பாலிகாவின் புதிய அதிபருக்கு மேலும் பல வாழ்த்துக்கள்.
நீங்கள் ஆரம்பக் கல்விகற்ற பாடசாலைக்கே அதிபராக வந்தீர்கள். உங்களது முதலாவது அதிபர் நியமணம், அதிலும் தகுதிபெற்ற அதிபராக எமது கிராமத்தின் முதல்பெண் அதிபர் என்ற வகையில் வாழ்த்துப்பெறுகிறீர்கள்.
சென்ற 10.03.2012 அன்றைய பொதுக்கூட்டத்தில் உங்களது ஆரம்ப உரையிலே ஆண், பெண் கலந்து படிப்பதால் நிலவுகின்ற விபரீதங்களை மிகத்தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்!
பெண்கள் கல்லூரிக்குப் பெண் அதிபர் என்ற வகையில் அதிலும் ஒரு இஸ்லாமியப் பெண் என்ற வகையில் பெண்களின் ஒழுக்கச்சீர்கேடுகள் பற்றியும் மார்க்க அடிப்படையில் எடுத்துச்சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
சமகாலத்தில் ஆண் பிள்ளைகளின் கல்வித்தரங்கள் குறைந்து பின்தங்கியிருக்கும் இன்றைய நிலைபற்றிப்பேசினீர்கள் வாழ்த்துக்கள். இங்கே ஆண்கள் வேராகவும், பெண்கள் வேராகவும் கற்பதால் ஆண்பிள்ளைகள் படித்துப் பல்கலைகழகங்கள் செல்லவும் இது வாய்ப்பாக அமைகின்றது என்றும் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
அதைவிடவும் 2012 டிஸம்பரில் முதன் முதலாக சாதாரன தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் இந்த புரட்சிகர பாலிகாவின் மாணவிகளுக்கு பாட நேரத்திற்கு ஆசிரியர்கள் இல்லாதபோது எந்தப் பாடமாயினும் சரி தன்னை வந்து அழைக்கும்படி சொன்னீர்களே. நீங்களல்லவோ அதிபர்!!! ஆம்.. அப்பாடசாலைக்கு நீங்கள் கடமைப்பட்டவர் என்பதை வெளிப்படையாக உணர்த்திக்காட்டினீர்கள். அதற்காகவும் வாழ்த்துக்கள்.
கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பாலிகா மகளிர்கல்லூரியான இப்பாடசாலை சொற்ப வளங்களைப் பெற்றபோதும் வலைய, மாகாண, மாவட்டங்களிலெல்லாம் முதல் தரத்தில் இருப்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இருப்பினும் ஒரு கூட்டம் மெல்லக்கற்றுக்கொண்டிருப்பதையும் அவர்களை இணங்கன்டு அவர்களுக்கான உளவியல்ரீதியான சிகிச்சையளிக்கத்தான் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காகப் பெற்றோரினதும், மற்றோரினதும் ஒத்துழைப்பைக் கேட்டு முடித்தீர்கள். வாழ்த்துகள்.
உங்களொடு உங்களது ஆசிரியர் குலாமும், உங்களது புதிய நிர்வாகமும் உருதுணையாய் நின்று பாலிகாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அந்த O/L மாணவிகளுக்கு மேலும் பல படித்தரங்களைப் பெற்றுக்கொடுத்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்போடு வாழ்த்தி விடைபெறுகிறென்.
0 comments:
Post a Comment