கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

விண்டோஸ் 7 நிறுவ USB பிளாஷ் டிரைவ்வை வடிவமைத்தல்

விண்டோஸ் 7 நிறுவ USB பிளாஷ்இன்றைய பதிவில் USB பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்தி எவ்வாறு விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டத்தை கணணியில் நிறுவுவது என்று பார்ப்போம். USB பிளாஷ் டிரைவ்வை பயன்படுத்திவிண்டோஸ் 7 நிறுவது என்பது DVD யில் இருந்து விண்டோஸ் 7யை நிறுவதற்கு சமமானது.பல வசதிகளை பயன்படுத்தி எவ்வாறு Bootable USBடிரைவ் உருவாக்கி அதனுள் விண்டோஸ் 7யை நகலடுப்பது என்று இப்போது கவனிப்போம். 
குறிப்பு : விண்டோஸ் 7 யை சேமிக்க குறைந்த பட்சம் 4 GB கொள்ளளவு கொண்ட USB டிரைவ் தேவை

Windows 7 USB/DVD Download Tool
உங்களிடம் விண்டோஸ் 7 உடைய ISO இமேஜ் (Image) கோப்பு இருந்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச வசதியினை பயன்படுத்தி இலகுவாகவும் விரைவாகவும் உங்களுடைய USB பிளாஷ் டிரைவ்வினுள் இமேஜ் யை பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்தினால் .NET Framework 2.0மற்றும் Microsoft Image Mastering API v2 என்ற இரு மென்பொருட்களும் தேவைப்படும். இவற்றை கிழே உள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Download Windows 7 USB/DVD Download Tool
Download WinToFlash
முதலில் உங்களது USB பிளாஷ் டிரைவ்வை NTFS ஆக Format செய்து கொள்ளுங்கள். 

இப்பொழுது நேரடியாகவே செய்முறைக்கு செல்வோம், விண்டோஸ் 7 ISO கோப்பு உள்ள இடத்தை கொடுங்கள் அதோடு கிழே உள்ள "Next" யை கிளிக் செய்து தொடருங்கள். 

பின்னர் USB டிரைவ்வை தெரிவு செய்யுங்கள், இங்கே உள்ள மேலதிக தெரிவை உபயோகித்து உங்களுக்கு தேவை என்றால் ISO கோப்பை DVD யாகவும் burnசெய்துகொள்ளலாம். 

அதை தொடர்ந்து குறித்த USB டிரைவ்வை தெரிவு செய்து, "Begin Copying" என்பதை அழுத்துங்கள் 

இப்போது டிரைவ் Format செய்யப்பட்டு கோப்புக்கள் அனைத்தும் USB டிரைவ்வினுள் சேமிக்கும் செயன்முறைகள் முடியும் வரைக்கும் காத்திருக்கவும். 

அதை தொடர்ந்து செயற்பாடுகள் முடிந்த பிற்பாடு USB டிரைவ்வினுள் விண்டோஸ் நிறுவதற்கு தேவையான அனைத்து கோப்புக்களும் அங்கே காணப்படும். இனி நீங்கள் USB டிரைவ்வில் இருந்து பூட் செய்து விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுதல் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். 

WinToFlash
விண்டோஸ் 7 நிறுவதல் இறுவட்டில் உள்ள கோப்புக்களை USB டிரைவ்வுக்கு பரிமாற்றிக்கொள்ள இது இன்னுமொரு சிறந்த வசதி. இப்பொழுது நேரடியாகவேWizard செய்முறைக்கு செல்வோம் , விண்டோஸ் 7 யை USB இருந்து நிறுவதற்கு தயாராகுங்கள். 

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் வித்தியாசமமான அட்வான்ஸ் அம்சங்களையும்,வேறு பட்ட விண்டோஸ் பதிப்புக்களையும் இது வழங்குகின்றது. 

அடுத்து விண்டோஸ் நிறுவுதல் இறுவட்டின் இடத்தையும் பரிமாற்ற போகும் USB டிரைவ் இடத்தையும் கொடுக்க வேண்டும். இங்கே DVD டிரைவ் E: யாகவும் USB டிரைவ்F: ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் செய்முறை வேகத்தை அதிகரிக்க உங்களது Anti வைரஸ்யை மூட சொல்லி வேண்டுகோள் இடப்படும் அனால் கணணியில் MSE வேலை செய்வதால் வேகத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படாது. 

அடுத்து, நீங்கள் 7 விண்டோஸ் EULA வுக்கு இணங்க வேண்டும், அதோடு "Continue" யை அழுத்துங்கள். 

இப்போது டிரைவ் Format செய்யப்பட்டு கோப்புக்கள் அனைத்தும் USB டிரைவ்வினுள் சேமிக்கும் செயன்முறைகள் முடியும் வரைக்கும் காத்திருக்கவும். 

முடிந்தது, இனி இனி நீங்கள் USB டிரைவ்வில் இருந்து பூட் செய்து எந்த கணணியிலும் விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவுதல் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். 

இறுதியாக இந்த இரு மென்பொருட்களில் எது உங்களுக்கு சிறந்தது என தெரிவு செய்து விண்டோஸ் 7 நிறுத்தல் கோப்புக்களை USB பிளாஷ் டிரைவ்வுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
 
http://mcaf.ee/hkwpe

0 comments:

Post a Comment