கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தனிப்பட்ட விஜயமா உத்தியோகபூர்வ விஜயமா உறுதிப்படுத்தப்படவில்லை

M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையின் பிரபல அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற உலமாக்களான அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோர் நேற்று ஜெனிவா புறப்பட்டு சென்றுள்ளனர் ஆனால் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளாக சென்றுள்ளார்களா அல்லது அரபு தெரிந்த பிரபல உலமாக்கள் என்ற வகையில் சென்றுள்ளார்களா என்பதை ஜம்இய்யதுல் உலமாவால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியிருந்தது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உயர் பீட முக்கியஸ்தர்களை lankamuslim.org தொடர்பு கொண்டபோது அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும் அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோர் நேற்று ஜெனிவா புறப்பட்டு சென்றுள்ளதை அவர்கள் உறுதிபடுத்தினர். ஆனால் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளாக சென்றுள்ளார்களா அல்லது அரபு தெரிந்த பிரபல உலமாக்கள் என்ற வகையில் சென்றுள்ளார்களா என்பதை அவர்களினால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அரசியல் நடவடிக்கைகளில் , ஈடுபடாத அமைப்பாக இன்றுவரை செயல்பட்டு வந்துள்ளது என்பது அதன் வரலாறாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment