கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியில் அல் பத்ரியா மஹாவித்தியாலயம் முதலிடம்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாராவாரம் ஒலிபரப்பாகிவரும் அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியில்


திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, மல்வானை அல் முபாரக் தேசியபாடசாலை, நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி, வத்தளை ஹுனுபிடியஸாஹிரா கல்லூரி, பூகொட குமாரிமுல்லை முஸ்லிம் வித்தியாலயம்,கல்எளிய அலிகார் மஹாவித்தியாலயம், கஹடோவிட்ட பத்ரியா மஹாவித்தியாலயம், நாம்புளுவ பாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலயம் மற்றும்உடுகொட அரபா வித்தியாலயம் ஆகிய 9 முஸ்லிம் பாடசாலைகள் கலந்துகொண்டன.

2 சுற்றுக்களாக நடந்த இப்போட்டிய நிகழ்ச்சியில் 1ம் சுற்றிலிருந்துமல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலை நேரடியாக 2ம் சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டதுடன்திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, பூகொடகுமாரிமுல்லை முஸ்லிம்வித்தியாலயம், நாம்புளுவ பாபுஸ்ஸலாம் மஹாவித்தியாலயம், கஹடோவிட்டபத்ரியா மஹா வித்தியாலயம் ஆகியபாடசாலைகள் முறையே உடுகொட அரபாவித்தியாலயம், கல்எளியஅலிகார் மஹா வித்தியாலயம், ஹுனுபிடிய ஸாஹிராகல்லூரி மற்றும்நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி ஆகியபாடசாலைகளை வெற்றிபெற்று 2ம் சுற்றுக்கு தெரிவாகின. 2ம் சுற்றின் 1வதுபோட்டியில் நாம்புளுவபாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலயம் மல்வானை அல்முபாரக் தேசியபாடசாலையை வெற்றி கொண்டதுடன் 2வது பேட்டியில் திஹாரியஅல்அஸ்ஹர் மத்திய கல்லூரி பூகொட குமாரிமுல்லைமுஸ்லிம்வித்தியாயத்தையும் வெற்றி கொண்டு இறுதிச் சுற்றுக்குமுன்னேறியது. கஹடோவிட பத்ரிய மஹா வித்தியாலயம் நேரடியாக இறுதிச்சுற்றுக்குதெரிவானது.

அன்மையில் மேல்மாகாண கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களுக்கான இறுதிச்சுற்றுப்போட்டி கொழும்பில் இடப்பெற்றதாகவும். எமது அல் பத்ரியா மஹாவித்தியாலம் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று முதலிடத்தைப் பெற்றதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.


0 comments:

Post a Comment