கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com
Showing posts with label உலகச் செய்திகள். Show all posts
Showing posts with label உலகச் செய்திகள். Show all posts

துருக்கிய இராணுவ சதி முயற்சி - சில புலனாய்வுக் குறிப்புக்கள்

துருக்கிய தலைநகர் இஸ்தான்பூலிலிருந்து எழுதுகிறேன் என தொடர்ந்தும் தன் முகநூலை அப்டேட் பண்ணிக் கொண்டே இருக்கிறார் அரபுலக பிரபல அல்முஜ்தமஃ சஞ்சிகை ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் அவர்கள்.
நேரடியாகக் களத்திலிருந்தே அவர் தரும் தகவல்கள் அல்ஜஸீரா உட்பட அனைத்து ஊடகங்களையும் விட விரைந்து செய்திகளையும் தகவல்களையும் புலனாய்வு நோக்கிலான பார்வைகளையும் தந்துகொண்டே இருக்கிறது.
நேற்று காலை ஒரு பிரபல எழுத்தாளர் கூறியது போன்று 10,000 சொற்களுக்கு கட்டுரை எழுதலாம் என்பது நேரம் செல்லச் செல்ல 40,000-50,000 என ஆய்வுக் கட்டுரைகளே எழுதலாம் எனும் அளவுக்கு திடுக்கிடும் பின்னணிகள் நிறைந்தும் முக்கிய பல தலைகளின் சதி முகங்கள் அம்பலப்பட்டும் வருகின்றன. கட்டுரை எழுதத் துவங்கி தட்டச்சு செய்துவிடுவதற்கிடையில் பலப்பல புது விடயங்கள் கட்டுரையைக் காலாவதியாக்கிடும் என்ற அளவு வீச்சுக் கொண்ட நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
துருக்கி புலனாய்வுத் துறைத் தலைவர் ஃபிதான் ஹாகான். சதி முறியடிப்பில் அர்துகானுக்கு முழு பக்கபலமாக நின்ற ஹீரோ இவர்தான்.
உண்மைத் தகவல் எதுவெனில் இன்னும் சதிப் புரட்சி முழுமையாக முறியடிக்கப்படவே இல்லை. Plan-B யாக மீள் சதியொன்று நிகழ்வதற்கான சாத்தியப்பாடுள்ள நிகழ்வுகள் பற்றியும் துருக்கிய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கையோடு கருமமாற்றுகின்றனர். மக்கள் இப்போது வரைக்கும் வீதிகளில் இருக்குமாறு வேண்டப்பட்டிருக்கின்றனர்.
மக்களில் சுமார் 161 பேர் இரத்தம் சிந்தி ஷஹீதுகளாகவும், 1440 க்கும் மேற்பட்டோர் காயம்பட்டும் தம் தேசத்திற்குத் தாங்கள் தெரிவு செய்த அரசைப் பாதுகாத்தனர்.
இதுவரைக்கும் சதித்திட்டத்தில் பங்கேற்ற, துணைபோன இராணுவத் தலைகள் 8,000 க்கும் மேல் நேற்றிரவு வரைக்கும் கைதாக்கப்பட்டுள்ளதாக துருக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் கைதுகள் பல மடங்காவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
பத்ஹ் குலான், சதி இயக்கத்தின் தலைமை ஆசாமி. அமெரிக்கா பென்சில்வேனியாவில் வசிப்பவர். சியோனிச ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்.
நீதிபதிகள் 2,745 பேர் துருக்கிய நீதித் துறை நீக்கியுள்ளது. இவர்களில் இருவர் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகள் மற்றவர்களில் பத்து பேர் துருக்கியின் உச்ச நீதித் துறை அமைப்பான HSYK (Supreme Board of Judges and Prosecutors) ஐச் சேர்ந்தவர்களாவர். பல்வேறு துறைகளையும் சார்ந்து மொத்தமான பதவி நீக்கங்கள் 20,000 வரை அதிகரிக்குமென தகவல்கள் கூறுகின்றன.
இது இன்னும் பாரிய 'கிளீனிங்' திட்டமொன்று இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது. துருக்கியை நாசகாரிகளிடமிருந்து இன்னும் சுத்தப்படுத்த பாரிய வாய்ப்பொன்று கிடைத்திருக்கிறது என அடித்துச் சொல்லலாம்.
தொடர்ந்து கொண்டிருக்கும் மக்கள் கொண்டாட்டங்கள் இந்த வெற்றி மக்களுக்கேயானது என்பதை உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
மறுபுறமாக ஏற்கனவே நான்கு (1960-1971-1980-1997) பிரதான இராணுவப் புரட்சிகளுக்கு முகம்கொடுத்து பலமுறை பலவீனப்பட்ட துருக்கிய மக்கள் இம்முறை இராணுவக் கேடிகளுக்கு இடம் வைத்துவிடவில்லை.
இன்னொரு பார்வைக் கோணத்தில் சொல்வதாயின் துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்துகான் தொடரும் தனது பதினான்கு வருட (2002-இன்றுவரை) சுபீட்ச ஆட்சிக் காலப் பகுதியில் மக்களை நன்றாகவே பலப்படுத்தியிருக்கிறார். தடியெடுத்தவன் தண்டல்காரன் போல் ரவுடித்தனம் மிக்க இராணுவம் அதன் நச்சுப் பற்கள் பலவும் பிடுங்கப்பட்டே இருக்கின்றது. மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் ஷஹீதுகளின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு முன்னர் மக்களிடத்தில் பேசிய துருக்கிய பிரதமர் பினாலி யில்திரிம் துருக்கிய மக்களின் வீரத்தை மெச்சியதோடு சதிகாரர்களின் சொதப்பல் திட்டத்தையும் சாடினார்.
அல்ஜஸீரா, அல்முஜ்தமஃ போன்ற இணையப் பக்கங்களின் கருத்துக்களின்படி பிரதான சூத்திரதாரியாக துருக்கியக் கார்ப்பரேட் மதகுரு பத்ஹ் குலான் மற்றும் அவரது ஹிஸ்மத் நோக்கி ஏகோபித்த பார்வை நீள்கிறது. கிளர்ச்சியில் ஈடுபட்டோர் அதன் இரகசிய இயக்க உறுப்பினர்களாகவே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்குப் பின்னணியில் திட்டம் வகுத்து சதியை சர்வதேச வல்லூறு அமெரிக்காவே முற்றாக இயக்கியது. அதன் பிரதான பாத்திரத்தை கனவான் ஜோன் கெர்ரி சதியின் தோல்விப் படலம் வரைக்கும் ஏற்று வழிநடாத்தியுள்ளான்.
தக்க நேரத்தில் ரஷ்யாவுடன் சதிக்கூட்டு ஆலோசனை செய்தமை, அமெரிக்க தூதரக (துருக்கியில் மக்கள் புரட்சி நடப்பதாக வெளியிட்டுப் பின் வாபஸ் பெற்ற) அறிக்கை, காலம் தாழ்த்தி அர்துகான் அரசுக்கு அங்கீகாரமளித்து வெளியாகும் அறிக்கைகள் என்பன அந்த அதிகார ஆணவங்களை கேட்டு வாங்கிக் குட்டுப்பட்டுத் தலை குனிந்து விடச் செய்துவிட்டன.
அமெரிக்கக் குறுமதியாளன் ஜோன் கெரி சதி தோல்வியடைந்த விரக்தியில் வெட்கமின்றிப் பிதற்றித் திரிகிறான். இராக்கிலும், சிரியாவிலும் நரித்தனங்கள் செய்துவிட்டு 'சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்' என்று அர்துகானுக்கே பாடமெடுக்கப் புறப்பட்டிருக்கிறான்.
அமெரிக்கப் பின்னணியோடு பத்ஹ் குலானின் இயக்கத்தவரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த மெகா சதி ப்ராஜக்டுக்கென சுமார் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் வரைக்கும் செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதி தினத்தன்று மேலும் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டிருந்தது.
இதன் பெரும்பகுதியை டுபாய் அரசன் கலீபா ஆலு நாஹியான் தான் சுரண்டும் பணத்திலிருந்து வகைதொகையின்றிக் கொடுத்து மறுமைக்கான தனது ஏட்டில் பெருந்தொகையை வரவு வைத்துப் பல்லிளித்துக் கொண்டு இருக்கிறார். (இது அல்முஜ்தமஃ முன்னாள் பிரதம ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் கலாநிதி முஹம்மத் ஜவாதியை மற்றும், agelpost இணையம் கலாநிதி அப்துல்லாஹ் நபீஸியையும் மேற்கோள் காட்டி நம்பகத்தன்மையோடு பதிவு செய்திருந்த தகவல்)
துருக்கியில் இருக்கும் சுபீட்ச ஆட்சி பிடுங்கப்படுவதனூடாக முஸ்லிம் உலகு மேலும் மீட்சி பெறாது தாமதப்படுத்தப்பட வேண்டும் என்பதே துருக்கியில் நிகழ்ந்த களேபரங்களின் மொத்த இலக்காகும். அதற்காகவே அந்த நான்கு ட்ரில்லியன் என்ற மெகா பட்ஜட் ஒதுக்கப்பட்டது.
எனவே பத்ஹ் குலான் என்ற கார்ப்பரேட் மதகுருவைப் பொறுத்தவரைக்கும் அர்துகானின் அதிருப்தியாளர் என்ற வகையிலான துருப்புச் சீட்டோ அல்லது பகடைக் காயோ மாத்திரம்தான்.
இதற்குப் பின்னால் அமெரிக்காவின் மெகா பங்கு இருப்பது போலவே தனது வீழ்ச்சிப்படிகளை எண்ணத் துவங்கியிருக்கும் இஸ்ரேலியப் பயங்கரவாதக் கும்பலும் இருக்கின்றது. இஸ்ரேலை இராணுவ-அரசியல்-ராஜதந்திர ரீதியில் பலவீனப்படுத்துவதில் அண்மைக் காலத்தில் துருக்கி பெற்ற வெற்றிகள் இங்கு குறிப்பிடத்தக்கவை.
அதுபோன்றே நீண்ட காலத்தில் தம் மன்னராட்சியைத் தமக்கும் தம் பரம்பரைகளுக்கும் பாதுகாக்கவும் தாம் வாக்களித்துள்ள படி சியோனிஸத்தைப் பாதுகாக்கவுமே டுபாய் அரசன் ட்ரில்லியன் கணக்கில் கொட்டிக் கொண்டிருக்கிறான்.
இந்த சதியின் பின்னணியில் இருக்கும் அமெரிக்கா-இஸ்ரேல்-யுஏஈ கூட்டுக் குறித்த இன்னும் பல புலனாய்வுத் தகவல்களை காலம் தன்னுள் வைத்திருக்காது நிச்சயம் வெளித்தள்ளிவிடும்.
துருக்கிய தேசத்தைப் பொறுத்தமட்டில் முஸ்தபா கமால் பாஷா என்ற இயற்பெயர் கொண்ட அத்தா துர்க் மூலமாக நயவஞ்சகத்தனமாக கிலாபத் வீழ்த்தப்பட்டதன் பிற்பாடு இராணுவத்தின் கரம் எப்போதும் மேலோங்கி இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டது.
மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு நலன்களுக்கு பாதகம் விளையப் பார்த்த போதெல்லாம் அங்கு இராணுவப் புரட்சிகள் நிகழ்ந்தன.
ரஜப் தையிப் அர்துகான் ஆட்சிக் காலம் ஆரம்பம் தொட்டு இந்த அபாயம் இருந்த போதும் அவர் கவனமாகத் திட்டமிட்டு இராணுவ ஆதிக்கம்-அதிகாரம்-பலத்தை விட்டும் தேசத்தையும் மக்களையும் விடுவித்தார்.
கடைசியாக 2013ம் ஆண்டளவில் இராணுவ சதியொன்றுக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்த போது பல அதிரடிக் கைதுகள் நிகழ்ந்து பாரிய களையெடுப்புகள் இடம் பெற்றன.
2014ம் ஆண்டு இறுதியாகும் போது பத்ஹ் குலான் இயக்கத்தின் அதிகார ருசிகள் அம்பலப்பட்டதிலிருந்து மீளவும் சதிகளுக்கான சாத்தியங்கள் தோன்றின.
இந்த ஆண்டு(2016) ஜனவரியில் குவைத் இஸ்லாமிய அறிஞர் கலாநிதி அப்துல்லாஹ் நபீஸி தனது ட்விட்டரில் ரஷ்யா-ஈரான் கூட்டுச் சதியுடனும் வளைகுடா நாடொன்றின் நிதியளிப்பில் எகிப்திய பாணியில் சதியொன்றுக்குத் திட்டமிடல்கள் இருப்பதாக முதன்முதலில் அறிவித்திருந்தார்.
எகிப்திய சதிக்கும் வாரி வழங்கிய யூஏஈதான் அந்த வளைகுடா நாடு என்பதும் டுபாய் டுபாக்கூர் ராஜா கலீபா ஆலு நாஹியான் தான் அந்த அற்புதப் பிறவி என்பதும் வெட்டவெளிச்சமான உண்மை.
இவ்விடத்தில் சிலர் அர்துகான் சதிப் புரட்சிக்கு எதிராகப் பெற்ற வெற்றியையும் எகிப்தில் கலாநிதி முர்ஸியின் பதவி கவிழ்ப்பையும் ஒப்பிட்டு நோக்குகின்றனர்.
14 வருடங்கள் தொடர்ந்தேர்ச்சியான ஆளும் வாய்ப்புப் பெற்றுப் பல மாற்றங்களையும் சாதனைகளையும் நிகழ்த்திக் காட்டிய அர்துகானின் சூழலும் அணுகுமுறைகளும் கலாநிதி முர்ஸி எகிப்தில் எதிர்கொண்ட சூழலும் வெவ்வேறானவை.
துருக்கியில் மதச்சார்பற்றோர், எதிர்க்கட்சிகளும் அர்துகானுடன் ஒன்றாக கைகோர்த்திருக்கும் சூழல் இருந்தது. அத்தோடு அங்கே எகிப்து ஹிஸ்புந்நூர் போன்று ஸலபி, வஹாபிகளும் இல்லை. கிலாபத் உடைப்பை பிரிட்டனுடன் இணைந்து செய்த துரோகம் துருக்கியில் வஹாபிஸ வெறுப்பை விதைத்து அங்கு அதன் பரவலைத் தடுத்திருக்கின்றது.
கலாநிதி முர்ஸியின் ஒரு வருட கடினப் பயணத்தில் அவரைச் சூழ இருந்த அரசு நிர்வாகத் துறையினர், இராணுவம் என முழுதும் முபாரக் யுகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்புப் போக்குக் கொண்டவர்கள். அடுத்து மதச்சார்பற்றோருடன் இணைந்து அரசியல் ஞானசூனியங்களான ஹிஸ்புந்நூர் ஸலபி, வஹாபிகளும் கலாநிதி முர்ஸிக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்திருந்தனர். எகிப்திலே முஹம்மத் முர்ஸிக்கும் இஃக்வான்களுக்கும் எதிராக நின்றது போல் துருக்கி தொடர்பில் உலகளாவிய ஸலபிக்கள் எதிர் நிலைப்பாட்டை எடுக்காமைக்கு பல்வேறு அரசியல் நலக் காரணிகள் உள்ளன என்பது முக்கியமானது.
துருக்கிய சதிப் புரட்சியின் தோல்விக்குப் பின்பாக இஸ்லாமிய உலகின் முக்கிய அறிஞர்கள் பலரும் துருக்கிய அதிபர் அர்துகானைப் பலப்படுத்தும் உறுதிமிக்க வாசகங்கள் கொண்ட கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் பேரவைத் தலைவர் ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவி 'அல்லாஹ்வின் உதவியும் உலக முஸ்லிம்களின் பேராதரவும் எப்போதும் உண்டு' என்ற கருத்தை மிக வலியுறுத்தியிருந்தார். ஷெய்க் அலி கரதாகியின் கடிதம் பிரார்த்தனைகளால் நிரம்பியிருந்தது. கடிதத்தின் இறுதியில் அவர் "மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!" என்ற அல்குர்ஆனிய வசனத்தை இணைத்திருந்தமை மெய் கூச்செறியச் செய்தது. ஆம்... சதிப் புரட்சிக்கான திட்டமிடல்கள் பலரும் நினைப்பது போலன்றி மிகப் பாரியதாக, நுணுக்கமானதாக, ஆழமானதாக, முழுமையானதாக, நேர்த்தியானதாக இருந்தன.
பௌதிக ரீதியில் மிகத் திறம்பட திட்டமிடப்பட்ட இச்சதி தோல்வியடைவது சாத்தியம் குறைந்ததாக கருதப்பட்டது.
எனவே மக்கள் இதனை வெற்றி கொண்டமை ஒரு வகை அற்புதம் என்றே கொள்ளப் படவேண்டும்.
முழு இஸ்லாமிய உலகும் அர்துகானோடும் அர்துகானுக்காகவும் துருக்கியோடும் துருக்கிக்காகவும் எழுந்து நிற்கின்றது.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நன்மைகளில் ஒன்று சேர்த்து விடட்டும்!!!
M.S.M. Siaaf Naleemi

துருக்கி நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!

பிரதமர் புலென்ட் யில்திரிம் தலைமையிலான துருக்கி அரசு கவிழ்க்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
The Bosphorus bridge was blocked off by military units
துருக்கியில் பிரதமர் யில்திரிம் தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில், நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
முன்னதாக தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள இரண்டு பெரிய பாலங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வந்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் யில்திரிம், இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி என்றும், அவர்கள் நினைத்தால் மட்டுமே அகற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
துருக்கியில் ராணுவ சதிப்புரட்சி முயற்சி! ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் விமான நிலையம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கியில் சற்று முன்னர் ராணுவப் புரட்சியொன்று வெடித்துள்ளது.
தலைநகரின் முக்கிய வீதிகள் மற்றும் பாலங்கள் மட்டுமன்றி அதாதுர்க் சர்வதேச விமான நிலையமும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் பலவும் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
சதிப்புரட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் நோக்கில் தமது நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே துருக்கிய பிரதமர் இல்ட்ரிம் ராணுவ சதிப்புரட்சி குறித்த தகவல்களை மறுத்துள்ளார்.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானின் தலைமையிலான ஆட்சி தொடர்வதாகவும், பொதுமக்களால் மட்டுமே தமது அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை ராணுவ சதிப்புரட்சி என்று குறிப்பிட முடியாது என்றும், ராணுவத்தின் ஒருசிலர் மேற்கொண்டுள்ள சட்டவிரோத நடவடிக்கையே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே துருக்கிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் ராணுவத்தினரால் பணயக் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் எங்கும் ராணுவத்தினர் மற்றும் தாங்கிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுடன், ராணுவத் தலைமை மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ்கள் விரைந்த வண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் தம்பதிக்கு நேற்று, பிறந்த 5 குழந்தைகள் - பெயர்கள் என்ன தெரியுமா..?

நேற்று (15.01.2016) பஜ்ர் தொழகை நேரத்தில், ஓரு முஸ்லிம்  சகோதாரிக்கு 5 ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளது!

 ஐந்து குழந்தைகளின் பெயர்கள்!

 1,முஹம்மது ரசூல்
 2,அபூபக்கர் சித்திக்
 3,உமர் கத்தாப்
 4,உஸ்மான்
 5,அலி

 என பெயரிட்டு உள்ளார்கள் வாருங்கள் வாழ்த்துவேம் துஆ செய்வேம்...!

 அல்ஹம்துலில்லாஹ்,,,,,!!

jaffnamuslim

சிரியா மீது நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஏஞ்சலினா ஜூலி ஐரோப்பா மன்றத்தில் ஆற்றிய உரை.

'அழகான உதடுகளைக் கொண்டவர்' என உலகம் முழுக்க ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியைக் கொண்டாடுவார்கள். ஆனால், அவருடைய அழகான உதடுகள் பேசுவதெல்லாம் உலகில் கைவிடப்பட்ட மக்களுக்காக என்பதே உண்மை. சிரியா அகதிகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏஞ்சலினா பேசிய உரை, உலகின் மனசாட்சியை இன்றளவும் உலுக்கி வருகிறது.
அந்த உரையின் முக்கியமான 5 பாயிண்ட்கள் இங்கே...
    
1) " ‘உலக நாடுகளின் தலைவர்களே, குடிமக்களே... உங்களின் நாய்க்குட்டிகள் கூட உச்சபட்ச பாதுகாப்பில் தூங்கும் நேரத்தில்தான், 'என் மகளைத் துப்பாக்கி முனையில் ஒருவன் பாலியல் அடிமையாகக் கடத்திப் போனதைத் தடுக்க வழியின்றி வேடிக்கை பார்த்தேன்’ என ஒரு தாய் என்னிடம் அழுதபோது, நான் என் கண்களைத் தாழ்த்திக்கொள்ள நேர்ந்தது!’’ 

2) "ஒரு பெண் பிள்ளை, தன் சின்னஞ்சிறிய சகோதரர்களையும், சகோதரிகளையும் குடும்பத் தலைவியாகக் காத்து வருகிறாள் ஓர் அகதிக் கூடாரத்தில். அந்தச் சிறுமியின் தாய் விமானக் குண்டுவீச்சில் இறந்து போயிருந்தார். அவர்களின் தந்தை ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவரின் நிலை என்னவெனத் தெரியவில்லை. ஆக, குடும்பத் தலைவி பொறுப்பேற்றுக் கொண்ட அந்தப் பெண்ணின் வயது 11" 

3) " ‘பல கட்டடங்களைக் கட்டிய ஒரு பொறியாளர், அகதியாய் உயிர் பிழைக்க தப்பிச் செல்லும் போது அவரது கண் முன்பாக அவரின் மகள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி 8 வயது மகள் கடலில் மூழ்கிச் சாவதை செய்வதறியாமல் பார்த்துக் கதறினார்’ என்று அவருடைய உறவினர்கள் அவர்களுடைய மொழியில் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆறு பிள்ளைகளின் தாயாக அதன் வலியை உணர்ந்தேன்!"
4) "கால்கள் அற்ற ஒரு இளைஞனைச் சந்தித்தேன், உனக்குச் செயற்கைக் கால்கள் வேண்டுமா, வேறெதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்டேன், 'ஒரே ஒரு உதவி. எனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது. நாங்கள் ஏன் நிர்மூலமாக்கப்பட்டு இரவில் பனிகொட்டும் பாலைவனத்தில் கூடார வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டோம்? இதற்கு மட்டும் பதில் தெரிய வேண்டும்' என்றான். கனவான்களே எனக்குத் தெரியும், இதற்கு உங்களிடத்திலும் பதில் இல்லை என்று!" 

5) "உலக நாடுகளே, நீங்கள் விமானத்தில் உணவும், மருந்தும் போடுவதால், அம்மக்கள் உயிரோடிருக்க முடிகிறது என்றால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் அவர்கள் மீது குண்டும் போடப்படுகிறது. எவ்வளவு பணம் வேண்டும், எவ்வளவு மருந்துகளும், உணவும் வேண்டும்? எனக் கேட்கும் விசாலமான மனது உங்களுக்கு இருக்கலாம், ஆனால் சிரியா மக்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதகதப்பான கூடாரம் மட்டுமே. அது உயிர்ப் பாதுகாப்பு மிக்க உங்கள் நாடுகளில் வேண்டும். தயவு செய்து உங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டு உணவுகளை எறியாதீர்கள், அது குண்டைவிடக் கொடியது" 

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஜோலி ஆற்றிய இந்த உரைக்குப் பின் ஐரோப்பாவில் சிரியா அகதி மக்கள் மீதான கரிசனப்பார்வை அதிகரித்தது. அதே கருத்துக்களை இப்போதும் நாம் மனதில் கொள்ள வேண்டும்!

- செந்தில் குமார்

தலித் குழந்தைகள் உயிரோடு எரிப்பு, ஒட்டுமொத்த கிராமமும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!

 'தலித் குழந்தைகள்' உயிரோடு எரிப்பு :

ஒட்டுமொத்த கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!

'உயர்ஜாதி'யினரின் தாக்குதலை விட்டு தப்பிக்க 'இஸ்லாம்' தான் ஒரே தீர்வு..!!

'பரீதாபாத்' கிராம மக்கள் முடிவு...!!


The arson in Sunped village of Faridabad has created fear among people, especially the lower caste community, in the adjoining villages. Due to the continuous threat posed by upper castes, a section of people from the lower caste have expressed their desire to convert to Islam.

"The upper caste people used to humiliate us over petty incidents like pulling out a mobile phone from the drain. They would often threaten and dishonour us and also the women from our community. We do not feel secure as the current government has failed to protect our pride. We have no other option than to convert to Islam," said Rohtash, a villager.

"At least we know few leaders who represent the minority community. There is no leader for the lower caste here," Rohtash added.

Villagers have demanded that Faridabad police commissioner Subhash Yadav be sacked as he has failed to control the law and order situation.

"The district police and local administration have ignored us and our complaints," alleged another villager Ramesh Kumar.

In adjoining Asawati village, a teenage girl was abducted by an upper caste youth and was later found unconscious in UP's Bulandshahr district. Despite a complaint of sexual assault at the Ballabhgarh police station, cops dismissed the matter saying that the girl had eloped with her boyfriend.

"One of the reasons behind the police apathy is the majority of the upper caste people. Sunped village has a population of 1,400 with 75 per cent belonging to the upper caste community. They have strong political connections with local leaders," said another villager Sunil Kumar.

jaffnamuslim

முஸ்லிம் என்றால்..!

முஸ்லிம் நாணயமானவனாக இருப்பான் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான் அவனுக்கு இறைவன் தடுத்த வற்றை ஒரு போதும் எடுக்க மாட்டான் அவன் கஸ்றத்தில் இருந்தாலும் நஸ்டத்தில் இருந்தாலும் அமானிதங்களை பேணகுடியவனாக இருப்பான் அடுத்தவன் பொருளுக்கு ஆசை படாதவனாக இருப்பான்.

சிரிய முஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர் அகதிகளாக செல்பவன் குபேரனாக இருக்க வாய்பில்லை சிரிய அகதிகளில் பலர் அன்றாட உணவு தேவைகளுக்கே சிறம படுகின்றனர்

இந்த சிறமம் நிறைந்த சூழலிலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாத 

தனக்கு தேவைகள் இருந்தாலும் அமானிதத்தை ஒப்படைக்க தவறாத ஒரு ஒப்பற்ற சகோதிரியை தான் படத்தில் பார்கின்றீர்கள்


ஆம் அந்த சகோதிரிய சிரியாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனுக்கு அகதியாக வந்தவர்

அவர் வீதியில் நடந்து செல்லும் போது ஒரு மணிபர்சை கண்டு எடுக்கிறார்

அந்த பர்சை திறந்து பார்த்த போது அதர்கும் 1000 யூரோக்கள் இருப்பதை காண்கிறார் அவரது நிலைக்கு 1000 யூரோ அல்ல 10000 யூரோக்கள் இருந்தாலும் அவருக்கு தேவை இருக்கிறது நமக்கு தேவை இருந்தாலும் இது நமக்கு உரியது அல்ல என்பதை தெழிவாக உணர்ந்து மொழி தெரியாத நிலையிலும் அந்த பர்சில் இருந்த முகவரியை பிறரின் உதவியோடு படித்து தெரிந்து உரியவலை நாள் முழுவதும் தேடி அலைந்தார்

அவரால் பர்சுக்கு சொந்த காரரை சென்று அடைய முடியவில்லை

மறு நாள் விடிந்ததும் இஸன் நகர காவல் நிலையத்தை தேடி செல்கிறார் அங்கிருந்த காவலரிடத்தில் தான் வீதியில் கண்டெடுத்த பர்சை பணத்தோடும் முகவரியோடும் ஒப்படைக்கிறார் உரியவரை தேடி ஒப்படைக்குமாறு வேண்டுகிறார்

அந்த சகோதிரியின் நாணயத்தையும் அமானிதத்தையும் கண்ட காவலர்கள் அதிசயித்தனர் அவருக்கு சன்மானம் கொடுக்க முன் வந்தனர் அவர்கள் வழங்க விரும்பிய அன்பளிப்பை பெற்று கொள்ள விரும்பாமலேயே தனது கடமையை செய்து முடித்த மன நிறைவோடு அந்த சகோதிரி திரும்பி சென்றார்

இஸன் நகர காவல் துறை தமது அதிகார பூர்வ இணைய தளத்தில் அந்த சகோதிரியின் புகைபடத்தை பதிவிட்டு மகிழ்ந்தனர்
அதை தான் நீங்கள் பார்க்கின்றீாகள் 
Jaffnamuslim

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டயாம் G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் ஜெர்மன் நிதி அமைச்சர் வேண்டு கோள்!!

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம் : G 20 மாநாட்டில் ஜெர்மன் நிதி அமைச்சர் பேச்சு....!!
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக திகழக்கூடிய 20 நாடுகளின் சங்கமமே G 20 நாடுகளாகும்.
G 20 யில் அமெரிக்கா, பிரிட்டன், சவூதி அரேபியா, இந்தியா, சீனா, துருக்கி, இந்தோனேசியா, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, கனடா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.

G 20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு துருக்கியில் இந்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
உலகளாவிய பொருளாதாரம் குறித்து முக்கியத்துவம் கொண்ட இந்த மாநாட்டில் ஜெர்மனி நிதி அமைச்சர் பேசுகையில்...
உலக பொருளாதாரத்தோடு இஸ்லாமிய பொருளாதாரத்தையும் இணைத்து செயலாற்ற வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இஸ்லாமிய பொருளாதாரம் உலகின் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை தற்போதைய சூழலில் நாம் மறுத்து விடமுடியாது.
உலக வங்கிக்கு இணையாக சவூதி அரேபியாவின் முழு ஒத்துழைப்புடன் செயல்படும் இஸ்லாமிய வங்கி செயலாற்றி வருவதை நாம் அறிவோம்.

மத்திய கிழக்கிலும் கிழக்கு ஆசியாவின் தென் பகுதியிலும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளிலும் இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தின் அடிப்பைடையில் வட்டி இல்லாத வங்கிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயல் திட்டத்தை மற்ற நாடுகளிலும் நடைமுறைப்படுத்துவது பற்றி நாம் ஆராய வேண்டும், இது காலத்தின் கட்டாயம் என்று பேசினார்.
இந்த மாநாட்டில் இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி : Tamil Muslim Media

உலகிலேயே அதிகமான அகதிகளை தங்க வைத்துள்ள நாடுகள் - UNHCR அதிர்ச்சி தகவல்!



உலகிலேயே அதிகமான அகதிகளை தங்க வைத்துள்ள நாடுகள்... அமெரிக்காவா, பிரிட்டனா  அல்லது ஐரோப்பிய நாடுகளா? உண்மை என்ன?

ஏதோ, ஐரோப்பிய கிறித்துவ நாடுகள் மட்டுமே, மற்ற நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளது போல் செய்திகள் ஊடகங்கள் மூலம் பரப்ப்பட்டு வருகின்றன. உண்மையை அறிய முற்பட்டபோது, ஊடகங்களின் மாயாஜால் வித்தை நன்றாக தெரிகின்றது.

ஒரு சில சம்பவங்களின் மூலம், மக்களின் கவனம் திருப்பபட்டாலும், உண்மையான விபரங்களை தேடியபோது கிடைத்த தகவல்களை  இங்கே பதிவு செய்கின்றோம்.


"கடந்த பல வருடங்களாக, உலகிலேயே அதிகமான அகதிகளை தங்கவைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முன்னணியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..".

1000 குடிமக்களுக்கு, எத்தனை அகதிகள்? இங்கே லெபனான் தான், தங்களின் 
குடிமக்களில் 1000 பேருக்கு, 240 அகதிகள் என்ற கணக்கில் அதிகமான மக்களை தங்க வைத்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.



  •  80% அகதிகள், உலகளிலேயே  வளரும் நாடுகளில் மிகவும் கீழ் நிலையில் உள்ள நாடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் (*2)
  • உலகின் பணக்கார நாடுகளான ஆஸ்திரேலிய, அமெரிக்க போன்ற நாடுகள், அகதிகளை வரவேற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன  (*2)  
  • அகதிகளின் எண்ணிக்கையில், 48% பெண்கள் (*4)
  • 18 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகள், 46% (*4)
  • ஆப்கானிஸ்தான், ஈராக், மற்றும் சோமாலிய நாடுகளை சார்ந்தவர்கள் தான், அகதிகளின் எண்ணிக்கையில் 46% உள்ளனர் (*4)
  • உலகிலேயே அதிகமான அகதிகள் தங்க விருப்பமுள்ள நாடு அமெரிக்கா..ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா மற்றும் பிரான்ஸ் அடுத்த நிலையில் உள்ளன (*4)
  • 2012 ல் 72 நாடுகளின் புள்ளி விபரங்களோடு  எடுக்கப்பட்ட ஒரு கணிப்பின்
    படி, மேலை நாடுகள்  தங்களின் வசதி வாய்ப்பின் சதவீதத்திற்கு மிகவும் குறைந்த அளவிலேயே அகதிகளை அனுமதிக்கின்றன. (*3)







இந்த பட்டியலில் உள்ள நாடுகளில், செல்வ செழிப்புள்ள அரபு நாடுகளின் பெயர்கள் இல்லாதது ஏனோ? மற்ற நாடுகளில் உள்ள அகதிகளுக்கு உதவி செய்தாலும்,  அவர்களை தங்களின் நாடுகளில் ஏற்றுக்கொள்ளாதது  மிகவும் வெறுக்கத்தக்க செயலாகும்.

-Nadodi Tamilan -

இதயத்தை உருக்கும் புகைப்படம் - 22 மணித்தியாலங்களில் குவிந்த பணத் தொகை $ 58K

சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் தனது தோள்களில் மகளைத் தூங்க வைத்தவாறு பேனாக்களை விற்பனை செய்வதைப் படம்பிடித்து ட்விட்டரில் Gissur Simonarson என்பவர் பதிவிட்டிருந்தார்.
லெபனான் – பேய்ரூட்டில் அந்நபர் பேனா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதயத்தை உருக்கும் இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த பலரும் அந்தத் தந்தைக்கு உதவ முன்வந்தனர்.

இதன் பயனாக, ட்விட்டரில் புகைப்படம் பதிவிடப்பட்ட மூன்றே மணித்தியாலங்களில் அவருக்கு £11,000 உதவித்தொகை குவிந்துள்ளது.

அதனை அவரிடம் ஒப்படைக்குமாறு ட்விட்டரில் பலரும் Gissur Simonarson இடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், சிரியாவைச் சேர்ந்த அகதித் தந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டார் Gissur Simonarson.

அதிர்ஷ்டவசமாக, ட்விட்டரில் இந்த புகைப்படத்தையும், அதில் உள்ளவரை Gissur Simonarson தேடுவதையும் அவதானித்த நபர் ஒருவர், Gissur Simonarson ஐத் தொடர்பு கொண்டு சிரிய அகதி குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

அந்நபர் தனது வீட்டை அண்டிய பகுதியில் இருப்பதாகத் தெரியப்படுத்தியுள்ளார்.

24 மணிநேரத் தேடுதலில் அந்த தந்தை கண்டுபிடிக்கப்பட்டார். அப்துல்லா எனப்படும் இந்நபர் தனது மனைவி இல்லாமல் தனியாக இரண்டு பிள்ளைகளை வளர்த்து வருபவர் என்பது தெரிய வந்தது.

டமஸ்கஸிலுள்ள ஒரு அகதி முகாமில் இவர் வசித்து வருகிறார்.

#BuyPens எனும் ஹேஸ்டேக்கில் இவருக்கு தற்போதும் உதவித் தொகை வழங்க ட்விட்டரில் பலரும் முன்வந்தவண்ணமுள்ளனர்.

jaffnamuslim

latest news:

#BuyPens: Fund for Syria Refugee Abdul Reaches $58K in 22 Hours

குஜராத் கலவரத்தில் 9 பேர் பலி!…

ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினார்கள். சுமார் 10 லட்சம் பேர் திரண்டதால் ஆமதாபாத் நகரமே குலுங்கியது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான 22 வயது ஹார்திக் படேலை போலீசார் கைது செய்தனர். இதை அறிந்ததும் படேல் சமுதாயத்தினர் ஆமதாபாத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். அது பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள்.


கலவரக்காரர்கள் பா.ஜ.க. தலைவர்களின் அலுவலகங்கள், வீடுகளை குறி வைத்து தாக்கினார்கள். அரசு அலுவலகங்கள் உடைக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து விடிய, விடிய கலவரம் நடந்தது. கலவரத்தை போலீசாரால் கட்டுப்படுத்த இயலவில்லை. இதையடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேலை விடுதலை செய்தனர். என்றாலும் கலவரம் ஓயவில்லை. மாறாக நேற்று சூரத், ராஜ்கோட், ஜாம் நகர், போர்பந்தர், பாவ்நகர் உள்பட பல நகரங்களுக்கு கலவரம் பரவியது.

இதில் குஜராத் மாநில அரசு பேருந்துகள் அதிக பாதிப்பை சந்தித்தன. கலவரக்காரர்களால் 292 பஸ்கள் தீ வைத்தும், கல்வீசியும் தாக்கப்பட்டன. இதில் சுமார் 200 பஸ்கள் எரிந்து நாசமானது. கலவரம் பரவியதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு நேற்று 5 ஆயிரம் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆமதாபாத்தின் முக்கிய பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் ஆமதாபாத் நகரில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

ஆனால் சூரத் உள்பட மேலும் சில நகரங்களில் நேற்று கலவரம் தலை விரித்தாடியது. சூரத் மாநகராட்சிக்கு சொந்தமான 2 தானியக்கிடங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் சூரத் நகரில் வைரம் பட்டை தீட்டும் ஆலைகள், துணி உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டன. ராஜ்கோட் நகரில் மத்திய மந்திரி மோகன் குண்டாரி பாலின் அலுவலகம் நொறுக்கப்பட்டது. பா.ஜ.க.வினரை படேல் சமுதாயத்தினர் இப்படி குறி வைத்து தாக்கியதால் வேதனை அடைந்த பிரதமர் நரேந்திரமோடி, பொதுமக்கள் கலவரத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றார். என்றாலும் குஜராத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை. இட ஒதுக்கீடு பெறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல் அறிவித்துள்ளார். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் மீண்டும் வன்முறையில் ஈடுபடுவோம் என்று படேல் போராட்டக்குழுவினர் எச்சரித்துள்ளனர். இதனால் ஆமதாபாத், சூரத் உள்பட பல நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது. இந்த நகரங்களில் மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க குஜராத்துக்கு இன்று மேலும் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைந்துள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த ஆமதாபாத், சூரத், ராஜ்கோட், மெஹசானா, படான், பலென்பூர், ஊஞ்சா, விஸ்நகர், ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு இன்று 2–வது நாளாக நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கலவரம் பாதித்த பகுதிகளிலும், பதற்றமான பகுதிகளிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் தற்போது குஜராத்தில் அமைதி திரும்பத் தொடங்கியுள்ளது என்றாலும் மக்களிடம் பதற்றம் காணப்படுகிறது. சகஜ வாழ்க்கைக்கு மக்கள் இன்னும் திரும்பவில்லை. நேற்றிரவு சிறு, சிறு கல்வீச்சு தவிர பெரிய அளவில் வன்முறை ஏற்படவில்லை. இன்று பகலிலும் அமைதி நிலவியது. கடந்த 2 நாட்களாக குஜராத் மாநிலத்தை கொந்தளிக்க வைத்த இந்த கலவரத்தால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பஸ், ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இது மக்களை திணற வைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த குரானின் எழுத்துப் பிரதி பர்மிங்ஹாமில்

1400 ஆண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி (ஸல்) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ரேடியோகார்பன் பரிசோதனைக்கு இந்த குர்ஆனை உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர்.
எனினும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் முஹம்மது நபி(ஸல்) வாழ்ந்த சமகாலத்தில் கி.பி. 570 மற்றும் 632-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த குர்ஆன் எழுதப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இந்த குழுவிடம் கிடைத்துள்ள அந்த குரானின் இரண்டு பக்கங்களும் பண்டைக்காலத்தில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட தோலின் மீது, அரபு மொழியின் முந்தைய மொழி வடிவமான ஹிஜாஸி மொழியில் மையினால் வசனங்களாக எழுதப்பட்டுள்ளது.
அந்த இரு பக்கங்களிலும் குர்ஆனின் 18 முதல் 20 வரையிலான சூறாக்களின் (அத்தியாயம்) வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பிரதியை எழுதியவர் இறைதூதர் முகமதுவை கண்டும் கேட்டும் இருந்த ஒருவராக இருந்திருப்பார் என பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Extract from the manuscript
Extract from manuscript

Florida நீதிமன்றில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம்.

அண்மையில் Florida வில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் நடந்திருக்கின்றது.
ஒரே வகுப்பில் படித்த இருவர் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள் ஒருவர் நீதிபதியாக, மற்றவர் குற்றவாளியாக.
தீர்ப்பு வழங்குமுன் அங்கிருந்த பெண் நீதிபதி நீங்கள் Nautilus Middle என்ற கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்த நண்பர்தானே என்று குற்றவாளியுடன் அறிமுகமாகின்றார்.
தனது பாடசாலை நண்பிதான் நீதிபதி என்று அறிந்து கொள்ளும் குற்றவாளி கண்ணீர்விட்டு அழுகிறார்.
பின்னர் அந்த பெண் நீதிபதி: உங்களை இப்படி சந்திக்கக் கிடைத்ததை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.
எமது கல்லூரியில் இருந்த சிறந்த Foot Ball வீரர் இவர். கல்லூரிக் காலத்தில் மிகத் திறமையான மாணவர் என்று அந்த குற்றவாளி நண்பரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் நீதிபதி.
அதோடு உங்களது பாதையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி தனது நண்பருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஒரு நல்ல நிலமைக்கு வந்ததும் ஒன்றாக இருந்த நண்பர்களை கண்டும் காணமல் இருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு நீதிபதியாக இருந்து கொண்டு ஒரு குற்றவாளியை தனது நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்த அந்த பெண் நீதிபதியின் பன்பு அழகானது.
வீடியோ பார்க்க  https://www.youtube.com/watch?v=5gBWlFGzGWs

மியன்மார் - அல்லாஹ்வின் பெயரில் பரப்பப்படும் புதிய பொய், தவிர்ந்து கொள்வோம்

மியன்மார் முஸ்லிம்கள் குறித்தும், அங்கு நடைபெற்ற, நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் எவ்வித தெளிவுமற்ற நிலையில்,
வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவதில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதுடன், சமூக ஊடகங்கள் என்னும் வரப்பிரசாதத்தினை பொறுப்பற்ற விதத்தில் துஸ்பிரயோகம் செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில், தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் ஒரு பதிவில், விபத்திற்குள்ளான பஸ்வண்டி ஒன்றுடன் காயமடைந்த பெளத்த துறவிள் காணப்படுவதுடன், "மியான்மாரில் முஸ்லிம்களை விரட்டியனுப்பி விட்டு தமது ஊருக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் ஏற்பட்ட விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது எங்களுடைய முஸ்லிம்களை நீ அழித்தால் உங்களுக்கு இதை விட கேவலமான நிலைமைதான் ஏற்படும்" போன்ற வாசகங்களும் பகிரப்படுவதை காணமுடியுமாக உள்ளது.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வந்த பெளத்த துறவிகளுக்கு அல்லாஹ் தண்டனை கொடுத்துவிட்டான் என்கின்ற அர்த்தத்தில் பகிரப்படும் இந்தப் பொய்ப் பதிவு பல்லாயிரக்கணக்கான தடவைகள், இதனை ஆராய்ந்து பார்க்காமல், வெறுமனே உண்மை என்று நம்பும் முஸ்லிம்களால் பகிரப்பட்டு உள்ளது, இது வைரஸ் போன்று இன்னுமும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.

குறித்த புகைப்படங்கள் பற்றிய உண்மையான நிலை என்னவென்றால், லாவோஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பெளத்த துறவிகள் அடங்கிய பஸ்வண்டி, 2012 ஆம் மார்ச் மாதம் - அதாவது மியன்மார் வன்முறைகள் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் - தாய்லாந்தின் ச்சியாங் கொங் மாவட்டத்தின் பஹைபன்னாம் மலைப் பாதையில் விபத்தில் சிக்கிய பொழுது எடுக்கப்பட்டவை என்பது ஆகும். ( புகைப்படங்களுடன் தாய்லாந்து செய்தியை பார்க்க : http://www.madchima.org/forum/index.php?PHPSESSID=f1ch8eu81h484oqhqkcs2quue5&topic=7015.msg25971#msg25971 )

இஸ்லாம் ஒருபொழுதும் பொய்யான தகவல்களை பரப்புவது அனுமதிக்காத மார்க்கம் என்கின்ற வகையில், மியான்மாரில் நடந்த வன்முறைகள் குறித்த பழைய படங்களை பகிர்ந்து, இனங்களுக்கு இடையிலான வெறுப்பை வளர்த்தது போன்று, இந்தப் புகைப்படங்கள் மூலமும் இன நல்லுறவு மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாகாமல் தவிர்த்துக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரினதும் பொறுப்பாகும்.


சுவைர் மீரான்

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.5 ஆக இது பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீழ்ந்துள்ளதாகவும் பலர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

இன்று காலை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.









இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாறு திரும்புகிறது :

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாறு திரும்புகிறது : அவுரங்காபாத் தேர்தல் - காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மராத்திய மண்ணில் மஜ்லீஸ் கட்சி முத்திரை....!!
மராத்தியர்களின் மாநிலமான மகாராஷ்டிரா அவுரங்காபாத்தில் நடைபெற்ற முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் சிவசேனா பாஜக கூட்டணிக்கும் அடுத்த இடத்தில் தனித்து நின்ற மஜ்லீஸ் கட்சி முத்திரை பதித்துள்ளது.
மொத்த இடங்கள் : 113
சிவசேனா + பிஜேபி = 57
மஜ்லீஸ் கட்சி = 23
காங்கிரஸ் = 10
என்.சி.பி = 3
சுயோட்சைகள் = 19
இந்தியாவை ஆளும் தேசிய கட்சியான பாஜகவும், மராத்திய மாநில கட்சியான சிவசேனாவும் இணைந்து பெற்ற 57 தொகுதிகளை மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக கால் பதித்த அசத்துத்தின் உவைஸி அவர்களின் மஜ்லீஸ் கட்சி 23 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது இந்திய அரசியலில் முஸ்லிம்களின் வரலாற்றை திரும்ப செய்கிறது.
இறைவனுக்கே புகழ் அனைத்தும்....
நன்றி : சேலம் ஹுசைன் & செங்கிஸ்கான்

எத்தியோப்பிய மக்களுக்கு குடிநீர் கிணறுகளை நிர்மாணித்து வழங்கிய இலங்கை அல்-கிம்மா நிறுவனம். (படங்கள்)


mmmm
ஆபிரிக்காவில் அல்-கிம்மா
கல்குடா அல்-கிம்மா நிறுவனமானது, இலங்கையின் பல பகுதிகளிலும் தங்களது அபிவிருத்திப்பணிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் தொடரில், தங்களது சேவையினை இலங்கை மற்றுமன்றி இந்தியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் மேற்கொள்வதற்கான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் ஆபிரிகாவின், எதியோபிய நாட்டில் இருக்கக்கூடிய, குடிநீர் தேவையுடையவர்களுக்கு கிணறுகள் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பயனாக, இன்று 16.03.2015 திங்கட்கிழமை எதியோபியாவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு அல்-கிம்மா நிறுவனத்தினால் குடிநீர்க்கிணறு நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மேலும் பல குடும்பங்களும் பயனடையும் வகையில், வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதியளவில் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் இந்தியா சென்று, அல்-கிம்மாவின் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து ஆராயவுள்ளதுடன், முதற்கட்டமாக குடிநீர் கிணறு ஒன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
INFO TECH SYSTEM
M.P.C.S. Road, Oddamavadi.
 madawala news

டெல்லி தேர்தல்; பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல்-தோல்வி

புதுடெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தோல்வி பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல் தோல்வி என்று கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் மூன்று முறை முதல்-மந்திரியாக ஆட்சி செய்த நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சிக்குள் எதிர்ப்பு காணப்பட்டாலும் குஜராத் வளர்ச்சியை முன்வைத்து அவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மோடி கோஷத்தை வைத்து பாரதீய ஜனதா பிரசாரம் செய்தது. அதற்கு பெறும் வெற்றியே கிடைத்தது. பாராளுமன்றத் தேர்தலில்  பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது.

பாரதீய ஜனதா கட்சி 282 தொகுதிகளில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமராக பணியாற்றினார். தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் ஆதிக்கமே பாராளுமன்றத் தேர்தலில் காணப்பட்டது. இதனையடுத்து நாட்டில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடியை முன்வைத்தே பாரதீய ஜனதா பிரசாரம் செய்தது. அதற்கும் கைமேல் பலன் கிடைத்தது.. 

2014 பாராளுமன்றத் தேர்தலை அடுத்து நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களில் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து மற்ற மாநிலங்களில்  பாரதீய ஜனதாவிற்கே முதலிடம் என்ற நிலை காணப்பட்டது. 

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் விபரங்கள்

2014 அக்டோபர் மாதம் நடைபெற்ற அரியானா, மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே வெற்றிபெற்றது.

இருமாநிலங்களிலும் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பாரதீய ஜனதா வெளியேற்றியது. மராட்டியத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் முதல்-முறையாக பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. சிவசேனா கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டு 122 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றிபெற்றது. தேர்தலை அடுத்து 63 தொகுதிகளில் வெற்றிபெற்ற சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. 

அரியானாவிலும் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிய பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதீய ஜனதா 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருமாநிலங்களில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்தார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி முகமே காணப்பட்டது. 

ஜார்கண்ட் மாநிலத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. மாநிலத்தில் முதலிடம் பிடித்த பாரதீய ஜனதா முதல்-முறையாக மாநிலத்தில் நிலையான ஆட்சியை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கவில்லை என்றாலும், இதுவரையில் இல்லாத அளவு மாநிலத்தில் பாரதீய ஜனதாவின் வளர்ச்சி காணப்பட்டது. 

பாரதீய ஜனதா இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது இடத்திற்கு வந்தது. இது பாரதீய ஜனதாவிற்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்னர் தொடர்ந்து வெற்றி பாதையிலே சென்ற பாரதீய ஜனதாவிற்கு சிறிய சரிவாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் அமைத்துள்ளது. இது பிரதமர் மோடி தான் பிரதமர் ஆன பின்னர் முதல் முறையாக சந்திக்கும் முதல் தோல்வி என்று கருதப்படுகிறது. 

வெறும் 4 தொகுதிகளில் முன்னிலை

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கே முதலிடம் கிடைத்தது. பாரதீய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியவில்லை. 28 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்த ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தார். ஆனால் ஆட்சி நீடிக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டது. மீண்டும் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தேர்தல்  முடிவு விபரம் பாரதீய ஜனதாவிற்கு பெரிய பின்னடைவாகவே உள்ளது. கடந்த தேர்தலில் 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முதலிடம் வந்த பாரதீய ஜனதாவால் 5 இடங்களைகூட நெருங்க முடியவில்லை. காலைய நிலவரப்படி பாரதீய ஜனதா 12 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்ததாலும், அடுத்தத்தடுத்த வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மிக்கு சாதகமான நிலைபாடே காணப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி 65 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. 

தைவானில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 2 பேர் பலி (plane crash video)

தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.

தைவான் தலைநகர் தைபே நகரில் இருந்து காலை கின்மெனுக்கு டிரான்ஸ் ஏசியா ATR 72-600 டர்போப்ராப் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம் ஒன்றில் மோதியது .பின்னர், கீலங் ஆற்றுக்குள் விழுந்தது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர்  விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  விமானத்தில் இருந்த பலர் காயம் அடைந்து இருந்தனர் அவர்கள் அனைவரும்  மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து விமானத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம்ஏர் ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம்

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது.
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம்
அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரியான ஹாதி முஸ்தபா கூறுகையில்;

இன்று அதிகாலை 5:20 மணிக்கு சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, காலை 6:17 மணியளவில் ஜகார்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டது என கூறியுள்ளார். இந்த விமானத்தில் 155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களும் இருந்ததாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விமான கட்டுப்பாட்டு மையத்துடன் விமானத்தின் தொடர்பு விடுபடுவதற்கு முன், தனது வழக்கமான பாதையில் போவதை விட்டு, வேறு பாதையில் போக அனுமதி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானம் தொடர்பை விட்டு விலகும் போது கலிமந்தனுக்கும் ஜாவா தீவுகளுக்கும் இடையே ஜாவா கடலில் மேலே பறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் வந்து சேர வேண்டிய இந்த விமானம் தனது இலக்கை இன்னும் சென்றடையாததால், விமானம் தாமதமாக வருவதாக சிங்கப்பூர் விமான நிலைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெஷாவர் பள்ளி கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம்

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியான சம்பவத்திற்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம். | படம்: ராய்ட்டர்ஸ்.
பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம். | படம்: ராய்ட்டர்ஸ்.
அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வது இஸ்லாமுக்கு விரோதமானது என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.

வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு பதிலடியாகவே ராணுவப் பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பு கூறியிருந்தது.

இதனையடுத்து ஆப்கான் தாலிபான்கள் தனது கண்டனத்தில் கூறும் போது, “ஆப்கான் இஸ்லாம் எமிரகம் அப்பாவி குழந்தைகள், மற்றும் மக்களைக் கொல்வதை எதிர்க்கிறது. 

அப்பாவி மக்கள், குழந்தைகளை வேண்டுமென்றே கொல்வது இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமானது. ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், இயக்கமும் அடிப்படை சாராம்சத்தின் படி நடக்க வேண்டும். 

ஆப்கான் இஸ்லாமிய எமிரகம், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திஹிந்து.