கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினை - ஜெனீவாவில் முறையிடும் கனவு தகர்ந்தது..!



நாளை (25)ஆம் திகதி  மீண்டும் சர்வதேச வை.எம்.எம். ஏ அசௌம்பிலியின் தலைவர் அஸ்ரப் ஹூசைனின்  கொழும்பு 7 ரெஸ்மிட்பிளேசில்  உள்ள அவரது இல்லத்தில் முஸ்லீம்கள் பற்றிய கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

கடந்த வாரம் அஸ்ரப் ஹூசைனின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை முஸ்லீம்களது பிரச்சினைகளை பற்றி ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்பிடம் முறையிடுவது மற்றும் 5 தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இச்செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தன.

இச்செய்தியுடன் பாதுகாப்பு அமைச்சின் முஸ்லீம் அதிகாரி  ஒருவர்  அஸ்ரப் ஹூசைனை தேடி வந்திருந்தார். இப் பிரச்சினையை உள்ளுரிலேயே பாதுகாப்புச் செயலாளர் ஊடாக நாம் தீர்த்துக் கொள்ள முடியும்,  ஏன் ஜெனிவாவுக்குச் கொண்டு செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.  உங்களது பிரச்சினைகள்  பற்றிய விபரங்களை தறுமாறும் அஸ்ரப் ஹூசைனிடம் பணித்திருந்தார்.

அதற்கமைவாகவே  பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியும் மற்றும் முஸ்லீம் அதிகாரியும் இன்று சனிக்கிமை பி.பகல 04.00 மணிக்கு அஸ்ரப் ஹூசைன் இல்லத்தல் சந்திக்கின்றனர். அதற்காக சர்வதேச வை.எம்.எம். ஏ அசௌம்பிலியின் உறுப்பினர்கள் ஒன்று கூடி, முஸ்லீம்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சம்பவங்கள் பற்றியும் தாம் சேகரித்த சகல தகவல்களையும்  கையளிப்பார்கள். இவ் அறிக்கை பாதுகாப்புச் செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
 
(அஸ்ரப் ஏ சமத்)

0 comments:

Post a Comment