கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்

இன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும் தரப்பில் இருந்தும் தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்டுள்ளது: மஸ்ஜிதின் பாதுகாப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடனும் , பாதுகாப்பு செயலாளருடனும் போலீஸ் மா அதிபருடனு தொடர்பு கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் ஜூம்ஆ இடம்பெறாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் பள்ளி தாக்கப்பட்டுள்ளது அல் குர்ஆம் வீசி எறியப்பட்டுள்ளது.
பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் மஸ்ஜிதின் பாதுகாப்பு தொடர்பாக உயர் மட்டத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தார் அதேபோன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடனும் , பாதுகாப்பு செயலாளருடனும் போலீஸ் மா அதிபருடனும் இது தொடர்பாக பேசியிருந்தார் இருந்தும் பேரினவாதிகள் திட்டமிட்டபடி சம்பவம் நடைபெற்றுள்ளது .இது தொடர்பாக அமைச்சர்கள் என்ன சொல்லபோகிறார்கள் .
இது தொடபாக தம்புள்ள ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரும் சம்பவங்களை நேரில் மறைந்திருந்து அழுகையுடன் நேரில் பார்த்தவரும் மற்றும் சம்பவம் நடக்கும்போது 11 மணி தொடக்கம் 12.30 மணி வரை பள்ளியில் இருந்தவர்களில் மௌலவி ஒருவரும் ஆகிய இருவர் lankamuslim.org க்கு தெரிவித்த தகவல்களை உங்களுக்கு தருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயர்கள் தவிர்க்கப் பட்டுள்ளது .
மௌலவி: இன்று காலை 10: 30 மணியளவில் ஜும்ஆ தினம் என்பதால் சுமார் 50 பேர் பள்ளியில் இருந்தனர் காலை 11:00 மணியளவில் பெளத்த தேரர்கள் தலமையில் ஆயிரக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டபடி மஸ்ஜிதை முற்றுகையிட்டு உள் நுழைய முயன்றனர். அவர்களின் முதல் முயற்சி இராணுவத்தால் தடுக்கப்பட்டது இதை தொடர்ந்து தேரர்களின் பின்பக்க வழியால் பள்ளிக்குள் நுழைந்தது மிகவும் மோசமான சொல்லமுடியாத வார்தைகளிளால் இராணுவம் , போலீஸ் முன்னிலையில் கடுமையாக திட்டி கொண்டு பள்ளியின் உள்ள பக்க கதவுகளை தாக்கினர்.
பெளத்த தேரர்களில் சிலர் தமது காவி உடையை கழட்டி மோசமாக நடந்து கொண்டனர். இதனை இராணுவமும் பொலிசாரும் பார்த்துகொண்டு இருந்தனர். அவர்களை தடுக்க முற்படவில்லை இந்த நிலையில் பள்ளியின் மீது தொடந்து கற்கள் வீசப்பட்டது பள்ளியை நாங்கள் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தோம் சிலர் இபாதத்திலும் ஈடபட்டு இருந்தபோது நிலைமை மோசமானது பாதுகாப்பு அதிகாரிகள் எம்மிடம் வந்து பள்ளிக்கு எதுவும் நடக்காது பள்ளியில் இருந்து வெளியேறுமாறு கூறினர் நிலைமை மோசமடைய அவர்கள் ஒழுங்கு செய்த வலியின் மூலம் வெளியேறினோம் அதன்போது பாதுகாப்பு கருதி தொப்பியை கழட்டிவிட்டு செல்லுங்கள் என்று கூறினார் இது 11:00 மணி தொடக்கம் 12:00 வரை இடம்பெற்ற விடயம் இன்று ஜூம்ஆ தொழுகை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதத்க்கது.
ஜும்ஆ பள்ளி நிர்வாகி இதை தொடந்து தம்புள்ள ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் எம்மிடம் தெரிவித்த தகவலை தருகிறோம்:
தேரர்கள் பள்ளியில் முன்பகுதியில் வந்து மோசமாக நடந்து கொண்டிருந்தனர் போலீசார் எம்மை பள்ளிக்கு ஒன்றும் நடக்காது பள்ளியில் இருந்து வெளியேறுமாறு கோரினர் நாம் எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்டோம் அதற்கு அவர்கள் உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை பின்னர் பாதுகாப்பு தருவாதாக கூறினார் அதன்படி நாம் 12:30 அளவில் பள்ளியை விட்டு வெளியேறினோம் .
எங்களை வெளியேற்றிய பின்னர் நான் உட்பட எம்மில் சிலர் மறைந்து இருந்து நடப்பதை அவதானித்தோம் சுமார் 15 நிமிடங்கள் தேரர்கள் தலமையிலான ஆர்பாட்ட கார்களுக்கும் இராணுவ அதிகாரிகள் , போலீஸ் அதிகாரிகள் , AGA ஆகியோருக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது அதை தொடர்ந்து AGA உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியின் கதவுகளை ஆர்பாட்ட கார்களுக்கு திறந்து கொடுத்தனர் பள்ளிக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த அல் குர்ஆன் அலுமாரி உட்பட மின் விசிறிகள் , கதவுகள், தளபாடங்களை தாக்கினர் உடைத்தனர் அல் குர்ஆன்ங்களை வீசி எறிந்தனர் இவற்றை படமாகவும் வீடியோ வாகவும் எடுத்துள்ளனர். அதன்பின்னர் வெளியேறி சென்றனர் அவற்றை நான் மறைவான இடமொன்றில் இருந்து பார்த்துகொண்டிருந்தேன் .
அவர்கள் வெளியேறி சென்றபின்னர் பள்ளியின் தலைவர் பள்ளியை பார்க்க வந்தார் அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை சீல் வைகபட்டிள்ளது அது AGA யினால் வகைப்பட்டதாக இருக்கலாம் .
அதன் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் உடைந்த வற்றை மீளவும் சரிசெய்து வைக்கும் வேலையில் ஈடுபட்டனர். சேதமான மின்விசிறி உட்பட அனைத்தையும் எதுவம் நடக்காதது போன்று சரிசெய்து இடத்தையும் துப்பரவு செய்தனர். அதன் பின்னர் பள்ளி தலைவரை அழைத்து ஊடங்களுக்கு எதையும் நடகாத்தை போன்று வெறும் ஆர்ப்பாட்டம் நடனத்தை போன்ற தோரணையில் ஊடங்களுக்கு தெரிவிக்குமாறு கூறியதாக தெரிகிறது அவர் இதுவரை எந்த செய்தியையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்று தெரிகிறது .
தற்போது பள்ளி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது , முஸ்லிம் கடைகள் மூடப்பட்டுள்ளது அச்சமான சூழ்நிலை நிலவுகிறது கண்டிப்பாக முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக எமது இடத்துக்கு வரவேண்டும் நிலைமைகளை நேரில் பார்க்கவேண்டும் என்று வேண்டுகோளும் விடுகிறேன் இந்த செய்தியை முடியுமானவரை விரைவாக எடுத்து செல்லுங்கள் என்றும் எம்மிடம் தெரிவித்தார் .
அவரிடம் எமது செய்தியாளர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்டபட முஸ்லிம் அமைச்சர்கள் குழு ஒன்று கொழும்பில் இருந்து தம்புள்ளைக்கு செல்லவுள்ளது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஊடக செயலாளர் சில மணிகளுக்கு முன்னர் எமக்கு தெரிவித்திருந்த தகவலை தெரிவித்தார் .
1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாயில் 2002ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளன அதேவேளை இந்த பள்ளி சட்டவிரோதமானது என்று பிரதேச செயலாளர் தெரிவித்தாக செய்திகள் வெளிவந்துள்ளது . எதிர்வரும் திங்கள் கிழமை இது தொடர்பாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது .
தம்புள்ளை ஜூம்ஆ மஸ்ஜித் தாக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது முஸ்லிம் கடைகள் பூட்டப்பட்டுள்ளது இப்போது முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யபோகிறார்கள் என்பதை பாப்போம் ???

0 comments:

Post a Comment