கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எகிப்தில் இஸ்லாமிய கூட்டணி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு



எகிப்து நாட்டில் பதவியிறக்கம் செய்யப்பட்ட முகமது மோர்சியின் ஆதரவாளர்களான இஸ்லாமியக் கூட்டணி ஒன்று வரும் வெள்ளிக்கிழமை முதல் 18 நாட்கள் நடைபெறும் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

1981 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை எகிப்தில் ஆட்சி புரிந்த ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து இறக்க அந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் துவங்கியது. அப்போது 18 நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்குப்பின் முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்கி முகமது மோர்சி ஆட்சியைப் பிடித்தார்.

இந்தப் போராட்டம் துவங்கிய மூன்றாவது ஆண்டைக் குறிக்கும்விதமாகவே இஸ்லாமியக் கூட்டணி புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் புதிய போராட்டம் முபாரக் பதவி இறங்கிய பிப்ரவரி 11 ஆம் தேதி வரை தொடரும் என்று இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. எகிப்தில் தற்போது நடைபெற்றுவரும் இடைக்கால அரசின் உள்துறை அமைச்சர் முகமது இப்ராஹிமும் 25 ஆம் தேதியன்று ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்ட காவல்துறை தலைமை அதிகாரியாகவும் விளங்கும் உள்துறை அமைச்சர் இஸ்லாமியக் கூட்டணி ஏற்படுத்தவுள்ள குழப்பத்தை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி இந்த அசாதாரண முறையீட்டை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்டபின் அவரின் ஆதரவாளர்கள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தவேண்டி தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இவர்கள் மீது அரசாங்கம் எடுத்த கொடூர நடவடிக்கைகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஹோஸ்னி முபாரக் பதவி இறக்கம் செய்யப்பட்டபின் நடைபெற்ற குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ராணுவத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இஸ்லாமியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

அமைதியான முறையிலேயே தங்களின் போராட்டம் நடைபெறும் என்று இந்தக் கூட்டணி தெரிவித்துள்ள போதிலும் இவர்களின் பேரணிகள் அனைத்தும் மோர்சி எதிர்ப்பாளர்களுடனும், பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நடைபெற்ற தெரு மோதல்களாகவே முடிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 Jaffna Muslim

0 comments:

Post a Comment