கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அமைச்சர் பந்துலவுக்கு வாடகை, எரிபொருள் மரக்கறி இலவசமாக கிடைப்பதால் பிரச்சினை இல்லை

வங்கிகள் நிதி நிறுவனங்களில் நடைபெறும் நிதிப் பரிமாற்றங்களால் நாட்டின் பொருளாதாரம் உயர்வடையாது. மாறாக உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த இலக்கிற்கு செல்லவில்லை என்று சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குழியில் விழுந்தும் அரசாங்கத்தின் கண்கள் திறக்கவில்லையென்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரிகள் திருத்தச் சட்ட மூலப் பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வரிச் சட்ட திருத்தங்களுக்கு மேலதிகமாக திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்றைய விவாதத்தின் போதே முன் வைக்கப்படுகிறது.

இதனை எப்படி அவசர அவசரமாக ஆராய முடியும்? அரசாங்கம் தமக்கு தேவையானதை மூன்றிலிரண்டு பொரும்பான்மையை பயன்படுத்தி மேற்கொள்கிறது.நிதி ஆலோசனைக்குழுவில் திருத்தங்கள் மேலதிக திருத்தங்கள் தொடர்பாக பேசியிருக்கலாம். பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

அமைச்சர் பந்துல குணவர்தன வாழ ரூபா 7500 போது மென்கிறார். எமது தலைவிதி இவர் கல்வி அமைச்சராக இருக்கின்றார். சாகாமல் சாக முடியும் பொருளாதாரத்தை கற்பித்தவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சாகாமல் இருக்க வேண்டுமானால் நிர்வாணமாக இருக்கலாம். கல்வி கற்காமல் இருக்கலாம் முடி வெட்டாமல் இருக்கலாம் என்று அமைச்சர் பந்துல கூறலாம். அமைச்சர் பந்துலவுக்கு வாடகை, எரிபொருள் இலவசமாக பாராளுமன்றத்திலிருந்து கிடைக்கின்றது. பொருளாதார கேந்திர நிலையத்திற்கு சென்றால் அமைச்சருக்கு இலவசமாக மரக்கறி கிடைக்கும். எனவே அவருக்கு பிரச்சினையில்லை.

அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கேலிக்குரிய விடயத்திற்கு மேலதிகமாகச் சென்று கேலி விடயத்தை வெளியிட்டிருக்கின்றார் அமைச்சர் பந்துல. பத்திரிகைகளில் கார்ட்டூன்களில் இடம் பிடிப்பதற்காக அவ்வாறு கூறுகின்றார். உலக நாடுகளில் இன்று பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளது. வங்கிகளில் நிதி நிறுவனங்களில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுவதால் பொருளாதார அபிவிருத்தி உருவாகாது. கடந்த ஆண்டு எமது இறக்குமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது.

பணம் என்பது பொருட்களை பரிமாற்றம் செய்வதற்கு தவிர பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது. பணநோட்டுக்களை அச்சடித்து பொருளாதாரம் உயர்வடையாது. நிதிச் சந்தையில் பங்குச் சந்தையில் சூதாட்டம் நடத்துவதால் பயனில்லை. உற்பத்தித் துறையில் அபிவிருத்தி காண வேண்டும். கடந்த வருடம் மோட்டார் வாகனங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என அமைச்சருக்கு 1 மில்லியன் வழங்கப்படும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.

துறைமுகம் அமைக்கப்படுகின்றது, கப்பல்கள் இல்லை. மைதானங்கள் அமைக்கப்படுகிறது போட்டிகள் இல்லை. நெலும்பொக்குன அமைக்கப்படுகிறது நாடங்கள் இல்லை. நுரைச்சோலை அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது மின்சாரம் இல்லை.

அரசாங்கத்தின் திட்டங்களால் நன்மைகளும் இல்லை நாட்டுக்கு வருமானமும் இல்லை. குழியில் விழுவது மூளைக்கு நல்லது. ஆனால் அரசாங்கம் குழியில் விழுந்தும் மூளை வளரவில்லை என்றார்.
___

0 comments:

Post a Comment