கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்பத்ரியா நிர்வாகிகளுக்கும், எமது ஊர் இளைஞர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள். யார் கற்பிக்கவேண்டும்? யார் கற்றுக்கொள்ளவேண்டும்?



நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவாகள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்ட காலம் அவர்கள் மீது உருண்டு ஓடி விட்ட பொழுது, அவர்களின் இருதயங்கள் இறுகிப் போய் விட்டன. (இன்று) அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாகி விட்டிருக்கின்றனர். (அல் குர்ஆன்-57:16).
இளைஞர்கள்….
  • ”அதான்” க்குறிய கண்ணியத்தை கொடுப்பதற்காக விளையாட்டை நிறுத்திவிட்டு மைதானத்தில் கூட்டுத் தொழுகையை நடாத்தி காட்டுகிறார்கள்.
  • ஒவ்வொரு கழகத்திடம் இருந்தும் பணம் வசூலித்து அதன்மூலம் வெற்றி பெறுகின்ற அணிக்கு கிண்ணங்கள் வாங்கிக் கொடுப்பது ஒரு தெளிவான சூது என்ற அடிப்படையில் அதை தடுப்பதற்கு இளைஞர்கள் முயற்சி எடுக்கிறார்கள்.
  • போதைவஸ்தை எப்படி ஊரில் இருந்து ஒழிக்கலாம் என்று அலோசனை செய்கிறார்கள்.

வாலிபப் பருவம் ஒரு பேராபத்தான ஒரு பருவம் எனச் சிலர் கூறுகின்றனர். அவர்களது இக்கூற்று பிழையானது என்பதற்கு எமது ஊர் இளைஞர்களின் மேற்குறிப்பிட்ட நிதர்சன நிகழ்வுகள் சான்றாய் உள்ளன. இன்னும் அல்லாஹ்வின் நிழலை அன்று வேறு எந்த ஒரு நிழலும் இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் நிழல் கொடுக்கின்ற ஏழு பிரிவினரில் ஒருவராக இவர்களையும் ஆக்கிவைக்க அல்லாஹ் அருள்புரிவானாக.

மாணவர்களை வழிநடாத்தவேண்டிய முஸ்லிம் பாடசாலையின் நிலையைப் பாருங்கள்..
  • பாடசாலை ஒலிபெருக்கியில் படுபயங்கரமான ஆபாசப்பாடல்கள் எந்தவிதக் கூச்ச சுபாவமும் இல்லாமல் நளீமிகளும், இஸ்லாஹிகளும் முன்னிலையில் ஊரே கேட்கும் வன்னம் ஒலிபரப்புறார்கள். பாவம் பெற்றோர்களும், ஊர்மக்களும் அவர்களுடைய ஆதங்கத்தை ஊர் அறிய கொட்டித் திரிகிறார்கள்.
  • பள்ளிவாசலில் ஜமாத் தொழுகை நடத்துவதற்கு இமாம் சங்கடப்படுகிறார்.
  • மஃரிப் தொழுகைக்கான அதான் பள்ளிவாசல்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது அதனை பாடசாலை நிர்வாகம் Bபன் வாத்தியத்துடன் சங்கமிக்கச் செய்து விடையனுப்பிகரது.

மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)
எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ‘வீணான செய்திகள்என்பது  இசை கலந்த பாடலையே குறிக்கிறது.என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)

புத்திஜீவிகளையும், மார்;க்க அறிஞாகளையும் சிறந்த மனிதர்களையும் உருவாக்கிய வரலாறு எமது கஹட்டோவிடாவிற்கு உண்டு. எனினும் தற்போது வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, பாடசாலை முதல் ஆற்றங்கரை வரை பெருகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், ……. என்று பட்டியல் நீளுமளவுக்கு நமதூரினி பின்னடைவை எதிர்வு கூறும் காரணிகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக பாடசாலை சூழல்சமூக சூழல், வீட்டுச் சூழல், சிறந்த முன்மாதிரிகள் போன்றன பிரதான காரணிகளாகவிருக்கின்றன. தற்போதைய தொழிநுட்ப வளர்ச்சியும், சீரழிந்த சினிமாவும் மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சிக்கு பெரும் பங்குவகிக்கின்றன. ஆசிரியர் பகுதியும் மானவர் பகுதியும் ஒழுங்குறவிருந்தாலேயே கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நடக்கும். ஒழுக்க வீழ்ச்சியை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டுமாயின் அவை உருவாகும் மூலத்தைக்கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்பது சான்றோர்களின் கருத்து.
 
ஜாஹிலியத்துடன் ஆரம்பித்து இடையில் உத்தியோகபுர்வமாக கிறாஅத்துடன் ஆரம்பிப்பதாக கூறி குர்ஆனையும் இழிவுபடுத்துகிறார்கள் துஆவுடன் முடிவடைந்து விட்டால் ஏதோ இஸ்லாமியப் பண்பாட்டையே நடைமுறைப்படுத்தி விட்டதாக நாம் மெச்சிக் கொள்வது முட்டாள்தனமாகும். முன்மாதிரியான கடமையுணர்வுள்ள ஆசிரியர் குழாம் செயலாற்ற முனைவார்களானால் அது மாற்றத்திற்கான விடிவெள்ளிகளை நம் வானில் புலரச் செய்யும். இல்லாது போனால் பாதாள உலகக் கும்பல்களையும் காடயர்களையும் பயிற்றவிகும் தளமாக அல்லது சமூக விரோதிகளின் உறைவிடமாக பாடசாலைகள் மாறிப் போவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும்.

அன்பான ஆசான்களே, பெற்றார்களே வளரும் பிஞ்சுகளிற்கு முதலில் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுங்கள். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கோசையைப் போன்று இஸ்லாமிய போதனைகளை ஆக்கவேண்டாம். அது விடயத்தில் நீங்கள் முன்மாதிரிகளாகவும் இருங்கள். இன்ஷா அல்லாஹ் அறிவிற் சிறந்த நல்லெழுக்கமுள்ள மாணவச் செல்வங்களைக் கொண்ட ஊரைக் காண்பீர்கள்.
ஒரு சமூகத்திலுள்ளவற்றை அவர்களாக மாற்றிக் கொள்ள முயலாவிட்டால் அல்லாஹ்வும் மாற்ற மாட்டான்
(அல் குர்ஆன்)
 
விளையாட்டுப்போட்டி யென்பது எமது ஊருக்குப் புதியவிடயமல் அல்ல பாலர்பாடசாலைகள், மதுரஸா மாணவர்கள், பாலிகா பாடசாலை இவைகள் பல சிறப்பான முன்மாதிரிகளை விட்டுசென்றுவிட்டன. விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளை சிறப்பாக வழிநடாத்த முடிந்த உங்களுக்கு அதில் இஸ்லாமிய வரம்புகளை முடியுமான அளவுபேணியிருக்கலாம்.  வழமைக்கு மாற்றமாக இம்முறை வளா்ந்த பெண்பிள்ளைகளுக்கான ஒரு சில போட்டி நிகழ்சிகள் பற்றி பலரும் பலவாறு கருத்துத் தெரிவிக்கின்றனர் அதில் மார்க்க வரம்புளை பேணியிருந்தமை பாராட்டப்படவேண்டியதே.

இவைதவிர்ந்து இம்முறை இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டது மிக சந்தோசமாக இருந்தை காணக்கூடியதாக இருந்தது. சினமாப்பாடல்கள் மற்றும் இசையுடன் கூடிய பாடல்கள் ஔிபரப்பியமை மார்க்கத்தில் எந்தளவுக்கு அங்கீகாரம் பெற்ற விடயம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் கூட அவர்களுடைய வீட்டில் இந்த சினிமாப் பாடல்களை சத்தமாக போடுவதற்கு வெற்க்கப்படும் சூழலில் மாணவர்களை வழிநடாத்தவேண்டிய பாடசாலை ஒலிபெருக்கியில் கீழ்தரமான சினிமாபாடல்களை ஒலிபரப்பப்பாட்டால் எப்படியிருக்கம். ஆரம்பகாலம் போலன்றி மார்க்க விடயத்தில் விளிப்புணர்வு ஏற்பட்டு வரும் இத்தருணத்தில் முன்மாதிரியான விளையாட்டுப்போட்டியாக நிகழ்வுகளாக இது அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனபது எமது கருத்து.




 

5 comments:

amujeeb said...

masha allah best article with good advice. jazakallhu khaira

அப்துல்லா said...

உண்மையை அழகாகக் கூறியிருக்கிறீர்கள். சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் எமது ஊரை எடுத்துக்கொண்டால் திருமணவீடுகளில் தோரனங்களும் பாட்டுக் கச்சேரிகளும் கலைகட்டும் ஆனால் அந்த தாக்கம் இன்று எமது கலாச்சாரத்தில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. அதற்கு மிகமுக்கிய காரணம் இஸ்லாம் வாலிபர்களின் உல்லங்களை தொட்டிருக்கிறது.

Anonymous said...

இப்படியெல்லாம் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு கூட்டம் உறுவாகும் என்று தெரிந்திருந்தால், பாதிப் மௌலானா அவர்கள் அல்பத்ரியா முஸ்லிம் பாடசாலை என்றவிடயத்தை சிந்திக்காமல் எமது பிள்ளைகளை ஒரு சிங்கலப் பாடசாலையிலேயே படிப்பதற்கு ஆர்வம் ஊட்டியிருப்பாரோ!

Anonymous said...

இந்த நிர்வாகிகளின் பிள்ளைகள் பாடசாலையில் படித்து காதல், சினிமாக, காமம், போதை இப்படி அலைந்து திரியும்போதுதான் இந்த கும்பலுக்கு இஸ்லாத்தின் அருமை புரியும்.

Mafas said...

இவர்கள் குர் ஆன் சுன்னாவுக்கு பயப்படவில்லை மாறாக கல்வித் தினணக்கல அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தான் பயப்படுகின்றார்கள்

அவர்கள் இஸ்லாதை நடைமுறைப்படுத்தத் தயாரில்லை அதற்கு பதிலாக இணைவைப்பவன் தயாரி்க்கும் சட்டக் ‌கோப்பினையே நடைமு‌றைப்படுத்த முற்படுகின்றனர்.

இந்த முஸ்லிம் சமூகத்தின் அழிவு பாடசாலையிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. அன்று எமது தலைவர்கள் எமது உரிமைகளை வெற்றெடுப்பதற்காக எமது கலாச்சாரத்தை ஈடு வைக்கவில்லை எமது கலாச்சாரத்தில் உறுதியாக இருந்ததன் காரணமாகத்தான் நாம் இன்னும் சில உரிமைகளை அனுபவித்துக் கொண்டு வருகின்றோம்.

இதனை முஸ்லிம்கள் சிந்திக்க மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கு நேரமும் இல்லை மூலையும் இல்லை. இதை இன்னும் விளக்கச் சொல்ல வேண்டும் என்றால் உதாரணமாக ஒரு மந்தைக் ‌கூட்ட‌த்தை ‌அதனை மேய்பவன் எவ்வாரு அதன் கூடுகளுக்கு விரட்டிச் செல்லும் போது அந்த மந்தைகள் செய்வதரியாது த‌ிகைத்து நிற்கும் மேய்பாளன் எங்கு க‌ொண்டு செல்வானோ அங்கு நாமும் போவோம் அது போன்று தான் இன்றைய முஸ்லிம் சமூதாயத்தின் நிலை.

Post a Comment