கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தஸ்லீம் அப்பா அவர்கள் காலமானார்.



கஹடோவிடாவைச் சேர்ந்த  A.C.M. தஸ்லீம் அப்பா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்.

அன்னார் காலம் சென்ற பாதிமா ஸவ்தா அவர்களின் அன்புக் கணவரும். முஹிதீன், தக்ரீமா, ஸஹ்ருவான், ஜிப்ரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,  மருமகன்களான மர்ஹும் புகாரிமாமா, அல்ஹாஜ் ஜுனைத், மர்ஹும் அன்ஸார் ஆகியோரின் மாமநாரும் ஆவார்.

அனனாரின் ஜனாஸா இன்று ( 01.02.2014) பிற்பகல் 4.00 மணியளவில் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

அல்பத்ரியா நிர்வாகிகளுக்கும், எமது ஊர் இளைஞர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள். யார் கற்பிக்கவேண்டும்? யார் கற்றுக்கொள்ளவேண்டும்?



நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவாகள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்ட காலம் அவர்கள் மீது உருண்டு ஓடி விட்ட பொழுது, அவர்களின் இருதயங்கள் இறுகிப் போய் விட்டன. (இன்று) அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாகி விட்டிருக்கின்றனர். (அல் குர்ஆன்-57:16).
இளைஞர்கள்….
  • ”அதான்” க்குறிய கண்ணியத்தை கொடுப்பதற்காக விளையாட்டை நிறுத்திவிட்டு மைதானத்தில் கூட்டுத் தொழுகையை நடாத்தி காட்டுகிறார்கள்.
  • ஒவ்வொரு கழகத்திடம் இருந்தும் பணம் வசூலித்து அதன்மூலம் வெற்றி பெறுகின்ற அணிக்கு கிண்ணங்கள் வாங்கிக் கொடுப்பது ஒரு தெளிவான சூது என்ற அடிப்படையில் அதை தடுப்பதற்கு இளைஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள்.
  • போதைவஸ்தை எப்படி ஊரில் இருந்து ஒழிக்கலாம் என்று அலோசனை செய்கிறார்கள்.

வாலிபப் பருவம் ஒரு பேராபத்தான ஒரு பருவம் எனச் சிலர் கூறுகின்றனர். அவர்களது இக்கூற்று பிழையானது என்பதற்கு எமது ஊர் இளைஞர்களின் மேற்குறிப்பிட்ட நிதர்சன நிகழ்வுகள் சான்றாய் உள்ளன. இன்னும் அல்லாஹ்வின் நிழலை அன்று வேறு எந்த ஒரு நிழலும் இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் நிழல் கொடுக்கின்ற ஏழு பிரிவினரில் ஒருவராக இவர்களையும் ஆக்கிவைக்க அல்லாஹ் அருள்புரிவானாக.

மாணவர்களை வழிநடாத்தவேண்டிய முஸ்லிம் பாடசாலையின் நிலையைப் பாருங்கள்..
  • பாடசாலை ஒலிபெருக்கியில் படுபயங்கரமான ஆபாசப்பாடல்கள் எந்தவிதக் கூச்ச சுபாவமும் இல்லாமல் நளீமிகளும், இஸ்லாஹிகளும் முன்னிலையில் ஊரே கேட்கும் வன்னம் ஒலிபரப்புறார்கள். பாவம் பெற்றோர்களும், ஊர்மக்களும் அவர்களுடைய ஆதங்கத்தை ஊர் அறிய கொட்டித் திரிகிறார்கள்.
  • பள்ளிவாசலில் ஜமாத் தொழுகை நடத்துவதற்கு இமாம் சங்கடப்படுகிறார்.
  • மஃரிப் தொழுகைக்கான அதான் பள்ளிவாசல்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது அதனை பாடசாலை நிர்வாகம் Bபன் வாத்தியத்துடன் சங்கமிக்கச் செய்து விடையனுப்பிகரது.

மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)
எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ‘வீணான செய்திகள்என்பது  இசை கலந்த பாடலையே குறிக்கிறது.என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)

புத்திஜீவிகளையும், மார்;க்க அறிஞாகளையும் சிறந்த மனிதர்களையும் உருவாக்கிய வரலாறு எமது கஹட்டோவிடாவிற்கு உண்டு. எனினும் தற்போது வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, பாடசாலை முதல் ஆற்றங்கரை வரை பெருகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், ……. என்று பட்டியல் நீளுமளவுக்கு நமதூரினி பின்னடைவை எதிர்வு கூறும் காரணிகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக பாடசாலை சூழல்சமூக சூழல், வீட்டுச் சூழல், சிறந்த முன்மாதிரிகள் போன்றன பிரதான காரணிகளாகவிருக்கின்றன. தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியும், சீரழிந்த சினிமாவும் மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சிக்கு பெரும் பங்குவகிக்கின்றன. ஆசிரியர் பகுதியும் மானவர் பகுதியும் ஒழுங்குறவிருந்தாலேயே கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நடக்கும். ஒழுக்க வீழ்ச்சியை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமாயின் அவை உருவாகும் மூலத்தைக்கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்பது சான்றோர்களின் கருத்து.
 
ஜாஹிலியத்துடன் ஆரம்பித்து இடையில் உத்தியோகபுர்வமாக கிறாஅத்துடன் ஆரம்பிப்பதாக கூறி குர்ஆனையும் இழிவுபடுத்துகிறார்கள் துஆவுடன் முடிவடைந்து விட்டால் ஏதோ இஸ்லாமியப் பண்பாட்டையே நடைமுறைப்படுத்தி விட்டதாக நாம் மெச்சிக் கொள்வது முட்டாள்தனமாகும். முன்மாதிரியான கடமையுணர்வுள்ள ஆசிரியர் குழாம் செயலாற்ற முனைவார்களானால் அது மாற்றத்திற்கான விடிவெள்ளிகளை நம் வானில் புலரச் செய்யும். இல்லாது போனால் பாதாள உலகக் கும்பல்களையும் காடயர்களையும் பயிற்றவிகும் தளமாக அல்லது சமூக விரோதிகளின் உறைவிடமாக பாடசாலைகள் மாறிப் போவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும்.

அன்பான ஆசான்களே, பெற்றார்களே வளரும் பிஞ்சுகளிற்கு முதலில் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுங்கள். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கோசையைப் போன்று இஸ்லாமிய போதனைகளை ஆக்கவேண்டாம். அது விடயத்தில் நீங்கள் முன்மாதிரிகளாகவும் இருங்கள். இன்ஷா அல்லாஹ் அறிவிற் சிறந்த நல்லெழுக்கமுள்ள மாணவச் செல்வங்களைக் கொண்ட ஊரைக் காண்பீர்கள்.
ஒரு சமூகத்திலுள்ளவற்றை அவர்களாக மாற்றிக் கொள்ள முயலாவிட்டால் அல்லாஹ்வும் மாற்ற மாட்டான்
(அல் குர்ஆன்)
 
விளையாட்டுப்போட்டி யென்பது எமது ஊருக்குப் புதியவிடயமல் அல்ல பாலர்பாடசாலைகள், மதுரஸா மாணவர்கள், பாலிகா பாடசாலை இவைகள் பல சிறப்பான முன்மாதிரிகளை விட்டுசென்றுவிட்டன. விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளை சிறப்பாக வழிநடாத்த முடிந்த உங்களுக்கு அதில் இஸ்லாமிய வரம்புகளை முடியுமான அளவுபேணியிருக்கலாம்.  வழமைக்கு மாற்றமாக இம்முறை வளா்ந்த பெண்பிள்ளைகளுக்கான ஒரு சில போட்டி நிகழ்சிகள் பற்றி பலரும் பலவாறு கருத்துத் தெரிவிக்கின்றனர் அதில் மார்க்க வரம்புளை பேணியிருந்தமை பாராட்டப்படவேண்டியதே.

இவைதவிர்ந்து இம்முறை இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டது மிக சந்தோசமாக இருந்தை காணக்கூடியதாக இருந்தது. சினமாப்பாடல்கள் மற்றும் இசையுடன் கூடிய பாடல்கள் ஔிபரப்பியமை மார்க்கத்தில் எந்தளவுக்கு அங்கீகாரம் பெற்ற விடயம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் கூட அவர்களுடைய வீட்டில் இந்த சினிமாப் பாடல்களை சத்தமாக போடுவதற்கு வெற்க்கப்படும் சூழலில் மாணவர்களை வழிநடாத்தவேண்டிய பாடசாலை ஒலிபெருக்கியில் கீழ்தரமான சினிமாபாடல்களை ஒலிபரப்பப்பாட்டால் எப்படியிருக்கம். ஆரம்பகாலம் போலன்றி மார்க்க விடயத்தில் விளிப்புணர்வு ஏற்பட்டு வரும் இத்தருணத்தில் முன்மாதிரியான விளையாட்டுப்போட்டியாக நிகழ்வுகளாக இது அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனபது எமது கருத்து.




 

கொரியர்களையும் இஸ்லாம் விடவில்லை..! (வீடியோ இணைப்பு)


 
(சுவனப்பிரியன்)

இஸ்லாமிய கலாசாரமும் கொரிய கலாசாரமும் இரு வேறுபட்டவைகள். ஆனால் அந்த மக்களையும் இஸ்லாமிய கொள்கையானது தற்காலங்களில் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. 35000 கொரிய முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியலாக இஸ்லாத்தை கொண்டுள்ளார்கள். இது அல்லாமல் வெளி நாட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை தனியாக பல ஆயிரங்களைத் தாண்டும். 

கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜூம்ஆ பள்ளியைத்தான் இந்த காணொளியில் நாம் பார்க்கிறோம். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு கொரிய இளைஞன் எவ்வளவு அழகாக குர்ஆன் ஓதுவதையும் தொழுவதையும் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ராக் இசை, பாப் இசை, சினிமா, போதைப் பொருள் என்பதுதான் அங்குள்ள பெரும்பாலான இளைஞர்களின் பொழுதுபோக்கு. ஆனால் அவற்றிற்கு நேர் மாற்றமான இஸ்லாத்தை அந்த இளைஞனை தேர்ந்தெடுக்க வைத்தது எது? வாளா? அந்த இளைஞனை யாரும் சென்று இஸ்லாத்துக்கு வா என்று அழைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இறை நம்பிக்கையினால் இறை தேடலில் ஆரம்பித்து முடிவில் அந்த இளைஞனை அவனது தேடல் இஸ்லாத்தில் கொண்டு விட்டுள்ளது. 

ஆடம்பர உலகம்: அவசர உலகம: எங்கும் எந்திர மயம்: இது போன்ற சூழலில் மனித மனம் நிம்மதி தேடி அலைகிறது. அந்த தேடுதல்தான் பலரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வருகிறது. இது தான் உண்மை காரணமேயொழிய நம் நாட்டு இந்துத்வாவாதிகள் சொல்வது போல் வன்முறையால் வளர்ந்ததல்ல இந்த மார்க்கம். அந்த இளைஞனின் முகத்தைப் பாருங்கள். எந்த அளவு சாந்தமும் அமைதியும் தவழ்கிறது. 

காணொளியில் உள்ள பள்ளியில் ரமலானில் 300க்கும் அதிகமான நபர்கள் நோன்பு திறக்க பள்ளிக்கு வருவார்களாம். இந்நாட்டைச் சுற்றி இது வரை 11 பள்ளி வாசல்கள் உள்ளன. ஆனால் தினம் தினம் இஸ்லாத்தில் இணைவோர் அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த பள்ளிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு. கிறித்தவர்களும் பவுத்தர்களும் மட்டுமே கொண்ட இந்நாடு தற்போது இஸ்லாத்தையும் அரவணைத்துக் கொண்டுள்ளது. 

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது

இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை முஹம்மதே! நீர் காணும்போது

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'
 
-குர்ஆன் 30:110

அரிய பனிப்புயல் தெற்கு அமெரிக்காவை போட்டு தாக்கியது: 6 பேர் பலி


தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இதுவரை 6 பேர் பலியாகியுள்ளார்கள். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அனைவரும் இரவு முழுவதும் பள்ளியிலேயே காலம் கழிக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள பல மாகாணங்கள் போக்குவரத்தின்றி முடங்கிப்போனதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பனிக்கட்டி மற்றும் பனி மழையால் டெக்சாஸ், ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளை அப்பனிப்புயல் புரட்டி எடுத்தாக கூறப்படுகிறது. சாலையில் கார்களில் வந்தவர்கள் இப்பனிப்புயலில் சிக்கி கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்தவாறு சாலையில் பொழுதை கழித்துள்ளனர். மேலும் போக்குவரத்து தொடர்பாக 791 விபத்துகள் ஏற்பட்டதாகவும் ஆனால் அதன் காரணமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அட்லாண்டா மேயரான காசிம் ரீட் தெரிவித்துள்ளார்.

தங்களது முதல் பணியே சாலையில் சிக்கி பரிதவித்து வரும் வாகன உரிமையாளர்களை உடனடியாக மீட்டெடுப்பதே என்று அவர் கூறியுள்ளார். இப்புயலில் சிக்கி அட்லாண்டாவில் ஐந்து பேரும் ஜார்ஜியாவில் ஒருவரும் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அட்லாண்டாவுக்கும், ஹவுஸ்டனுக்கும் இடையேயான 1000 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் காவல்துறையினர் மிகுந்த துணிச்சலுடன் விபத்தில் சிக்கியவர்களையும், புயலால் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டெடுத்து வருகின்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

A National Guardsman prepared to tow a car in Dunwoody, Georgia, on 29 January 2014 A National Guardsman prepared to tow a car in Dunwoody, Georgia

People rest in the aisle of a Publix grocery store after being stranded due to a snow storm in Atlanta, Georgia, on 29 January 2014 People sheltered in an Atlanta grocery store during a snow storm

A vehicle ran off the road during a snow storm in Canton, Georgia, on 28 January 2014  Hundreds of accidents were reported as snow and ice descended on the Deep South

A man stood on a frozen roadway along Interstate 75 in Macon, Georgia, on 29 January 2014 There were extreme traffic delays along roads in Georgia

Traffic inched along an Atlanta, Georgia, interstate on 28 January 2014 Gridlock in Atlanta, Georgia

A good Samaritan walked along a highway in Atlanta, Georgia, offering peanut butter and jelly sandwiches and hot drinks to motorists on 29 January 2014 A Good Samaritan offers peanut butter and jelly sandwiches and hot drinks to stranded Atlanta motorists

A student played an electronic game at Oak Mountain Intermediate school in Indian Springs, Alabama, on 29 January 2014 Roughly 80 children and 20 adults were instructed to shelter at an Alabama school on Tuesday evening due to a winter storm

Motorists abandoned their vehicles along Georgia Highway 140 in Canton, Georgia, on 28 January 2014 Motorists were forced to abandon their vehicles along a Georgia highway

அல்பத்ரியா மஹாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நாளை


2014ஆம் வருடத்திற்கான கஹட்டோவிட அல்பத்ரியா மஹா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நாளை 30.01.2014ஆம் திகதி மாலை 2.00 மணியிலிருந்து பாடசாலையின் மைதானத்தில் நடைபற ஏற்பாடாகியுள்ளது. வழமைபோன்று சம்ஸ், கமா் மற்றும் நஜ்ம் இல்லங்கள் களத்தில் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. வழமைக்கு மாற்றமாக இம்முறை வளா்ந்த பெண்பிள்ளைகளுக்கான ஒரு சில போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி
நஜ்ம் இல்லம் 323 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திலும்
சம்ஸ் இல்லம் 310 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும்,
கமா் இல்லம் 301 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றது.

இல்லங்களிற்கு இடையிலான புள்ளி வித்தியாசங்கள் பாரியளவில் காணப்படாமையும் போட்டி நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெறுவதை காட்டுகிறது.

மொத்தமாக 105 போட்டிகளைக் கொண்ட இவ்விளையாட்டுப் போட்டியில் 90 போட்டிகள் நிறைவுபெற்றுள்ளதுடன்  எஞ்சிய  15 போட்டிகள் இறுதிநாளாகிய நாளை நடைபெறவுள்ளது.

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

மழைக்காடுகள்

வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.
மேலே சொன்ன சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர்.
 
அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். சில இடங்களில் அதன் அகலம் சுமார் 150 மைல்கள். அதாவது 190 கி.மீ. மலைக்க வைக்கும் விஸ்தாரம் கொண்ட இந்த நதிக்கு, ‘நதிக் கடல்’ என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. கப்பல் போக்குவரத்தின் பொழுது எழும் அலைகளால் பக்கவாட்டு கரைப்பகுதி பாதிக்கப்படுவதால், வருடத்திற்கு வருடம் இந்த நதியின் அகலம் சுமார் 6 அடி கூடிக் கொண்டே போகிறதாம். 1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1500 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. ஆனால் நீளத்தில் ‘நைல்’ நதிக்குதான் முதலிடம் (மழைக்காலங்களில் அமேசானின் நீளம் நைல் நதியை விட சுமார் 100 கி.மீ. அதிகமாகும்).
அமேசான்
ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது. இந்த நதிக்கரையில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நதியின் ஊடாகப் வலைப் பரவலாய் பரவி நின்று, அந்த வழியாகச் செல்லும் படகுகளைக் கவிழ்க்கும் வல்லமை பெற்றவை. எனவேதான் இந்நதிக்கு, ‘படகுகளை அழிக்க வல்லவன்’ என்ற அர்த்தத்தில் அமேசான் என அங்கு வாழும் மக்கள் தங்களது மொழியில் பெயர் சூட்டியுள்ளனர்.
 
AmazonMilk frogஉலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன. எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர். இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர். இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.
 
காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.
ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர். ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர். அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவைத் தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.
 
Anacondaஉலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
 
அமேசான் நதியில் டால்பின் வகைகள் உட்பட சுமார் 3 ஆயிரம் மீன் வகைகள் உள்ளன. இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீனைப் பற்றி இங்கே கூறியே ஆக வேண்டும். காரணம் இது ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது. இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.
தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன. அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம். ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு. அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வாலியா ஹம்சா என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது. நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார். எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.
 
இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன. இந்த மாதம்கூட புதுவகை டால்பின் (Inia araguaiaensis) ஒன்றினை ஆய்வாளர்கள் அமேசான் நதியில் கண்டுபிடித்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dolphin
 
- சிம்ம வாகனி

அஜத் மன்னப்பெரும அவர்களின் சான்றுதல் வழங்கும் வைபவம் பலாத்காரமாக இடைநிருத்தம்.


பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப் பெரும அவர்களின் நிதி ஒதிக்கீட்டின் கீழ் கஹடோவிட பிரதேச மாதர்களுக்காக இலவசமாக நடாத்தப்பட்ட 3 மாத தையல் வகுப்பை புர்த்திசெய்தவர்களுக்கான கண்காட்சியும், சான்றிதல் வழங்கும் வைபவமும் 26.01.2014 ஆம் திகதி அன்று கஹடோவிட  பாலிகா மகளிர்  வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இவ்விழாவை  நடாத்துவதற்கு ஊரிலுள்ள சில அரசியல் காமுகர்களால் தடைகள் ஏற்படுத்தப்பட்டது . மட்டுமின்றி இச்சான்றிதல் வழங்கும் வைபவம் பாடசாலையில் நடந்தால் கல்லுாரி அதிபரை இடமாற்றம் செய்வதாகவும்,  அத்தோடு இந்த இலவச தையல் வகுப்பை முன்னின்று நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளித் தலைவரினுடைய குடும்ப உறுப்பினர்களையும் தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்வதாகவும் மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக ஊரில் ஆங்காங்கே  மக்கள் கருத்துப் பரிமாறுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

எனவே ஊருக்கு ஒரு நலவு நடக்கும் போது அதை அரசியல் ரீதியாக   தொடர்புபடுத்தி செய்யவிடாமல்   தடுப்பது மிகவும் முட்டாள்தனமானதும்  வெறுக்கத்தக்கதுமான ஒரு செயலாகும் ஆகவே  ஊர்   மக்களே இத்தகைய பண்பாடற்ற செயல்களை செய்யக்கூடிய மடையர்களை நீங்களும் இனங்கண்டு கொள்ளுங்கள்.  இனிமேலாவது இவர்களது விடயத்தில் சிந்நித்து செயற்படுங்கள்.

தகவல் வழங்கிய சகோதரருக்கு நன்றி -ஜதாகுமுல்லாஹ்

அமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வாறு வீழ்த்தப் படுகிறார் !


     'இஸ்லாம் அல்லாத அனைத்தும் தாகூத்தின் வழி வருபவை .தாகூத்திடம் இருந்து வருகின்ற யாவும் ஜாஹிலீயத் ஆனவை ' என்பது இமாம் இப்னு தைமியா (ரஹ் ) உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இமாம்களினதும் ஏகோபித்த முடிவு . தூய சலபி இமாமான அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) முதல் ஜிஹாதிய சலப் கமாண்டர் கத்தாப் வரை இந்த நிலைப்பாட்டில் இருந்து இறுதிவரை மாறுபடாமல் அவரவர் வழியில் போராடியவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . ஆனால் இத்தகு தூய சிந்தனையை தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்தின் நிலங்களில் சிலுவை வீரர்களை கால் பதிக்க வைத்து தமது முடியாட்சியை காக்க நிணைக்கும் மன்னரிசத்துக்கு சோடை போன நியோ சலபிகள் நிச்சயமாக இனம் காட்டப் பட வேண்டியவர்கள் .
 
                 கொக்கையும் நீர்க்காகத்தையும் இனம் காண்பது இலகுவானது போலவே , இந்த தூய சலபிகளையும் , நியோ சலபிகளையும் இலகுவாக இன்று  அறிந்து கொள்ள முடியும் . அது தாகூத்களோடு முரண்பட்டு அதை எதிர்க்கத துணியும் சலபிகளை தூய சலபிகள்;தாகூத்களோடு உறவாடுவதை சொல்லால் ,செயலால் , அங்கீகாரத்தால் ஏற்றல் அல்லது ஏற்பவர்களோடு ஒத்துப் போபவர்கள் நியோ சலபிகள் எனலாம் . ஆனால் இங்கு நான் குறிப்பிடும் விடயம் ஒரு தூய சலபி அமெரிக்கன் அஜெண்டாவுக்குள் கொண்டு வரப்பட்ட துரோக வரலாறு பற்றியதே ஆகும் .அவர் ஷேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) . விமர்சனங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் இருந்து பார்க்கும் நிலையில் ஒரு இஸ்லாமிய பற்றாளர் .
 
              கண் பார்வை புலப்படாத இவரை வைத்து வடிகட்டிய C I A தனத்தில் அந்த மகா துரோகத்தை 1990 களில் சவூதி மன்னராக இருந்த 'பஹ்த் ' செய்து முடிக்கிறார் . (அப்போது இன்றைய சவூதியின் உளவுப் பிரிவுத் தலைவர் பந்தர் பின் சுல்தான் அமெரிக்கன் அம்பாசிடர் !!)திட்டமிட்ட காட்சிகளில் வில்லன் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் . அவரின் குவைத் ஆக்கிரமிப்பில் இருந்து அந்த விறுவிறுப்பான காட்சிகள் நகர்த்தப் படுகின்றன .
 
          தமது முடிகாக்க அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய சிலுவை இராணுவ பூட்சுகளை புனித மண்ணில் பதிக்க வேண்டும் . அதுவும் எல்லா சலபி முதவாக்களையும் சுருட்டிப் போடும் ஒரு வலிமை மிக்க 
சேக் ஒருவரால் அது வெளியிடப்பட வேண்டும் . அந்த நபரும் தேர்ந்தெடுக்கப் பட்டார்  . அன்று சவூதி உலமா கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஷேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) அவர்கள்தான் அது .கண்பார்வை தெரியாத இவரது பலவீனம் அமெரிக்காவுக்கும் அதன் கௌரவ நண்பனான சவூதி மன்னர் 'பஹ்த்' இற்கும் நன்றாகவே பயன்பாட்டுப் போனது . 
           சதாமின் நகர்வுகளுக்கு பின்னால் உள்ள C I A சூத்திரங்கள் பற்றி அறியாத அரபிகள் SONY டீவியிலும் அகாய் டெக்கிலும் அராபிய சப் டைடிலோடு ஹோலிவூட் ,பொலிவூட் படங்களை ரசித்துக் கொண்டிருக்க மறுபக்கம் சற்று உலக ஆர்வம் மிக்கவர்களும் CNN தரும் சூடான செய்திகளை கூலான பெப்சி கோலாவை குடித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார்கள் . அந்த பிரமாண்டத்தில் சதாம் ஆப்ரஹா போலவும் !! அவரது படைகள் ஏதோ யானைகள் போலவும் அபாபீல்களுக்கு பதிலாக அமெரிக்ககூட்டு  படைகளின் தேவையும் பற்றி மீடியாக்கள் பிளந்து கட்டின .
 
       கண்பார்வை தெரியாத பின் பாஸ் (ரஹ் ) அவர்களின் அகக் கண்ணுக்கும் காட்டப்பட்ட காட்சிகள் இதுதான் . இந்த இடத்தில மன்னர் பஹ்த் புனிதத் தளங்களின் காவலனாக தன்னை காட்டி குவைத் ஊடாக சதாமின் படைகள் சவூதியை ஆக்கிரமிக்க வருவதாக கூறுகிறார் . அதற்கு பதில் அளிக்கும் சேக் பின் பாஸ் (ரஹ் ) 'புனித பூமியை அண்ட விடாமல் சதாமின் படைகளை அடித்து விரட்ட சொல்கிறார் '.அவரது இந்த பதிலில் ஒரு கொடிய சூழலில் சிக்கப்போகும் 'ஹரத்தை' மீட்கும் ஆர்வம் தெரிந்தது . மன்னர் பஹ்த் இன் முதல் இலக்கு ஓகே ஆகிப்போக , இரண்டாம் இலக்கு முன்வைக்கப் படுகிறது . சதாமின் படையை எதிர்க்க எமக்கு பலம் போதாது எமக்கு உதவ அமெரிக்கா முன்வருகிறது பயன்படுத்தலாமா !? கஆபாவையும் அதன் புனித நிலையையும் காக்கும் ஆர்வம் சேக் அவர்களை அதற்கும் ஒத்துக் கொள்ள வைக்க விடயம் எழுத்து வடிவில் ஏற்கனவே தயாரிக்கப் பட்டிருக்க சேக்அவர்களின் முதன்மை மாணவரால் சரிபார்க்கப்பட விடயம் அப்துல்லாஹ் பின் பாசின் (ரஹ் ) தீர்ப்பாக வெளிவருகிறது . 
 
                மன்னர் பஹ்த் அல்ஹம்துலில்லாஹ் சொல்ல ! அன்றைய அமெரிக்க ஜனாதிபதி' புஷ்' ஜீசஸ் கிரேட் என்று கூற இஸ்ரேலில் யூத இராணுவத்தின் கையில் இருந்த M16 ரைபில்கள் பட்டாசு கொளுத்தின ! தயார் படுத்தி வைக்கப்பட்ட அமெரிக்க இராணுவக் கூட்டு சவூதியை தளமாக்கி தமது நிகழ்கால எதிர்கால இலக்குகளுக்காக வந்து இறங்கத் தொடங்கியது . சூழ்நிலையின் விபரீதத்தையும் சேக் அவர்கள் ஏமாற்றப் பட்டதையும் அவரோடு நெருக்கமாக இருந்த மாணவர் குலாம் தெளிவு படுத்த வெகுண்டு எழுந்தார்   சேக் அப்துல்லாஹ் பின் பாஸ்  (ரஹ் ) . அதன் பின் நடந்த கதையில் தான் நியோ சலபிகளின் பக்கா வடிவம் புரியத் தொடங்கியது . இன்ஷா அல்லாஹ் அது இன்னொரு பதிவில் .
 
ஹந்தக்களம்

'நீதிமன்றில் அரங்கேறிய துன்பியல் நாடகம்'




சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண்ணின் நான்கு வயது இளம்பிள்ளையொன்று தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமானபோது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நான்குவயது சிறுவனின் பெற்றோர் இருவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒன்பது வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களின் மேன்முறையீடு தொடர்பாக இப்பிள்ளையின் தாய் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்கு கொண்டு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது தானும் தாயுடன் போகப்போவதாக அந்த சிறுவன் கதறியழதொடங்கினான்.

அச்சிறுவனை சமாதானப்படுத்துவதற்கு உறவினர்கள் முயன்ற போதிலும் அவனது அழுகை அதிகரித்ததோடு தாயிடம் ஓடிப்போகவும் முயன்றான்.

இது துன்பியல் நாடகத்தின் காட்சியொன்றுபோல இருந்தது. அவனது அழுகையும் தாயின் பாசத்திற்கான ஏக்கமும் நீதிமன்ற வளாகத்திலிருந்த சிறை அதிகாரிகள் உட்பட அங்கிருந்த சகலரது இதயத்தையும் தொட்டது.

இந்த பிரச்சினையின் மனிதாபிமான பக்கத்தை கருதில்கொண்ட சிறையதிகாரிகள் அந்த பிள்ளையை தாய் தூக்கி அரவணைத்து ஆறுதல் கூறுவதற்கு அனுமதித்தனர்.

பின்னர் ஒருவாறு தாய் மகனை பிரித்து கைதியான தாயை சிறைச்சாலை வாகனத்தில் அதிகாரிகள் ஏற்றிச்சென்றனர்.

லக்மால் சூரியகொட

“அமெரிக்கா என் தலையில் துப்பாக்கி குண்டு செலுத்த ஆர்வமாக உள்ளது” -ஸ்னோடன்

“முடிந்தால் என்னை கொன்று பார்க்கட்டுமே”
“முடிந்தால் என்னை கொன்று பார்க்கட்டுமே”

அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டுவரும் எட்வார்ட் ஸ்னோடன், “அமெரிக்கா எனது உயிருக்கு குறிவைத்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். “ஆனால், அதற்காக நான் பயப்படவில்லை. இரவுகளில் நிம்மதியாகவே தூங்குகிறேன்” என்றும் கூறுகிறார் அவர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெர்மன் டி.வி. சேனல் ARD-யில் எட்வார்ட் ஸ்னோடனின் பேட்டி ஒளிபரப்பாகியது. அதில்தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அவர்.
“எனது உயிருக்கு குறிவைக்க அமெரிக்காவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. ‘அவர்கள்’, முக்கிய உயரதிகாரிகள். என்னுடைய தலையில் துப்பாக்கி குண்டு ஒன்றை செலுத்த வேண்டும் என்பதில் அதீத ஆர்வத்துடன் உள்ளார்கள்.

அல்லது, நான் வெளியே போகும்போது சிறிய ஊசி முனை விஷம் எனது உடலில் சேர்க்கப்பட்டால், நான் உயிரிழப்பதை காண்பதில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. தினமும் நிம்மதியாக தூங்குகிறேன். காரணம், நான் செய்த காரியம் (அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டது) சரியான காரியம்தான் என்றே நம்புகிறேன். அவர்களால் முடிந்தால், என்னை கொன்றுவிட்டு போகட்டும்” என்றார் அந்த பேட்டியில் ஸ்னோடன்.

இதே ARD ஜெர்மன் டி.வி. சேனலில் முன்பு வழங்கிய பேட்டி ஒன்றில்தான் எட்வார்ட் ஸ்னோடன், ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மாக்ரல், மற்றும் டாப் ஜெர்மன் உயரதிகாரிகளை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தார். அதையடுத்து, ஜெர்மனிக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உயர் மட்டத்தில் ராஜதந்திர இழுபறிகள் ஏற்பட்டன.

அவை இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான், ARD ஜெர்மன் டி.வி. சேனல், எட்வார்ட் ஸ்னோடனின் புதிய பேட்டி ஒன்றை நேற்று ஒளிபரப்பியிருக்கிறது.
மாஸ்கோ ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்த பேட்டி ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ள டி.வி. சேனல், “மொத்தம் 6 மணி நேர பேட்டி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அதில் 40 நிமிடங்களை மட்டும் ஒளிபரப்புகிறோம்” என்ற அறிவிப்புடன் இந்த பேட்டியை ஒளிபரப்பியது!
ஓகோ.. அப்படியா விஷயம்? மீதி 5 மணி, 20 நிமிடங்களுக்கு என்ன சொல்லியிருக்கிறார் ஸ்னோடன்? பேட்டியில் ஸ்னோடன் அடுத்த வெடிகுண்டை தூக்கி போட்டிருந்தால், ‘உரிய நேரத்தில்’ ஒளிபரப்பாகுமா?

Computer இல் இருந்து Bluetooth மூலம் Call எடுப்பது எப்படி?

Computer இல் Phone ஒன்றை Bluetooth மூலம் இணைத்து, Call எடுப்பது மற்றும் Answer பன்னுவது எப்படி? என்று இந்த பதிவின் ஊடாக இன்று பாா்பபோம்.இது எல்லா வகையான Phone இற்கும் பொருந்தும். நான் Nokia மற்றும் China ஆகிய 2 Phone களையும் செய்து பாா்த்தேன், நன்றாக வேலை செய்கிறது.

உங்களுடைய Phone இலும் Computer இலும் Bluetooth ஐ ON பன்னிவிட்டு கீழ் உள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்.

Start >> Control Panel >> Devices and Printers என்பதை Open செய்யுங்கள்.
Add a device

 உங்களுடைய Phone ஐ தொிவு செய்துவிட்டு Next (நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயா்தான் தொியும்)

123 என கொடுங்கள் (நீங்கள் விரும்பியதை கொடுக்க முடியும்)
அடுத்து, உங்களுடைய Phone இல் ஒரு செய்தி தோன்றும் அதற்கு "Yes" கொடுத்துவிட்டு , மேலே கொடுத்த நம்பரை கொடுங்கள்.

Install செய்யும் வரை காத்திருங்கள்...
இப்போது உங்களுடைய Phone, Computer இல் இணைக்கப்பட்டடு, நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயாில் இருக்கும்.அதை Open செய்து, கீழுக்கு வாருங்கள்.
Bluetooth Headset Voice Gateway  எனும் இடத்தில் "Make a call to this number" என்பதற்கு நீங்கள் Call எடுக்க வேண்டிய Number ஐ கொடுத்து "Call" என்பதை Click செய்தால் போதும் உடனே அந்த நம்பருக்கு Call போக ஆரம்பித்துவிடும்.
இனி Computer இருந்து கொண்டே, விரும்பிய நம்பருக்கு அழைப்புக்களை மேற்கொள்ளவும்,வரும் அழைப்புக்கு பதில் சொல்லவும் முடியும்.
ஆனால் ,  வரும் அழைப்பு யாாிடம் இருந்து வருகிறது என்று தொியாது (நம்பரை மட்டும்தான் காட்டுகிறது பெயரை காட்டுகிறது இல்லை)
நீங்கள் Nokia Phone பாவிப்பவராக இருந்தால் (எனக்கு தொிந்த வகையில்) Nokia Pc Suite ஐ உங்கள் Computer இல் Install செய்தால் , யாாிடம் இருந்து Call வருகிறது என்று தொிந்து கொள்ள முடியும்.


அறிவின் உச்சக்கட்டம்
 

சிரிமக்களுக்கா இறைவனிடம் கையேந்துங்கள் இஸ்லாமிய நெஞ்சங்களே! (இளகிய மனமுள்ளவர்கள் இந்த நிழல்படங்களைப் பார்க்கவேண்டாம் )

Starved, tortured then throttled: The true horror of how Assad’s soldiers execute rebel prisoners is revealed in new images

  • WARNING: GRAPHIC CONTENT
  • A second cache of photos of victims of torture has been released
  • Taken by man tasked with 'recording deaths in custody' by Syrian regime
  • Total of 55,000 photos which lawyers say are evidence of extreme torture
  • Could be used to bring charges of war crimes against Bashar al-Assad
More photographs showing the maimed bodies of alleged victims of ‘systematic killings’ in Syrian prisons have been released today.
The second cache of photos paints an even clearer image of the horrendous conditions and gruesome torture in government-run jails in Syria.
The images, some of the 55,000 leaked by a witness ‘tasked with recording deaths in custody’, were taken between 2011 and 2013.
WARNING: GRAPHIC CONTENT
Shocking: A second set of pictures from the 55,000 photograph dossier showing alleged victims of torture and systematic killings in government-run prisons in Syria has been released
Shocking: A second set of pictures from the 55,000 photograph dossier showing alleged victims of torture and systematic killings in government-run prisons in Syria has been released
Murder: The corpses are said to all be members of rebel forces who have been kept in Syrian jail by al-Assad's military police
Murder: The corpses are said to all be members of rebel forces who have been kept in Syrian jail by al-Assad's military police
When the first photographs were released earlier this week, they were described as 'clear evidence' of crimes against humanity by a team of war crimes prosecutors.
They show emaciated corpses with strangulation marks, cuts, bruising and signs of electrocution – evidence of extreme torture, claim investigators. Some victims are shown to have had their eyes removed.
The photographer served as a military police officer for 13 years, and was assigned the duty of documenting the dead bodies brought to the military hospitals controlled by the Syrian regime during the civil war.
The person who leaked the photographs says he was a part of the Syrian military police for 13 years and it was his job to photograph dead bodies brought to military hospitals from government jails 
The person who leaked the photographs says he was a part of the Syrian military police for 13 years and it was his job to photograph dead bodies brought to military hospitals from government jails
Proof of war crimes: The photos were all taken during the Syrian civil war, between 2011 and 2013, and smuggled out of the country
Proof of war crimes: The photos were all taken during the Syrian civil war, between 2011 and 2013, and smuggled out of the country
Stomach turning: The bodies are all lined up, side by side, before their injuries are documented, allegedly by Syrian government forces 
Stomach turning: The bodies are all lined up, side by side, before their injuries are documented, allegedly by Syrian government forces
True evil: This horrific photo shows a man who shirt is covered in blood, with a rusty chain embedded into his stomach 
True evil: This horrific photo shows a man who shirt is covered in blood, with a rusty chain embedded into his stomach
 
The bodies depicted in the photographs are all said to be members of rebel groups killed in detention under torture and starvation.
They show handwritten notes by on the faces and the bodies of the corpses, and allegedly used by the Syrian army as the records of death sentence enforcements, carried out systematically in government-run prisons.
On Tuesday Foreign Secretary William Hague, as well as the U.S. government, condemned the crimes shown in the photographs, and demanded that the perpetrators be brought to justice.
Mr Hague described the images as 'compelling and horrific', and said: 'It is important those who have perpetrated these crimes are one day held to account.'
A spokesman from the U.S. State Department said: 'These reports suggest widespread and apparently systematic violations by the regime. These most recent images ... are extremely disturbing. They're horrible to look at.'
The initial 31-page report was commissioned by Carter-Ruck solicitors in London on behalf of the Qatari government, which supports the Syrian uprising.
It was released as peace talks began in Switzerland on Wednesday to try to end the three-year conflict.
 

இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினை - ஜெனீவாவில் முறையிடும் கனவு தகர்ந்தது..!



நாளை (25)ஆம் திகதி  மீண்டும் சர்வதேச வை.எம்.எம். ஏ அசௌம்பிலியின் தலைவர் அஸ்ரப் ஹூசைனின்  கொழும்பு 7 ரெஸ்மிட்பிளேசில்  உள்ள அவரது இல்லத்தில் முஸ்லீம்கள் பற்றிய கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

கடந்த வாரம் அஸ்ரப் ஹூசைனின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை முஸ்லீம்களது பிரச்சினைகளை பற்றி ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்பிடம் முறையிடுவது மற்றும் 5 தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இச்செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

இச்செய்தியுடன் பாதுகாப்பு அமைச்சின் முஸ்லீம் அதிகாரி  ஒருவர்  அஸ்ரப் ஹூசைனை தேடி வந்திருந்தார். இப் பிரச்சினையை உள்ளுரிலேயே பாதுகாப்புச் செயலாளர் ஊடாக நாம் தீர்த்துக் கொள்ள முடியும்,  ஏன் ஜெனிவாவுக்குச் கொண்டு செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.  உங்களது பிரச்சினைகள்  பற்றிய விபரங்களை தறுமாறும் அஸ்ரப் ஹூசைனிடம் பணித்திருந்தார்.

அதற்கமைவாகவே  பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியும் மற்றும் முஸ்லீம் அதிகாரியும் இன்று சனிக்கிமை பி.பகல 04.00 மணிக்கு அஸ்ரப் ஹூசைன் இல்லத்தல் சந்திக்கின்றனர். அதற்காக சர்வதேச வை.எம்.எம். ஏ அசௌம்பிலியின் உறுப்பினர்கள் ஒன்று கூடி, முஸ்லீம்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சம்பவங்கள் பற்றியும் தாம் சேகரித்த சகல தகவல்களையும்  கையளிப்பார்கள். இவ் அறிக்கை பாதுகாப்புச் செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
 
(அஸ்ரப் ஏ சமத்)

அமைச்சர் றிசாத் ஈரானுக்கே சென்றார் இஸ்ரேலுக்கு செல்லவில்லை



கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக  ஆங்கிலப் பத்திரிகையான ஜலண்ட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதாக பிரசுரமான செய்தி தொடர்பில் விளக்கமொன்றை அளிப்பது  பொருத்தமாகும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரானுக்கே சென்றார். அவர் இஸ்ரேலுக்கு செல்லவில்லை. இந்த செய்தி தொடர்பில் ஜலண்ட் பத்திரிகையின் பிரதம ஆசிரியருடன் தொடர்பு கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்து வெளியான செய்தியின் சரியான தகவல்களை அவருக்கு தெரிவித்தோம்.
 
அதனடிப்படையில் அந்த செய்தி தொடர்பில் இம்மாதம் 23 ஆம் திகதி பிழைத்திருத்தத்தை அப்பத்திரிகை பிரசுரித்துள்ளது. அதில் அமைச்சர் இஸ்ரேலுக்கு செல்லவில்லை ஈரானுக்கே சென்றார் என்று குறிப்பிட்டுள்ளதை வாசகர்களின் கவனத்திற்கு தருகின்றோம்.
 
எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத்
இணைப்பு செயலாளர்
கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரின்

பிராய்லர் கடை வைத்திருக்கும் சகோதர்களிடம் சொல்லுங்கள்

பிராய்லர் கடை வைத்திருக்கும் சகோதர்களிடம் சொல்லுங்கள் 
!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பொதுவாக பிராய்லர் கடைகளுக்கு கோழியை லாரி மூலம் இரவு நேரங்களில் தான் சப்ளை செய்கின்றனர் ! அவ்வாறு இரவு நேரங்களில் வரும் கோழியை கடைக்கு வெளியில் வைத்துவிட்டு செல்வதும் உண்டு ..பிறகு மழையிலும் , பணியிலும் அது இருப்பது ஒரு கொடுமை !

காலையில் அறுக்கப்படும் கோழிதானே என்று அதற்க்கு தண்ணி உணவு வைப்பதில் கூட அலட்சியம் ஒரு கொடுமை !

பிறகு கோழிகளை அறுத்து மற்ற கோழிகளின் கண் முன்னே அதை துடிக்க போடுவது ஒரு கொடுமை !

அறுப்பதிலாவது சரியான கத்தியை கொண்டு இலகுவாக அதன் உயிர் பிரியுமாறு செய்கிறார்களா என்றால் அதுவும் அதிக நேரம் போராடி உயிர்பிரியும்படி அலட்சியம் காட்டுவது ஒரு கொடுமை !  

இவ்வளவு சிரமப்பட்டுத்தான் நமக்கு அது இறைச்சியாக கிடைகிறது ... இறைச்சிக்கு தடை இல்லை ...ஆனால் அதை எளிமை படுத்துங்கள் ! திருப்தியான முறையில் அதற்குரிய கடமைகளை செய்து உயிர் பிரிய செய்யுங்கள் ! 

" (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். " ( புகாரி 6013 )

பூனையை நோவினை செய்ததால் நரகத்தில் புகும் பெண் ....பார்க்க ( புகாரி 2365,  http://www.tamililquran.com/bukharidisp.php?start=2365 )

நாயிக்கு நீர் புகட்டியதால் பாவம் மன்னிக்கப்பட்ட மனிதர் .....பார்க்க ( புகாரி 2363, http://www.tamililquran.com/bukharidisp.php?start=2363 )


பொதுவாக பிராய்லர் கடைகளுக்கு கோழியை லாரி மூலம் இரவு நேரங்களில் தான் சப்ளை செய்கின்றனர் ! அவ்வாறு இரவு நேரங்களில் வரும் கோழியை கடைக்கு வெளியில் வைத்துவிட்டு செல்வதும் உண்டு ..பிறகு மழையிலும் , பணியிலும் அது இருப்பது ஒரு கொடுமை !...


காலையில் அறுக்கப்படும் கோழிதானே என்று அதற்க்கு தண்ணி உணவு வைப்பதில் கூட அலட்சியம் ஒரு கொடுமை !

பிறகு கோழிகளை அறுத்து மற்ற கோழிகளின் கண் முன்னே அதை துடிக்க போடுவது ஒரு கொடுமை !

அறுப்பதிலாவது சரியான கத்தியை கொண்டு இலகுவாக அதன் உயிர் பிரியுமாறு செய்கிறார்களா என்றால் அதுவும் அதிக நேரம் போராடி உயிர்பிரியும்படி அலட்சியம் காட்டுவது ஒரு கொடுமை !

இவ்வளவு சிரமப்பட்டுத்தான் நமக்கு அது இறைச்சியாக கிடைகிறது ... இறைச்சிக்கு தடை இல்லை ...ஆனால் அதை எளிமை படுத்துங்கள் ! திருப்தியான முறையில் அதற்குரிய கடமைகளை செய்து உயிர் பிரிய செய்யுங்கள் !

" (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். " ( புகாரி 6013 )

(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் - 'நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை" என்று அல்லாஹ் கூறினான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ( புகாரி 2365)

ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.  ( புகாரி 2363)
(முகநூல்) நாகூர் மீரான்

சற்றுமுன்னர் நிட்டம்புவ சந்தியில் லொறியொன்று விபத்துக்குள்ளாகியது அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம்.