பிராய்லர் கடை வைத்திருக்கும் சகோதர்களிடம் சொல்லுங்கள்
பொதுவாக பிராய்லர் கடைகளுக்கு கோழியை லாரி மூலம் இரவு நேரங்களில் தான் சப்ளை செய்கின்றனர் ! அவ்வாறு இரவு நேரங்களில் வரும் கோழியை கடைக்கு வெளியில் வைத்துவிட்டு செல்வதும் உண்டு ..பிறகு மழையிலும் , பணியிலும் அது இருப்பது ஒரு கொடுமை !...
காலையில் அறுக்கப்படும் கோழிதானே என்று அதற்க்கு தண்ணி உணவு வைப்பதில் கூட அலட்சியம் ஒரு கொடுமை !
பிறகு கோழிகளை அறுத்து மற்ற கோழிகளின் கண் முன்னே அதை துடிக்க போடுவது ஒரு கொடுமை !
அறுப்பதிலாவது சரியான கத்தியை கொண்டு இலகுவாக அதன் உயிர் பிரியுமாறு செய்கிறார்களா என்றால் அதுவும் அதிக நேரம் போராடி உயிர்பிரியும்படி அலட்சியம் காட்டுவது ஒரு கொடுமை !
இவ்வளவு சிரமப்பட்டுத்தான் நமக்கு அது இறைச்சியாக கிடைகிறது ... இறைச்சிக்கு தடை இல்லை ...ஆனால் அதை எளிமை படுத்துங்கள் ! திருப்தியான முறையில் அதற்குரிய கடமைகளை செய்து உயிர் பிரிய செய்யுங்கள் !
" (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். " ( புகாரி 6013 )
(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் - 'நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை" என்று அல்லாஹ் கூறினான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ( புகாரி 2365)
ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்" என்று கூறினார்கள். ( புகாரி 2363)
(முகநூல்) நாகூர் மீரான்
0 comments:
Post a Comment