கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கொரியர்களையும் இஸ்லாம் விடவில்லை..! (வீடியோ இணைப்பு)


 
(சுவனப்பிரியன்)

இஸ்லாமிய கலாசாரமும் கொரிய கலாசாரமும் இரு வேறுபட்டவைகள். ஆனால் அந்த மக்களையும் இஸ்லாமிய கொள்கையானது தற்காலங்களில் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. 35000 கொரிய முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியலாக இஸ்லாத்தை கொண்டுள்ளார்கள். இது அல்லாமல் வெளி நாட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை தனியாக பல ஆயிரங்களைத் தாண்டும். 

கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜூம்ஆ பள்ளியைத்தான் இந்த காணொளியில் நாம் பார்க்கிறோம். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு கொரிய இளைஞன் எவ்வளவு அழகாக குர்ஆன் ஓதுவதையும் தொழுவதையும் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ராக் இசை, பாப் இசை, சினிமா, போதைப் பொருள் என்பதுதான் அங்குள்ள பெரும்பாலான இளைஞர்களின் பொழுதுபோக்கு. ஆனால் அவற்றிற்கு நேர் மாற்றமான இஸ்லாத்தை அந்த இளைஞனை தேர்ந்தெடுக்க வைத்தது எது? வாளா? அந்த இளைஞனை யாரும் சென்று இஸ்லாத்துக்கு வா என்று அழைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இறை நம்பிக்கையினால் இறை தேடலில் ஆரம்பித்து முடிவில் அந்த இளைஞனை அவனது தேடல் இஸ்லாத்தில் கொண்டு விட்டுள்ளது. 

ஆடம்பர உலகம்: அவசர உலகம: எங்கும் எந்திர மயம்: இது போன்ற சூழலில் மனித மனம் நிம்மதி தேடி அலைகிறது. அந்த தேடுதல்தான் பலரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வருகிறது. இது தான் உண்மை காரணமேயொழிய நம் நாட்டு இந்துத்வாவாதிகள் சொல்வது போல் வன்முறையால் வளர்ந்ததல்ல இந்த மார்க்கம். அந்த இளைஞனின் முகத்தைப் பாருங்கள். எந்த அளவு சாந்தமும் அமைதியும் தவழ்கிறது. 

காணொளியில் உள்ள பள்ளியில் ரமலானில் 300க்கும் அதிகமான நபர்கள் நோன்பு திறக்க பள்ளிக்கு வருவார்களாம். இந்நாட்டைச் சுற்றி இது வரை 11 பள்ளி வாசல்கள் உள்ளன. ஆனால் தினம் தினம் இஸ்லாத்தில் இணைவோர் அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த பள்ளிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு. கிறித்தவர்களும் பவுத்தர்களும் மட்டுமே கொண்ட இந்நாடு தற்போது இஸ்லாத்தையும் அரவணைத்துக் கொண்டுள்ளது. 

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது

இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை முஹம்மதே! நீர் காணும்போது

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'
 
-குர்ஆன் 30:110

0 comments:

Post a Comment