் இல்லை. நெலும்பொக்குன அமைக்கப்படுகிறது நாடங்கள் இல்லை. நுரைச்சோலை அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது மின்சாரம் இல்லை.

அரசாங்கத்தின் திட்டங்களால் நன்மைகளும் இல்லை நாட்டுக்கு வருமானமும் இல்லை. குழியில் விழுவது மூளைக்கு நல்லது. ஆனால் அரசாங்கம் குழியில் விழுந்தும் மூளை வளரவில்லை என்றார்.
___

ஜனாஸா அறிவித்தல்

முஹியத்தீன்  ஜூம்மா பள்ளியின் முன்னால் கதீப் குலாம் முஹம்மத் அவர்களின் தாயார் நூருல் நாபிஹா அவர்கள் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியலவில் பேருவலை ஷெஹ்கு முஸ்தபா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன, அல் பத்ரியாவின் சிறந்த பெறு பேறாக 9 A ..

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளை http://www.doenets.lk/  எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவ, மாணவிகளில் சிறந்த பெறு பேறாக  ஒரு மாணவி 9 A (அதி விசெட சித்திகள்) பெற்றுள்ளதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.  

பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிய மறக்கவேண்டாம்?

எங்கே இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் உதிக்கின்ற வார்த்தைகளை இங்கே பதியவும.

பாலிகாவின் புதிய அதிபருக்கு மேலும் பல வாழ்த்துக்கள்.


நீங்கள் ஆரம்பக் கல்விகற்ற பாடசாலைக்கே அதிபராக வந்தீர்கள். உங்களது முதலாவது அதிபர் நியமணம், அதிலும் தகுதிபெற்ற அதிபராக எமது கிராமத்தின் முதல்பெண் அதிபர் என்ற வகையில் வாழ்த்துப்பெறுகிறீர்கள்.

சென்ற 10.03.2012 அன்றைய பொதுக்கூட்டத்தில் உங்களது ஆரம்ப உரையிலே ஆண், பெண் கலந்து படிப்பதால் நிலவுகின்ற விபரீதங்களை மிகத்தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்!

பெண்கள் கல்லூரிக்குப் பெண் அதிபர் என்ற வகையில் அதிலும் ஒரு இஸ்லாமியப் பெண் என்ற வகையில் பெண்களின் ஒழுக்கச்சீர்கேடுகள் பற்றியும் மார்க்க அடிப்படையில் எடுத்துச்சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

சமகாலத்தில் ஆண் பிள்ளைகளின் கல்வித்தரங்கள் குறைந்து பின்தங்கியிருக்கும் இன்றைய நிலைபற்றிப்பேசினீர்கள் வாழ்த்துக்கள். இங்கே ஆண்கள் வேராகவும், பெண்கள் வேராகவும் கற்பதால் ஆண்பிள்ளைகள் படித்துப் பல்கலைகழகங்கள் செல்லவும் இது வாய்ப்பாக அமைகின்றது என்றும் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

அதைவிடவும் 2012 டிஸம்பரில் முதன் முதலாக சாதாரன தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் இந்த புரட்சிகர பாலிகாவின் மாணவிகளுக்கு பாட நேரத்திற்கு ஆசிரியர்கள் இல்லாதபோது எந்தப் பாடமாயினும் சரி தன்னை வந்து அழைக்கும்படி சொன்னீர்களே. நீங்களல்லவோ அதிபர்!!! ஆம்.. அப்பாடசாலைக்கு நீங்கள் கடமைப்பட்டவர் என்பதை வெளிப்படையாக உணர்த்திக்காட்டினீர்கள். அதற்காகவும் வாழ்த்துக்கள்.

கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பாலிகா மகளிர்கல்லூரியான இப்பாடசாலை சொற்ப வளங்களைப் பெற்றபோதும் வலைய, மாகாண, மாவட்டங்களிலெல்லாம் முதல் தரத்தில் இருப்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இருப்பினும் ஒரு கூட்டம் மெல்லக்கற்றுக்கொண்டிருப்பதையும்  அவர்களை இணங்கன்டு அவர்களுக்கான உளவியல்ரீதியான சிகிச்சையளிக்கத்தான் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காகப் பெற்றோரினதும், மற்றோரினதும் ஒத்துழைப்பைக் கேட்டு முடித்தீர்கள். வாழ்த்துகள்.

உங்களொடு உங்களது ஆசிரியர் குலாமும், உங்களது புதிய நிர்வாகமும் உருதுணையாய் நின்று பாலிகாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அந்த O/L மாணவிகளுக்கு மேலும் பல படித்தரங்களைப் பெற்றுக்கொடுத்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்போடு வாழ்த்தி விடைபெறுகிறென்.
இறுதியாக ஒவ்வொறு வெற்றிக்கும் பின்னாலும் எங்கள் எல்லெருக்கும் சாபக்கோடாக அமைகின்ற ”நான் தான் என்ற” பெறுமை, ஆனவம்  இவற்றை மரந்துவிட்டு எல்லாவற்றுக்கும் பின்னால் அல்லாஹ்வின் உதவிதான் காரணம் என்ற உணர்வோடு செயற்படுங்கள்.
thanks and jazakallah for share with us this article.
blogeditor

தனிப்பட்ட விஜயமா உத்தியோகபூர்வ விஜயமா உறுதிப்படுத்தப்படவில்லை

M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையின் பிரபல அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற உலமாக்களான அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோர் நேற்று ஜெனிவா புறப்பட்டு சென்றுள்ளனர் ஆனால் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளாக சென்றுள்ளார்களா அல்லது அரபு தெரிந்த பிரபல உலமாக்கள் என்ற வகையில் சென்றுள்ளார்களா என்பதை ஜம்இய்யதுல் உலமாவால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியிருந்தது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உயர் பீட முக்கியஸ்தர்களை lankamuslim.org தொடர்பு கொண்டபோது அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோர் நேற்று ஜெனிவா புறப்பட்டு சென்றுள்ளதை அவர்கள் உறுதிபடுத்தினர். ஆனால் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளாக சென்றுள்ளார்களா அல்லது அரபு தெரிந்த பிரபல உலமாக்கள் என்ற வகையில் சென்றுள்ளார்களா என்பதை அவர்களினால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அரசியல் நடவடிக்கைகளில் , ஈடுபடாத அமைப்பாக இன்றுவரை செயல்பட்டு வந்துள்ளது என்பது அதன் வரலாறாகும் என்பது குறிப்பிடத்தக்கது.