கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

“அமெரிக்கா என் தலையில் துப்பாக்கி குண்டு செலுத்த ஆர்வமாக உள்ளது” -ஸ்னோடன்

“முடிந்தால் என்னை கொன்று பார்க்கட்டுமே”
“முடிந்தால் என்னை கொன்று பார்க்கட்டுமே”

அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டுவரும் எட்வார்ட் ஸ்னோடன், “அமெரிக்கா எனது உயிருக்கு குறிவைத்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். “ஆனால், அதற்காக நான் பயப்படவில்லை. இரவுகளில் நிம்மதியாகவே தூங்குகிறேன்” என்றும் கூறுகிறார் அவர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெர்மன் டி.வி. சேனல் ARD-யில் எட்வார்ட் ஸ்னோடனின் பேட்டி ஒளிபரப்பாகியது. அதில்தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அவர்.
“எனது உயிருக்கு குறிவைக்க அமெரிக்காவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. ‘அவர்கள்’, முக்கிய உயரதிகாரிகள். என்னுடைய தலையில் துப்பாக்கி குண்டு ஒன்றை செலுத்த வேண்டும் என்பதில் அதீத ஆர்வத்துடன் உள்ளார்கள்.

அல்லது, நான் வெளியே போகும்போது சிறிய ஊசி முனை விஷம் எனது உடலில் சேர்க்கப்பட்டால், நான் உயிரிழப்பதை காண்பதில் விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. தினமும் நிம்மதியாக தூங்குகிறேன். காரணம், நான் செய்த காரியம் (அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டது) சரியான காரியம்தான் என்றே நம்புகிறேன். அவர்களால் முடிந்தால், என்னை கொன்றுவிட்டு போகட்டும்” என்றார் அந்த பேட்டியில் ஸ்னோடன்.

இதே ARD ஜெர்மன் டி.வி. சேனலில் முன்பு வழங்கிய பேட்டி ஒன்றில்தான் எட்வார்ட் ஸ்னோடன், ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மாக்ரல், மற்றும் டாப் ஜெர்மன் உயரதிகாரிகளை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தார். அதையடுத்து, ஜெர்மனிக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உயர் மட்டத்தில் ராஜதந்திர இழுபறிகள் ஏற்பட்டன.

அவை இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான், ARD ஜெர்மன் டி.வி. சேனல், எட்வார்ட் ஸ்னோடனின் புதிய பேட்டி ஒன்றை நேற்று ஒளிபரப்பியிருக்கிறது.
மாஸ்கோ ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்த பேட்டி ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ள டி.வி. சேனல், “மொத்தம் 6 மணி நேர பேட்டி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அதில் 40 நிமிடங்களை மட்டும் ஒளிபரப்புகிறோம்” என்ற அறிவிப்புடன் இந்த பேட்டியை ஒளிபரப்பியது!
ஓகோ.. அப்படியா விஷயம்? மீதி 5 மணி, 20 நிமிடங்களுக்கு என்ன சொல்லியிருக்கிறார் ஸ்னோடன்? பேட்டியில் ஸ்னோடன் அடுத்த வெடிகுண்டை தூக்கி போட்டிருந்தால், ‘உரிய நேரத்தில்’ ஒளிபரப்பாகுமா?

0 comments:

Post a Comment