ஹெம்மாதகம பெரிய பள்ளிக்கு சென்ற பெளத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் !
மாவனல்லை ஹெம்மாதகம பிரதேசத்தின் பெரிய பள்ளி வாசலுக்கு சென்ற பெளத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் . குறித்த மஸ்ஜித்தில் சிங்கள பௌத்தர்களை பொருட்களை கொடுத்து இஸ்லாத்துக்கு எடுப்பதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்கள் பின்னர் அவர்களின் உறவினர்களிடம் சென்று உறவினர்களையும் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்து மஸ்ஜித் நிர்வாகத்துடன் பேசவேண்டும் என்று தெரிவித்து அங்கு சென்றுள்ளனர் .
இது தொடர்பாக ஹெம்மாதகம பெரிய பள்ளி நிர்வாக உறுப்பினர் ஹில்மி ஹாஜியார் தெரிவிக்கும்போது மூன்று நாட்களுக்கு முன்னர் ஐந்து பெளத்த தேரர்கள் மற்றும் சிங்கள வாலிபர்கள் அடங்கிய குழுவினர் மூன்று முச்சக்கர வண்டிகளில் இரவு 9:30 மணியளவில் ஹெம்மாதகம பெரிய ஜும்ஆ பள்ளி வாசலுக்கு வந்தனர் .
அங்கு ஜமாத்தில் வந்து மஸ்ஜித்தில் தங்கியருந்த மாணவர்களிடம் பள்ளி நிர்வாகத்துடன் பேசவேண்டும் என்று கூறியுள்ளனர் அங்கிருந்த மாணவர்களும் வந்த பெளத்த தேரர்களை கதிரைகளை போட்டு அமரச்செய்துள்ளனர் . இதற்கு இடையில் குறித்த குழுவினர் பள்ளிக்கு வந்திருக்கும் தகவல் பொலிசாருக்கும் , பிரதேச அரசியல்வாதிகளுக்கும் அறிவிக்கப்பட்டது , பள்ளி நிர்வாகமும் அங்கு செல்ல எஸ் .பி தலைமயிலான பொலிசாரும் அங்கு வந்து விட்டனர். பிரதேசத்தின் முஸ்லிம் வாலிபர்களும் கூடிவிட்டனர் .
வந்தவர்களுடன் நாம் பேசினோம் , அவர்களை மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருக்கும் மண்டபம் ஒன்றுக்கு அழைத்தோம் அவர்கள் வந்தன் நோக்கம் இந்த பகுதியில் தமது மேலாதிக்கத்தை காட்டும் நோக்கத்தில் இருந்திருக்கலாம் ஆனாலும் அவர்களை நாம் கண்ணியமாக நடாத்தினோம் , அதிகாமான முஸ்லிம் வாலிபர்களும் மஸ்ஜிதில் கூடிவிட்டனர் .
வந்தவர்கள் எமது மஸ்ஜித்தில் சிங்கள பௌத்தர்களை பொருட்களை கொடுத்து இஸ்லாத்துக்கு எடுப்பதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்கள் பின்னர் அவர்களின் உறவினர்களிடம் சென்று உறவினர்களையும் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் பொலிசார் தலையிட்டு அவர்களை நாளை காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறும் அங்கு இது தொடர்பாக் பேசலாம் என்றும் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர் .
அடுத்த நாள் காலை அவர்கள் பொலிஸ் நிலையம் சென்று பேசியுள்ளனர் . அவர்களின் குற்றச்சாட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றை பின்னணியாக கொண்டது.என்பது தெரியவருகிறது . இந்த பள்ளியில் எவரையும் நாங்கள் ( பலவந்தமாக ,பொருட்கள் மீது ஆசை காட்டி ) இஸ்லாத்துக்கு எடுக்க வில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளோம் .
வந்த பெளத்த பிக்குவில் ஒருவர் தெவனகல சம்பவத்துடன் தொடர்பான பிக்கு , இருந்தும் நாம் கண்ணியமாக நடந்து கொண்டோம் . பொலிசார் உடனடியாக இடத்துக்கு வந்தனர் நியாயமாக நடந்து கொண்டனர்.
பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்க சென்ற சிங்கள பெண் !
பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்க சென்ற சிங்கள பெண் !
அதேவேளை நேற்று குருநாகல் மல்சிறிபுர பிரதேசத்தில் இருந்து வருவதாக தெரிவித்து இரு சிங்கள பெண்கள் எமது பள்ளிக்கு வந்தனர் அவர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார் . இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தோம் அவர்கள் அவர்களை விசாரித்தார்கள் . அதன் பின்னர் அது பற்றிய அறிய முடியவில்லை . நேற்றைய இந்த சம்பவத்தையும் மற்றைய சம்பவ பின்னணியுடன் பார்த்தோம் அதன்காரணமாக பொலிசாருக்கு அறிவித்தோம் .
இது தொடர்பாக விமர்சங்கள் எழுத்துள்ளது , இஸ்லாத்தை ஏற்றுகொள்ள போவதாக வந்தவர்களின் உள்ளங்களை நாம் திறந்து பார்க்க முடியாது அவர்கள் உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளும் நோக்கில் வந்திருக்கலாம் என்றும் இல்லை அவர்கள் எம்மை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கில் அனுப்பப் பட்டிருக்கலாம் என்றும் இரு கருத்துக்கள் முன்வைக்கப் பட்டுள்ளது .இது வரை மேற்படி சம்பவங்கள் நடந்து முடித்துள்ளது .
இஸ்லாத்தை ஏற்றக வருவோரை எப்படி அணுகுவது ACJU வழிகாட்ட வேண்டும் !
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா இஸ்லாத்தை விரும்பி ஏற்க வருபவர்களை நாட்டில் உள்ள மஸ்ஜிதுக்கல் இப்படிதான் செயல்படவேண்டும் என்ற பொதுவான வழிகாட்டி ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும் என்றும் ஹில்மி ஹாஜியார் வேண்டுகோள் முன்வைத்தார் .
M.ரிஸ்னி முஹம்மட்:
இஸ்லாத்தை ஏற்றக வருவோரை எப்படி அணுகுவது ACJU வழிகாட்ட வேண்டும் !
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா இஸ்லாத்தை விரும்பி ஏற்க வருபவர்களை நாட்டில் உள்ள மஸ்ஜிதுக்கல் இப்படிதான் செயல்படவேண்டும் என்ற பொதுவான வழிகாட்டி ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும் என்றும் ஹில்மி ஹாஜியார் வேண்டுகோள் முன்வைத்தார் .
M.ரிஸ்னி முஹம்மட்:
0 comments:
Post a Comment