கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஹலால் சான்றிதழை இனி HAC லிமிடெட் வழங்கும் : அறிக்கை



இலங்கையில் இனி ஹலால் சான்றிதழை ஹலால் அங்கீகார குழு (உத்தரவாத) லிமிடெட் The Halal Accreditation Council (Guarantee) Ltd விநியோகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக ஹலால் அங்கீகார குழு (உத்தரவாத) லிமிடெட் தெரிவித்துள்ளது.

அறிக்கை:
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் நிறுவனங்களுக்கான ஹலால் சான்றிதழ்களை விநியோகிக்கும் பொறுப்பு ஹலால் சான்றுறுதி பேரவையிடம் (உத்தரவாதமளிக்கப்பட்ட) நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிறுவனங்களின்; 2007 7ஆம் பிரிவின் சட்டத்தின் கீழ் இப்பேரவை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 27 நாடுகளில் அங்கீகாரமும் பெற்றுள்ளது.
இன்றைய உலகில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹலால் சான்றிதழ் முக்கியமானதாகும். இலங்கை நிறுவனங்கள் தமது உற்பத்திகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு முக்கிய சர்வதேச சான்றாக பின்பற்றப்படுகிறது. ளுடுளு மற்றும் ஐளுழு போன்ற சான்றுகளை போன்றே ஹலால் சான்றுறுதி பேரவையின் சான்றும் ஒரு சர்வதேச தரச் சான்றாகும். அத்துடன் எமது உள்விவகார நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் சர்வதேச நிறுவனத்தால் மதிப்பிடப்படுகின்றது. என ஹலால் சான்றுறுதி பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலி பதார் அலி சுட்டிக்காட்டினார்.
இத்தரச் சான்று உணவு, குடிபானம் மற்றும் பாவனை பொருட்கள் போன்றவற்றின் ஹலால் தரத்தை உறுதிப்படுத்தும்; ஒரு விடயாகும். அத்துடன் இத்தரச் சான்றுடன் சமபந்தப்பட்ட விஞ்ஞான ரீதியான செயற்பாடுகளில் அனுபவம் வாய்ந்த தேர்ச்சிப்பெற்ற தொழில்நுட்ப குழு ஹலால் சான்றுறுதி பேரவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எமது அனைத்து உள்விவகார செயற்பாடுகள் வெளிப்படையானதும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்படக்கூடியதுமாகும்.
ஹலால் சான்றுறுதி பேரவையானது இலாபமற்ற இலங்கையையின் முக்கிய துறைசார்ந்தவர்களின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு சர்வதேச தரங்களின் அடிப்படையில் மார்க்க வழிகாட்டலின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும்.
இத்தரச்சான்றிதழ் விஞ்ஞான மற்றும் வர்த்தக ரீதியான தொடர்புகள் இருந்த போதிலும் இவை சமயம் மற்றும் கலாசாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. இது பாவனையாளர்களின் விருப்பத்திற்கு தேவையான ஹலால் உற்பத்திகளையும் சேவைகளையும் பெற்றுக்கொடுக்க வழி வகுக்கும்.
 
மேலும் இவை மூலம் இலங்கையர்கள் தமது உற்பத்திகளை அதிக பாவனையாளர்கள் கொண்ட சர்வதேச ஹலால் சந்தைக்கு அனுப்ப வழிகிடைக்கின்றது. இதன்மூலம் உலகில் வாழும் 2 பில்லியனுக்கு அதிகமான முஸ்லீம்கள் ஹலால் உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும் என அலி பதார் அலி குறிப்பிட்டார்.
உலக சந்தையில் ஹலால் ஏற்றுமதி சுமார் ருளுகூ 2 வசடைடழைn மதிப்பிடப்பட்டுள்ளதாக இது தொடர்பாக ஆய்வுகளை நடத்தும் ஏடீ கேர்ணி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பாவனையாளர்களின் தேவையாக இது அமைந்துள்ளது. 67 வீதம் உணவு, 22 வீதம் மருந்துப்பொருட்கள் மற்றும் 10 வீத அழகு சாதனப் பொருட்கள் இதில் அடங்குகின்றன.
 
நாட்டில் இந்த சான்றிதளுக்கு அதிக தேவை நிலவுகின்றது. உள்ளுர் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பொருட்களை சந்தை படுத்ததும் சுமார் 195 இலங்கை நிறுவனங்கள் இந்த சான்றிதழை கோரியுள்ளன. நாங்கள் அதற்கான ஏற்பாடுகளை தற்போது துரித கதியில் மேற்கொண்டு வருகின்றோம்.
ஹலால் சான்றிதழ் ஆழமான முறையில் ஆய்வுக்குட்படுத்தியும் கண்காணிப்பட்டுமே வழங்கப்படுகின்றன. தேர்ச்சிபெற்ற உலமாக்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உணவு பரிசோதகர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இவற்றை கண்காணிக்கின்றனர். இந்த சான்றிதழை பெற வேண்டும் என எவர்மீதும் அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை.
 
ஹலால் சான்றுறுதி பேரவை நாட்டின் தேவையை கருதியே ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் எல்லா நிறுவனங்களும் அவசியம் ஹலால் சான்றிதழ் பெறவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. நாங்கள் இலாபத்தை அடிப்படையாக கொண்டு செயற்படும் நிறுவனம் அல்ல என்பதனால் எமது சேவைகள் இலவசமானது என்றும் கூறமுடியாது. ஹலால் சான்றிதழ் படுத்தலினூடாக சிறந்த சேவைகளை வழங்க பல துறைசார்ந்தவர்கள் உட்பட பெரும் எண்ணிகையில் பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளோம்.
 
எனவே அதற்கான செலவீனங்களை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஹலால் சான்றுறுதி பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலி பதார் அலி குறிப்பிட்டார்.
 
டங்காமுஸ்லிம் இணையம்.

0 comments:

Post a Comment