கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நான்கு இஸ்லாமிய கல்விமான்களுக்கு பிரான்ஸுக்குள் நுழைய தடை


“துவேஷத்துக்கும் வன்முறைக்குமான அழைப்பு, பிரான்ஸ் குடியரசின் கோட்பாடுகளை மோசமான முறையில் பாதித்துள்ளனன்ற இஸ்லாமிய மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக பிரான்ஸுக்குச் செல்லவிருந்த நான்கு இஸ்லாமியக் கல்விமான்களுக்கு பிரான்ஸுக்குள் நுழைய பிரான்ஸ் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
பிரான்ஸிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் (UOIF) கூட்டத்துக்கு சுவிஸ் நாட்டின் புத்திஜீவியான கலாநிதி தாரிக் றமழான் அழைக்கப்பட்டுள்ளார். அவரின் வருகைக்கு பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் அலைன் ஜுப்பே மற்றும் உள்விவகார அமைச்சர் களாவ்ட் ஜுயீன்ட ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.
அக்ரிமா சப்ரி, அய்ட் பின் அப்துல்லாஹ் அல்-கர்னி, ஸப்வத் அல்-ஹிஜாஸி, அப்துல்லாஹ் பஸ்பர் ஆகிய நால்வருமே பிரான்ஸுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட இஸ்லாமிய கல்விமான்களாவர். ஆகையினால், கலாநிதி யூசுப் அல்-கர்ளாவி மற்றும் மஹ்மூத் அல்-மஸ்ரி ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்
ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை லீபோர்கட்டில் நடைபெறவுள்ள மாநாட்டில் இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொள்வதைத் தடைசெய்யுமாறு ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த மனிதர்களின் உரைகள் துவேஷத்தையும் வன்முறையையும் தூண்டுவதோடு, அவர்களின் அறிக்கைகள் குடியரசின் கோட்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்கின்றன. தற்போதைய நிலைமையில் அவை பொது ஒழுங்குக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவரது நிலைப்பாடுகளும் அறிக்கைகளும் குடியரசின் அக்கறைகளுக்கு எதிரானவையாக உள்ளன. அத்துடன் அவை பிரான்ஸிய முஸ்லிம்களுக்கு எந்தவொரு நன்மையையும் கொண்டுவரப்போவதில்லை“ எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment